2012 | கற்போம்

VLC Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts

VLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள். 

அதிகமாக பயன்படுத்தப்படுவது
F வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Space வீடியோவை Pause அல்லது Play செய்ய
V Subtitle மாற்ற அல்லது மறைக்க
B ஆடியோ track மாற்ற
Ctrl+Arrow Up/Ctrl+Arrow Down வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க

மௌஸ் மூலம்
Double Click வீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Scroll வால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க
Right Click Play Control மெனு

Movie Navigation
Ctrl+D DVD Drive – ஐ தெரிவு செய்ய
Ctrl+F குறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய
Ctrl+R/Ctrl+S குறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க
Ctrl+O ஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய
M வால்யூம் Mute அல்லது Unmute செய்ய
P ஆரம்பத்தில் இருந்து Play செய்ய
S Play ஆவதை நிறுத்த
Esc முழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற
[+]/-/= வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க
A Aspect Ratio மாற்ற
C Screen – ஐ Crop செய்ய
G/H Subtitle Delay இருந்தால் அதை சரி செய்ய
J/K Audio Delay இருந்தால் அதை சரி செய்ய
Z Zoom – ஐ மாற்ற
Ctrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4 சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய
T வீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட

வீடியோவை Forward/Backward செய்ய
Shift+Left/Right 3 நொடிகள் முன்/பின் செல்ல
Alt+Left/Right 10 நொடிகள் முன்/பின் செல்ல
Ctrl+Left/Right 1 நிமிடம் முன்/பின் செல்ல

Advacned Controls
Ctrl+H Play Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க
Ctrl+P Preferences/ Interface Settings – ஐ மாற்ற
Ctrl+E Audio/Video Effects – ஐ மாற்ற
Ctrl+B குறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க
Ctrl+M  Messages –ஐ ஓபன் செய்ய
Ctrl+N Network Stream –ஐ ஓபன் செய்ய
Ctrl+C Capture Device – ஐ ஓபன் செய்ய
Ctrl+L Playlist – ஐ ஓபன் செய்ய
Ctrl+Y Playlist – ஐ Save செய்ய
Ctrl+I/Ctrl+J Play ஆகும் File – இன் தகவல்களை அறிய
Alt+A Audio Menu – ஐ ஓபன் செய்ய
Alt+H Help Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+M Media Menu – ஐ ஓபன் செய்ய
Alt+P  Playlist Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+T  Tool Menu – ஐ ஓபன் செய்ய
Alt+V Video Menu – ஐ ஓபன் செய்ய
Alt+L Playback Menu – ஐ ஓபன் செய்ய
D Deinterlace – ஐ ON/OFF செய்ய
N Playlist – அடுத்த File – ஐ Play செய்ய
F1 Help ஓபன் செய்ய
F11 Control Menu – வுடன் கூடிய Full Screen
Shift+F1 VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய
Alt+F4, Alt+Q Orctrl+Q VLC – ஐ விட்டு வெளியேற

YouTube - இல் Annotations என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?


Youtube தரும் முக்கியமான வசதிகளில் ஒன்று Annotations. இது உங்களுக்கு பல வகைகளில் உதவி செய்கிறது. குறிப்பாக Subscriber - களை அதிகரிக்க, தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்க வைக்க என்பவை மிகவும் பயனுள்ளவை. இதைப் பற்றி விரிவாக காண்போம். 

உங்கள் Video Manager பகுதியில் ஏதேனும் ஒரு வீடியோ மீது Edit என்பதை கிளிக் செய்யுங்கள். வரும் பக்கத்தில் வீடியோவுக்கு மேலே உள்ள Annotations என்பதை கிளிக் செய்யுங்கள். 

இப்போது Annotations பகுதிக்கு வருவீர்கள். அதில் Add Annotation என்பதை கிளிக் செய்தால் உங்கள் வீடியோவில் Annotation சேர்க்க முடியும். இதில் Speech Bubble, Note, Title, Spotlight, Label, Pause போன்ற வசதிகள் இருக்கும். உங்களுக்கு தேவையான ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். 



ஏதேனும் ஒன்றை கிளிக் செய்த உடன் வீடியோவில் Enter Your Text என்று ஒரு Box வரும், அதே சமயம் வீடியோவுக்கு வலது பக்கம் நீங்கள் தெரிவு செய்த Annotation பெயருக்கு கீழும் டைப் செய்ய இடம் இருக்கும். Pause Annotation - ஐ தவிர மற்ற அனைத்துக்கும் இது வரும். படத்தில் Annotation Box & Text, Text Box

நீங்கள் உங்கள் Text - ஐ அதில் Type செய்யலாம். இதில் அடுத்த வீடியோ டைட்டில், Subscriber Us போன்றவற்றை குறிப்பிடலாம். அதிகமாக டைப் செய்ய வேண்டி இருந்தால் வீடியோவில் இருக்கும் Annotation-இன் நீள, அகலத்தை அதன் மூலைகளில் உள்ள சிறிய கட்டங்களை இழுத்து அதிகரித்து கொள்ளலாம். குறைக்கவும் இதே வழி தான். அதே போல அது வீடியோவில் தோன்றும் இடத்தை மாற்ற அந்த Annotation Box - ஐ நீங்கள் Drag செய்து கொள்ளலாம். 

இதே போல உங்கள் Annotation Text - களின் நிறம், அளவு, பின்னணி நிறம் போன்றவற்றை மாற்றவும் வசதி உள்ளது. படத்தில் Style

Annotation தோன்றும் மறையும் நேரத்தையும் நீங்கள் மாற்றலாம். Start, End போன்றவற்றின் மூலமோ அல்லது Annotation Timing என்பதன் மூலமோ நீங்கள் அதை செய்யலாம். 

