March 2013 | கற்போம்

Google Play Movies தற்போது இந்தியாவிலும்

டெக் உலகின் மிகப் பெரிய சந்தை இந்தியா என்பதை கொஞ்சம் தாமதமாகத் தான் கூகுள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. Google Play Books, Nexus 7 போன்றவற்றை போலவே Google Play Movies தற்போது கொஞ்சம் தாமதமாக இந்தியாவிற்கு வந்துள்ளது. 



எல்லாமே ஆங்கில திரைப்படங்களாக தான் உள்ளது. ஹாலிவுட்  பட ரசிகர்களுக்கு இது பலனளிக்கும். இவற்றை டவுன்லோட் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் கணினி அல்லது ஆன்ட்ராய்ட் போனில் இணைய இணைப்பின் மூலம் பார்த்துக் கொள்ளலாம். 

படங்களை நீங்கள் வாடகைக்கு வாங்கலாம் அல்லது முழு விலை கொடுத்தும் வாங்கலாம். வாடகை விலை ரூபாய் 80 - இல் இருந்து தொடங்குகிறது. 

படங்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு SD மற்றும் HD என இரண்டு Version - களில் படம் கிடைக்கும். SD யின் விலை HD ஐ விட குறைவு. ஆனால் HD வீடியோ தான் அதிக தரமானது என்பது உங்களுக்கே தெரியும். TED என்ற சமீபத்திய ஆங்கில திரைப்படத்தின் விலை கீழே உள்ளது.



தேவையானவை: 

Google Play Movies - இல் படங்களை வாங்கி பார்க்க தேவையானவை 

  • Adobe Flash Player 10.0.22+ 
  • Google Chrome, Firefox 1.1+, Internet Explorer 7.0+, Safari 1.0+ or Opera - இதில் ஏதேனும் ஒரு உலவி
  • 500+ Kbps வேகம் உள்ள இணைய இணைப்பு
  • Ubuntu/Linux பயனர்கள் HAL module இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
தகவல் - Specs Of All
 - பிரபு கிருஷ்ணா

பேஸ்புக் பேஜில் Threaded Comments வசதியை Enable செய்வது எப்படி?


கடந்த சில மாதங்களாகவே சில பேஸ்புக் பேஜ்களில் கமெண்ட்களுக்கு Reply செய்யும் வசதி இருந்தது. அதை தற்போது அனைத்து பேஜ்களுக்கும் கொண்டு வந்துள்ளது பேஸ்புக். இதை எப்படி Enable செய்வது இதனால் என்ன பலன் என்று பார்ப்போம். 

பலன்கள்: 

பேஸ்பு பேஜில் ஒருவரின் கமெண்ட்க்கு பதில் சொல்லும் போது அவரின் பெயரின் @ Mention செய்து பின்னர் பதில் சொல்வோம். சில சமயம் நாம் Reply செய்தது அவருக்கு தெரியாமல் இருக்கும். இந்த புதிய வசதி மூலம் நேரடியாக ஒருவரின் கேள்விக்கு அவர் கொடுத்திருக்கும் கமெண்ட்டில் Reply செய்திடலாம்.அது கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும். 

எப்படி Enable செய்வது ?

1. முதலில் உங்கள் பேஸ்புக் பேஜ்க்கு செல்லுங்கள். அதில் Edit Page என்பதை கிளிக் செய்து அதில் Manage Permission என்பதை கிளிக் செய்யுங்கள். 



2. இப்போது வரும் பக்கத்தில் Replies என்பதில் Allow replies to comments on my Page என்பதை கிளிக் செய்து விடுங்கள்.  

இப்போது உங்கள் பேஜ் போஸ்ட்களுக்கு ஒருவர் கமெண்ட் செய்தால் அதில் Reply வசதி இருக்கும். 


நீங்கள் கமெண்ட்க்கு Reply செய்தால், கமெண்ட் செய்த நபருக்கு அது Notification ஆக சென்று விடும். 


