2011 | கற்போம்

இலவச தொழில்நுட்ப மின்னிதழ் "கற்போம்"

தமிழில் தொழில்நுட்ப பதிவர்கள் நிறைய. எல்லோரும் ஒவ்வொரு வகை. அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய முயற்சியில் கற்போம் குழு இப்போது இயங்க உள்ளது. ஒவ்வொரு பதிவரின் சிறந்த பதிவையும் மாதா மாதம் உங்களுக்கு அனுப்பப் போகிறோம்.

லினக்ஸ் அல்லது விண்டோஸ் - எந்த வெப் ஹோஸ்டிங் தெரிவு செய்வது? #4

நிறைய வகையான வெப் ஹோஸ்டிங்க் இருந்தாலும் Operating System என்பதை பொறுத்து இரண்டு வகைப்படும் Linux மற்றும் Windows. இது பற்றிய ஒரு விளக்கம்,ஒப்பீடு தான் இந்தப் பதிவு.   எனக்கு தெரிந்தது, நான் படித்தது என்று பகிர்கிறேன். தவறு இருப்பின் திருத்துங்கள். 


என்னுடைய முதல் பிளாக்கர் Template

என்னதான் பிளாக்கர் பல வகையான Default Template கொடுத்து இருந்தாலும் ஒரு அழகான Template ஐ காணும் போது அதை நமக்கு வைக்க தோன்றும். ஆனால் சிலவற்றில் தேவை இல்லாத கோடிங், படங்கள் போன்றவை இருந்தால் அது லோட் ஆக அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் அந்த பிரச்சினையும் இல்லாமல், மிக எளிதான Template மட்டுமே என் முயற்சி. இப்போது முதல் முயற்சி உங்கள் பார்வைக்கு.

கற்போமில் தொழில்நுட்ப பதிவு எழுத விருப்பமா?

நிறைய புதிய பதிவர்களுக்கு தொழில்நுட்பம் குறித்து எழுதும் ஆசை உள்ளது. ஆனால் தான் எழுதுவது எல்லோரிடமும் சென்று சேருமா என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கும். அந்தக் கவலையை போக்கவே "கற்போம்" உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது. உங்களுக்கும் ஆசை இருந்தால் வாருங்கள் கை கோர்ப்போம். 

திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி?

பதிவர்கள் பலரின் வலைப்பூவில் ஓட்டுப் பட்டைகளை பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும். சில நேரம் பதிவின் கடைசி வரியில் சிம்மாசனமிட்டு  அமர்ந்து இருக்கும். அதை எப்படி எளிதாக ஒழுங்கு படுத்தி ஒரே வரிசையில் அமைப்பது எப்படி என்று பார்ப்போம். 

உறவுகளுக்கு ஒரு அன்பளிப்பு (மின்னூல்)

ஒரு பிளாக்-க்கு தேவையான அனைத்து விஷயங்கள் மற்றும் பணம் ஈட்டுவது முதலியவை அடங்கிய மின்னூல், John Chow என்ற ஒரு நபர் எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்த மின்னூலை உங்கள் உபயோகதிற்காக இங்கே பகிர்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். 
 

பலே பிரபு இனி புதிய தோற்றத்தில்


வணக்கம் உறவுகளே. என்னடா தலைப்பு புதுசா இருக்கேன்னு பாக்குறீங்களா. டொமைன் கூட மாறி இருக்கேன்னு தோணுதா? மாற்றதிற்கான நேரம் இது. ஆம் பலே பிரபு இப்போது முற்றிலும் புதிய தோற்றத்தில், புதிய டொமைன், புதிய நிர்வாகிகள் என எல்லா மாற்றத்துடன் "கற்போம்" என்ற புதிய பெயரில் இனி. 

Blogger-குறிப்பிட்ட Follower-ஐ மட்டும் ப்ளாக் செய்வது எப்படி?

தங்கள் வலைப்பூவை பின் தொடர்பவர்களில் யாரையேனும் பிடிக்கவில்லை என்றால் எப்படி ப்ளாக் செய்வது என்று பார்க்கலாம். இது இப்போது அனைவருக்கும் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.


Google/Gmail Account Hack செய்யப்படாமல் இருக்க 2-Step Verification

கூகுள் கணக்கு இன்று இணையத்தில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாய் மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் மிக அதிகமான கூகுள் பயன்பாடுகளை பயன்படுத்துவோம். எல்லாமே மிக முக்கியமான தகவல் கொண்டவை. இதனால் நம் தகவல்கள் திருடப் பட வாய்ப்புகள் அதிகம். இந்த திருட்டுகளில் சில வித்தியாசமானவை. எப்படி கூகுள் கணக்கை பாதுகாப்பது என்று பார்ப்போமா?

