June 2013 | கற்போம்

இன்டெல் 4-ஆம் தலைமுறை ப்ராசசர்கள் அறிமுகமானது

இன்டெல் நிறுவனம் கணினியின் ப்ராசசர்களுக்கு பெயர் பெற்ற ஒன்று. பல கணினி நிறுவனங்களுக்கும் இன்டெல் ப்ராசசர்களை உள்ளடக்கி கணினிகளை வெளியிட்டு வருகின்றன. நேற்று இன்டெல் நிறுவனம் டெல்லியில் தனது புதிய 4-ஆம் தலைமுறை ப்ராசசர்களை அறிமுகம் செய்தது. இன்டெல் நிறுவனம் இதற்கு Haswell என்று Code Name கொடுத்துள்ளது. முந்தைய தலைமுறை ப்ராசசர்களை விட அதிக வசதிகளுடன் இது வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பசம்சங்கள்: 
  • கணினி மற்றும் Tablet என இரண்டாகவும் இயங்கும் வசதி
  • பழைய மடிக்கணினிகளை* விட 50% அதிக Battery Life (படங்கள் - Upto 11.2 hrs, வேலைகள் - upto 10.3 hrs)
  • ஆன் செய்த 3 நொடிகளில் கணினி இயங்க ஆரம்பித்துவிடும்.
  • Gaming Experience பழைய கணினிகளை* 20 மடங்கு சிறப்பானதாக இருக்கும்.
  • பழைய கணினிகளை* விட நான்கு மடங்கு அதிக வேகம்.
  • 20 நிமிட HD Video - களை 1 நிமிடத்தில் Convert செய்யும் வசதி.
  • Voice Recognition, Immersive Touch, Face Login and Wireless Display To TVபோன்ற வசதிகளும் உள்ளன.


Dell, Acer, Lenovo, HP உள்ளிட்ட பிரபலமான கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த 4ம் தலைமுறை இன்டெல் ப்ராசசர்களுடன் கணினி, மடிக்கணினிகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

* பழைய கணினி - நான்கு வருடம் பழையது
- பிரபு கிருஷ்ணா

ரூபாய் 15,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஜூன் 2013]

தினம் தினம் பல புதிய மொபைல் போன்கள் வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும். அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் அதுவும் ரூபாய் 15,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம்.

Android போனில் Call Record செய்வது எப்படி?

Call Record செய்வது என்பது இன்று பல வழிகளில் பயன்படக்கூடிய ஒன்று. பல பிரச்சினைகளுக்காக Customer Care போன்றவற்றில் பேசும் போது இது நமக்கு கட்டாயம் தேவை. Android போன்களை பயன்படுத்துவர்களுக்கு அதில் Call Record செய்ய முடியவில்லையே என்ற குறை இருக்கும்.  அந்த குறையை போக்க நாம் சில Application களை பயன்படுத்தலாம். 

1. RMC: Advance Call Recorder



இந்த Application உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card - இல் Save செய்திடும். இதன் Record Quality நீங்கள் Loud Speaker பயன்படுத்தும் போது அதிகமாக இருக்கும். Record ஆனவற்றை எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். விரும்பினால் Drop Box, Google Drive போன்றவற்றுடன் Sync செய்து கொள்ளலாம். அதே போல Manual Record வசதியும் இதில் உள்ளது.

தரவிறக்க - RMC: Advance Call Recorder

2. Call Recorder



இதுவும் மேலே சொன்னது போலவே உங்களின் அனைத்து Incoming மற்றும் Outcoming Call களையும் Record செய்து உங்கள் Memory Card - இல் Save செய்திடும். இதில் உள்ள சிறப்பம்சம் ரெகார்ட் ஆனவற்றை நீங்கள் Lock செய்து கொள்ளலாம்.

தரவிறக்க - Call Recorder

3. Automatic Call Recorder



இந்த Application மூலம் குறிப்பிட்ட Contact Call களை மட்டும் Record செய்யலாம். இதனால் எல்லாவற்றையும் Record செய்து Save ஆகும் ஆகும் வேலை இருக்காது. Ignore contacts என்ற வசதி மூலம் எந்த Contact Call எல்லாம் Record ஆகவேண்டாம் என்று நாம் செட் செய்து விடலாம்.

தரவிறக்க - Automatic Call Recorder

பின்குறிப்பு: உங்கள் போனில் உள்ள Microphone மூலமே ரெகார்ட் ஆவதால் Loudspeaker - இல் பேசினால் தெளிவாக ரெகார்ட் ஆகும்.

