November 2012 | கற்போம்

Windows 8 க்கு Upgrade செய்த பின் பழைய Windows File - களை நீக்குவது எப்படி?

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான Windows 8 ஒரே மாதத்தில் 4 கோடி லைசென்ஸ்களை விற்றுள்ளது. மிகக் குறைந்த விலையில் வெளியானதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். பெரும்பாலானோர் பழைய OS- இல் நேரடியாக Upgrade செய்துள்ளதால், பழைய OS - இன் File - கள் அனைத்தும் அப்படியே இருக்கும் அதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம். 

நீங்கள் Windows 8 க்கு Upgrade செய்த பின் பழைய OS - ன் Program Files and Folders என அனைத்தும் Windows.old என்ற போல்டரில் இருக்கும். இவை 10 GB அளவில் இருக்க கூடும். அவற்றால் பலன் ஏதுமில்லை எனும்போது அவற்றை நீக்குவது தான் நல்லது. 



Windows.old போல்டரை நீக்குவது எப்படி ?

1. உங்கள் கணினியில் Windows Key + R அழுத்தி Run ஐ ஓபன் செய்யுங்கள். 

2. இப்போது cleanmgr என்று டைப் செய்து Disk Clean Up ஐ ஓபன் செய்யவும். 

3. OS இன்ஸ்டால் செய்துள்ள Drive பெயரை தெரிவு செய்து (பெரும்பாலும் C Drive) Next கொடுக்கவும். அடுத்த விண்டோவில் Clean Up System Files என்பதை கிளிக் செய்யுங்கள். 

4. இப்போது Files To Delete பகுதியில் Previous Windows installation என்பது தெரிவு செய்யப்படாமல் இருந்தால் தெரிவு செய்து OK கொடுங்கள். 



5. அவ்வளவு தான் File - கள் சில நிமிடங்களில் நீக்கப்பட்டு விடும்.

நன்றி - Digital Inspiration

- பிரபு கிருஷ்ணா

IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி


உலகிலேயே மிகக் கடினமான விஷயம் எதுவென்று கேட்டால், இந்தியர்களின் பதில் IRCTC தளத்தில் ஒரே முறையில் டிக்கெட் புக் செய்வது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு கடினமான விஷயம் அது. அதில் டிக்கெட் புக் செய்யும் போது உங்களுக்கு உதவும் வகையில் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை இன்று காண்போம். 

இந்த பதிவில் 9.30 க்கு லாக்-இன் செய்யுங்கள் என்று ஆரம்பித்து இதர விசயங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை. மாறாக ஒரே ஒரு ட்ரிக் மட்டும் தான் சொல்லப் போகிறேன். 

லாக் இன் செய்து, ரயிலை கண்டுபிடித்து புக் செய்யும் பக்கத்தில் தான் நமக்கு ஆரம்பிக்கும் பிரச்சினை, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு புக் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் பெயரையும் கொடுத்து நாம் அவர்களின் வயது, பாலினம் என்று முடிப்பதற்குள் டிக்கெட்டுகள் முடிந்து விடும் வாய்ப்பு அதிகம். 


அதிலும் Payment பக்கத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விட்டால் இன்னொரு முறை உங்களால் இந்த தகவலை வேகமாக நிரப்புவதற்குள் ரயில் அநேகமாக கிளம்பி இருக்கும். இதை தவிர்த்து புக் செய்யப்போகும் ஆறு பேருக்கும் ஒரே நொடியில் தகவல்களை நிரப்ப முடிந்தால், எப்படி இருக்கும். 

இந்த வசதியை இந்தியாவில் பிரபல தொழில்நுட்ப பதிவர் அமித் அகர்வால் கண்டுபிடித்துள்ளார். முதலில் Magic Autofill  என்ற பக்கத்திற்கு செல்லுங்கள், இதை எங்கோ பார்த்தது போல உள்ளது என்று நினைக்கிறீர்களா, இது IRCTC தளத்தில் பயணிகள் தகவல் கொடுக்கும் பக்கத்தின் மாதிரி தான்.



இதில் பயணிகள் குறித்த தகவல்களை முதலில் நிரப்பி விடுங்கள். பின்னர் I'm Feeling Lucky என்பதை கிளிக் செய்து அதற்கடுத்து "Magic Autofill" என்பதை உங்கள் உலவியில் Drag செய்து Bookmark Toolbar பகுதியில் விடவும். 

செய்யும் முறை:

கவனிக்க நீங்கள் இந்த பக்கத்தை Bookmark செய்யகூடாது. Firefox மற்றும் Chrome உலவியில் Bookmark Toolbar Enable செய்து இருக்க வேண்டும், அப்போது தான் இது அங்கே Add ஆகும். Bookmar Toolbar Enable செய்ய. 

Firefox - இதில் URL பகுதிக்கு மேல் Right Click செய்து Bookmark Toolbar என்பதை Enable செய்ய வேண்டும். 


Chrome - இதில் Wrench Icon >> Bookmarks >> Show Bookmarks bar என்பதை கிளிக் செய்ய வேண்டும். 


இப்போது Drag செய்து Bookmark பகுதியில் விட்டால் Magic Autofill - ஐ விட்டால், அது கீழே உள்ளது போல தோன்றும். 

In Chrome
In Firefox
இப்போது IRCTC தளத்தில் பயணிகள் தகவலை நிரப்பும் போது இந்த Magic Fill என்பதை அழுத்தினால், அது ஒரே நொடியில் அனைவருக்கும் தகவல்களை நிரப்பி விடும். 