- பிரபு கிருஷ்ணா

இந்தியாவிற்கு வருகிறது Google Nexus 7 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

Android பயனர்கள் பலருக்கும் கூகுள் Product ஒன்றை வாங்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்து வருகிறது. Update, வசதி மற்றும் விலை போன்றவை தான் அதற்கு காரணம். நீங்கள் இந்தியாவில் இருந்தால் அந்த ஆசை தற்போது நிறைவேறப் போகிறது. 

ஆம் கூகுள் நிறுவனம் Nexus 7 Tablet ஐ இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதன் விலை ரூபாய் 15,999*. ஏப்ரல் 5 முதல் Ship செய்யப்படும். இப்போதே ஆர்டர் செய்யலாம்.


Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில்(!!!) இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 1.2  MP கேமராவை முன்னால் கொண்டுள்ளது.இதன் மூலம் HD Video Recording செய்ய முடியும்.

இது 7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16GB. Micro-SD கார்டு உள்ளிடும் வசதி இல்லை. அத்தோடு இது Li-Ion 4325 பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு Bluetooth, Wi-Fi, GPS, போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது. இதில் Sim Card உள்ளிடும் வசதி இல்லை. ஆதலால் இது GSM Device கிடையாது. இதன் எடை 340 கிராம்கள் மற்றும் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Google Nexus 7 Specifications:

Operating System Android 4.1 (Jelly Bean) OS. 
Display 7inch IPS LCD Capacitive Touch Screen Diplay with resolution of 1280 x 800 pixels.
Processor 1.2 GHz Quad-core processor
RAM 1GB RAM
Internal Memory 16 GB
External Memory No
Camera Front Camera: 1.2  MP
Battery Li-Ion 4325
Features WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Micro USB 2.0 connector

கற்போம் Review: 

வெளிநாட்டு Product ஒன்றை வாங்க வேண்டும், கூகுள் நிறுவன வெளியீட்டை வாங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இதை வாங்கலாம். கொடுக்கும் விலைக்குரிய வசதிகள் உள்ளன.

* - விலை Update செய்த தேதி 26-03-2013.
-பிரபு கிருஷ்ணா

இந்தியாவில் அறிமுகமாகிறது Samsung Galaxy S2 Plus முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


அடிக்கடி பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு மார்க்கெட்டில் தன் இடத்தை உறுதியாக வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Galaxy S2 Plus. சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த போன் தற்போது இந்தியாவில் ரூபாய் 22,900 த்துக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.3 Inch Super AMOLED Plus Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 1650 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Samsung Galaxy S2 Plus Specifications:

Operating System Android 4.1 (Jelly Bean) OS
Display 4.3-inch (800 x 480 Pixels) Super AMOLED Plus capacitive touch screen display
Processor 1.2 GHz dual-core processor
RAM 1GB RAM
Internal Memory 8GB
External Memory microSD, up to 64 GB
Camera Rear Camera: 8  MP, autofocus, LED flash
Front Camera: 2 MP
Battery 1650 mAh
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

வசதிகள் அனைத்தும் கொடுக்கும் விலைக்கு உகந்ததாக உள்ளது. Full HD Recording, Super AMOLED Plus capacitive touch screen போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதை 3000 ரூபாய் குறைவாக கிடைக்கும் Xolo X1000 போனை விட இதன் Processor மட்டுமே குறைவாக உள்ளது. 

- பிரபு கிருஷ்ணா 

Xolo X1000 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்துள்ளது Xolo நிறுவனத்தின் புதிய போன் Xolo X1000. முதன் முதலாக 2Ghz Intel Atom Processor வந்துள்ள இது ரூபாய் 19,999* க்கு ஆன்லைன் தளமான Flipkart-இல் கிடைக்கிறது இதன் தகவல்களை காண்போம்.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.0.4 (Ice Cream Sandwich) - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.7 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Ambient Light, Magnetometer, Accelerometer, Proximity, Gyroscope ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 2Ghz Intel Atom Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1900 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் Standby Time 2G இணைப்பில் 336 மணி நேரம். Talk Time 2G மற்றும் 3G இரண்டிலும் 9 மணி நேரம். 