வெப் ஹோஸ்டிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவை? #3

வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுத ஆரம்பித்த பின் தான் நிறைய நண்பர்களுக்கு அதில் உள்ள ஆர்வம் தெரிய வந்தது. இதில் நிறைய பேருக்கு நிறைய கேள்விகள். முக்கியமாக வெப் ஹோஸ்டிங்க் என்று ஒன்றை முடிவெடுக்கும் போது என்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது அது பற்றி தெளிவு படுத்தவே இந்த பதிவு.

கூகிளில் தேடுவது எப்படி?


கூகிள் ஆனது இணையம் பயன்படுத்தும் பாதி பேரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தளம். இணையத்தில்உள்ள இருவரில் ஒருவர் கண்டிப்பாக கூகிள் பயன்படுத்துபவர்என்று ஒரு கணக்கு சொல்கிறது. அத்தகைய தளத்தில் தேடுவதும் ஒரு கலையே. 

கூகுள் பிளஸ்ஸில் ஒரு Page உருவாக்குவது எப்படி?

கூகிள் பிளஸ் தளமானது பல்வேறு புதிய வசதிகளை நாளுக்கு நாள் வழங்கி வருகிறது.கடந்த வாரத்தில் youtube ஐ அதில் அறிமுகப்படுத்தியது.  இப்போது புதியதாக வழங்கி உள்ள வசதிதான் புதியதாக ஒரு பக்கம் உருவாக்கும் வசதி. எப்படி என்று பார்ப்போமா? 

பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி?

இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு. 

Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?

கஸ்டம் டொமைன் என்பது நிறைய பேரின் விருப்பம். பிளாக்கர் மூலம் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு வேண்டும், இன்னும் சிலவற்றுக்கு டெபிட் கார்டு வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் வாங்க வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. எப்படி என்று எல்லோரும் கேட்கிறீர்களா? பதிவை படியுங்கள்.

பேஸ்புக் பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் பகிர

வலைப்பூ வைத்துள்ள பெரும்பாலானோர் முகப்புத்தகத்தில, தங்கள் வலைப்பூவுக்கு என ஒரு பக்கம்(Page) உருவாக்கி இருப்பர். இதன் மூலம் நம் வலைப்பூவுக்கு முகப்புத்தகத்தில் அதிக ரசிகர்களை பெற முடியும். இதனால் நமது தளத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதில் உள்ள ஒரு வசதி உங்கள் முகப்புத்தக பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் தானாக பகிர்தல். எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்

விண்டோஸ் ரன் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரியும். இதன் மூலம் எளிதாக, விரைவாக, ஒரு Program, Folder, Internet Resource, Windows Files போன்றவற்றை ஓபன் செய்யலாம். சரி என்னென்ன ஓபன் செய்யலாம் என்று கேக்குறீங்களா? எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன். 

Blog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு? #2

கடந்த பதிவு வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுதிய போது இது நிறைய பேருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நிறைய ஆர்வமாக எழுதலாம் என்று சொல்லி உள்ளீர்கள். சரி முதலில் ஆரம்பத்தில் இருந்தே சொல்வதுதானே சரி. அதனால் பிளாக் மற்றும் ஒரு வெப் சைட் இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்வதே இந்த பதிவு. 

Web Hosting என்றால் என்ன?- ஒரு சிறப்பு பார்வை # 1

வெப் ஹோஸ்டிங் இந்த வார்த்தை பற்றி தெரியாதவர் யாரும் இணையத்தில் ஒரு தளத்தை சொந்தமாக வைத்திருக்க இயலாது. அப்படி என்றால் என்ன? என்ன செய்கிறது வெப் ஹோஸ்டிங்? என்ன வசதிகள் உள்ளன? எல்லாம் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. ஏதோ என்னால் முடிந்த அளவு தருகிறேன். 

BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

நிறைய பதிவர்களுக்கு சொந்த டொமைன் வாங்க வேண்டும், அதில் பதிவுகளை எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளதை நான் கடந்த முறை எழுதிய custom domain குறித்த பதிவுகளின் வாயிலாக அறிந்தேன். ஆனால் அவர்களிடம் Credit Card இல்லாத காரணத்தால் சொந்த டொமைன் வாங்க இயலவில்லை என்பதும் புரிந்தது. இப்போது வெறும் டெபிட் கார்ட் மூலம் பல தளங்களில் எளிதாக டொமைன் வாங்கலாம். அவ்வாறு வாங்கிய பின் சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதே இந்தப் பதிவு. 

Adobe தரும் அற்புத வாய்ப்பு - For Designers

Adobe என்பது நாம் அனைவரும் அறிந்த நிறுவனம். Mulitimedia குறித்த அனைத்து சாப்ட்வேர்களும் தரும் ஒன்று. முப்பதுக்கும் மேற்பட்ட சாப்ட்வேர்கள் நமெக்கல்லாம் நல்ல பரிச்சயம் போட்டோஷாப், அடோபி ரீடர் போன்றவை. ஆனால் Multimedia துறையில் இருப்பவர்கள் எல்லோரும் அடோபி பற்றி நன்கு தெரிந்து இருப்பர். இப்போது தனது Online Event ஒன்றை நடத்தப் போகிறது தனது பயனாளிகளுக்கு.   

20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி

Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  

Facebook இன் அசத்தலான புதிய Timeline Enable செய்திடுங்கள்

Google+ வந்த உடன் Facebook தன் அசத்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டது. இப்போது புதியதாக நம் Profile பக்கத்தை மிக அருமையான வடிவில் மாற்ற வழி செய்து உள்ளது. இந்த அசத்தல் வசதி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. உங்களுக்கும் கூட பிடிக்கும். வாருங்கள் உங்கள் Profile பக்கத்தை எப்படி டிசைன் செய்வது என்று சொல்கிறேன்.

Video Enhancements - Youtube தரும் அசத்தலான புதிய வசதி

Youtube தளம் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. எந்த ஒரு வீடியோ வேண்டும் என்றாலும் இதில் கிடைக்கும் என்ற அளவுக்கு அவ்வளவு வீடியோக்கள் கொண்டுள்ளது. இது நாள் வரை நாம் வீடியோ Upload செய்தால் அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இப்போது உள்ள புதிய வசதி உங்கள் வீடியோ நல்ல Look உள்ளதாக மாற்ற உதவும். 

High Tech Hints ஒரு வளரும் பயிர்

இணையம் என்னும் தோட்டத்தில் பல மரங்கள் உண்டு. அந்த மரங்களுக்கு மத்தியில் முளைத்த ஒரு குட்டிப் பயிர்தான் இந்த "High Tech Hints". இதற்கு தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு வளர்ப்பவன் உங்கள் நண்பன், சகோதரன் பிரபுவாகிய நான்தான். ஆம் எனது புதிய தளம்தான் இது. 

Facebook தரும் புதிய வசதிகள்

Facebook தளம் என்பதுஇணையத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய தளம். அதுவும் வலைப்பூ வைத்துள்ளநம்மைப் போன்றவர்கள் நிச்சயமாய் பயன்படுத்த வேண்டிய தளம். கடந்த மாதம் Google+ வந்த போது Facebook கொஞ்சம் ஆட ஆரம்பித்தது. அதனால் சில மாற்றங்களை அது இப்போது கொண்டு வந்துள்ளது. 

Feed Widget பயன்படுத்தி Recent Posts சேர்க்கலாம்

தினமும் பதிவு எழுதுபவர்கள் முக்கியமாக சேர்க்க வேண்டிய Gadget Recent Posts கட்கேட். இதனால் உங்கள் வாசகர்கள் உங்களின் கடந்த சில பதிவுகளை எளிதாக படிக்க முடியும். இதை எந்த Coding ம் சேர்க்காமல் எப்படி சேர்ப்பது என்று கூறுகிறேன். 

Delete/Spam செய்யப்பட வலைப்பூவை மீட்பது எப்படி?


கடந்த சில நாட்கள் முன்பு நான் வலைப்பூவை Back Up எடுத்து  வைக்க சொல்லி இருந்தேன். ஏன் என்றால் கூகுள் இப்போது  வலைப்பூக்களை ஸ்பாம் செய்து வருகிறது என்றும் சொல்லி இருந்தேன். இப்போது அவ்வாறு உங்கள் வலைப்பூ நீக்கப்பட்டால் எவ்வாறு திரும்ப பெறுவது என்று சொல்கிறேன். எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது. 