இது கூடுதலாக உள்ள Food, ID Card No, ID Card Type என்பதை குறித்த கவலை வேண்டாம், நீங்கள் புக் செய்யும் போது அது கேட்கப்படவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. 

என்ன நடக்கிறது ? 

இந்த Magic Autofill ஒரு Java Script ஆகும் நீங்கள் நிரப்பும் தகவல்கள் உங்கள் உலவியில் சேமிக்கப்படும், நீங்கள் கிளிக் செய்யும் போது IRCTC தளத்தில் உள்ள கோடிங் உடன் மேட்ச் ஆகி தகவல்கள் ஒரே நொடியில் நிரப்பப்பட்டு விடும். 

நன்றி -  Digital Inspiration

- பிரபு கிருஷ்ணா

"Windows 8 for Dummies" இலவச மின் புத்தகம்


நீங்கள் விண்டோஸ் 8 க்கு புதியவரா என்று இப்போது உங்களிடம் என்னால் கேட்க முடியாது, அது வெளியாகியே ஒரு மாதம் தானே ஆகிறது. அனைவருக்கும் அது புதியது தான். அதை எளிதாக கையாள dell நிறுவனம் இலவச மின் புத்தகம் ஒன்றை வழங்குகிறது. 

Dell Enterprise team வெளியிட்டுள்ள இந்த ஆங்கில மின் புத்தகம் உங்களுக்கு விண்டோஸ் 8 குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லும். 

Chapters: 


  1. The New Start Screen
  2. The Traditional Desktop
  3. Storage: Internal, External, and in the Sky
  4. Working with Apps
  5. Engaging the Social Apps
  6. Getting Connected and Having Fun through the Start Screen
  7. Ten Things You’ll Hate about Windows 8 (And How to Fix Them)
Windows 8 குறித்த அனைத்தையும் வழங்கும் இந்த மின் புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள். 

Windows 8 குறித்த மற்ற சில மின்புத்தகங்கள்:
  1. Getting Started: Your Guide to Windows 8
  2. Windows 8 Cheat Sheet: Keyboard Shortcuts
  3. Windows 8 Cheat Sheet: Touch and Mouse Gestures
  4. Windows 8 Consumer Preview First Look - Video Tutorial

Instagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி?

Smartphone வைத்து இருப்பவர்களில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் Application Instagram. புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த தளத்தில் நாம் படங்களை டவுன்லோட் செய்ய முடியாது. கணினி மூலம் அதை செய்ய உதவும் Application பற்றி பார்ப்போம். 

1. முதலில் InstagramDownloader என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. RAR File - ஐ Extract செய்த பின்பு Application - ஐ Run செய்யவும். 

3. இப்போது குறிப்பிட்ட நபரின் User Name கொடுப்பதன் மூலம் அவர்களின் படங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். 


4. அவை ஒரு Notepad File ஆக Save ஆகி இருக்கும். அதை ஓபன் செய்து அதில் உள்ள முகவரிகளை உங்கள் உலவியில் paste செய்து படங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


5. நான் டவுன்லோட் செய்த பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களின் போட்டோ. 



- பிரபு கிருஷ்ணா

ஜிமெயிலில் மின்னஞ்சல்களை தேடும் வழிகள்

குறிப்பிட்ட ஒரு மின்னஞ்சலை தேடுதல் என்பது எப்போதும் எளிதல்ல.  ஆனால் ஜிமெயில் பயனர்களுக்கு அது கடினமே இல்லை, ஏன் என்றால் உங்களுக்கு தேவையான மின்னஞ்சல்களை தேட அவ்வளவு வசதிகளை ஜிமெயில் தருகிறது. அவைகளை கீழே உள்ள டேபிளில் காணலாம். 

இங்கே கிளிக் செய்து இதை தரவிறக்கம் கூட செய்து கொள்ளலாம்

 தேடல் 
&
உதாரணம்
 விளக்கம்
from:

உதாரணம்: from:amy
குறிப்பிட்ட அனுப்புனரின் ஈமெயில்களை தேட
to:

உதாரணம்: to:david
குறிப்பிட்ட நபருக்கு அனுப்பிய ஈமெயில்களை தேட
subject:

உதாரணம்: subject:dinner
குறிப்பிட்ட வார்த்தை Subject – இல் இருந்தால் தேட
OR

உதாரணம்: from:amy OR from:david
குறிப்பிட்ட இருவரின் ஈமெயில்களை தேட. இதில் OR கட்டாயம் Capital Letter ஆக இருக்க வேண்டும்.
-
(hyphen)


உதாரணம்: dinner –movie

Dinner என்று உள்ளது வரும். MovieDinnerDinner, Movie இரண்டும் Subject இல் இருந்தால் வராது.
குறிப்பிட்ட வார்த்தை Subject – இல் இல்லாத ஈமெயில்களை தேட
label:

உதாரணம்: from:amy label:friends

உதாரணம்: from:david label:my-family
குறிப்பிட்ட Label – களில் மின்னஞ்சலை தேட
has:attachment

உதாரணம்: from:david has:attachment 
குறிப்பிட்ட நபர் அனுப்பிய attachment உள்ள ஈமெயில்களை தேட
filename:



உதாரணம்: filename:physicshomework.txt

உதாரணம்: label:work filename:pdf
Aattachment – களை FileFile Name கொடுத்து தேட.
" "
(quotes)


உதாரணம்: "i'm feeling lucky"

