August 2013 | கற்போம்

பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா? - எச்சரிக்கை

அவ்வப்போது பேஸ்புக்கில் ஏதாவது ஒரு ஸ்பாம் வந்து நிறைய பயனர்களின் வயிற்றில் புளியை கரைக்கும். அந்த வகையில் தற்போது வந்துள்ள விஷயம் நமக்கே தெரியாமல் ஆபாச பக்கங்களை லைக் செய்துள்ளதாக வருவது. இந்த பிரச்சினையின் முழு விவரம் இன்னும் தெரிய வரவில்லை. எனவே ஒரு தற்காலிக வழி ஒன்றை இப்போது பகிர்கிறேன். முழு விவரமும் தெரியும் போது மற்ற விவரங்கள் பகிரப்படும்.


இதற்கு முன்பு இம்மாதிரி நடந்த விஷயங்களுக்கு முக்கிய காரணம் Facebook Apps. எனவே அவற்றை நீக்குவது இதற்கு ஒரு தற்காலிக தீர்வாக இருக்கும். இந்த பிரச்சினை இல்லாதவர்கள் கூட இதை செய்யலாம்.

இதை செய்ய உங்கள் பேஸ்புக் கணக்கில் Privacy Settings பகுதிக்கு வரவும்.இதில் இடது பக்கம் Apps என்று உள்ளதை தெரிவு செய்யவும்.இப்போது App Settings-ல் Apps you use பகுதியில் நீங்கள் பயன்படுத்தி வரும் Apps இருக்கும். அதில் உங்களுக்கு சந்தேகமான, தேவையற்ற அல்லது எல்லாவற்றையும் வலது பக்கம் உள்ள x மீது கிளிக் செய்து Remove செய்யுங்கள்.நான் இதுவரை எந்த App-ம் பயன்படுத்தியது இல்லை, இனிமேலும் பயன்படுத்தட்ட மாட்டேன் என்பவர்கள், "Use apps, plugins, games and websites on Faceook and elsewhere ?" என்று உள்ளதில் On என்று இருப்பதை Edit என்பதை கிளிக் செய்து Off செய்யலாம்.இதை செய்து முடித்த பிறகு. ஒரு முறை உங்கள் பேஸ்புக் கணக்கில் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் பக்கம் பிரச்சினை இல்லை.

இனி நீங்கள் என்ன செய்யக்கூடாது ?

 • உங்கள் பேஸ்புக் போஸ்ட்/போட்டோ/லிங்க்கிற்கு நண்பர்கள் யாரேனும் தொடர்பில்லாத கமெண்ட்டை பகிர்ந்தால் முக்கியமாக ஏதேனும் லிங்க்குடன் இருந்தால் அதை கிளிக் செய்யாதீர்கள். அது பெரும்பாலும் ஸ்பாம் ஆக இருக்கும். இதில் சந்தேகம் இருப்பின் குறிப்பிட்ட நண்பரை கூப்பிட்டு அவர்தான் பகிர்ந்தாரா என்று கேளுங்கள்.
 • அதே போல எந்த நண்பரேனும் அவருக்கு சம்பந்தம் இல்லாத, தெரியாத விஷயத்தை பகிர்ந்தால் அதையும் நம்பாதீர்கள். இதுவும் ஸ்பாம் ஆக இருக்கும்.
 • இந்த வகையான App ஆபாச பெயரிலோ அல்லது படத்துடன் தான் இருக்கும் என்ற அவசியமில்லை. மாறாக சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை, படத்துடனும் வரலாம். எனவே தொடர்பில்லாத எதையும் தொடாதீர்கள் :-)


பேஸ்புக்கில் உங்கள் Privacy ஐ பாதுகாக்க Facebook Privacy Settings பகுதியில் நீங்கள் செய்ய வேண்டியவை என்ற பதிவை படியுங்கள்.

இது தற்காலிக தீர்வு மட்டுமே. இதுவே நிரந்த தீர்வாக கூட இருக்கலாம். முழு விவரமும் தெரிந்த பின்னர் இன்னொரு பதிவை விரிவாக எழுதுகிறேன்.

- பிரபு கிருஷ்ணா

McAfee Internet Security 2013 ஒரு வருடத்திற்கு இலவசமாக

McAfee Internet Security மென்பொருள் உங்கள் கணினிக்கு Viruses, Trojans, spyware, malware போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை தரும் மிக முக்கியமான ஒரு மென்பொருள். தற்போது அந்த நிறுவனம் இதை தன் பயனர்களுக்கு License உடன் ஒரு வருடம் இலவசமாக தருகிறது.இது உங்கள் கணினியில் antivirus, anti-spyware, anti-bot மற்றும் two-way firewall protection ஆக இயங்கி உங்கள் கணினியை பாதுகாக்கிறது. இன்னும் பல்வேறு பயன்களை கொண்டுள்ள இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கும் போது பயன்படுத்தும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

சிறப்பம்சங்கள் :

 • Real-time anti-virus, anti-malware, and anti-spyware protection.
 • Anti-bot protection.
 • Secure firewall.
 • PC tune-up.
 • Parental controls, anti-spam.
 • Automated file backup to a cloud-based safe deposit box.