Samsung Galaxy Mega 6.3 மற்றும் Mega 5.8 தற்போது இந்தியாவில்

அடிக்கடி புதிய போன்களை வெளியிடும் Samsung நிறுவனத்தில் இருந்து சமீபத்திய வரவாக Samsung Galaxy Mega 6.3 மற்றும் Mega 5.8 என்ற இரண்டு புதிய போன்கள் வந்துள்ளன. Phablet பிரிவில் வரும் இவற்றின் ஆரம்ப விலை முறையே ரூபாய் 30990மற்றும் ரூபாய் 24900 என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டிலும் பொதுவான Specifications:

இரண்டு போன்களுமே Android 4.2.2 (Jelly Bean) ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இவற்றில் தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளன .இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 1.9 MP கேமராவை கொண்டுள்ளன. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இரண்டுமே 1.5 GB RAM, இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளன. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் இரண்டிலும் பொதுவாக உள்ளன.

இரண்டு போன்களுமே Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளன.

வித்தியாசங்கள்: 

Mega 6.3 போன் 6.3 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது, Mega 5.8 போன் 5.8 Inch TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இரண்டுமே Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது.  மிக முக்கியமாக இரண்டில் Mega 5.8 மாடல் மட்டும் Dual SIM வசதியுடன் வருகிறது.

Mega 6.3 மாடல் 1.7 GHz dual-core processor உடன் வருகிறது, ஆனால் Mega 5.8  மாடல் 1.4 GHz dual-core processor உடன் வருகிறது. இதே போலவே இரண்டுமே முறையே Li-Ion 3200 mAh (Mega 6.3) மற்றும் Li-Ion 2600 mAh (Mega 5.8) பேட்டரியுடன் வருகின்றன.

இவற்றை தவிர இரண்டின் எடை மற்றும் டைமென்சன் ஆகியவையும் வேறுபடுகின்றன.

இரண்டின் Specification தகவல்களும் கீழே உள்ள டேபிளில் உள்ளன.

ModelSamsung Galaxy Mega 6.3Samsung Galaxy Mega 5.8
General
Dual SimNoYes
Dimensions167.6 x 88 x 8 mm162.6 x 82.4 x 9 mm
Weight199g182g
Display
Display TypeTFT capacitive touch screen, 16M colorsTFT capacitive touch screen, 16M colors
Display Size1280 x 720 pixels, 6.3 inches960 x 540 pixels, 5.8 inches
Software
Operating SystemAndroid OS, v4.2.2 (Jelly Bean)Android OS, v4.2.2 (Jelly Bean)
Camera
Back Camera8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash
Front Camera1.9 MP1.9 MP
FeaturesGeo-tagging, touch focus, face and smile detectionGeo-tagging, touch focus, face and smile detection
VideoYesYes
Processor
CPUDual-core  1.7 GHzDual-core  1.4 GHz
Memory
RAM1.5 GB RAM1.5 GB RAM
Internal Memory8/16 GB8 GB
External MemorymicroSD, up to 32 GBmicroSD, up to 32 GB
Battery
TypeLi-Ion 3200 mAhLi-Ion 2600 mAh
Connectivity
3GYes, HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 MbpsYes, HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps
4GYes (Market Dependent), LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
BluetoothYes, v4.0 with A2DPYes, v4.0 with A2DP
WifiYes, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Wi-Fi hotspotYes, Wi-Fi 802.11 b/g/n
GPRS, EDGE, GPS and microUSB v2.0GPRS, EDGE, GPS and microUSB v2.0
Others
ColorsWhite, BlackWhite, Black
SensorsAccelerometer, Proximity, CompassAccelerometer, Proximity, Compass


கற்போம் Review:

5 இன்ச்க்கும் அதிகமான Touch Screen உள்ள போன்களை வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு உகந்த போன்கள் இவை. அதற்கேற்றார் போல வசதிகளும் உள்ளன. 

தற்போதையை விலையை வலதுபுறம் உள்ள Flipkart Widget – இல் காணலாம்.

தகவல் - Specs Of All Blog

- பிரபு கிருஷ்ணா

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

நாம் எல்லா சமயங்களிலும் போன்களை நம் கையில் வைத்திருப்பது இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் இணைய இணைப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் Android பயனராக இருப்பின் ஒரு Application இன்ஸ்டால் செய்ய உங்களிடம் போனில் இணைய இணைப்பு அல்லது போனே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினியில் இருந்தே உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யலாம். எப்படி என்று பார்ப்போம்.