இந்த போனில் Full HD வீடியோக்களை பார்க்க முடியும் வசதி உள்ளது.அத்தோடு இதன் 400 MHz GPU (Graphics Processing Unit) விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் என்று சொல்லப்படுகிறது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Xolo X1000 Specifications

Operating System Android v4.0.4 (Ice Cream Sandwich)
Display 4.7 inch (1280 x 720 Pixels) TFT LCD Capacitive Touchscreen
Processor 2 GHz Intel Atom Processor with Hyper Threading Technology
RAM 1GB RAM
Internal Memory 8GB
External Memory microSD, up to 32 GB
Camera Rear Camera: 8  MP, autofocus, LED flash
Front Camera: 1.3 MP
Battery 1900 mAh
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review: 

Xolo X1000 கிட்டத்தட்ட Samsung Galaxy Grand-க்கு இணையான அளவு வசதிகளை  கொண்டுள்ளது. சந்தையில் Grand வாங்க நினைப்பவர்களின் மற்றொரு விருப்பமாக இது அமையக்கூடும். அதே சமயம் 20,000 ரூபாய்க்கு Intel Processor மட்டுமே Grand - ஐ விட சிறந்ததாக உள்ளது.

மற்றபடி பயனர்களை ஈர்க்கும் வண்ணம் புதியதாக வேறு எதுவும் இல்லை. விலை குறைந்தால் வாங்கலாம்.

Xolo X1000 மற்றும் Samsung Galaxy Grand இரண்டின் ஒப்பிடல் இங்கே Xolo X1000 vs Samsung Galaxy Grand

- பிரபு கிருஷ்ணா

வெளியானது Samsung Galaxy S4 - முழு விவரங்கள் [Specifications]


இந்த வருட ஆரம்பத்தில் இருந்து மொபைல் உலகம் காத்திருந்த ஒரு போன் என்றால் அது Galaxy S4 தான். மிக நீண்ட காத்திருப்புக்கு பின் நேற்று வெளியானது இந்த போன். வரும் ஏப்ரல் மாதம் முதல் 155 நாடுகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கேமரா மூலமும் Full HD Recording செய்ய முடியும். 

இது 5 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, RGB light, Geomagnetic, Proximity, Gyro, Barometer Temperature & Humidity, Gesture ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.9 GHz Quad-Core Processor கொண்டுள்ளது. சில நாடுகளில்   இது 1.6 GHz Octa-Core Processor உடன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் இன்டர்னல் மெமரி 16/32/64 GB அளவில் இருக்கும். . 64GB வரை microSD External Memory Card உள்ளிடும் வசதி உள்ளது. அத்தோடு இது 2600 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Samsung Galaxy S4 Specifications:

Operating System Android 4.2 Jelly Bean
Display 5 Inch (1080×1920 pixels) Super AMOLED  Capacitive Touch Screen
Processor 1.9 GHz Quad-Core Processor / 1.6 GHz Octa-Core Processor
RAM 2 GB RAM
Internal Memory 16/32/64 GB
External Memory microSD, up to 64 GB
Camera Rear Camera: 13 MP, 4128×3096 pixels, autofocus, LED flash
Front Camera: 2 MP, 1080p Recording @30fps
Features: Dual Shot, Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization, HDR
Battery Li-Ion 2600 mAh
Features 3G,4G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review: 

13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட். அத்தோடு RAM மற்றும் Processor இரண்டும் விலைக்கு உகந்ததாக உள்ளது. விலை 40,000 இருக்கக்கூடும். அதிக விலை கொடுத்து நல்ல போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது.

