October 2013 | கற்போம்

Google Terms of Serviceஇல் மாற்றம் & Mozilla வின் புதிய Flash Player

இணையத்தின் இரண்டு மாபெரும் நிறுவனங்களான Google மற்றும் Mozill சமீபத்தில் இரண்டு புதிய விசயங்களை அறிமுகம் செய்துள்ளன. Google அதன் Terms of Serviceஇல் ஒரு மாற்றத்தையும், Mozilla Adobe Flash Player க்கு மாற்றாக புதிய Flash Player ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம். 


Google Terms of Serviceஇல் மாற்றம்:

Google, Google+ நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், தரப்படுத்தல், logoபடம் (comments, ratings photos) போன்றவற்றை தனக்கு சாதகமாக விளம்பரங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் நவம்பர் 11 இல் இருந்து செயல்பட தொடங்கும். அந்த முறையை விரும்பாதவர்கள் settings இல் சென்று disable செய்து கொள்ளலாம். அப்படி செய்யாவிட்டால்,உங்கள் கருத்துக்கள் உங்கள் பட லோகோ வுடன் படத்தில் உள்ளது போல் வெளியாகும்.

இதை தடுக்க நீங்கள் Shared Endorsements என்ற பக்கத்தில் "Based upon my activity, Google may show my name and profile photo in shared endorsements that appear in ads." என்பதை Uncheck செய்து விடுங்கள்.Mozilla வின் Shumway-Flash Player:

Mozilla Firefox பலர் விரும்புவதற்குக் காரணம் பல Extensions & Plug-ins கள் கிடைப்பதும், அவற்றை நாம் இணைத்துப் பயன்படுத்த முடியும் என்பதாலும் ஆகும். இந்த Mozilla Firefox 2002 September 23 இல் Phonix 0.1 ஆக Dave Hyatt, Blake Ross என்பவர்களால் தொடங்கப்பட்டு BIOS தயாரிப்பாளர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக Mozilla Firefox ஆக மாற்றம் பெற்று November 9, 2004 இல் Mozilla Browser Firefox-1.0 என வெளியிடப்பட்டது.தொடர்ந்து வெற்றிப் பாதையில் வந்த Mozilla, தற்போது 2013 செப்.17 இல் Firefox 24 ஐயும், Firefox 24 ESR ஐயும், Firefox Nightly builds (version 27) -Beta வையும் வெளியிட்டுள்ளது. இந்த Firefox Nightly builds (version 27) இல் Flash Player ற்குப் பதில் 64 bit ற்கு ஏற்புடையதும், HTML5 and JavaScript அடிப்படையிலும் Shumway என்ற புதிய flash player ஐயும் அறிமுகப்படுத்தி உள்ளது.

1997 இல் Macromedia வால் உருவாக்கப்பட்ட Macromedia’s Flash Player 2005 இல் Adobe நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த adobe flash player ஆனது SWF files (ShockWave Flash-Small Web Format ) களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த adobe flash player ற்கு விடை கொடுக்கிறது Shumway Flash Player. பரீட்சிக்க விரும்புவோர் Firefox Nightly builds (version 27) -Beta இல் Shumway ஐ enable செய்து பார்க்கலாம்.

21 ஜனவரி 2014 இல் Firefox 27 உடன் வரவிருக்கும் Shumway கணினி விளையாட்டுக்கள், வீடியோக்களுக்கு நன்றாக இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஆகும்.
- சக்தி
இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

Windows Experience Index (Windows Rating) என்பது என்ன?

விண்டோஸ் கணினியின் performanceஐ அளவிட Windows Experience Index (Windows Rating) என்கிறார்கள். இந்த Rating வன்பொருள்,மென்பொருள் வேலை செய்யும் திறனை CPU, RAM, GPU, Hard Disk உடன் சேர்த்து கணக்கிட்டு தரப்படுகிறது. இது ஒரு கணினியின் செயல்பாட்டை பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இது பற்றிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

இதை நீங்கள் கணினியில் Start -> Control Panel –> Performance Information and Tools அல்லது system -> Windows Experience Index இங்கே சென்று பார்க்க முடியும்.