Link - களை Add செய்ய Link Box - ஐ செக் செய்து விட்டு எதை சேர்க்க போகிறீர்கள் என்பதை தெரிவு செய்யுங்கள். Playlist, Video, Channel போன்றவற்றை சேர்க்கலாம். 

Fundraising Project, Merch மூலம் External link களை Annotation-இல் சேர்க்க முடியும். ஆனால் அதில் குறிப்பிட்ட தளங்களை மட்டுமே சேர்க்க முடியும். நம் Blog லிங்க்களை தர முடியாது. 

லிங்க் புதிய விண்டோவில் ஓபன் ஆக Open link in a new window என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

எல்லாவற்றையும் முடித்த பின் Save செய்து பின் Publish செய்து விடுங்கள். இப்போது உங்கள் வீடியோவை பார்த்தால் உங்கள் Annotation Video Play ஆகும் போது வரும். 

இதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கீழே கேளுங்கள். 

 - பிரபு கிருஷ்ணா

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்


Tablet அல்லது Tablet PC எனப்படுபவை இப்போது மிகப் பிரபலமான ஒன்று. நிறைய பேருக்கு இவற்றை வாங்கும் ஆர்வம் இருந்தாலும் எதை வாங்குவது என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் ஒரு Tablet PC வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்களை காணலாம். 

Tablet PC என்றால் என்ன?

இதை தமிழில் கைக் கணினி என்று சொல்லலாம். கணினி தரும் வசதிகள் பலவற்றை Mobile Operating System மூலம் உங்களுக்கு இவை தருகின்றன. இதில் வித்தியாசம் என்றால் Size மற்றும் Touch Screen. கணினி, மடிக்கணினி போல அல்லாமல், இவை முழுக்க முழுக்க Touch Screen ஆகவே இருக்கும். Mouse & Keyboard போன்றவற்றின் அவசியம் இருக்காது. 

அதாவது ஒரு Smartphone - ஐ விட பெரியது ஆனால் மடிக்கணினியை விட சிறியது. 

அவசியம் வாங்க வேண்டுமா? 

கண்டிப்பாக தேவை இல்லை. வெறும் பாடல்கள் கேட்க வேண்டும்,  படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Smartphone பக்கம் போகலாம், Screen Size தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் இதில் வித்தியாசம் இல்லை.

ஆனால், கல்வி, தொழில் போன்ற முக்கிய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கட்டாயம் வாங்கலாம். எங்கே இருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும், அதிக நேரம் Charge இருக்கும் வசதி என்பதால் இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

எதை வாங்கலாம்? 

Smartphone - கள் போலவே இவற்றிலும் பல Operating System கள் உள்ளன. iOS, Android, Blackberry, Windows RT போன்றவை இப்போதைக்கு பிரபலமான சில Operating System - கள் எனவே இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.

iOS ஆப்பிளின் தயாரிப்பு விலை அதிகம், அதே சமயம் பலனும் அதிகம். கிட்டத்தட்ட அனைத்து iPhone Application களும் இதிலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப் படுகின்றன.

Android கூகுளின் தயாரிப்பு, மிகக் குறைந்த விலைக்கே கிடைத்தாலும் இதில் போலிகள் பல அதிகம். அதனால் Google Play எந்த நிறுவனங்களை Support செய்கிறதோ அவற்றை வாங்குவதே நல்லது. இல்லை என்றால் உங்களுக்கு Security பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். அதை அறிய இங்கே செல்லுங்கள்

அத்தோடு இதில் குறைந்த பட்சம் Android 4.0 இருக்கும் Tablet - ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு கீழ் என்றால் வேண்டாம்.

Blackberry மொபைல் நிறுவனத்தின் தயாரிப்பு, Business ஆட்களுக்கு உசித்தமான ஒன்று.

Windows RT - இதை Mobile OS என்று சொல்ல முடியாது, கிட்டத்தட்ட கணினி தான் இது. விண்டோஸ் கணினிகளின் அமைப்பை ஒத்த இது புதிய ஒன்று. Microsoft நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இது பல Touch Application களை கணினிகளில் உள்ளது போன்றே தருகின்றது.ஆனால் இதன் இயக்கத்தில் வரும் பிரச்சினைகளால் அதிகம் விமர்சிக்கவும் படுகிறது.

Tablet க்கு முக்கிய தேவைகள் 

Smartphone போலவே தான் இவற்றுக்கும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை Processor, RAM, Battery மற்றும் Connectivity.

Prcessor தற்போதைக்கு 1GHz உள்ள ARM Processor ஒன்றை தெரிவு செய்தல் நலம். RAM 1GB அல்லது 2GB இருக்க வேண்டும்.

Battery தான் இதில் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு நேரம் Charge தாங்கும் என்பதை விசாரித்து வாங்குதல் நலம். குறைந்த patcham 3000mAH Battery உள்ள Tablet வாங்குதல் நலம்.

Connectivity என்பதில் Bluetooth, Wifi, GPS, GPRS, 3G போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

  • Bluetooth நிறைய Tablet - களில் இல்லை, இதை தேவைப் படுபவர்கள் நீங்கள் வாங்கப் போகும் ஒன்றில் அது இருக்கிறதா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 
  • Wifi தான் Tablet களின் உயிர்நாடி எனவே அது கட்டாயம் இருக்க வேண்டும். 
  • GPS சில Tablet களில் வருவது இல்லை, ஆனால் இது மிக அவசியமான ஒன்று. 
  • GPRS மற்றும் 3G போன்றவை Sim Support உள்ள Tablet களில் வரும், Sim Support இல்லை என்றால் 3G Dongle Support இருக்கிறதா என்று கேட்டு வாங்கவும். இதன் மூலம் Data Card - ஐ அதில் பயன்படுத்தலாம். 