நேரடியாக அடுத்தவர் வலைப்பூவில் Gadget Add செய்யலாம்

வலைப்பூக்களில் ஒரு அமைப்பு, குழு, அல்லது சமூக சேவை தளங்கள் தங்கள் வலைப்பூவுக்கு என்று ஒரு Logo செய்து அதனை அடுத்தவர் வலைப்பூக்களில் Add செய்ய வழி செய்து இருப்பார்கள். ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் அந்த Coding ஐ copy செய்து மீண்டும் தங்கள் Blogger Account க்கு சென்று அதை Paste செய்ய வேண்டி இருக்கும். இதை நேரடியாக ஒரே Click மூலம் அவர்கள் Layout க்கு சென்று Copy, Paste போன்ற எதுவும் செய்யாமல் Add செய்யும்படி செய்தால் எளிது தானே. அதன் வழிகளைதான் நான் சொல்லப் போகிறேன்.

உங்கள் வலைப்பூவை Back-Up எடுத்து வையுங்கள்

கூகுள் இப்போது வலைப்பூக்களை சீரமைக்கும் பணியில் உள்ளது போலும். எனது கவிதை வலைப்பூவை காலி செய்து விட்டது. புகார் கொடுத்தவுடன். காத்திரு நைனானு சொல்லி இருக்கு. உங்கள் பதிவுகளை Back-Up எடுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.

Sub-Domain அமைப்பது எப்படி? - 4

இந்த பதிவு இந்த தொடரின் முக்கியமான ஒன்று. நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் வைத்து இருக்கும் போது அவை எல்லாவற்றையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வருவது தான் இதன் செயல். இதன் மூலம் நிறைய பலன்கள் உள்ளது. அத்தனையும் இந்தப் பதிவில் காண்போம்.

பணம் கொடுத்து Google Adsense Account வாங்கலாமா ?

 கடந்த  Adsense பதிவு பலரது சந்தேகங்களை தீர்த்து இருக்கும். ஆனால் இன்னும் சில சந்தேகம் சிலருக்கு உள்ளது. அதாவது Adsense Account ஒன்றை பணம் கொடுத்து வாங்கலாமா என்பது அது. அது பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

Google Adsense சில கேள்வி பதில்கள்

கூகிள் ஆட்சென்ஸ் என்பது நம் தமிழ் பதிவர்களுக்கு எட்டாக் கனிதான். கடந்த முறை நான் இது குறித்த பதிவு போட்ட போது நிறைய பேருக்கு சில கேள்விகள் வந்தது. இந்தப் பதிவின் மூலம் அந்த கேள்விகளுக்கு உங்களுக்கு பதில்கள் கிடைக்கும். 

Blogger Custom Domain மூலம் என்னென்ன வசதிகள்?- 3

இந்த தொடரின் கடந்த இரண்டு பதிவுகளில் எப்படி டொமைன் வாங்குவது என்பதை சொல்லி இருந்தேன். இன்று நான் கூறப்போவது மிக முக்கியமான விஷயங்கள். நீங்கள் கொடுக்கும் 10$ க்கு வெறும் டொமைன் மட்டும் கிடைக்கவில்லை. இன்னும் பல வசதிகளை கூகிள் தருகிறது என்னவென பார்ப்போமா?

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம்

நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம்.மிக அருமையான தரத்தில், தெளிவாக விளக்கப்படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இவை Screen Capture என்ற மென்பொருட்களின் உதவியுடன் செய்யபப்டுகின்றன. இந்தப் பதிவில் அது எவ்வாறு என்று பார்ப்போம்.

இதற்கு  உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று. 

4. http://www.totalscreenrecorder.com/
5. Camtasia - சிறந்த மென்பொருள்

இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

எப்படி ரெகார்ட் செய்வது? 

ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை.

இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவும். மற்றவை மாற்ற வேண்டியது இல்லை.


நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பித்து உங்கள் ரெகார்ட் வேலையை ஆரம்பிக்கவும். இதனால் சில நொடிகளுக்கு இந்த சாப்ட்வேர் உங்கள் முகப்பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கும் சதுரம் போல அமைத்து இழுத்து விட்டால்  ரெகார்ட் ஆரம்பிக்கும்(உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும் கூட நீங்கள் + மூலம் அளவுபடுத்தி ரெகார்ட் செய்யலாம்.). ரெகார்ட் செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimize செய்து விடவும்.

நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாகவே இது வீடியோ ஆக Save ஆகிவிடும். உங்கள் வீடியோவை இப்போது Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர்களுக்கு வீடியோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள். வீடியோ  சைஸ் மிக அதிகமாக இருக்கும் (எனது இந்த ஒரு நிமிட வீடியோ 375MB )எனவே ஏதேனும் Video Converter பயன்படுத்தி வேறு Format மாற்றுவதன் மூலம் சைஸ் குறைக்க முடியும்.கவனிக்க வீடியோ Resolution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோ ஆக Convert செய்வது நல்லது. (After Conversion 30MB)

உங்கள் தள முகப்பிற்கு Google +1 Button சேர்க்க வேண்டுமா? (வீடியோ பதிவு)

Google +1 Button தான் எல்லோருக்கும் தெரியும் அதைத்தான் Add செய்திட்டோமே என்று நினைக்கிறீர்களா? நீங்கள் சேர்த்த Google +1 Button உங்களின் பதிவுகளை அடுத்தவர் +1 செய்ய. உங்கள் வலைப்பூவையே உங்கள் வாசகர்கள் +1 செய்ய தான் நான் சொல்லப் போகிறேன்.


Blogger தரும் புது வசதி - அதிக அகலம்

வலைப்பூ வைத்துள்ள நமக்கு பிளாக்கர் அடிக்கடி இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில வசதிகளை தருவதுண்டு. அந்த வகையில் இப்போது உங்கள் வலைப்பூ அகலத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு கொடுத்துள்ளது.அது என்ன அப்படின்னு கேக்குறீங்களா வாங்க பாப்போம்.

இப்போது தினமும் அனுப்பலாம் NewsLetter

வலைப்பதிவு வைத்துள்ள நாம் தங்கள் போஸ்ட் தம்மை பின் தொடர்பவர்களுக்கு எப்படி தெரிவிப்பது என்பதற்கு பல வழிகளை பயன்படுத்துவோம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சனைகளை கொண்டுள்ளது. இவற்றை தவிர்த்து ஒரு எளிய வழியை உங்களுக்கு சொல்லவே இந்த பதிவு.

எப்படி Custom Domain வாங்குவது ? - 2

என்னுடைய கடந்த பதிவில் நான் custom domain வாங்குவதால் என்ன பலன் என்று கூறி இருந்தேன். அந்த பதிவு உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது எப்படி custom domain வாங்குவது என்பதை விளக்குகிறேன்.   

ஏன் Custom Domain வாங்க வேண்டும்? - 1

நான் ரொம்ப நாளாக யோசித்து எனது வலைப்பூவை எனது சொந்த டொமைன்க்கு மாறினேன். சரி அதனால் என்ன நன்மை என்று நீங்கள் கேட்கலாம். எனக்கும் இது தோன்றியது. இதோ நான் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?

இப்போது உலகமே கணினி மயம். எந்த அளவுக்கு நன்மையோ அந்த அளவுக்கு தீமையும் உள்ளது இணையத்தில். சில தளங்கள் தேவையற்ற தகவல்களை தந்து நம்மை, நம் மகன், மகள், மாணவர்களை கெடுக்க வாய்ப்பு உள்ளது. சரி எப்படி அவற்றை தடை செய்வது. இந்த கேள்விக்கு பதில்தான் இந்த பதிவு. p://www.baleprabu.com

நிறைய பேர் அதற்கு வழி சொல்லி இருப்பார்கள, நானும் அதையே சொல்லப் போறேன். ஆனா ஒரு விஷயம் மட்டும் புதுசா இருக்கும்.

முதலில் உங்கள் கம்ப்யூட்டர் மீது ரைட் கிளிக் செய்து "Manage" செல்லவும். இப்போது அதில் "Local User And Groups" என்பதை கிளிக் செய்யவும். இப்போது அதில் "user" என்பது இருக்கும் அதில் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Properties" பகுதிக்கு செல்ல்வும். இப்போது அதை படத்தில் உள்ளபடி செய்யவும்.
http://www.baleprabu.com


இப்போது மீண்டும் "Administrator" என்பதை ரைட் கிளிக் செய்து "Set Password" என்பதை கொடுத்து password set செய்து கொள்ளவும். 
http://www.baleprabu.com

இப்போது கம்ப்யூட்டரை "Log Off" செய்யவும். இப்போது இரண்டு account கள் வரும். அதில் administrator என்பதில் நுழையவும். இப்போது உங்கள் my computer ஐ ஓபன் செய்யவும். 
http://www.baleprabu.com
இனி செய்ய வேண்டியதை நம்ம சூர்யா கண்ணன் அண்ணன் தெளிவாக கூறி உள்ளார். அதை பின்பற்றவும். 
http://www.baleprabu.com

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

http://www.baleprabu.com
இதன் மூலம் எத்தனை தளம் வேண்டுமென்றாலும் தடை செய்யலாம். சாதாரணமாக இதை செய்ய இயலாது administrator Account மூலமாக மட்டுமே செய்ய இயலும் என்பதை நினைவில் கொள்ளவும். 