உதாரணம்: subject:"dinner and a movie"
குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ள ஈமெயில்களை தேட
( )

உதாரணம்: from:amy (dinner OR movie)

உதாரணம்: subject:(dinner movie)
குறிப்பிட்ட நபரிடம் இருந்து, குறிப்பிட்ட வார்த்தைகளுடன் வந்துள்ள ஈமெயில்களை தேட.
in:anywhere

உதாரணம்: in:anywhere movie 
குறிப்பிட்ட வார்த்தை உள்ள ஈமெயிலை Inbox, Draft, Sent, Spam, Trash என எங்கிருந்தாலும் தேட
in:inbox
in:trash
in:spam


உதாரணம்: in:trash from:amy
குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஈமெயிலை தேட.
is:important
label:important


உதாரணம்: is:important from:janet
குறிப்பிட்ட நபரிடம் வந்த மெயில்களில் important என்று குறிக்கப்பட்டதை தேட.
is:starred
is:unread
is:read


உதாரணம்: is:read is:starred from:David
Starred, Unread, Read ஈமெயில்களை தேட.
has:yellow-star
has:red-star
has:orange-star
has:green-star
has:blue-star
has:purple-star
has:red-bang
has:orange-guillemet
has:yellow-bang
has:green-check
has:blue-info
has:purple-question


உதாரணம்: has:purple-star from:David
குறிப்பிட்ட நிற ஸ்டார் உள்ள ஈமெயில்களை தேட.
cc:
bcc:


உதாரணம்: cc:david 
நமக்கு வந்த ஈமெயில் குறிப்பிட்ட நபருக்கும் Cc, Bcc செய்யப்பட்டு இருந்தால் அவற்றை தேட.
after:
before:
older:
newer:


உதாரணம்: after:2004/04/16 before:2004/04/18 
குறிப்பிட்ட தேதிக்கு முன், பின் வந்த ஈமெயில்களை மிகச் சரியாக தேட.
older_than
newer_than


உதாரணம்: newer_than:2d

Meaning: Finds messages sent within the last two days.
குறிப்பிட்ட தேதிக்கு முன், பின் வந்த ஈமெயில்களை தேட. எத்தனை நாட்கள், மாதம், வருடம் என்பதை இங்கே குறிப்பிடலாம்.

Day – d
Month – m
Year - Y
is:chat

உதாரணம்: is:chat monkey
குறிப்பிட்ட வார்த்தை உடைய ChatChat களை தேட.
circle:

உதாரணம்: circle:friends
குறிப்பிட்ட Google+ circle – இல் உள்ள நபர் அனுப்பிய ஈமெயில்களை தேட.Cirle Name கொடுத்து தேட வேண்டும்.
has:circle

உதாரணம்: has:circle 

Meaning: Any message that was sent by a person in any of your circles.
Google+ circle – இல் உள்ள நபர் அனுப்பிய ஈமெயில்களை தேட. அனைத்து Circle – களையும் தேடும்.
larger:
smaller:


உதாரணம்: larger:10M 
குறிப்பிட்ட அளவில் உள்ள ஈமெயில்களை தேட.

- பிரபு கிருஷ்ணா

7-Zip - இலவச File Compression மென்பொருள்



File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இந்த இரண்டின் வசதிகளோடு ஒரு இலவச மென்பொருள் உள்ளதென்றால் அது 7 Zip. அதைப் பற்றி பார்ப்போம். 

7 Zip ஒரு ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர். எனவே நீங்கள் இதை எங்கே வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எங்கும் Register அல்லது பணம் கட்டும் தேவை இல்லை. 

சிறப்பம்சங்கள்: 
  1. பெரிய File களை WinRAR, WinZIP ஐ விட குறைந்த Size க்கு Convert செய்கிறது. 
  2. Zip & GZip File - களை Compression செய்யும் போது 2-10 % மென்பொருட்களை விட குறைவாக Compress செய்கிறது. 
  3. Windows 7 / Vista / XP / 2008 / 2003 / 2000 / NT / ME / 98 என அனைத்திலும் இயங்குகிறது. 
  4. 7z, XZ, BZIP2, GZIP, TAR, ZIP and WIM - போன்ற Format - களில் Compress மற்றும் Extract செய்யலாம். 
  5. ARJ, CAB, CHM, CPIO, CramFS, DEB, DMG, FAT, HFS, ISO, LZH, LZMA, MBR, MSI, NSIS, NTFS, RAR, RPM, SquashFS, UDF, VHD, WIM, XAR and Z போன்ற Format File களை Extract மட்டும் செய்யலாம். 
  6. விண்டோஸ் 32 Bit, 64 Bit என இரண்டிலும் வேலை செய்கிறது. 

தேவையில்லாத ஈமெயில்களை தடுக்க ஜிமெயில் வழங்கும் வசதி

மின்னஞ்சல் கணக்கு உள்ள ஒவ்வொருக்கும் தேவை இல்லாத மின்னஞ்சல்கள் வந்து தொல்லை தந்து கொண்டே இருக்கும். அவற்றை பார்க்கும் போதே எரிச்சலாய் வரும் நமக்கு, அவற்றில் இருந்து விடுபட ஜிமெயில் தரும் ஒரு வசதி தான் Auto-unsubscribe. 