இந்த Offer தற்போது Expire ஆகி விட்டது. கீழே உள்ள இணைப்பில் Trail Version - ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

டவுன்லோட் செய்ய: McAfee Internet Security 2013 Trail Version

தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ?

ஆன்ட்ராய்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்ட்ராய்ட் பயனர்கள் நிறைய பேரின் கேள்வி அதில் எப்படி தமிழில் எழுதுவது, எது சிறந்த அப்ளிகேஷன் ?


கூகுளே ப்ளேயில் இதற்கு நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கின்றன என்றாலும் மிகச்சில மட்டுமே தமிழில் எழுதுவதற்கு எளிதாக உள்ளன. இவற்றில் KM Keyboard என்ற அப்ளிகேஷன் குறித்து ஏற்கனவே ஒரு பதிவை கற்போமில் எழுதி உள்ளேன். ஆனால் தற்போது அதை விட எளிதான அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. அவற்றில் மூன்றை இதில் பார்ப்போம்.

1. Sellinam


தற்போது நான் பயன்படுத்தும் அப்ளிகேஷன் இதுதான். மிக எளிதாக எழுதும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில் கீபோர்ட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளது. தமிழ் மொழி கீபோர்டை பயன்படுத்தி எழுத விரும்பும் நண்பர்களுக்கு உகந்த அப்ளிகேஷன் இது தான். அதற்கான எழுதுவது கடினமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், மிக மிக எளிதாகவே உள்ளது. இதன் இன்னொரு சிறப்பு தமிழில் எழுதும் அதே நேரத்தில் உடனே ஆங்கிலத்துக்கு மாற இடது கீழ் மூலையில் உள்ள "மு/த" என்பதை கிளிக் செய்தால் போதும். அதே போல தான் தமிழுக்கும். குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருவதும் ஒரு சிறப்பம்சம்.

இதை தரவிறக்க - Sellinam

2. Tamil Visai

செல்லினம் போலவே ஒரு சிறந்த அப்ளிகேஷன் இது. டைப் செய்யும் கீபோர்டு நான்கு வகையாக உள்ளன. ஆனால் இதிலேயே ஆங்கிலத்தில் டைப் செய்யும் வசதியும் உள்ளது.  டைப் செய்யும் போது Text தோன்றும் இடம் இரண்டு பகுதிகளாக இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. Symbol பகுதியில் மிகக் குறைந்த அளவிலான Symbolகளே உள்ளன.

இதை தரவிறக்க - Tamil Visai

3. UKeyboard

செல்லினம் போலவே உள்ள இன்னொரு மாற்று கீபோர்டு இது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழ் மட்டுமின்றி இன்னும் 21 மொழிகளில் எழுதும் வசதி உள்ளது. தமிழில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு குறிப்பாக Google Tamil Transliteration பயன்படுத்தி கணினியில் தமிழில் எழுதுபவர்களுக்கு உகந்த Application இது. இதிலும் குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருகிறது. மீண்டும் ஆங்கிலத்தில் எழுத நீங்கள் Input Method -ஐ தான் மாற்ற வேண்டும். இதன் ஒரு குறை சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது தமிழுக்கு மாறுவது இல்லை.

இதை தரவிறக்க - Keyboard Beta

மூன்றையும் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி இருப்பின் உங்கள் அனுபவத்தை கமெண்ட் மூலம் சொல்லுங்கள்.

Sony Xperia M முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications & Price]

கொஞ்சம் குறைந்த விலைக்கு பயனர்களை கவரும் வகையில் சில முக்கிய வசதிகளுடன் வரும் போன்களை அனைத்து நிறுவனங்களும் தற்போது வெளியிடுகின்றன. அந்த வகையில் அறிமுகமாகி உள்ள போன் தான் Sony நிறுவனத்தின் Xperia M. இது தற்போது ரூபாய் 12990 க்கு Flipkart தளத்தில் கிடைக்கிறது.Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகள் உள்ளன.  அதே போல முன்னாலும்  ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1 GHz dual-core கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1750 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, NFC, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Sony Xperia M Specifications

Operating SystemAndroid 4.1 (Jelly Bean) OS
Display4 inch (480 x 800 pixels)  Capacitive Touch Screen display
Dual SimAvailable in Sony Xperia M Dual
Processor1 GHz dual-core Qualcomm Snapdragon MSM8227 processor
RAM1 GB RAM
Internal Memory4 GB (2.4GB user memory)
External MemorymicroSD, up to 32 GB
CameraPrimary Camera: 5 MP, LED Flash, HD (720p) Recording ; Front Camera: 0.3  MP
Battery1750 mAh battery
Connectivity3G HSDPA+ 21Mbps, WiF, Bluetooth, GPS, NFC, Java, Micro USB