இவற்றோடு Camera உங்களுக்கு தேவை என்றால் அது முன்னால், பின்னால் இருக்கிறதா, எத்தனை MP என்று பார்த்து வாங்கவும். Tablet களுக்கு 2MP Back Camera இருந்தாலே வாங்கலாம்.

அத்தோடு பெரும்பாலும் Display Size உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். 7 இன்ச் முதல் கிடைக்கிறது.

இவையே ஒரு Tablet PC வாங்கும் முன்பு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு ஏதேனும் முக்கியம் என்று தோன்றினால் கீழே சொல்லுங்கள். 

- பிரபு கிருஷ்ணா

MS Powerpoint - தரும் சில Keyboard Shortcut வசதிகள்

Powerpoint என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு மிக முக்கியமான Presentation Program. இதை பயன்படுத்தும் நமக்கு ஏராளமான Keyboard Shortcut கள் பயன்படுத்தும் வசதியை MS Office வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம். 

கீழே உள்ள அனைத்தும் Slideshow வின் போது பயன்படுத்தப்படுபவை. MS Office 2007 பயன்படுத்தும் நபர்களுக்கு இவை அனைத்துமே வேலை செய்யும். 

Shortcut செயல்
F5 Presentation - ஐ ஆரம்பிக்க
N, Enter, Page down, right, left or space அடுத்த Slide அல்லது அடுத்து Animation க்கு செல்ல
P, Page Up, left, UP ou backspace முந்தைய Slide அல்லது முந்தைய Animation க்கு செல்ல
Hold Enter புதிய Silde உருவாக்க
W or, Slideshow - வை தொடர அல்லது ஒரு வெள்ளை Screen காமிக்க
B or . Slideshow - வை தொடர அல்லது ஒரு கருப்பு Screen காமிக்க
S slideshow - வை Pause அல்லது resume செய்ய
ESC or - slideshow - வை முடிக்க
E Screen - இல் குறிப்புகள் கொடுத்து இருந்தால் அவற்றை கிளியர் செய்ய
H Hide செய்யப்பட்டள்ள அடுத்த Slide -க்கு செல்ல
T ஒத்திகை பார்க்கும் போது New Timing Interval வைக்க
O ஒத்திகை பார்க்கும் போது Original Timing Interval வைக்க
M ஒத்திகை பார்க்கும் போது அடுத்து Slide க்கு Mouse Cursor -ஐ பயன்படுத்த
R Slide - களின் Time மற்றும் Narration போன்றவற்றை Record செய்ய
1 + Enter [1 ஐ அழுத்திய படி Enter Press செய்யவும்] முதல் Slide க்கு செல்ல
A or = Mouse Cursor - ஐ மறைக்க அல்லது தெரிய வைக்க
Ctrl+S குறிப்பிட்ட Slide - ஐ தெரிவு செய்ய
Ctrl+P Mouse Cursor - ஐ பேனா முனை போல மாற்ற
Ctrl+A Mouse Cursor - ஐ Default Arrow ஆக மாற்ற
Ctrl+h pointer மற்றும் navigation button - ஐ மறைக்க
Ctrl+u pointer மற்றும் navigation button - ஐ 15 நொடிகளுக்கு பின் மறைக்க
Ctrl+T Windows taskbar - காண்பிக்க
shift+f10 Right Click மெனுவை காண்பிக்க
Tab Slide - இன் முதல்/அடுத்த Hyperlink க்கு செல்ல
Shift +Tab Slide - இன் முந்தைய/கடைசி Hyperlink க்கு செல்ல
Select Hyperlink & Press Enter Hyperlink - ஐ ஓபன் செய்ய
Shift+f5 தற்போதைய Slide-இல் இருந்து Presentation -ஐ ஆரம்பிக்க

- பிரபு கிருஷ்ணா

MS Excel - இல் Auto Fill வசதியை பயன்படுத்துவது எப்படி?


MS Excel மென்பொருள் பல இடங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள். மிக அருமையான வசதிகளை கொண்ட இதன் ஒரு முக்கியமான வசதி தான் Auto Fill. இதை எப்படி பயன்படுத்துவது என்று இன்று பார்ப்போம். 

இந்த Auto Fill வசதி மூலம் எண்கள், நாள், தேதி, மாதம், வருடம் என பலவற்றை தானாக Fill செய்யும் படி செய்ய முடியும். 

எண்களை Auto-fill செய்ய 

முதல் உங்களுக்கு தேவையான ஆரம்ப எண்ணை ஒரு செல்லில் கொடுங்கள், அதன் பின் அந்த செல்லை தெரிவு செய்தால் வலது கீழ் மூலையில் ஒரு சிறிய சதுரம் இருப்பதை காணலாம், அதை பிடித்து Drag செய்து கீழ் நோக்கி Cursor - ஐ இழுங்கள். இப்போது கீழே உள்ளது போல வரும். 



இப்போது Cursor - ஐ விட்ட வுடன், எல்லா செல்களிலும் நீங்கள் கொடுத்த எண் இருக்கும். அதன் கீழே படத்தில் அம்புக் குறி காட்டப்பட்டு உள்ளதை போல ஒரு வசதி வரும். 


அதை கிளிக் செய்தால் உங்களுக்கு எப்படி Auto Fill செய்ய வேண்டும் என்ற வசதிகள் வரும். 


இதில் Fill Series என்பதை கிளிக் செய்தால் எண்கள் நிரப்பப்படும்.

Copy Cells என்பது மேலே உள்ளதை அப்படியே Copy செய்யும், Fill Formatting Only என்பது குறிப்பிட்ட செல்லின் Format - ஐ மட்டும் Fill செய்யும், Fill Without Formatting என்பது செல்லில் உள்ள தகவலை மட்டும் copy செய்யும். 

வருடங்களை Copy செய்யவும், இதே முறைதான். 