தேவையில்லாத மின்னஞ்சல் வரும் போது அவற்றை விரும்பாத நாம் Spam வசதியை பயன்படுத்துவோம். ஆனால் அதே மின்னஞ்சல்களை வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பினால் மறுபடியும் நமக்கு வரும். இதிலிருந்து விடுபட முழுவதுமாக நம் மின்னஞ்சல் முகவரியை அவர்கள் அனுப்பும் பட்டியலில் இருந்து நீக்க இது உதவுகிறது. 

ஆனால் இது எல்லா Mailing Listக்கும் இன்னும் விரிவாக்கப்படவில்லை. மிகக் குறைந்த அளவே Sender களுக்கு மட்டும் இது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து Spam என்பதை கிளிக் செய்யுங்கள். 



செய்தால் உங்களுக்கு கீழே உள்ளது போல வரும். 


இப்போது நீங்கள் "unsubscribe and report spam" என்பதை கிளிக் செய்தால் இரண்டு முதல் மூன்று நாட்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வருவது நின்று விடும். 

இவ்வாறு வராவிட்டால் Marked as spam என்று வரும். அவ்வாறு வந்தால் அத்தகைய மின்னஞ்சல்கள் நேரடியாக Spam க்கு சென்று விடும். உங்கள் Inbox க்கு வராது. 


இல்லை எனக்கு இந்த மின்னஞ்சலை பார்க்கவே விருப்பம் இல்லை, அவை வரவே கூடாது என்று விரும்பும் நண்பர்கள், குறிப்பிட மின்னஞ்சலை ஓபன் செய்து மின்னஞ்சலில் இறுதியில் Unsubscribe வசதி இருக்கும். அதை கிளிக் செய்து விடலாம். ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் இது வெவ்வேறு மாதிரியாக இருக்கும், ஆனால் மின்னஞ்சலில் இறுதியில் தான் இருக்கும். 

சில மாதிரிகள்:




என்னால் Unsubscribe செய்ய முடியவில்லை, ஆனால் அவற்றை தானாக டெலீட் செய்யும் படி மாற்ற முடியும் என்று கேட்டால், அதற்கும் வசதி உள்ளது. இதை ஜிமெயில் Filters பயன்படுத்தி செய்யலாம். 

இது குறித்த பதிவு, 


- பிரபு கிருஷ்ணா

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?


Android Rooting பற்றி பதில் தளத்தில் நண்பர் ஒருவர் வினா எழுப்பி இருந்தார். ஏற்கனவே அது குறித்து பதிவு எழுத நினைத்து இருந்தாலும் அதன் பாதுகாப்பு காரணங்கள் கருதி எழுதவில்லை. நிறைய பேருக்கு அது குறித்த கேள்விகள் இருப்பதால் அது பற்றிய நிறை, குறைகளை சொல்லி விட்டு எப்படி Root செய்வது என்று சொல்கிறேன். அதன் பிறகு உங்கள் விருப்பம் :-)

Android Rooting என்றால் என்ன?

Android Rooting என்பது உங்கள் போனுக்கு நீங்கள் Super User Access பெறுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இதுவரை உங்கள் போன் மூலம் என்ன செய்ய முடியாது என்று நினைத்தீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். custom software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் Battery Life, OS Upgrade மற்றும் பல. 

எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம். 

பலன்கள்: 

Custom Software (ROM’s):

ROM (Read Only Memory) ஆனது Android போனை இயக்க உதவுகிறது. போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதரணமாக கிடைக்காது. Root செய்வதன் மூலம் Custom ROM வசதி நமக்கு கிடைக்கும். இதன் பெரிய பலன் இதன் மூலம் Android OS Upgrade வசதி நமக்கு கிடைக்கும். 

Custom Themes:

Android Theme - ஐ நீங்கள் மற்றும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது. 

Speed and Battery:

முன்னமே சொன்னது போல போனின் Speed மற்றும் Battery Life அதிகரிக்கும்.

ஆனால் இரண்டும் சேர்ந்து கிடைக்காது. Speed அதிகம் வேண்டும் என்றால் Battery Life குறையும். Battery life அதிகம் வேண்டும் என்றால் Speed குறையும்.  [தகவலைமின்னஞ்சல் மூலம் சொன்ன நண்பர் விக்னேஷ்க்கு நன்றி]

Android OS Upgrade:

மேலே சொன்னது போல Custom ROM உங்களுக்கு Android OS Upgrade வசதியை பெற முடியும். 

இவை மட்டுமின்றி WiFi and USB tethering, Simple Backup Solution போன்ற வசதிகள் கிடைக்கும். 

குறைபாடுகள்: 

பிரச்சினை என்றால் சில Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும், இதனால் புது போன் வாங்கும் நிலைக்கு கூட கொண்டு செல்லும். 

Android Market அல்லாத Applications அல்லது இணையம் மூலம் Virus வரும் வாய்ப்பு உள்ளது. இது நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.

இப்படி ரூட் செய்து உங்கள் போனில் ஏதேனும் பிரச்சினை வந்தால் வாரண்டி கிளைம் செய்ய முடியாது. (நன்றி - மாசிலா, பின்னூட்டம்)

Android Phone - ஐ Root செய்வது எப்படி? 

முதலில் உங்கள் போனில் உள்ள முக்கிய தகவல்களை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போன் மெமெரியில் 25MB Space இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். 

1இப்போது SuperOneClick என்ற மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 

2. இப்போது உங்கள் Android போனை உங்கள் கணினியில் USB Data Cable மூலம் இணைத்து விட்டு, Settings>> Applications >> Development என்பதில் "USB Debugging" என்பதை enable செய்யவும். 