நன்றி - Specs Of All
- பிரபு கிருஷ்ணா

விண்டோஸில் File Extension - களை மாற்றுவது எப்படி?

Image Credit
www.vectorstock.com 
சில நேரங்களில் நமக்கு நாம் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட File ஒன்றின் Extension -ஐ மாற்ற வேண்டி வரும். உதாரணமாக ஜிமெயிலில் நம்மால் .exe போன்ற File களை இணைத்து மின்னஞ்சல் செய்ய முடியாது. அப்போது Extension -ஐ மாற்றி நாம் மின்னஞ்சலில் Attach செய்ய முடியும்.

இதே போல பல சமயங்களில் File Extension மாற்ற வேண்டி வரும். எப்படி மாற்றுவது என்று பார்ப்போம். 

Windows XP Users: 

1. ஏதேனும் ஒரு Folder ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது  Menu வில் Tools என்பதை கிளிக் செய்து Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள். 


2. இப்போது வரும் சிறிய விண்டோவில் View Tab - இல் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்து விடுங்கள். 


ஏற்கனவே Uncheck ஆகி இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள். 

3. இப்போது குறிப்பிட்ட File ஐ Rename செய்யும் போது Extension என்ன உள்ளதோ அதை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். 




Windows 7 Users: 

Organize>> Folder and Search options>> View( in the pop up window) இதில் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்ய வேண்டும். 

Windows 8 Users: 

View >> File Name Extensions என்பதை Check செய்ய வேண்டும். [கவனிக்க இதில் Enable செய்ய வேண்டும்.]





அவ்வளவே. இதே போல எந்த File க்கு வேண்டும் என்றாலும் மாற்றலாம். தேவைப்படும் போது மீண்டும் ஒரிஜினல் Format க்கு மாற்றிக் கொள்ளலாம்.  

தெரியும் File Extension ஐ மறைக்க மேலே சொல்லி உள்ளபடி வந்து இப்போது முன்பு இருந்ததை போல மாற்றி விட வேண்டும்.

நன்றி - FAQ in Tech

- பிரபு கிருஷ்ணா

XOLO Q800 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

இந்தியாவில் முதன் முதலாக Intel Processor உடன் வந்த Xolo மொபைல் தனது புதிய மாடல் Q800 - ஐ சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது ரூபாய் 12,499* க்கு ஆன்லைன் தளமான Flipkart-இல் விலைக்கு வந்துள்ளது. இதன் தகவல்களை காண்போம்.



இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 Jelly Bean - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 1MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.5 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz Quad Core  Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியுடன் வருகிறது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

XOLO Q800 Specifications:

Operating System Android 4.1 Jelly Bean
Display 4.5 Inch (960 x 540 pixels) IPS Capacitive Touch Screen
Processor 1.2 GHz quad-core MediaTek MT6589 processor with 286 MHz PowerVR SGX544 GPU
RAM 1GB RAM
Internal Memory 4GB
External Memory microSD, up to 32 GB
Camera Rear Camera: 8  MP, autofocus, LED flash
Front Camera: 1MP
Battery 2100 mAh
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

குறைந்த விலைக்கு எதிர்பார்க்காத அளவுக்கு வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் போன் தரம் எப்படிப் பட்டது என்று தெரிந்து வாங்குவது நலம். ஏற்கனவே வாங்கியவர்களின் Feedback இணையத்தில் கிடைக்கும் அதை அறிந்த பின் முடிவு செய்யுங்கள்.

* - விலை Update செய்த தேதி 12-03-2013.
- பிரபு கிருஷ்ணா

Karbonn Retina A27 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

இந்திய ஸ்மார்ட் போன் நிறுவனமாக Karbonn Retina A27 தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் தற்போதைய விலை ரூபாய் 11990. Saholic தளம் இதனை ரூபாய் 9090 க்கே தருகிறது. இதன் தகவல்களை காண்போம்.


இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 Jelly Bean - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 2MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.3 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512 MB RAM மற்றும் 1.2 GHz dual-core Qualcomm Snapdragon  Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1800 mAh பேட்டரியுடன் வருகிறது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Karbonn Retina A27Specifications

Operating SystemAndroid 4.1 (Jelly Bean)
Display4.3-inch qHD (960 x 540 pixels) IPS display
Processor1.2 GHz dual-core Qualcomm Snapdragon processor
Dual SimYes, GSM+GSM and Dual Standby
RAM512 MB RAM
Internal Memory4 GB
External MemoryYes, microSD, upto 32 GB
CameraRear Camera  - 8 MP, Front Camera – 2 MP
Battery1800 mAh
FeaturesGPRS, EDGE, 3G, Bluetooth, Wi-Fi, Micro USB 2.0 connector

கற்போம் Review:

மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் 8MP கேமரா உடைய போன் இது. 512 MB RAM என்பது மட்டும் இதில் ஒரு குறை. மற்றபடி குறைந்த விலை போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு உகந்த மாடல் மற்றும் விலை.

* - விலை Update செய்த தேதி 09-03-2013.  

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி?

சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது. 



இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால் https://www.facebook.com/newsfeed என்ற இணைப்பில் சென்று "Join Waiting List" என்பதை கிளிக் செய்யுங்கள். 


இதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. 

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?

பேஸ்புக் என்பது இன்று இணையத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும் போது குறிப்பிட்ட சிலருக்காக நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து மற்ற அனைவருக்கும் தெரியும் படி செய்வது எப்படி எப்படி என்று பார்ப்போம். 

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அலுவலகத்தில் இருக்கும் போது பேஸ்புக் பயன்படுத்தினால் மேலாளருக்கு மட்டும் நாம் போடும் பதிவுகள் தெரியக்கூடாது என்று விரும்பினால் அவ்வாறு செய்யலாம். 

முதலில் குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின் கீழே படத்தில் உள்ளது போல Public என்பதை கிளிக் செய்யுங்கள்.சிலருக்கு அது Friends என்று இருக்கக் கூடும். வரும் Drop-Down மெனுவில் Custom என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது வரும் பகுதியில் "Don't share this with These people or lists" என்பதில் குறிப்பிட்ட நபர்களின் பெயரை கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு List வைத்திருந்தால் அப்படியும் கூட தரலாம். 



ஒரு சில நபர்கள் மட்டும் என்றால் ஒவ்வொரு பெயராக கொடுங்கள். 

நிறைய பேர் என்றால் அவர்களை ஒரு லிஸ்ட் போட்டு கொள்ளுங்கள்.பின்னர் லிஸ்ட் பெயரை தெரிவு செய்தால் அதில் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் போஸ்ட் தெரியாது. 


இதை முடித்து விட்டு Save Changes கொடுத்து விட்டு Post செய்து விட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட் தெரியாது. 

- பிரபு கிருஷ்ணா

Sony Xperia Z மற்றும் ZL - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

Sony Xperia Z

Sony நிறுவன தயாரிப்புகள் அனைத்துக்கும் எப்போதும் அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அதிகபட்ச எதிர்பார்ப்புடன் இருந்த Sony Xperia Z மற்றும் ZL இந்தியாவில் விரைவில் வரவிருக்கின்றன. இவற்றின் விலை முறையே Xperia Z ரூபாய் 38990, Xperia ZL ரூபாய் 35990.

இரண்டு போன்களுமே ஒரே Specifications உடையவை. இரண்டே வித்தியாசங்கள் தான் உள்ளது. Xperia Z ஆனது ஒரு Waterproof Phone, பாட்டரி Remove செய்ய இயலாது.  Xperia ZL Waterproof இல்லை, பாட்டரி Remove செய்ய முடியும். 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவை Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளன, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Geo-tagging, Face Detection, Image Stabilization, Sweep Panorama போன்ற வசதிகளும் உள்ளது.  அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளன. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.இதன் மூலமும் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும்.