நாட்களை Auto-fill செய்ய 


மாதங்களை Auto-Fill செய்ய 


தேதிகளை Auto -Fill செய்ய 

இதில் நீங்கள் Excel ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தேதிகளை கொடுக்க வேண்டும். DD/MM/YYYY அல்லது MM/DD/YYYY.


- பிரபு கிருஷ்ணா

2012 - ஆம் ஆண்டின் Top 5 ட்வீட்கள்

ட்விட்டர் தளம் 2012 - ஆம் ஆண்டின் Top 5 ட்வீட்களை சில நாட்கள் முன்பு அறிவித்தது. இது Retweets, Favorites போன்றவற்றை கணக்கிட்டு, வெளியிடப்பட்டுள்ளது. 

கீழே உள்ளவற்றின் Retweets, Favorites எண்ணிக்கை 18/12/2012 அன்று கணக்கிடப்பட்டது. 

Barack Obama ‏@BarackObama - 810,000+ Retweets &  300,000+ Favorites

ஒபாமா இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆன போது ட்வீட்டியது.
Justin Bieber ‏@justinbieber - 220,000+ Retweets  & 100,000+ Favorites

தன் ஆறு வயது ரசிகையின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து பிரபல பாடகர் ஜஸ்டின் பைபர் ட்வீட்டியது.


TJ Lang ‏@TJLang70 - 98,000+ Retweets & 28,000+ Favorites

NFL விளையாட்டு வீரர் TJ Lang நடுவர்களை மாற்றியது குறித்து ட்வீட்டியது.


Team GB ‏@TeamGB - 67,000+ Retweets & 5,000+ Favorites

ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்த பின் கிரேட் பிரிட்டன் அணியின் கணக்கில் இருந்து வந்த ட்வீட்.
山寺宏一 ‏@yamachanoha - 68,000 Retweets & 6,000 Favorites

ஜப்பான் நடிகர் Koichi Yamadera நடிகை Rie Tanaka -வை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொன்ன செய்தி ஜப்பானிய மொழியில்.

- பிரபு கிருஷ்ணா

2012 - இல் அதிகம் பார்க்கப்பட்ட 10 Youtube வீடியோக்கள்

இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இணையத்தில் பல முக்கிய சாதனைகளை நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஆண்டில் Youtube தளத்தில் வந்த வீடியோக்கள் தான் நிறைய பேருக்கு பொழுதுபோக்கை, பற்பல அறிய தகவல்களை தந்தன. Youtube தளத்தில் இந்த ஆண்டில் மிக அதிகமாக பார்க்கப்பட்ட 10 வீடியோக்களை பார்ப்போம்.

10. Felix Baumgartner's supersonic freefall from 128k' - Mission Highlights


மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒரு நிகழ்வு, வானில் 39 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து குதித்த நிகழ்வின் Highlight காட்சிகள். 



9. Facebook Parenting: For the troubled teen.


தன் மகளின் பேஸ்புக் அக்கௌன்ட் மற்றும் கருத்து குறித்து ஒரு தந்தையின் விளக்கம். 



8. Dubstep Violin- Lindsey Stirling- Crystallize

அருமையான வயலின் இசை. 



7. WHY YOU ASKING ALL THEM QUESTIONS? .. #FCHW




6. A DRAMATIC SURPRISE ON A QUIET SQUARE


விளம்பரம்



5. Barack Obama vs Mitt Romney. Epic Rap Battles Of History Season 2.




4. "Call Me Maybe" by Carly Rae Jepsen - Feat. Justin Bieber, Selena, Ashley Tisdale & MORE!




3. KONY 2012




2. Somebody That I Used to Know - Walk off the Earth (Gotye - Cover)




1. PSY - GANGNAM STYLE (강남스타일) M/V


ஒரு பில்லியன் Video Views என்ற சாதனையை படைக்கப் போகும் முதல் Youtube Video என்று எதிர்பார்க்கப்படுகிறது உலகம் முழுவதும் மிகப் பிரபலமான இந்த தென்கொரிய பாடல். 



இந்தியாவில் அதிகம் பார்க்கப் பட்ட பாத்து வீடியோக்களை காண Top Trending Videos (India). இதில் தமிழ் வீடியோ எதுவும் இல்லை. ஆனால் கடந்த வரும் கொலை\வெறி முதலாவதாக இருந்தது. 

Privacy Shortcuts - பேஸ்புக் தரும் புதிய வசதி

இன்று பேஸ்புக் தளத்தில் லாக்-இன் செய்தவர்களுக்கு ஒரு புதிய வசதி வந்திருக்கும். "Privacy Shortcuts" எனப்படும் அவற்றின் மூலம் உங்கள் Privacy Settings - ஐ எளிதாக நீங்கள் ஒரே இடத்தில் இருந்து மாற்ற முடியும். எப்படி என்று பார்ப்போம். 

உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்த பின் Home க்கு அருகே ஒரு புதிய Lock symbol வந்துள்ளதை கவனிக்கவும். 


அதை Press செய்தவுடன் கீழே உள்ளது போன்ற வசதிகள் உங்களுக்கு வரும்.


1. இதில் முதலாவதாக உள்ள "Who Can See My Stuff?" என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பது இருக்கும், அடுத்து உங்கள் Activity Log,அடுத்து  உங்கள் நண்பர் அல்லது ஒருவர் உங்கள் Timeline - ஐ பார்க்கும் போது எப்படி தெரியும் என்பவை இருக்கும்.

Who Can See My Stuff? என்பதில் Public, Friends, Custom, Only Me போன்ற வசதிகள் இருக்கும் இதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். Activity Log பகுதியில் நீங்கள் லைக் செய்தது, கமெண்ட் செய்தது, உங்களை Tag செய்துள்ள போட்டோக்கள் போன்றவற்றை நீக்க முடியும். மூன்றாவதாக உள்ள View As மூலம் மற்றவர் பார்க்க கூடாது என்று நினைக்கும் தகவல்களை நீங்கள் மறைக்க/நீக்க முடியும்.