3. இப்போது கணினியில் SuperOneClick மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.

4. Samsung Capacitive என்கிற போன் மாடல் தவிர மற்றவற்றை பயன்படுத்துபவர்கள் Universal என்பதை கிளிக் செய்து Root என்பதை கிளிக் செய்யவும். 



5. இப்போது சிறிது நேரத்தில் உங்கள் Phone Root ஆகி விடும். அதன் பின்னர் Allow Non Market Apps என்பதை கிளிக் செய்யுங்கள் (தேவைப்பட்டால்).

அவ்வளவு தான் உங்கள் போன் Root ஆகி விட்டது. ஆனால் போனின் பாதுகாப்பு இனி உங்கள் கையில்.  

Android Phone - இல் இருந்தே Root செய்ய உதவும் Applications:  

2. z4root

- பிரபு கிருஷ்ணா

SweetIM Toolbar ஐ Firefox, Chrome - இல் இருந்து நீக்குவது எப்படி?



சில இலவச மென்பொருட்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது நமக்கு வரும் இலவச இணைப்பு தான் SweetIM Toolbar. நமக்கு எது தேவையோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் தரும் இதை பலரும் விரும்ப மாட்டார்கள். இதை எப்படி நீக்குவது என்று இன்று பார்ப்போம். 

Mozilla Firefox:

முதலில் Firefox Add-ons பகுதியில் இருந்து SweetIM Extension - ஐ நீக்கி விடுங்கள். 

வழி 1 :

Firefox ஓபன் செய்து Help >> Restart with Add-ons Disabled மீது கிளிக் செய்து உடனே Restart என்பதை கிளிக் செய்யவும். இப்போது Firefox Safe Mode - இல் ஓபன் ஆகும். இப்போது கீழே உள்ளது போல Reset all user preferences to Firefox defaults என்பதை கிளிக் செய்து விட்டு Make Changes and Restart என்பதை தரவும்.


அவ்வளவு தான் இனி  SweetIM Toolbar பிரச்சினை முடிந்தது. இதனுடன் இன்னும் சில தொல்லைகள் நீங்கள் வைத்து இருந்தால் அவையும் தீர்ந்துவிடும்.


வழி 2 : 

1. Firefox - ஐ ஓபன் செய்து URL Bar- இல் about:config என்பதை தரவும்.

2. அதில் உள்ள Search பகுதியில் sweetIM என்பதை தரவும். இப்போது கீழே உள்ளது போல வரும்.


3. இப்போது ஒவ்வொரு Preference Name மீதும் கிளிக் செய்து "Reset" என்பதை கிளிக் செய்யுங்கள்.


இவற்றை முடித்த பின்பு Firefox - இல் SweetIM பிரச்சினை இருக்காது.

Chrome: 

1. Remove from Startup: 

Chrome - ஐ ஓபன் செய்யும் வந்தால் நீக்கும் வழி இது. Wrench > Settings > On Startup என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதில் SweetIM இருந்தால் நீக்கி விட்டு உங்களுக்கு விருப்பமானதை வைத்து விடுங்கள்.


2. Remove from New Tab search:

புதிய Tab ஓபன் செய்யும் போது வந்தால், Wrench > Settings > Search > Manage search engines என்பதில் இருந்து SweetIM - ஐ நீக்கி விடுங்கள்.

3. Remove from Home page: 

Wrench > Settings > Appearance என்பதில் Show Home button என்பதை செக் செய்து உங்கள் முகப்பு பக்கத்தை மாற்றி விடுங்கள்.

4. Remove from Extensions: 

Wrench > Settings > Extensions என்பதில் SweetIM சம்பந்தப்பட்ட அனைத்தையும் நீக்கி விடவும்.

அவ்வளவு தான் உங்கள் Chrome உலவியில் இருந்து SweetIM நீக்கப்பட்டு விட்டது.

உங்களுக்கு Babylon Toolbar பிரச்சினை இருந்தால்,

Babylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி?

- பிரபு கிருஷ்ணா


ஜிமெயிலில் 2-Step Verification Enable செய்வது எப்படி? [வீடியோ போஸ்ட்]

இன்று மின்னஞ்சல் முகவரி இல்லாத நபரே இல்லை நாம் பயன்படுத்தும் இந்த மின்னஞ்சல் எவ்வகையில் பாதுக்காப்பானது? நமது அன்றாட உரையாடல்கள் முதல் அலுவலக கோப்புகள் வரை இன்று மின்னஞ்சல் வழி மூலமே சாத்தியமாகிறது என்றால் மிகையில்லை.

குறிப்பாக நாம் நம்முடைய புகைப்படங்களை கூட மின்னஞ்சலில் சேமித்தும் / உறவினர்களுக்கு அனுப்பியும் வருகிறோம்.

இது போன்ற ஏராளமான சொந்த விவகாரங்களை பரஸ்பரம் அனுப்பியும் பெற்றும் வரும் நாம், கூகுள் நிறுவனம் வழங்கியுள்ள இரண்டடுக்கு பாதுகாப்பு முறையை சிலர் தெரிந்திருந்தாலும் பெண்கள் மற்றும் வணிகர்கள் இதனை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் மின்னஞ்சல்களை பயன்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இரண்டடுக்கு பாதுகாப்பு முறையை செய்முறை விளக்கமாக இங்கே காணலாம்.



