Team Viewer For Android - ஆன்டிராய்டில் இருந்து கணினியை இயக்க | கற்போம்

Team Viewer For Android - ஆன்டிராய்டில் இருந்து கணினியை இயக்க

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி கண்ட்ரோல் செய்யலாம்.

இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.

ஆன்லைனில் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.


கீபோர்டு பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள கீபோர்டு தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம். 

left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது. 

Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும். Team Viewer என்றால் என்ன என்று கேட்பவர்கள் இந்தப் பதிவை படிக்கவும்

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

எப்படி இயங்குகிறது என்று காண: 



இதை தரவிறக்கம் செய்ய.இங்கே கிளிக் செய்யவும்

அல்லது இந்த QR Code-ஐ  Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.

3 comments

usfull application thanks KP

Reply

அன்பு நண்பரே வணக்கம்.
நான் புதிய SAMSUNG GALAXY DUOS LITE GT-S5302 என்ற ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி உள்ளேன.
தங்களது தளத்தில் தாங்கள் அறிமுகம் செய்யும் ஆண்ட்ராய்டு அப் களை தர விறக்கம் செய்வது எப்படி?கூகுள் வழியாக தங்களது தளத்துக்கு சென்றால் தங்களது தளம் இல்லை அல்லது did not match என வருகிறது.
கணிணியில் தரவிறக்கம் செய்து அதனை டாடா கேபிள் வழியாக அல்லது புளு டூத் வழியாக மொபைலுக்கு மாற்றம் செய்து பயன்படுத்த முடியுமா?
போன் வாங்கி14.01.2013 வாங்கி பயன் படுத்த தெரியாமல் சாதாரண போனாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.
எனது பிரச்னைக்குத் தீர்வு சொல்லித் தர இயலுமா?
நன்றி வணக்கம்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Reply

முதலில் உங்கள் போனில் இணைய சேவையை Activate செய்யுங்கள். அடுத்து Play Store அல்லது Market என்று உள்ள Icon மீது கிளிக் செய்து Google Play தளத்துக்கு செல்லலாம். இங்கு உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நீங்கள் Log-in செய்த பிறகு Application-களை Download செய்யலாம்.

Reply

Post a Comment