புதிய மென்பொருள்/வன்பொருள் கணினியில் இணைக்கும் போது புதிதாக reset செய்தால், rating சரி செய்யப்பட்டு புதிய அளவு காட்டப்படும். அங்கே basicScore, subscore என இரண்டு அளவுகள் காட்டப்படும். subscore இன் குறைந்த அளவு basicScore இல் காட்டப்படும். கணினி வாங்கும்போது முக்கியமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட  கணினிகளை வாங்கும் போது இந்த rating ஐக் கவனித்து வாங்கலாம். ஆனாலும் அவை நிச்சயம் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் படத்தைப் பாருங்கள். சாதாரண பழைய கணினியில் 1.0 என்ற basicScore ஐ 7.9 ஆக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.


நமது அரசின் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் நிதி நிலை, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என பல நல்ல தகவல்களை புள்ளி விபரங்களுடன் தெரிவிப்பார். சில தினங்களின் பின்னர் அதிகாரிகளும் பொருளாதார நிபுணர்களும், நாம் தலையில் கையை வைக்கும் அளவு மோசமான தகவல்களைத் தருவார்கள்.அது போல் நாம் எதையும் எப்படியும் மாற்றி அமைக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எல்லாம் Man Made. God Made அல்ல.இந்த Rating முறை 1 இல் இருந்து 7.9 வரை உள்ளது. 64 பிட் இல் 4 GB Ram ற்கு கீழிருந்தால், Basicscore 5.9 ஆக அதி கூடிய அளவாகக் காட்டப்படும். ஓரளவு பயன்படுத்தப்பட்ட சாதாரண கணினியில் 2.0 – ஆக இருந்தால் பொதுவான அனைத்து வேலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும். 3.0 என்பது Windows 7 இல் Nero வுடன் சாதாரண வேலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். 5.0 என்பது Windows 7 புதிய முறைகளைப் பயன்படுத்தவும், multi-taskingக்கு ஏற்றதாகவும், 7.0 என்பது கிராபிக், விளையாட்டு போன்ற உயர்ந்த வேலைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கும். இதற்குப் பொருள், பிரச்சனைகள் இன்றி நன்றாக வேலை செய்யும் என்பதே தவிர, அவற்றிற்கு குறைந்த அளவு Rating உள்ளவை வேலை செய்யாது என்பது பொருள் அல்ல. subscore களின் அளவைப் பார்த்து, குறைவாக உள்ளவற்றை upgrade செய்வதன் மூலம் basicScore இன் அளவை உயர்த்தலாம்.


இந்தப் படத்தில் Processor 5.3 எனக் காட்டப்படுவதால், Basicscore 5.3 ஆக இருக்கிறது. CPU Driverஐ update செய்யலாம் அல்லது முடிந்தால் upgrade செய்யலாம். அப்படி செய்வதால் வேகம், performance ஐ அதிகரிக்கலாம். அது போல் RAM upgrade செய்யலாம் அல்லது RAM ஐக் கழற்றி தொடர்புகளை சுத்தம் செய்து மீண்டும் இணைத்துக் கொள்ளலாம். அது போல் கிராபிக் கார்டையும் upgrade அல்லது driver update செய்து கொள்ளலாம்.மேலே உள்ள படத்தில் HardDisk என்ற வன்தட்டு 5.9 என குறைந்த அளவில் காட்டப்பட்டு, subscore உம் அதே குறைந்த அளவைக் காட்டுகிறது. மற்றவை நன்றாக இருக்கிறது. விரும்பினால் புதிய வன்தட்டு ஒன்றை மாற்றலாம். அப்படி மாற்றும்படி சொல்வதைவிட ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது சிறந்ததாகும்..