2. இரண்டாம் வசதி, "Who Can Contact Me ?". இதில் முதல் வசதி  உங்களுக்கு யார் எல்லாம் Message அனுப்ப முடியும் என்பதை தீர்மானிக்கலாம். Basic Filtering என்பது நண்பர்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் போன்றவர்களை உங்ககுக்கு Message செய்ய அனுமதிக்கும். Strict Filtering உங்கள் நண்பர்களை மட்டும் உங்களுக்கு Message செய்ய அனுமதிக்கும். இரண்டாவது Who can send me friend requests? இதில் உள்ள இரண்டு வசதிகள் Everyone & Friends Of Friends. எது தேவையோ அதை வைத்துக் கொள்ளலாம்.

3. மூன்றாவது வசதி "How do I stop someone from bothering me?" என்பதன் மூலம் உங்களுக்கு தொல்லை தரும் நபர்களை பேஸ்புக் பக்கத்தில் Block செய்யலாம். View All Blocked Users என்பதில் நீங்கள் யாரை எல்லாம் Block செய்துள்ளீர்கள் என்பதை பார்க்கலாம்.

முன்பு இவற்றை வேறு வேறு பக்கங்களில் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்போது கிளிக் மூலம் செய்யும் படி வந்துள்ளது.

- பிரபு கிருஷ்ணா

2012-இல் உங்கள் ட்விட்டர் வரலாற்றை அறிய

பேஸ்புக் தளம் 2012 Review என்ற ஒன்றை வெளியிட்ட பின் ட்விட்டர் அதே பாணியில் 2012 இல் உங்கள் ட்விட்டர் வரலாற்றை காட்டுகிறது. இதில் உங்கள் ட்விட்டர் கணக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும். மிக அதிகம் RT செய்யப்பட்ட ட்வீட், அதிகமாக Mention செய்த நபர் போன்றவற்றையும் குறிப்பிடும். 

இதை அறிய. 

1. முதலில் இந்த இணைப்புக்கு செல்லுங்கள் Golden Tweets. 

2. அதில் "Your Year on Twitter" என்பதை கிளிக் செய்யுங்கள்.  அடுத்து Take Me There என்பதை கிளிக் செய்யுங்கள். 

3.  அடுத்து வரும் பக்கத்தில் "Get Yours Now" என்பதை கிளிக் செய்யுங்கள். 

4. இதை ட்விட்டர் தளம் Vizify என்ற இன்னொரு தளத்தின் உதவியுடன் செய்கிறது. எனவே அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ட்விட்டர் கணக்கை வைத்து Log-in செய்யுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்க வேண்டி வரும். 

5. அடுத்த பக்கத்தில் நீங்கள் இந்த log-in ஐ Authorize செய்ய வேண்டும். 

6. அவ்வளவு தான் இப்போது ட்விட்டர் தளத்தில் உங்கள் 2012 ஆம் ஆண்டின் செயல்களை குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். 

7. நான்கு பக்கங்களாக இது இருக்கும். முதல் பக்கத்தில் உங்கள் Profile தகவல் (Overview), இரண்டாம் பக்கத்தில் ஒரு ட்வீட் (Quote), மூன்றாம் பக்கத்தில் நீங்கள் ட்விட்டர் தளத்தில் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள் (Words) , நான்காம் பக்கத்தில் Golden Tweet , Golden Follower (Year on twitter) போன்றவை இருக்கும். 

இதில் நீங்கள் Edit செய்ய விரும்பும் தகவல்களை பக்கத்தின் வலது மேல் மூலையில் உள்ள  எடிட் வசதி மூலம் மாற்றலாம். புதிதாக ஏதேனும் பக்கத்தை சேர்க்க விரும்பினால் அதையும் செய்யலாம். 



ஆனால் இதில் 2012 இல் நீங்கள் Follow செய்த நபர்கள், உங்களை Follow செய்த நபர்களை குறிப்பிடாதது ஒரு குறை எனலாம். 

- பிரபு கிருஷ்ணா

2012 ஆம் ஆண்டு கற்போம் இதழ்கள் அனைத்தையும் தரவிறக்க



இந்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்பட்ட கற்போம் மாத இதழ் இதுவரை 12 முறை வெளியிடப்பட்டுள்ளது. பல தொழில்நுட்ப பதிவர்களின் பலனுள்ள கட்டுரைகளை தாங்கி வெளிவந்த ஒவ்வொரு இதழும் உங்களுக்கு மிகவும் பயனளித்து இருக்கும். இந்த பதிவில் அவை அனைத்தையும் ஒரே இணைப்பில் தரவிறக்கம் செய்யும் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது.


ஒவ்வொரு இதழும் தனித் தனியாக வேண்டும் என்பவர்கள். கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கற்போம் - தமிழில் முதல் தொழில்நுட்ப இணைய இதழ் Karpom e-Magazine

இவற்றை தரவிறக்கம் செய்ய முடியாதவர்கள். admin[at]karpom.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "கற்போம் இதழ் 2012" என்று Suject உடன் மின்னஞ்சல் செய்யவும்.

- பிரபு கிருஷ்ணா

விக்கிபீடியா கட்டுரைகளை eBook ஆக டவுன்லோட் செய்வது எப்படி?


இணையத்தில் உள்ள அனைவரும் கூகுள்க்கு அடுத்த படியாக பயன்படுத்தும் தளம் என்றால் அது விக்கிபீடியாவாகத் தான் இருக்கும். மிகவும் பயனுள்ள பல கட்டுரைகளை கொடுக்கும் அது தரும் புதிய வசதி, அதன் கட்டுரைகளை eBook ஆக PDF Format - இல் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி. எப்படி என்று பார்ப்போம். 