இது குறித்து கற்போம் தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவு 


About The Author: 


Shafi Ahamed shafiscast என்ற தனது Youtube சேனலில் தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை மிக எளிதாக விளக்கி வருகிறார். இங்கே பகிரப்பட்டு உள்ளது இவரின் முதல் வீடியோ. அற்புதமான இவரது முயற்சி நம் அனைவருக்கும் உதவும் வகையில் உள்ளது. இது வரை 5 வீடியோக்களை உருவாக்கி உள்ளார். இவரது வலைப்பூ இது எப்படி?

மேலும் பல பயனுள்ள வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்று கற்போம் வாசகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

நீங்களும் கற்போம் தளத்தில் பதிவு எழுத - கற்போமில் தொழில்நுட்ப பதிவு எழுத விருப்பமா?

பதில்.காம் - கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க

கேள்விகள் சுவாரஸ்யமானவை அதன் பதில்களை பொறுத்து. தொழில்நுட்ப பதிவர் என்று வந்த பிறகு நிறைய நண்பர்கள் மின்னஞ்சல், அலைபேசி, வலைப்பூ மூலம் நிறைய கேள்விகள் கேட்க அதன் அடிப்படையில் பதில் அளித்து வருவது தொழில்நுட்ப பதிவர்களின் வழக்கம். ஏன் கேள்வி கேட்க ஒரு பொது மேடை அமைக்க கூடாது என்று தோன்றிய கேள்விக்கு தான் பதில்!.காம். 


இரண்டு நாட்களுக்கு முன்பு "பிளாக்கர் நண்பன்" அப்துல் பாசித் சகோவிடம் பேசும் போது இது குறித்து கேட்டேன். எப்போதும் எங்களது புதிய முயற்சிகளை இருவரும் விவாதிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் எப்படி உருவாக்கலாம் என்று யோசித்ததில் ஏன் இருவருமே சேர்ந்து இதை உருவாக்க கூடாது என்று நினைத்து, அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் டொமைன் வாங்கி, சைட் தயார் செய்து இரண்டே நாளில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.



இதனை ஆரம்பிக்க மிக முக்கிய காரணம், நண்பர்கள் சந்தேகங்களை கேட்கும்  போது சில சமயம் அவற்றை ஒரு பதிவாக எழுத முடியாத அளவிற்கு சிறியதாக இருக்கும், இல்லை என்றால் கேட்கும் ஒருவருக்கும் தெரியும் படி மின்னஞ்சல் மூலம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

இனி நீங்கள் கேட்கும் கேள்வி மற்றவருக்கும் தோன்றினால் அவர் பதில்! மூலம் தீர்வை பெறலாம். அதே சமயம் இதில் நானோ, பாசித் மட்டுமோ பதில் அளிக்க போவதில்லை சேரும் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு தெரிந்த பதிலை கூறுவார்கள். இதனால் ஒரே கேள்விக்கு பல வகையான பதில்கள் கிடைக்கும், ஒன்று வேலை செய்யாவிட்டால் மற்றொன்று என்று கேள்வி கேட்டவருக்கும் இதில் பெரிய பலன்.

இப்போது உங்கள் வேலை, தளத்தில் Register செய்துவிட்டு எங்களிடம் கேள்வி கேட்பது மட்டுமல்ல, உங்களுக்கு தெரியாத கேள்விகளை அங்கே கேளுங்கள், தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்து மற்றவர்களுக்கும் உதவுங்கள். அதற்காக எல்லோரும் பதில் சொல்ல வேண்டியது என்பது கட்டாயம் அல்ல.

இந்த தளத்தில் உங்கள் பேஸ்புக் கணக்கு வாயிலாகவும் நுழைய முடியும்.

தற்போதைக்கு தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளை மட்டுமே அனுமதித்துள்ளோம். உங்களை ஒத்துழைப்பு, பங்களிப்பு போன்றவற்றை பொறுத்து மற்ற வகையான கேள்வி - பதில்களும் வரலாம்.

சில நிபந்தனைகள்:
  1. Piracy குறித்த கேள்விகளை தவிர்க்கவும். 
  2. முடிந்த வரை கேள்விகளை தமிழில் கேட்கவும்.[தமிழில் எழுத தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்கலாம். உங்கள் கேள்வியை தமிழில் மாற்றி விடுவோம். ]
  3. தளத்திற்கு சம்பந்தமில்லாத Spam வகையான பகிர்வுகளை பகிர வேண்டாம். 
நேற்று பிளாக்கர் நண்பன் தளத்தில் இது குறித்த எழுதப்பட்ட கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே! பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 

பதில்! தளத்தில் பகிரப்படும் சில கேள்வி-பதிலகள் கற்போம் இதழிலும் பிரசுரம் செய்யப்படும். 

பதில்! பேஸ்புக் பக்கம்: 



ட்விட்டரில் பதில்! - https://twitter.com/bathilgal

உங்கள் ஆதரவுடன், 
பாசித் & பிரபு. 

ஜிமெயிலில் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் புதிய வசதி


எப்போதும் எண்ணற்ற வசதிகளை தருவதில் ஜிமெயில்க்கு நிகர் ஜிமெயில் தான். அந்த முறையில் வந்துள்ள புதிய வசதிதான் Size மற்றும் Days வாரியாக ஈமெயில்களை தேடும் புதிய வசதி. எப்படி என்று பார்ப்போம். 

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் பகுதியில் உள்ள Search பகுதியில் உங்களுக்கு எந்த ஈமெயில் வேண்டுமோ அதன்படி சர்ச் செய்ய வேண்டும். 