வன்தட்டு என்பது case, drive motor, platters, drive heads, logic board இவற்றால் ஆனது. அடிக்கடி format செய்வது, அடிக்கடி OS களை மாற்றுவது, இவற்றால் Track, Sector track, Sector, Cluster களில் ஏற்படும் பிழைகள், defragmentation செய்யாமல் விடுவது, chkdsk செய்யாது விடுவது போன்றவற்றாலும், கணினி, மடிக்கணினி உள்ளே தூசிகள் தங்கி விடுவதாலும் இந்தப் பிழைகள் ஏற்படுகிறது. அதிக தூசிகள் கணினிக்குள் தங்கி விடுவதால், அதிக வெப்பம் ஏற்படுவதும், தூசி அடைத்துக் கொள்வதால் cooling fan,CPU-Heatsink, GPU fan, Hard Disk, CD/DVD Drive வேலை செய்யாமல் விடவோ அல்லது வேலை செய்யும் தரத்தைக் குறைக்கவோ செய்யும். அத்துடன் உள்ளே வெப்பம் அதிகரித்து மிக குறைந்த மின்சாரத்தில் இயங்கும் பகுதிகள் பழுதடைகின்றன.

இதைவிட வன்தட்டு, CD/DVD/USB/SD Card இவை ஒவ்வொன்றும் வேவ்வேறான முறையில் read and write செய்யப்படுவதுடன் வேகமும் வேறுபடுகிறது. உதாரணமாக IDE,SATA வை விட SSD hard drive முற்றிலும் வேறுபட்ட முறையில் இயங்குகிறது. Rating இல் subscore வன்தட்டின் வேகத்தையும் megabytes per second கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இவை எல்லாம் தான் குறைந்த rating ற்கு காரணம். அதனால் வன்தட்டை மாற்றுவதை விட மேலே சொன்னவற்றை கவனிப்பதாலும் சரி செய்யலாம்.

வன்தட்டின் வெப்பம் 25 – 50 டிகிரி செல்சியுஸ்ற்குள் இருக்க வேண்டும். 50ற்கு மேலானால் உட்பகுதிகளை பழுதடையச் செய்யும். (CPU/GPU 40 -65 டிகிரி செல்சியுஸ் ற்குள் இருப்பது சிறந்தது.) அதிக வெப்பநிலை ஏற்படுமானால், மேலதிகமாக ஒரு cooling Fan ஐ இணைத்துக் கொள்ளலாம்.

இந்த Ratingஐ வைத்து ஒரு கணினியின் செயல்பாட்டை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு என்ன வேலைக்கு நீங்கள் கணினி வாங்க போகிறீர்கள் என்பதை பொறுத்து கணினியை தெரிவு செய்ய முடியும்.
- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

Clean Boot என்றால் என்ன?

கணினியில் தவறுகள் (errors) ஏற்படும் போது சில மென்பொருட்களையும், சில Device Driver களையும் நிறுத்தி வைத்து கணினியை Restart செய்து தவறுகளைக் கண்டறியவும், சரி செய்யவும் சிறந்த முறை safe boot ஆகும். இது தவிர safe mode இல் இருந்து சிறிது வேறுபட்டு clean boot தொடக்கப்படுகிறது.

கணினி சாதாரண நிலையில் non-Microsoft background applications and services என்பவை இல்லாது தொடங்கப்படும். முந்தைய பதிவில் Safe Boot பற்றி பார்த்தோம். இந்த பதிவில் Clean Boot பற்றி பார்ப்போம்.

அதாவது boot செய்யப்படும் போது Microsoft services ஐ மட்டும் வைத்து கணினி தொடங்கப்படும்.Clean Boot, XP கணினிகளில் சிறிது சிரமமாகும்.

Start -> Run சென்று msconfig.exe என Type செய்யவும். வரும் கட்டத்தில் "General - Selective startup" என்பதை தெரிவு செய்யவும்.அதில் வரும் Load startup items என்பதை uncheck செய்யவும். (இப்போது அங்கே Load System Services என்பது மட்டும் ஆக்டிவ் ஆகி இருக்கும்) அதன்பின் services என்பதில் சென்று Hide all Microsoft services என்பதை check செய்து, வலது பக்கத்தில் உள்ள Disable all என்பதைக் கிளிக் செய்து OK கொடுக்கவும். இதை முடித்தவுடன் கணினியை Restart செய்யவும்.