இதன் பெரிய பலன், எத்தனை கட்டுரைகளை வேண்டுமானாலும் ஒரே புத்தகமாக டவுன்லோட் செய்ய முடியும். 

தமிழ் விக்கிபீடியா: 

1. முதலில் உங்களுக்கு வேண்டிய கட்டுரையை விக்கிபீடியா பக்கத்தில் ஓபன் செய்யுங்கள். 

2. இப்போது கட்டுரையின் இடது பக்கத்தில் அச்சு/ஏற்றுமதி என்பதில்  "ஒரு புத்தகம் உருவாக்கு" என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள். 

3. இப்போது புத்தகம் உருவாக்கும் பக்கத்துக்கு நீங்கள் வருவீர்கள்.இதில் "புத்தக உருவாக்குநரை தொடங்கு" என்பதை கிளிக் செய்யுங்கள், 

4. இப்போது மீண்டும் கட்டுரை பக்கத்துக்கு வருவீர்கள். அதில் கட்டுரையின் மேலே ஒரு பகுதி இருக்கும். 


அதில் "உங்கள் புத்தகத்தில் இப்பக்கத்தைச் சேர்க்கவும்" என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. இப்போது உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கம் Add ஆகி விடும். பல கட்டுரைகளில் விக்கிபீடியாவின் வேறு பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டு இருக்கும். அதையும் இந்த புத்தகத்தில் சேர்க்க குறிப்பிட்ட லிங்க் மீது மௌஸ் கர்சரை Hover செய்தால் கீழே உள்ளது போல வரும். 

இதை கிளிக் செய்தால் அந்த பக்கமும் உங்கள் புத்தகத்தில் Add ஆகிவிடும். 

6. இதே போல எத்தனை கட்டுரைகள் வேண்டுமோ அத்தனையும் சேருங்கள். 

7.  இப்போது இறுதியாக கட்டுரையின் மேலே உள்ள நூலைக் காட்டவும் என்பதை கிளிக் செய்யுங்கள். 

8. அடுத்த பக்கத்தில் புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து பதிவிறக்கம் செய் என்பதை கிளிக் செய்யுங்கள். 


வேறு வடிவமைப்பு வேண்டும் என்றால் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். 

9. அடுத்த பக்கத்தில் Rendering ஆன பிறகு Download the file என்பதை கிளிக் செய்தால் File கிடைக்கும். 

ஆங்கில விக்கிபீடியா: 

1. முதலில் உங்களுக்கு வேண்டிய கட்டுரையை விக்கிபீடியா பக்கத்தில் ஓபன் செய்யுங்கள். 

2. இப்போது கட்டுரையின் இடது பக்கத்தில் Print/Export என்பதில் Create a book என்பதை கிளிக் செய்யுங்கள். 

3. இப்போது புத்தகம் உருவாக்கும் பக்கத்துக்கு நீங்கள் வருவீர்கள்.  "Start book creator" என்பதை கிளிக் செய்யுங்கள். 

4. இப்போது மீண்டும் கட்டுரை பக்கத்துக்கு வருவீர்கள். அதில் கட்டுரையின் மேலே ஒரு பகுதி இருக்கும்.


 Add this page to your book என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. இப்போது உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கம் Add ஆகி விடும். பல கட்டுரைகளில் விக்கிபீடியாவின் வேறு பக்கங்களுக்கு இணைப்பு தரப்பட்டு இருக்கும். அதையும் இந்த புத்தகத்தில் சேர்க்க குறிப்பிட்ட லிங்க் மீது மௌஸ் கர்சரை Hover செய்தால் கீழே உள்ளது போல வரும்.

இதை கிளிக் செய்தால் அந்த பக்கமும் உங்கள் புத்தகத்தில் Add ஆகிவிடும்.

6. இதே போல எத்தனை கட்டுரைகள் வேண்டுமோ அத்தனையும் சேருங்கள்.

7.  இப்போது இறுதியாக கட்டுரையின் மேலே உள்ள Show book என்பதை கிளிக் செய்யுங்கள்.

8. அடுத்த பக்கத்தில் புத்தகத்திற்கு தலைப்பு கொடுத்து Download என்பதை கிளிக் செய்யுங்கள்.


வேறு Format வேண்டும் என்றால் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.


9. அடுத்த பக்கத்தில் Rendering ஆன பிறகு Download the file என்பதை கிளிக் செய்தால் File கிடைக்கும்.


- பிரபு கிருஷ்ணா

YouTube Video - க்களை Audio ஆக Embed செய்வது எப்படி?


YouTube வீடியோக்களை நம் வலைப்பூக்களில் Embed செய்யும் போது சில சமயம் வெறும் ஆடியோ மட்டும் தான் நமக்கு தேவைப்படுவதாக இருக்கும். அம்மாதிரியான சமயங்களில் இடத்தை அடைத்துக் கொள்ளும் வகையில் இல்லாமல் வெறும் ஆடியோ மட்டும் வரும் வண்ணம் எப்படி  தெரிய வைப்பது என்று பார்ப்போம்.

நீங்கள் Embed செய்யும் வீடியோ கீழே உள்ளது போல வரும். 




இதை செய்ய முதலில் கீழே உள்ள Coding-ஐ Copy செய்து உங்கள் Post Edit பகுதியில் HTML பகுதியில் Paste செய்து கொள்ளுங்கள். 

<div style="position:relative;width:267px;height:25px;overflow:hidden;">
  <div style="position:absolute;top:-276px;left:-5px">
    <iframe width="300" height="300"
      src="https://www.youtube.com/embed/youtubeID?rel=0">
    </iframe>
  </div>
</div>

இப்போது எந்த வீடியோவை, ஆடியோ ஆக Embed செய்ய வேண்டுமோ அதன் வீடியோ ஐடியை காபி செய்ய வேண்டும். அது வீடியோவின் URL பகுதியில் இருக்கும்.


