பேஸ்புக்கில் தேவை இல்லாத Games, Apps Request-களை தடுப்பது எப்படி? | கற்போம்

பேஸ்புக்கில் தேவை இல்லாத Games, Apps Request-களை தடுப்பது எப்படி?


பேஸ்புக்கில் நமக்கு உச்சகட்ட எரிச்சலான Photo Tag க்கு அடுத்து பெரிய எரிச்சலை தருவது Games, Application Request கள். உங்கள் நண்பர் அதை விளையாடுகிறார், இதை பயன்படுத்துகிறார் என்று சொல்லி நிறைய Notifications வந்து குவியும் இவற்றை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.


Notifications வருவதை தடுக்க, குறிப்பிட்ட Game அல்லது Application Request வரும் போது, கீழே உள்ளது போல அதன் வலது மூலையில் வைத்தால் ஒரு பெருக்கல் குறி வரும், அதை கிளிக் செய்ய வேண்டும்.



இப்போது Turn Off என்பதை கொடுத்து விடுங்கள். அவ்வளவு தான் இனி குறிப்பிட்ட Game/Application - இல் உங்களுக்கு எந்த Notification-யும் வராது.


Game/Application எதுவும் வேண்டாம் என்றால்  Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை கிளிக் செய்து  அதில் Privacy Settings என்பதை தெரிவு செய்யுங்கள்.



இப்போது வரும் பகுதியில். "Ads, Apps and Websites" என்ற பகுதியில் Edit settings என்பதை தெரிவு செய்யவும்.



இப்போது வரும் பகுதியில் Apps you use என்பதில் Edit Settings கொடுத்து (Right Click செய்து புதிய Tab- இல் ஓபன் செய்யவும்.) நீங்கள் இதுவரை பேஸ்புக்கில் பயன்படுத்திய அனைத்து Apps-களையும் நீக்க வேண்டும். (பெருக்கல் குறி மீது கிளிக் செய்து நீக்கி விடலாம்)

இப்போது மீண்டும் Ads, Apps and Websites பகுதிக்கு வந்து, Apps you use பகுதியில் Turn Off என்று கீழே உள்ளது போல உள்ள வசதியை கிளிக் செய்யவும்.


இப்போது வரும் பகுதியில் Turn Off Platform என்று கொடுங்கள். இது Success ஆனால் இனி யாரும் உங்களுக்கு Game, Apps Request களை அனுப்ப முடியாது. அதே சமயம் Facebook account பயன்படுத்தி நீங்கள் எந்த தளத்திலும் நுழையவும் முடியாது.

ஆனால் இந்த வசதி உடனடியாக Turn Off ஆவதில்லை. நிறைய பேருக்கு Error while disabling applications என்று வரும். அப்படி வந்தால் சிறிது நேரம்/நாள் கழித்து முயற்சி செய்யவும். 

இது Turn Off ஆகிவிட்டால் Games, Application Request-களில் இருந்து உங்களுக்கு விடுதலை. இல்லை என்றால் அடுத்த Settings க்கு வாருங்கள்.

How people bring your info to apps they use என்ற பகுதிதான் உங்கள் நண்பர்கள் பயன்படுத்தும் Games, Application களுக்கு உங்கள் தகவல்களை அனுப்புவதை தடுக்கும் பகுதி. அதில் Edit Settings கொடுத்து வரும் விண்டோவில் அனைத்தையும் Unclick செய்து விடுங்கள்.


இதன் மூலம் பெரும்பாலான Games, Apps Request-களை தடுக்கப்படும்.


- பிரபு கிருஷ்ணா

9 comments

நல்ல தகவல் , பகிர்வு நன்றி .

Reply

இதைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு

Reply

அவசியமான தகவல் சகோ.! உடனே செய்துவிடுகிறேன்.

Reply

நல்ல தகவல் நண்பா, உடனடியாக update ஆகிறேன், மிக்க நன்றி பகிர்வுக்கு!

Reply

அப்பாடா... தேவையில்லாதவற்றை Delete செய்து விட்டேன்... நன்றி... (TM 4)

Reply

சிறப்பான தகவல்! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html

Reply

உடனே செய்துவிடுகிறேன்..தகவலுக்கு நன்றி நண்பா.

Reply

உடன் செய்துவிட்டேன். இரண்டாவது உபாயமே பலன் தந்தது. நன்றி.

Reply

Post a Comment