இப்படி செய்வதால் இணையம் உட்பட பல வேலை செய்யாது. பிரச்சனைகளை பொறுத்து சில மணி நேரம் தொடர்ந்து கணினியை அப்படியே வைத்திருந்து சில ப்ரொகிராம்களைத் திறந்து வேலை செய்து பார்க்கவும். சரியாக இருந்தால், முன்னர் சொன்ன Msconfig இல் startup என்பதில் சென்று, சிலவற்றை ஆக்டிவ் செய்து Restart செய்து பார்க்கவும். இப்படி செய்வதன் மூலம் எதை ஆக்டிவ் செய்யும் போது, கணினியில் தவறு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து சரி செய்யலாம்.

இந்த நிலையில் windows Installer வேலை செய்யவில்லை என error செய்தி வந்தால் Start -Computer இல் வலது கிளிக் செய்து manage -> Services and Applications –> Services -> Windows Installer என்பதை Start செய்து கொள்ளலாம். சரி செய்த பின் மீண்டும் msconfig சென்று Selective startup என்பதை நீக்கி மீண்டும் normal startup ஐ ஆக்டிவ் செய்து கொள்ளலாம்.கணினியில் தவறுகளை முதலில் கண்டறிந்து, safe mode, clean boot செல்வது சிறந்ததாகும். முக்கியமாக தவறுகளின் பட்டியலை event viewer இலும், Minidump files களிலும் கண்டறியலாம். Minidump files என்றால், கணினியில் ஏற்படும் தவறுகளை, error-crash, blue screen of death, BSOD போன்றவற்றை சிறிய தகவல்களாக தரும் கோப்பாகும். இந்த minidump files களை BlueScreen View, ஸ்கேன் செய்து ஒரு தகவல் பட்டையாக தருகின்றது.

கணினி/மடிகணினி அதிகம் சூடாவதால் இம்மாதிரி ஆனால் பிரச்சினைகளை தவிர்க்க கணினியில் உள்ள CPU, GPU (CPU ~60-65C ;GPU ~ 65C ) வின் வெப்ப நிலையையும் நாம் கவனத்தில் கொண்டு heatsink, cooling fan களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

Safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன?

Safe Mode என்ற வார்த்தையை விண்டோஸ் கணினிகளை பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். Safe Mode என்றால் என்ன, எப்படி அதற்குள் நுழைவது, அதில் என்ன செய்யலாம் போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

Pull oneself up by the bootstraps என்று முதலில் சொல்லப்பட்டு, பின் bootstraps என்றும் பின் boot எனவும் மாறியது. நிறுத்தப்பட்ட கணினி தொடங்கப்படுவதை cool boot எனவும், இயங்கிக் கொண்டிருக்கும் கணினியை மீளத் தொடக்குவதை அதாவது reset செய்வதை warm boot (ctrl+alt+del) என்றும் சொல்லப்படுகிறது. Cool Boot, Warm Boot தவிர Safe Boot, Clean Boot, multi boot, dual boot, ready boot, fast boot என பலவகை உண்டு.கணினியை பயன்படுத்தும் நமக்கு safe mode என்பதை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எனினும் அதிகம் அறியாதவர்களுக்காக சில தகவல்கள்.சில தவறுகள் (errors), தடைகள் (hangs,freezes) வரும் போது நாம் உடனே செல்வது கணினி மீள்தொடக்கம் (Restart) அல்லது பாதுகாப்பான தொடக்கம் (safe boot/safemode) தான். சேவ் மோட் என்று சொல்லும் போது கணினி இயங்க முக்கியமாக தேவைப்படும் சில தொடக்க நிரலிகளுடனும் ட்ரைவர்களுடனும் (startup program+device driver) கணினியை தொடக்குவது ஆகும். கணினியை மீள் தொடக்கும் போது F8 என்பதை தொடர்ந்து அழுத்துவதால் வரும் option இல் இவற்றைக் காணலாம். அல்லது கணினி தொடங்கியதும், மின்சார இணைப்பை துண்டித்து பின் தொடக்கும் போது, சாதாரணமாக தொடக்குவதா சேவ் மோடா என பல கேள்விகளுடன் ஒரு option வரும். இதைவிட இன்னொரு முறை start-run (search) இல் msconfig என்பதை தட்டச்சிட்டு வரும் விண்டோவில் safemode ஐத் தெரிவு செய்து மீள் தொடக்கலாம். Safe Mode இன் போது கீழ்க் கண்டவை செயலில் இருக்காது.