உங்களின் Android போன் உங்களிடம் இல்லாத சமயத்தில் அல்லது போனில் இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் நீங்கள் ஒரு Application ஒன்றை ஏதேனும் ஒரு தளத்திலோ அல்லது நண்பர்கள் மூலமோ அறிய வந்திருப்பீர்கள். உங்களிடம் போன் இல்லாத காரணத்தால் அதை பிறகு இன்ஸ்டால் செய்யலாம் என்று பல சமயங்களில் மறந்து போயிருப்பீர்கள். அம்மாதிரி ஆகாமல் தவிர்க்கவே இந்த பதிவு. Android Tablet களை பயன்படுத்துபவர்களும் இந்த வழியை பின்பற்றலாம்.


குறிப்பிட்ட Application ஒன்றை கணினியில் இருந்து பார்க்கும் போது முதலில் அதன் Google Play பக்கத்திற்கு செல்லுங்கள். உதாரணமாக திங்களன்று நான் எழுதிய Line Application இன் Google Play  பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் இடது புறம் Application பெயர், படத்திற்கு கீழே Install என்று ஒன்று இருப்பதை கவனியுங்கள். [ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருப்பின் இன்ஸ்டால் செய்யாத ஏதேனும் ஒரு App பக்கத்திற்கு செல்லுங்கள்]

அதை (Install) கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்களை Google Play தளத்தில் Sign in செய்யச் சொல்லி கேட்கும். நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் ஜிமெயில் முகவரியை கொடுத்து Sign in செய்யுங்கள். Sign in செய்த உடன் உங்கள் போன் மாடல் வந்து விடும், அத்தோடு Sign in என்ற இடத்திலும் Install என்று வந்து விடும். [ஏற்கனவே Sign in செய்திருந்தால் நேரடியாக Install என்பது வரும்]



இப்போது Install என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது "This app will be downloaded in your device shortly" என்று வந்துவிடும். இனி உங்கள் போனில் இணைப்பு கிடைக்கும் போது Application தானாக டவுன்லோட் ஆகி விடும்.



உடனடியாக டவுன்லோட்தொடங்காவிட்டாலும் சில நிமிடங்களில் தொடங்கி உங்கள் இணைய வேகத்தை பொறுத்து டவுன்லோட் ஆகி விடும்.

பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க முழுக்க புதிய Android பயனர்களுக்கானது. 

- பிரபு கிருஷ்ணா

எச்சரிக்கை: வைரசுடன் வரும் PDF File -கள்

இணையத்தில் தற்போது பல வழிகளில் வைரஸ் பரவி வருகிறது. குறிப்பிட்ட தளங்களுக்கு செல்வதால், குறிப்பிட்ட File களை ஓபன் செய்வதால் என்று தொடரும் இந்த லிஸ்டில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒன்று மின்னஞ்சலில் வரும் PDF File கள். கடந்த இரண்டு வருடங்களில் இது அதிகமாகி வருகிறது. இதைப் பற்றி பார்ப்போம்.

இணையத்தில் நாம் பல இடங்களில் நம் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து வருகிறோம், அவற்றில் நம்பிக்கையற்ற பல தளங்கள் நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை பல தவறான நபர்களிடம் விற்று விடுகின்றன. அவ்வாறாக விற்கப்பட்ட பின் நம் மின்னஞ்சல் முகவரிக்கு தேவையற்ற மின்னஞ்சல்களை குறிப்பிட்ட தளங்கள் அனுப்பும். அவற்றில் பல பண மோசடி செய்யும் தளங்களாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் கேட்கும் விஷயத்தை நாம் செய்யக்கூடாது என்பதோடு அதில் ஏதேனும் File Attach செய்யப்பட்டு இருப்பின் அதனையும் திறக்க கூடாது. தற்போது அவற்றின் மூலம் வைரசும் சேர்ந்து வருகிறது.



அவற்றில் குறிப்பிடதக்க ஒன்று PDF Files. ஆம் PDF File மூலமும் வைரஸ்களை அனுப்பி அவற்றை நாம் மின்னஞ்சலில் இருந்து டவுன்லோட் செய்யும் போதோ அல்லது ஆன்லைன் மூலமே படிக்கும் போதோ malicious javascript கள் நம் கணினியில் தேவையற்ற மென்பொருட்களை நாம் அறியாமலேயே நிறுவும். இவை உங்களில் தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்கள் கணினி Hack செய்யப்படலாம்.