இனி உங்களை தவிர மற்றவர்களை மற்றொரு Account மூலம் வர செய்து, அந்த தளங்களை பார்க்க விடாமல் வைக்க முடியும். 


நன்றி: சூர்யா கண்ணன்

Youtube கொஞ்சம் ரகசியங்கள் - பார்ட் 2

ஒரு படம் பயங்கர ஹிட் ஆனா பார்ட் 2 எடுப்பது போல ஹிட் ஆன பதிவுக்கு இது பார்ட் 2 . youtube என்ற கடலில் சில முத்துக்களை மட்டுமே நான் உங்களுக்கு கொடுத்தேன். இதோ இன்னும் சில.

Google Adsense Approval எளிதாக பெறுவது எப்படி?

வலைப்பூ வைத்துள்ள பெரும்பாலான நண்பர்கள்  Google Adsense க்கு Apply செய்தால், language Not Supported  என்று வந்து விடும்.ஏன் என்று பார்த்தால் தமிழ் அவர்கள் allowed language ஆக இல்லை. சரி என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ அதற்கான எளிய வழி.

ஆபீஸில் Facebook,Twitter blocked ??? இனி இல்லை கவலை

பெரும்பாலும் அலுவகத்தில் பணியாற்றும் நம்ம நண்பர்கள் அலுத்துக்குற ஒரு விஷயம் facbook, twitter போன்றவை block செய்யப்பட்டு இருப்பதுதான். வேற அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களிடம்  உங்க அலுவலத்தில் இதெல்லாம் block செய்து இருக்காங்களா என்று கேட்பார்கள். இல்லை  என்றால் எவ்ளோ கோவம் இல்லையா பாஸ். இனி வேண்டாம் கவலை, கோவம்.
     

Youtube கொஞ்சம் ரகசியங்கள்

Youtube பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருந்தாலும் full Screen வீடியோ உருவாக்குவது, Tags பற்றி, youtube வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி என்றெல்லாம் சொல்கிறேன்.     


co.cc Domain வைத்து உள்ளீர்களா? ஒரு நிமிடம் இதை படியுங்கள்

நண்பர்கள் சிலர் co.cc  மூலம் தங்கள் வலைப்பூக்களை இலவச Domain க்கு மாற்றி இருப்பார்கள். இனி அவர்கள் தளங்கள் கூகுள் முகப்பு பக்கத்தில் வராது. கூகுள் அவற்றை spam செய்து உள்ளது.

உங்கள் தளத்தின் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அறிய

உங்களது தளம் எவ்வளவு மதிப்பு என்று உங்களுக்கு தெரியுமா? அத்தோடு உங்கள் தளம் மூலம் உங்களுக்கு தின வருமானம் எவ்வளவு கிடைக்கலாம்,(உங்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கையை பொருத்து கணக்கிடப்படுகிறது.). என இன்னும் நிறைய தகவல்கள் ஒரே இடத்தில் கிடைத்தால்............ வாருங்கள் பார்ப்போம்.

உங்களது தளத்தை Visualize செய்து பாருங்கள்

வலைப்பூ வைத்துள்ள நண்பர்களுக்கு அவர்கள் தளத்தை visualize செய்து பார்ப்பதற்கு ஒரு தளம். இது உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களை வைத்து பல தகவல்களை மதிப்பிடுகிறது. இந்த தளம் தரும் தகவல்களை தெரிந்து கொள்ள உங்கள் தளத்தை visualize செய்து பாருங்கள்  

Search Engine முகப்பு பக்கத்தில் உங்கள் வலைப்பூ வர meta tag சேர்த்திடுங்கள்

Google இல் உங்கள் வலைப்பூவை எப்படி முதலாவதாக கொண்டுவருவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை முன்னர் ஒரு பதிவில் கூறி இருந்தேன். இன்று Meta tag எப்படி Add செய்வது என்று பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் வலைப்பூவை எளிதாக Search Engine களில் வரவைக்கலாம்.