இது சில சமயம் வேறு மாதிரி வர வாய்ப்பு உள்ளது. அப்போது v= என்பதற்கு அடுத்து உள்ள சில வார்த்தைகளை மட்டும் Copy செய்து கொள்ளுங்கள். கீழே உள்ளது ஒரு உதாரணம்.



இதை நீங்கள் ஏற்கனவே Paste செய்த Coding - இல் youtubeID என்பதற்கு பதில் Copy செய்த Video ID  - ஐ பேஸ்ட் செய்ய வேண்டும். இப்போது கோடிங் கீழே உள்ளது போல இருக்கும்.


அவ்வளவுதான் இனி வீடியோவின் ஆடியோ மட்டும் உங்கள் தளத்தில் வரும். 

- பிரபு கிருஷ்ணா

"Save to Google Drive" கூகுள் வழங்கும் உதவிகரமான Chrome Extension


கூகுள் டிரைவ் பயனர்கள் அனைவரும் இணையத்தில் கிடைக்கும் File - களை சேமிக்க இதுவரை அவற்றை டவுன்லோட் செய்து அதன் பின் அதை Google Drive க்கு Upload செய்ய வேண்டி இருந்தது. Chrome பயனர்களுக்கு கூகுள் இப்போது நேரடியாக File - களை Save செய்யும் வசதி தந்துள்ளது. 

Save to Google Drive என்ற அந்த Chrome Extension மூலமாக நீங்கள் எளிதாக File - களை உங்கள் Drive கணக்கில் சேர்க்க முடியும். இதில் Google Drive - இல் Save செய்ய முடியும் File வகைகள் கீழே உள்ளன. 
  • HTML Pages
  • HTML5 audio and video
  • Images
  • Uploaded Documents [PPT, PDF, Excel and etc]
File - களை Drive - இல் சேமிக்க குறிப்பிட்ட File மீது Right Click செய்து Save Image/File To Google Drive என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


File ஒன்றை save செய்யும் போது அதை Rename செய்யும் வழியும் உள்ளது. 

இதை உங்கள் Chrome உலவியில் பயன்படுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்

HTML Page - களை Save செய்யும் அதை என்ன Format - இல் save செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும். Default ஆக முழு பக்கத்தையும் PNG Image ஆக சேமிக்கும். இதை மாற்ற Crunch Icon >> Settings >> Extensions சென்று Save To Google Drive Extension - இல் Options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல வரும். 



இதில் உங்களுக்கு தேவையான Format தெரிவு செய்தால் போதும். 

- பிரபு கிருஷ்ணா

2012 - இல் உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை காட்டும் பேஸ்புக்


இணையம் பயன்படுத்தும் அனைவரும் கிட்டத்தட்ட பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொருவருமே நமக்கு நிகழும் முக்கிய நிகழ்வுகளை பேஸ்புக் நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறோம். அதில் இந்த 2012-இன் முக்கியமான 20 நிகழ்வுகளை ஒரு Timeline ஆக காட்டுகிறது பேஸ்புக். 

See Your 2012 Year in Review என்று பெயரிடப்பட்டு இருக்கும் இதில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நீங்கள் பகிர்ந்த முக்கியமான 20 விசயங்களை உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கிறது. 

பெரும்பாலும் இது புதிய வேலை, புதிய உறவு, புதிய நண்பர்கள், நீங்கள் Like செய்த Facebook Pages, உங்களின் சாதனைகள், அதிகமாக பகிரப்பட்ட/லைக் செய்யப்பட்ட உங்கள் Status, மற்றும் உங்கள் Profile படம் போன்றவற்றை காண்பிக்கிறது. 

  • ஒரு புதிய Tab - இல் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்
  • இப்போது கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யுங்கள். 

என்னுடையதை காண - Prabu Krishna

- பிரபு கிருஷ்ணா

கூகுள் சேவைகளின் உதவிப் பக்கங்கள்


இணையத்தில் உள்ள ஒவ்வொருவருமே ஏதோ ஒரு கூகுள் சேவையை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள்.இதில் நாம் பயன்படுத்தும் ஒன்றில் நமக்கு சந்தேகங்களும், பிரச்சினைகளும் வரும் போது அவற்றுக்கு தீர்வை  தர கூகுள் உதவி பக்கங்களை தந்துள்ளது. Help Forums என்ற பெயரில் இயங்கும் இவை, ஒவ்வொரு கூகுள் சேவைக்கும் தனித்தனியே உள்ளன. 

உங்களுக்கு வரும் சந்தேகம், பிரச்சினை போன்றவற்றை அந்த பக்கங்களில் கேட்டால் அதற்கான தீர்வை பலரிடம் இருந்து பெறலாம். பெரும்பாலும் Top Contributor - கள் தரும் தீர்வுகள் பயன்படும். 

சில சமயங்களில் வேறு யாராவது உங்களைப் போன்றே பிரச்சினையை எதிர்கொண்டு, இவற்றில் அதற்கான தீர்வை பெற்று இருந்தால் அதையும் நீங்கள் பார்க்கலாம். 

ஒவ்வொரு சேவைக்கும் உள்ள குறிப்பிட்ட உதவி பக்கம் கீழே உள்ளது. அதன் பெயரிலேயே அது எதற்கானது என்பது உங்களுக்கு தெரிந்து விடும். பெரும்பாலும் கேள்வி/பதில்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும். 

நன்றி - Tech Hints
 - பிரபு கிருஷ்ணா

ஒரு Google Plus Community-யில் இருந்து வெளியேறுவது எப்படி?