எனவே உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம்/மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதை திறந்து பார்த்து என்ன என்பதை படித்து விட்டு டெலீட் செய்து விட வேண்டும். இவ்வாறு மட்டும் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 லட்சம் கணினிகளில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை PDF File-கள், அதுவும் Adobe Reader/Acrobat மூலம் திறக்கப்பட்டவை.

இது குறித்து Microsoft Malware Protection Center குறிப்பிட்ட சில பெயருடைய PDF File - களை நமது கணினிகளில் திறக்க வேண்டாம் கேட்டுக்கொண்டுள்ளது. அவை,
  1. pdf_new[1].pdf
  2. auhtjseubpazbo5[1].pdf
  3. avjudtcobzimxnj2[1].pdf
  4. pricelist[1].pdf
  5. couple_saying_lucky[1].pdf
  6. 5661f[1].pdf 7927
  7. 9fbe0[1].pdf 7065
  8. pdf_old[1].pdf

பெரும்பாலும் இந்த பெயரில் வந்தாலும் சில வேறு பெயரிலும் வர வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்ப்பதே நலம்.

இதை தவிர்க்க மற்ற சில வழிகள்: 


  • உங்கள் Adobe Reader மென்பொருளை புதிய Version க்கு Update செய்து கொள்ளுங்கள்.
  • Chrome, Firefox போன்ற நம்பிக்கையான ப்ரௌசெர்களை மட்டும் பயன்படுத்தவும்.
  • நல்ல Anti-virus மென்பொருளை பயன்படுத்தவும்.

இத்தோடு Adobe Reader பயன்படுத்தும் நபர்கள் அதில் JavaScript ஐ Disable செய்து கொள்வதும் நல்லது.

Adobe Reader இல் எப்படி JavaScript ஐ Disable செய்வது ?

Adobe Reader >> Edit >> Preferences >> JavaScript >> Enable Acrobat JavaScript என்பதை Uncheck செய்து விடவும்.



- பிரபு கிருஷ்ணா

இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.

Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.



நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline - இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.

இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.  உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.

இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி Social Network போல இயங்கும்.

இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line - ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

சிறப்பம்சங்கள்: 
  • இலவசமாக Call செய்யும் வசதி. 
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் Call/Message சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.



Android பயனர்கள்: 

முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Sign in ஆகி இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து Sign in செய்து பின்னர் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள். 

இப்போது உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்தால் App தானாக Download ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆன பிறகு உங்கள் நம்பர் கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொள்ளலாம்.

Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:

உங்கள் போனில் App Market சென்று Line என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள் பின்னர் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து Register செய்யுங்கள்.

தரவிறக்க:
  • மொபைல்
    • Android [**Android பயனர்கள்இந்த இணைப்பில் கிளிக் செய்து வரும் பக்கத்தில் Install என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்து தானாக Download செய்யலாம்**]
    • iPhone
    • Windows Phone 8
    • Blackberry
    • Nokia Asha

டவுன்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். என்னை சேர்க்க Search By ID என்பதில் prabukrishna என்று தேடுங்கள்.

- பிரபு கிருஷ்ணா

Sony Xperia ZR இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது [Specifications and Price]

ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போனும் தற்போது புது புது வசதிகளுடன் வெளிவருகிறது. அந்த வகையில் Sony நிறுவனத்தின் புதிய போன் Xperia ZR என்ற போன் நீருக்கடியில் போட்டோ எடுக்கும் திறனுடன் வெளியாகி உள்ளது. இந்த போன் மூலம் நீருக்கடியில் 1.5 மீட்டர் ஆழம் வரை போட்டோ மற்றும் வீடியோக்களை நாம் எடுக்க முடியும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 29990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 4.55 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.5 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Po 2300 mAh பேட்டரியுடன் 11 மணி நேர Talktime மற்றும் 470 மணி நேர Standby Time போன்றவற்றுடன் வருகிறது.

நீருக்கடியில் போட்டோ & வீடியோ எடுக்கும் திறனுள்ளதால் இது ஒரு Waterproof என்பது உங்களுக்கு தெரியும். அதே சமயத்தில் இது Dust-proof வசதியுடனும் வருகிறது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Sony Xperia ZR Specifications:

Operating SystemAndroid OS, v4.1 (Jelly Bean)
Display4.55 inch HD(1280×720 Pixels) TFT capacitive touch screen
Processor1.5GHz quad-core Qualcomm APQ 8064 processor with Adreno 320 GPU
RAM2 GB RAM
Internal Memory8 GB Internal Memory
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera: 13 MP, 4128×3096 pixels, autofocus, LED flash
Front Camera: 0.3 MP
Battery2300 mAh Battery with 11 hrs Talk Time and 470 hrs Standby Time
Features3G,4G(Market Dependent), WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

நீருக்கடியில் போட்டோ எடுக்கும் திறன், 13 MP கேமரா, 2 GB RAM போன்ற வசதிகள் அசத்தலானவை. கண்டிப்பாக வாங்கலாம். 