Sony Xperia ZL

இவை 5.0 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகின்றன. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass, Gyro ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளன.

2 GB RAM மற்றும் 1.5 GHz Quad Core Processor கொண்டுள்ளன. இவற்றின் இன்டர்னல் மெமரி 16GB. 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2330 mAh பேட்டரியுடன் வருகின்றன. 

இவற்றோடு 3G,4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Sony Xperia Z & Xperia  ZL Specifications

Operating System Android 4.1 Jelly Bean
Display 5-inch Full HD (1920×1080 pixels) TFT Capacitive Touch Screen display with mobile Bravia Engine 2
Processor 1.5GHz quad-core Qualcomm APQ 8064 processor with Adreno 320 GPU
RAM 2GB RAM
Internal Memory 16GB
External Memory microSD, up to 64 GB
Camera Rear Camera: 13  MP, 4128x3096 pixels, autofocus, LED flash
Front Camera: 2 MP
Battery Li-Ion 2330
Features 3G, 4G,WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

* - விலை Update செய்த தேதி 06-03-2013.
- பிரபு கிருஷ்ணா

ஆன்ட்ராய்ட் போன்களில் புதிதாக வந்துள்ள Google Settings icon எதற்காக ?

ஆன்ட்ராய்ட் பயனர்கள் சமீபத்தில் இணையத்தை பயன்படுத்தி இருந்தால் அவர்கள் போனில் Applications பகுதியில் புதிதாக Google Settings என்றொரு icon வந்திருக்கும். இதை நாம் தரவிறக்கம் செய்யவில்லையே எப்படி வந்தது என்று நிறைய பேர் யோசித்து இருப்போம்.


இது கூகுள் புதியதாக வெளியிட்டுள்ள ஒரு Extension. இதை நாம் Uninstall செய்ய இயலாது. இதை ஓபன் செய்தால் பெரும்பாலானவர்களுக்கு கீழே உள்ளது போல வரும். 


இவற்றில் பல மற்ற ஏதேனும் ஒரு Application மூலம் நாம் பயன்படுத்துவதாக உள்ளது. உதாரணம் Maps & Latitude, Google+, Location, Search மற்றும் Ads போன்றவை (பலருக்கு ஒன்றிரண்டு மட்டும் இருக்கக் கூடும்). புதிதாக வந்துள்ள ஒரே வசதி Apps With Google+ Sign-in. சமீபத்தில் பேஸ்புக் போல மற்ற தளங்களில் Google Plus கணக்கை பயன்படுத்தி Sign in செய்யும் வசதி அறிமுகமானது. அப்படி நீங்கள் Sign-in செய்த தளங்கள் இதில் இருக்கும். 

சரி இது என்ன செய்யும் என்று நீங்கள் கேட்டால், எதுவுமே செய்யாது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே உள்ளதாக நான் குறிப்பிட்டுள்ளவற்றை நீங்கள் Click செய்தால் அந்த குறிப்பிட்ட வசதிக்கு தான் நீங்கள் செல்வீர்கள். உதாரணமாக Maps & Latitude என்பதை கிளிக் செய்தால் கூகுள் மேப்ஸ் App Open ஆகும். 

இதை பார்த்து பயப்பட வேண்டாம் என்று சொல்லவே இந்த பதிவு. 

எனக்கு இந்த வசதி வரவில்லையே என்பவர்கள் கொஞ்சம் நாட்கள்  காத்திருங்கள் வந்து விடும். உடனடியாக வேண்டும் என்பவர்கள் Settings >> Apps பகுதியில் Google Play Services என்பதை கிளிக் செய்து Clear Data கொடுத்து விட்டு ஒரு முறை உங்கள் போனை Off செய்து On செய்யுங்கள். இப்போது உங்கள் போனில் Internet வசதி இருந்தால் Google Settings Icon வந்து விடும். 