பேஸ்புக் குரூப் போல, கூகுள் பிளஸ் கம்யூனிட்டிகளில் நம்மை தேவை இல்லாதவற்றில் சேர்த்து விட வாய்ப்பு உள்ளது. அப்படி சேர்ந்து விட்டால் அதன் பின் Notifications  தொல்லையை Off செய்தாலும், அதில் இருக்க விரும்பாதவர்கள் அந்த கம்யூனிட்டியை விட்டு வெளியேறலாம். எப்படி என்று பார்ப்போம். 

1. உங்கள் Google Plus கணக்கில் நுழைந்து Communities என்பதை கிளிக் செய்யவும்.

2. Your communities என்பதற்கு கீழே உள்ளது நீங்கள் சேர்ந்துள்ள Communities. எதிலிருந்து நீங்கள் வெளியே வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதன் மீது கிளிக் செய்யுங்கள்.

3.இப்போது குறிப்பிட்ட Community ஓபன் ஆன பிறகு, அதன் படத்துக்கு கீழே Actions என்று ஒன்று இருக்கும். அதன் மீது கிளிக் செய்து Leave Community என்பதை கிளிக் செய்யுங்கள்.


4. அடுத்து இதை நீங்கள் Confirm செய்ய வேண்டும். அவ்வளவே.


5. மீண்டும் சேர வேண்டும் என்றால் Join Request கொடுத்து Join ஆகலாம்.

குறிப்பிட்ட Community - யில் வரும் ஈமெயில்களை தடுக்க - Google Plus Community Email Notification-களை Turn Off செய்வது எப்படி?

- பிரபு கிருஷ்ணா

Google Plus Community Email Notification-களை Turn Off செய்வது எப்படி?


Google Plus புதிதாக Community என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய பின் நிறைய பேர் உங்களை புதிது புதிதாக எதாவது Community உருவாக்கி அவற்றில் சேர்க்க வாய்ப்புள்ளது. 

அவற்றில் நாம் சேர்ந்தவுடன் தொடர்ந்து பல மின்னஞ்சல்கள் வந்து நமக்கு தொல்லை தந்து கொண்டிருக்கும். இந்த பதிவில் எவ்வாறு அந்த Email Notification-களை Off செய்வது என்று பார்ப்போம். 

1. உங்கள் Google Plus கணக்கில் நுழைந்து Communities என்பதை கிளிக் செய்யவும். 

2. Your communities என்பதற்கு கீழே உள்ளது நீங்கள் சேர்ந்துள்ள Communities. எதிலிருந்து Notifications வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதன் மீது கிளிக் செய்யுங்கள். 

3. இப்போது குறிப்பிட்ட Community ஓபன் ஆன பிறகு, அதன் படத்துக்கு கீழே Notifications Icon (Bell Symbol) இருக்கும்.


4. அதில் On என்பதன் மீது கிளிக் செய்தால் Off என்று ஆகி விடும். அதன் பின் குறிப்பிட்ட Community - யில் இருந்து எந்த ஈமெயிலும் வராது. 


குறிப்பிட்ட Community - யில் இருந்து வெளியேற - ஒரு Google Plus Community-யில் இருந்து வெளியேறுவது எப்படி?

- பிரபு கிருஷ்ணா

Follow செய்யும் Blog - ஐ Unfollow செய்வது எப்படி?


குறிப்பிட்ட வலைப்பூவை தொடர்வது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை எப்படி unfollow செய்வது என்பது குறித்து யோசிக்கும் போது நிறைய பேருக்கு தெரியாது. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

1. முதலில் குறிப்பிட்ட வலைப்பூவுக்கு செல்லுங்கள். 

2. நீங்கள் ஏற்கனவே Follow செய்வதால், Sign In என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. Sign in செய்த பின் உங்கள் படத்துக்கு கீழே வரும் "Options >> Site Settings" என்பதை கிளிக் செய்யுங்கள். 


4. இப்போது வரும் Pop-up விண்டோவில் "Stop following this site" என்பதை கிளிக் செய்யுங்கள். 


5. இப்போது பாருங்கள் Follow செய்பவர்கள் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து இருக்கும். 

- பிரபு கிருஷ்ணா

Audacity - இலவசமாக ஒரு Audio Editor

Video Editor எவ்வளவு முக்கியமோ அதே போல முக்கியமான ஒன்று Audio Editor. அதில் மிகவும் பயனுள்ள ஒன்று Audacity. இது Audio Editor என்பதோடு Audio Recording வசதியையும் தருகிறது. ஓபன் சோர்ஸ் மென்பொருளான இது பல விதமான பயன்களை கொண்டுள்ளது. அதை பற்றி இன்று பார்ப்போம். 

இதன் சிறப்பம்சங்கள் கீழே. 


  • Microphone, line input, USB/Firewire devices என மற்றும் பல Device- களின் மூலம் Audio Record செய்யும் வசதி. 
  • ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட Device -களில் இருந்தும் Record செய்ய முடியும். 
  • கிட்டத்தட்ட எல்லா Audio Format - களையும் சப்போர்ட் செய்கிறது. 
  • நிறைய Track - களை Edit, Mix செய்யும் வசதி. 
  • தேவையற்ற சத்தங்களை (Noise) நீக்கும் வசதி. 
  • Tempo Adjustment வசதி.இது ஆடியோ வேகத்தை வீடியோவுக்கு மேட்ச் செய்ய உதவுகிறது. 
  • வேகத்தை மாற்றாமல் Pitch (சுருதி) அட்ஜஸ்ட் செய்யும் வசதி. 
  • Audio Effect - கள் உருவாக்கும் வசதி. 
  • மிகத் தெளிவான Output 
இது Windows, Mac, Linux கணினிகளில் இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதை தரவிறக்க : 

Audacity for Windows  (Windows 2000/XP/Vista/7)

 Audacity for Mac (Universal Binary for Mac OS X 10.4 or later)