தகவல் - Specs Of All Blog

OLX தளத்தில் ஒரு பொருளை விற்பது எப்படி?

OLX தளம் ஆன்லைன் மூலம் நாம் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். முன்பெல்லாம் பழைய பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்றால், கிடைக்கும் ஏதோ ஒன்றை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது, அதே போல விற்பதற்கும் சரியான விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் OLX வந்த பின் இரண்டின் வேலையும் எளிதாகி நமக்கு உகந்த விலையில் பொருளை வாங்கலாம் அல்லது விற்கலாம்.

OLX மூலம் ஒரு பொருளை வாங்குதல் எளிது. குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு பொருளை பற்றி விசாரித்து வாங்கிக் கொள்ளலாம். இந்த பதிவில் எப்படி ஒரு பொருளை விற்பது என்று பார்ப்போம்.



முதலில் olx.in என்ற தளத்திற்கு சென்று Register மூலம் ஒரு புதிய பயனர் கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள். கணக்கை உறுதி செய்ய உங்கள் மின்னஞ்சலில் வரும் லிங்க் மீது கிளிக் செய்ய வேண்டும். இது முடிந்த பிறகு நீங்கள் OLX தளத்தில் Sign in செய்ய முடியும். Sign in செய்த பிறகு "Post a Free Ad" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் விற்க போகும் பொருள் என்ன Category என்று தெரிவு செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் நீங்கள் உங்கள் விளம்பரம் குறித்த தகவல்களை தர வேண்டும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.



தகவல்களை கொடுத்தவுடன் Post என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் இந்த விளம்பரம் Pending Ad என்று வரும்.

இப்போது உங்கள் விளம்பரம் OLX Team மூலம் செக் செய்யப்பட்டு 3 முதல் 6 மணி நேரத்துக்குள் அனைவருக்கும் தெரியும்படி வந்து விடும். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் உங்களுக்கு மின்னஞ்சல் வரும் அல்லது OLX தளத்தில் நுழைந்து My OLX என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் Settings பகுதிக்கு கீழே உங்கள் விளம்பரத்தின் நிலை தெரியும்.


விளம்பரம் Approve ஆகிவிட்டால் Active Ads பகுதியில் இருக்கும்.


சந்தேகம் ஏதும் இருப்பின் கமெண்ட் பகுதி மூலம் கேளுங்கள்.

- பிரபு  கிருஷ்ணா

கற்போம் ஜூன் மாத இதழ் – Karpom June 2013

கற்போம் ஜூன் மாத இதழ் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சற்றே தாமதமாக வருகிறது. மற்றபடி வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன் இந்த மாத இதழ் உள்ளது. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

இந்த மாத கட்டுரைகள்:

  1. Hangouts - கூகுளின் புதிய சாட் வசதி
  2. மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!
  3. உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை !
  4. உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்
  5. கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!
  6. பிட்.. பைட்... மெகாபைட்....! - தொடர்
  7. புது நுட்பம் - தொடர்
  8. Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன ?
  9. கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?
  10. தமிழில் போட்டோஷாப் – 6

தரவிறக்கம் செய்ய:


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

- பிரபு கிருஷ்ணா

கற்போம் ஜூன் மாத இதழ் – Karpom June 2013

கற்போம் ஜூன் மாத இதழ் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சற்றே தாமதமாக வருகிறது. மற்றபடி வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன் இந்த மாத இதழ் உள்ளது. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

இந்த மாத கட்டுரைகள்:

  1. Hangouts - கூகுளின் புதிய சாட் வசதி
  2. மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!
  3. உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை !
  4. உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்
  5. கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!
  6. பிட்.. பைட்... மெகாபைட்....! - தொடர்
  7. புது நுட்பம் - தொடர்
  8. Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன ?
  9. கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?
  10. தமிழில் போட்டோஷாப் – 6

தரவிறக்கம் செய்ய:


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

- பிரபு கிருஷ்ணா