- பிரபு கிருஷ்ணா

9 இந்திய மொழிகளுடன் Samsung Galaxy Smartphones & Tablets

Samsung நிறுவனம் இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Samsung Galaxy Smartphones மற்றும் Tablets இனி 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வண்ணம் வெளியாகும் என்பதே அந்த அறிவிப்பு. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி, மராத்தி மற்றும் குஜராத்தி ஆகிய 9 மொழிகள் தாம் அவை. இந்த அறிவிப்பின் படி Samsung Galaxy Smartphones & Tablets பயன்படுத்தும் இந்திய பயனர்கள் இந்த வசதியை பெற முடியும்.Galaxy Grand, Galaxy S4 and the Galaxy Tab 3 ஆகிய மூன்றிலும் இந்த வசதி இன்று முதல் கிடைக்கும், விலை குறைவாக கிடைக்கும் Galaxy Star போனில் இந்த வசதி இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும், அடுத்த மாதத்தில் இருந்து மற்ற மாடல்கள் அனைத்தும் இந்த வசதியை பெற ஆரம்பிக்கும் என்று Samsung India சொல்லி உள்ளது.. இந்த வசதியை Reverie Language Technologies என்ற நிறுவனத்துடன் இணைந்து Samsung அதன் பயனர்களுக்கு தருகிறது.அதே போல Samsung App Store-லும் சில Applications குறிப்பிட்ட மொழிகளில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. Facebook, Gmail, Mydala, BSE and Bharat Matrimony போன்றவை தற்போது குறிப்பிட்ட மொழிகளில் கிடைகின்றன. இது தவிர இன்னும் சிலவும் உள்ளன விரைவில் நிறைய Applications கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.- பிரபு கிருஷ்ணா

Micromax Canvas 4 Review - தமிழில் [வீடியோ]

Micromax Canvas 4 கடந்த மாதம் 8 - ஆம் தேதி வெளியாகி தற்போது சந்தையில் கிடைக்கும் Smartphone. 5 inch HD Capacitive Touch Screen, 1 GB RAM, 1.2 GHZ Quad  Core Processor, 16 GB Internal Memory என்று பல வசதிகளுடன் இந்த போனின் Review கீழே உள்ளது.கடந்த மாதம் Micromax Canvas 4 Specifications பதிவை எழுதிய போது அதன் செயல்பாட்டை review மூலம் சொல்வதாக எழுதி இருந்தேன். அதே போல இன்று அந்த பதிவு. இது முதல் Review என்பதால் சில தவறுகள் இருக்கலாம். அவற்றை சுட்டிக்காட்டுங்கள், எதிர்காலத்தில் அவற்றை தவிர்க்க முயல்கிறோம்.

வீடியோவில் பாட்டரி குறித்த தகவல் மட்டும் இருக்காது. அது மட்டுமே இந்த பதிவில் :-)

Canvas 4 2000mAh பாட்டரி உடன் வருகிறது. இதன் Standby time 22 மணி நேரம், Talk time 10 மணி நேரம். நீங்கள் Game பிரியர் என்றால் ஒரு முறை Charge செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். பாடல்கள், வீடியோ பார்க்க/கேட்க என்றாலும் இல்லை Application-களை அதிகம் பயன்படுத்துவதாக இருந்தாலும் ஒரு நாளைக்கு மேலேயே பயன்படுத்த முடியும்.

வீடியோ: 

Review ஆங்கிலத்தில்

Micromax Canvas 4 vs Samsung Galaxy Grand Duos

கற்போம் ஆகஸ்ட் மாத இதழ் - Karpom August 2013

கற்போம் ஆகஸ்ட் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

 இந்த மாத கட்டுரைகள்:


 1. SMS மூலம் IRCTC-யில் TICKET புக் செய்வது எப்படி?
 2. ஆன்ட்ராய்ட் 4.3 JELLY BEAN வசதிகள் மற்றும் சாதனைகள்
 3. ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்
 4. WINDOWS 7-இல் STARTUP SOUND-ஐ DISABLE செய்வது எப்படி?
 5. சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்
 6. பேஸ்புக் சாட்டில் STICKER வசதி – தற்போது கணினிகளுக்கும்
 7. புது நுட்பம் – தொடர்
 8. பத்து நிமிடத்தில் WINDOWS XP INSTALL செய்யலாம்
 9. GOOGLE CALENDAR சில பயனுள்ள குறிப்புகள்
 10. தமிழில் போட்டோஷாப் – 8

தரவிறக்கம் செய்ய


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

- பிரபு கிருஷ்ணா