+autoexec.bat or config.sys files
+device drivers
+normal graphics device driver ற்குப் பதில் standard VGA graphics mod ஐப் பயன்படுத்தும்.
+standard system.ini file ற்குப் பதில் system.cb பயன்படுத்தும்.
+ 640 x 480 resolution உடன்16 நிறங்களைப்(colors) பயன்படுத்தி நான்கு மூலைகளிலும் Safe Mode எனக் காட்டும்.இந்த safe mode இல் Safe Mode, Safe Mode with Networking, Safe Mode with Command Prompt என மூன்று பிரிவுகள் உண்டு. safe mode என்பது சாதாரணமாக( basic Safe Mode ) கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறியலாம். இரண்டாவது safe mode இல் சென்று இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தவறுகளைக் கண்டறியலாம். அதே சமயம் தேவையான ட்ரைவர்களை, அப்டேட்களை, சில அழிந்து போன கோப்புகளை(dll files -மால்வெயர்,வைரஸ் இருக்கக்கூடும் என்பதால் தரவிறக்குவதில் கவனம் தேவை) அங்கே இருந்து கொண்டே தரவிறக்கி சரி செய்யவும். மூன்றாவது safe mode இல் இருந்து கொண்டே command line இல் (DOS mode) சென்று தவறுகளை கண்டறியலாம். இதில் சில உத்தரவுகளை (chkdsk,sfcscan,disk dir....இப்படி) கொடுத்து சரி செய்யவும் வழி செய்கிறது. (மொபைல்களில் உள்ள safe mode இல் ஆரம்பத்தில் இருந்த நிலைக்கு கொண்டு சென்று சரி செய்ய, தவறாக இணைக்கப்பட்ட மென்பொருள், apps களின் settings சரி செய்து திருத்த, பாதுகாப்பிற்காக புதிய app ஐ இணைக்க என உதவுகிறது.)

இது தவிர சில மென்பொருட்கள்,பிரவுசர்களிலும் safe mode தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இந்த சமயத்தில் Boot பற்றி இன்னொரு தகவலையும் உங்களுக்காக தருகிறேன். விண்டோஸ் கணினிகளில் சிலர் XP, Vista, Win7, Win8 இப்படி பல இயங்குதளங்களை நிறுவி, multiboot/dual boot, முறையில் பயன்படுத்துவார்கள். புதியவர்கள் இப்படி நிறுவும் போது சில பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள். கணினியில் XP கணினிகளில் வின் 7/8 ஐ அல்லது Wndows 7 கணினியில் XP ஐ நிறுவி விட்டு boot செய்யும் போது ஏதாவது ஒரு இயங்குதளம் காணாமல் அல்லது boot ஆகாது போய்விடும்.Windows 7 கணினியில் Old Windows என ஒரு தனியான போல்டரில் சேமிக்கப்படுகிறது. இப்படி ஏன் வருகிறது?

விஸ்டாவிற்கு முந்தைய அதாவது Windows NT ஐ அடிப்படையாகக் கொண்ட(Windows XP போன்ற) இயங்குதளங்களில் NTLDR (New Technology Loader ) முறையில் boot செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைக்குப் பதிலாக Windows 7 இல் (Windows Boot Manager + winload.exe முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NTLDR ஐ Windows 7 ஐ தொடக்க முடியாதது தான் காரணமாகும். இதற்கு நாமாக சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டும்.
- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

கற்போம் அக்டோபர் மாத இதழ் – Karpom October 2013

கற்போம் அக்டோபர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:  1. Apple iOS 7 – முதல் தமிழ் Review
  2. பேஸ்புக்கில் புதிய வசதி – ஷேர் செய்த பிறகு Statusஐ எடிட் செய்யலாம்
  3. எந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்
  4. குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் ?
  5. GPS என்றால் என்ன?
  6. ChromeCast, Crossbar – இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்
  7. மோசமான தளங்களை இணைப்பு தராமல் சுட்டிக்காட்டுவது எப்படி ?
  8. நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) என்பது என்ன ?
  9. புது நுட்பம்
  10. தமிழில் போட்டோஷாப் – 10
தரவிறக்கம் செய்ய
இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.