- பிரபு கிருஷ்ணா

Lava Iris 502 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


கடந்த வாரம் Lava நிறுவனம் Iris 502 என்ற புதிய போனை அறிவித்தது. இப்போது அதனை ரூபாய் 8499* Flipkart மூலம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை காண்போம். 

இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 2592 x 1936 pixels அளவுக்கு போட்டோ எடுக்க முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512 MB RAM, 1 GHz Single Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2300 mAh பேட்டரியுடன் வருகிறது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Lava Iris 502 Specifcations

Operating System Android 4.1 Jelly Bean
Display 5.0-inch (480 x 800 pixels) capacitive touch screen display
Processor 1GHz Single Core processor
RAM 512MB RAM
Internal Memory 4GB
External Memory microSD, up to 32 GB
Camera Rear Camera: 5MP auto focus camera with LED Flash
Front Camera: 0.3 MP
Battery 2300 mAh
Features GPRS, EDGE, 3G, WiFi 802.11 b/g/n, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

குறைந்த விலையில் Jelly Bean OS உடைய போன் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உகந்த மாடல்.  5MP கேமரா, 4 GB Internal Memory போன்றவை பிளஸ் பாயிண்ட். 

* - விலை Update செய்த தேதி 03-03-2013.

- பிரபு கிருஷ்ணா

Nokia Lumia 620 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் Lumia 620 என்ற மாடலை அறிவித்தது நோக்கியா நிறுவனம். வெளிநாடுகளில் கடந்த மாதமே வெளியான இது. இந்தியாவில் விரைவில் வெளியாகப் போகிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 15,199*. இதை Flipkart தளத்தில் Pre-Order செய்யலாம். இதைப் பற்றிய விவரங்களை காண்போம். 


Windows Phone 8 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 2592х1936 pixels அளவுக்கு போட்டோவும்,  HD (720P) வீடியோவும் எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் VGA கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். 

இது 3.8 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512MB RAM மற்றும் 1 GHz Krait Dual Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1300 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Nokia Lumia 620 Specifications

Operating System Windows Phone 8
Display 3.8 inch (800×480 pixels)  TFT capacitive touch screen
Dimension & Weight 115.4 x 61.1 x 11.02 mm & 127g
Processor Qualcomm Snapdragon(TM) S4 processor with 1 Ghz Krait dual-core Processor
Camera Rear Camer: 5MP Autofocus, LED flash, Front camera: VGA
RAM 512MB RAM
Internal Memory 8GB
External Memory Micro SD support up to 64GB
Battery  1300 mAh
Features 3G, GPRS, EDGE, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Micro USB 2.0 connector & 7GB free Microsoft SkyDrive storage

கற்போம் Review:

15,000 க்கு 512MB RAM என்பது குறைவாகத் தெரிகிறது. மற்றபடி Internal Memory மற்றும் Processor கொடுக்கும் விலைக்கு உகந்தவை.  Windows Phone தான்  வாங்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் கண்டிப்பாக வாங்கலாம்.

* - விலை Update செய்த தேதி 01-03-2013.

நன்றி - Tech Hints

- பிரபு கிருஷ்ணா

கற்போம் மார்ச் மாத இதழ் - Karpom March 2013

கற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

இந்த மாத கட்டுரைகள் : 

  1. பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி
  2. மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
  3. விண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்
  4. பிட்.. பைட்... மெகாபைட்....!
  5. விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி ?
  6. Facebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்பது எப்படி ?
  7. Portable Application என்றால் என்ன ? பயன்படுத்துவது எப்படி ?
  8. பதில் !
  9. தமிழில் போட்டோஷாப் - 3
தரவிறக்கம் செய்ய:


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம் 

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும். 

- பிரபு கிருஷ்ணா