Size: 

உங்கள் ஈமெயிலில் உள்ள Attachment-களை தேட எளிய வழி அதன் Size படி தேடுவது. உதராணமாக 5 எம்.பி அளவு உள்ள ஈமெயிலை தேட size:5m or larger:5m என்று கொடுக்க வேண்டும். 


குறிப்பிட்ட சைஸ் க்கு கீழே என்றால் smaller என்பதை பயன்படுத்தலாம். உதாரணம்: smaller:5m

Days: 

தேதி வாரியாக தேட எளிமையான வழி ஒன்றும் புதிதாக வந்துள்ளது. இதன் படி குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் வந்த மெயில்களை மட்டும் தேடும் வசதி நமக்கு கிடைக்கிறது. 

குறிப்பிட்ட வருடத்துக்கு முந்தைய ஈமெயில்களை தேட older_than:1y என்று கொடுத்து தேட வேண்டும். 


இதுவே குறிப்பிட்ட நாள் என்றால் older_than:200d என்றும் மாதம் என்றால் older_than:2m என்றும் கொடுத்து தேட வேண்டும். 


இதுவே நீங்கள் Size மற்றும் Date என இரண்டையும் கொடுத்து ஒரே நேரத்தில் தேட முடியும். 


- பிரபு கிருஷ்ணா

பயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் - ஒரு பார்வை


பேஸ்புக் குரூப்ஸ் என்பதை கேட்டாலே பலருக்கு அலர்ஜியாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு எரிச்சலை தரும் படி பல குரூப்கள் இருக்கின்றன. ஆனால் இதில் விதிவிலக்காக சில நல்ல குரூப்கள் இருக்கின்றன. நமக்கு பயனுள்ள பல விசயங்களை தருகின்றன. அவற்றை பற்றி பார்ப்போம் இன்று. 



இதை பெயரே உங்களுக்கு இதன் அர்த்தங்களை சொல்லி விடும். இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் நுகர்வோரே, எப்போதும் ஏதோ ஒரு இடத்தில் நாம் கொடுக்கும் பணத்துக்கு உரிய சேவை நமக்கு கிடைப்பது இல்லை, அவற்றை எதிர்கொள்வது எப்படி என்ற தகவல்களை இந்த குரூப் மூலம் அறியலாம். 

உங்கள் பிரச்சினை என்ன என்பதை சொல்லி, அதை தீர்க்கும் வழியை இதில் கேட்கலாம். இதில் உங்கள் புகாரை தந்து விட்டு அவர்கள் அதை தீர்ப்பார்கள் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது, குழுமத்தில் உள்ள ஒவ்வொருவரும் வேறுபட்ட இடம், வேலைகளில் இருப்பவர்கள். உங்கள் பிரச்சினையை பொறுத்து இவர்கள் அதன் தீர்வுகளை ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ உதவி செய்வார்கள். 

உங்கள் பிரச்சினைக்கான தீர்வை நீங்களே பெற்றிருந்தால் அதையும் அங்கே பகிரலாம். முழுக்க முழுக்க உறுப்பினர்கள் தான் ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வுகளையும் அவர்கள் அனுபவத்தில் இருந்து சொல்கிறார்கள். 

இதன் முக்கிய நபர்கள் சுரேகா, கேபிள் ஷங்கர். கேட்டால் கிடைக்கும் மூலம் தீர்வு கிடைத்த சில பிரச்சினைகள் - இங்கே

அறிவியல் சம்பந்தப்பட்ட தகவல்களை படிக்க விரும்பினால் இது உங்களுக்கே உரியது. பெரும்பாலானவை தமிழில் இருப்பதால் எளிதில் புரிந்து கொள்ளலாம். 


எல்லோருக்கும் தேவைப்படும் தகவல்களை எளிய தமிழில் பகிரும் அருமையான குரூப் இது. எல்லாவற்றுக்கும் ஆங்கில மருந்துக்கடைகளை நோக்கி ஓடும் இன்றைய சூழ்நிலையில் அவற்றின் தேவை இன்றி பல நோய்களை கட்டுப்படுத்தும்/தீர்க்கும் வழிகளை சொல்லும் விதம் அருமை. 


சாப்பாடுப் பிரியர்களுக்கான அசத்தலான குரூப் இது. எந்த ஊரில் எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும். எந்த ஹோட்டலில் பிரச்சினைகள் என்று விவாதிக்கிறார்கள். அதே சமயம் உணவு வகைகள் குறித்த தகவல்களும் பரிமாறப்படுகின்றன. 


கட்டுரை, கவிதை, மருத்துவம், தத்துவம் என பல தகவல்களை தமிழில் தரும் அருமையான குழுமம் இது. 


தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கான குழுமம் இது. தாங்கள் படித்த காமிக்களை பற்றி பகிர்ந்து அதை விவாதிக்கிறார்கள்.

சிவகாசி துயர் துடைப்பு குழு!

பேஸ்புக்கில் இருப்பதே வெறும் வெட்டி அரட்டை என்பதை பொய்யாக்கிய ஒரு குழு. ஒரு கஷ்டம் என்று வந்தவுடன் எத்தனை நல்ல உள்ளங்கள் உதவி செய்தன என்பதை உணர்த்திய ஒரு குரூப். பல விமர்சனங்கள் வந்த போதும் அவற்றை எதிர்கொள்வதில் பல சிரமங்கள் வந்த போதிலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது தான், ஆனால் தோல்வி அடையவில்லை.

சமூக சேவை செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய அத்தனை விசயங்களையும் ஒரு சில வாரங்களில் உணர்த்தியது. இப்போது இயங்காவிட்டாலும், நல்ல முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. [இதில் புதிதாக யாரும் இணைய வேண்டாம் என்பது அட்மின்களின் நிலைப்பாடு]

இவற்றில் இணைய குரூப் பெயருக்கு நேரே உள்ள Join என்பதை கிளிக் செய்யவும். குரூப் செட்டிங்க்ஸ் பொறுத்து உங்கள் இணைப்பு உறுதி செய்யப்படும். 


இதில் உள்ளவை நான் இணைந்துள்ள குரூப்கள், அவற்றின் செயல்பாடுகளை பொறுத்தே இங்கே பகிர்ந்துள்ளேன். இவற்றை போன்ற அல்லது இவற்றை விட நல்ல குரூப்கள் இருப்பின் அவற்றை கமெண்ட் பாக்ஸ் மூலம் தெரிவிக்கலாம். 

- பிரபு கிருஷ்ணா

Microsoft Office Professional Plus 2013 இலவசமாக டவுன்லோட் செய்ய


Office 2013 இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கும்  மென்பொருள். இதன் Professional Plus Version 2 மாதங்களுக்கு இலவசமாக டவுன்லோட் செய்யும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Word, PowerPoint, Excel, Outlook, OneNote, Access, Publisher, and Lync போன்றவை உள்ளடக்கம். 

இதை பயன்படுத்த Windows 7 அல்லது Windows 8 பயனராக இருக்கவேண்டும். அதே போல குறைந்த பட்சம் 1GB RAM பயன்படுத்த வேண்டும். கட்டாயம் தேவையான மற்ற விஷயங்கள் கீழே.

Requirements :


  • Processor :  1 Ghz or faster x86- or x64-bit processor with SSE2 instruction set
  • Memory (RAM) :  1GB RAM (32 bit); 2GB RAM (64 bit)
  • Hard Disk :  3GB Space
  • Display :  Graphics hardware acceleration requires a DirectX10 graphics card and 1024 x 576 resolution
  • Operating System : Windows 7, Windows 8, Windows Server 2008 R2, or Windows Server 2012
  • Browser : Microsoft Internet Explorer 8, 9, or 10; Mozilla Firefox 10.x or a later version; Apple Safari 5; or Google Chrome 17.x.
  • .NET version : 3.5, 4.0, or 4.5
இதை டவுன்லோட் செய்ய உங்களுக்கு ஒரு Hotmail அக்கௌன்ட் தேவை. Register செய்த பின் Activation Key அனுப்பப்படும். இது 32-bit மற்றும் 64-bit ஆகிய இரண்டிலும் இயங்கும். 


Thanks - Tech Shortly

 - பிரபு கிருஷ்ணா

ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?

நமது மின்னஞ்சல் கணக்கில் தான் நாம் பல தகவல்களை வைத்து இருப்போம். அப்படிப்பட்டவற்றை யாரும் ஹாக் செய்யாமல் இருக்க நாம் எப்போதும் பாதுகாப்பாக பயன்படுத்தவே விரும்புவோம். ஜிமெயில் பயனர்களுக்கு அந்த பாதுகாப்பை அதிகரிக்கும் வண்ணம் Alternative Log In id உருவாக்கும் வசதி ஒன்று உள்ளது. அது என்ன என்று பார்ப்போம். 

இந்த Alternative Log In id ஒரு மின்னஞ்சல் முகவரியாக இருக்க வேண்டும். இதில் நீங்கள் உங்களின் இரண்டாவது ஜிமெயில் முகவரியை பயன்படுத்த முடியாது. மற்றபடி Hotmail(Outlook), Yahoo போன்ற மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தலாம். 

உங்கள் ஜிமெயில் கணக்கில் அல்லது கூகுள் கணக்கில் நுழைந்து Account என்பதை கிளிக் செய்யுங்கள். 


வரும் பக்கத்தில் Security என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் "Account Recover Options" என்பதை கிளிக் செய்யுங்கள். 

இப்போது வரும் பக்கத்தில் "Alternate email addresses" என்ற பகுதியில் தான் ஒரு மின்னஞ்சல் முகவரியை தர வேண்டும். Hotmail(Outlook), Yahoo போன்ற மின்னஞ்ச சேவைகளில் Sign-up செய்யும் போது நீங்கள் உங்களின் ஜிமெயில் முகவரியை கொடுத்து இருந்தால் அவற்றையும் பயன்படுத்த இயலாது. எனவே உங்கள் ஜிமெயில் முகவரிக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு மின்னஞ்சல் முகவரியை தர வேண்டும். 


நான் எனது Outlook மின்னஞ்சல் முகவரியை தந்துள்ளேன். இப்போது கீழே உள்ள Save என்பதை கிளிக் செய்யுங்கள். 

அடுத்து நீங்கள் கொடுத்த Alternative Email முகவரி கணக்கில் நுழைந்து கூகுள் அனுப்பி உள்ள Email Verification மின்னஞ்சலை Accept செய்ய வேண்டும். 


இதை கிளிக் செய்த உடன் "Associated Email Address Verified " என்று வந்து விடும். 

இனி நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைய உங்களின் Alternative Email Address மற்றும் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்ட் கொடுத்து நுழையலாம். 


இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

படங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரியில் என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நான் அதனை பயன்படுத்துவது இல்லை. 

- பிரபு கிருஷ்ணா