Tuesday, May 24, 2011

HTML 4: தொடர்பதிவுகளை எழுதும்போது Drop Down Menu வில் கடந்த பதிவுகளை காட்டுவது எப்படி?

வணக்கம் நண்பர்களே இந்த முறை நாம் காணப்போவது ஒரு ப்ளாகர் ட்ரிக். இதன் மூலம் நீங்கள் ஒரு தொடர் கதை அல்லது ஒரு தொடர் பதிவு எழுதும் போது உங்களின் கடந்த பதிவுகளை Drop Down வகையிலான மெனுவாக உங்கள் போஸ்ட்க்குள் கொண்டு வர முடியும். (அருகில் உள்ள படத்தைக் காணவும்.) இதனால் உங்கள் வாசகர்கள் முந்தைய பதிவை படிக்க Archive பகுதியில் தேட வேண்டிய  அவசியம் இல்லை.


இந்த பதிவை எழுதச் சொல்லிக் கேட்டவர் நண்பர் "நிரூபன்". நான் இதை உருவாக்க மேலே உள்ள மெனுவை பயன்படுத்திய வலைத்தளம் நண்பர் "ரஹிம் கஸாலி " அவர்களுடையது. இருவருக்கும் என் நன்றி.

சரி விசயத்துக்கு வருவோம்.

எனது முந்தைய பதிவுகள்


இதுதான் நான் உருவாக்கி உள்ளது. இது நான் என் HTML பதிவுகளுக்கு உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் என்னுடைய முந்தைய HTML பதிவுகளுக்கு நீங்கள் எளிதாக செல்ல முடியும். இது New Tab இல் Open ஆவதால் இந்த பதிவு Close  ஆகாது. 

இதனை எப்படி Add செய்வது என்பதைக் காணலாம் வாருங்கள்.

<select onchange="javascript:window.open
(this.options[this.selectedIndex].value);">
<option value="Label URL">Label Name</option>
<option value="Post 1 URL">Post-1 Name</option>
 <option value="Post 2 URL">Post-2 Name</option>
<option value="Post 3 URL">Post-3 Name</option>
<option value="Post 4 URL">Post-4 Name</option>
<option value="Post 5 URL">Post-5 Name</option>
 </select>

இதுதான் உங்களுக்கு தேவையான Coding இதனை Copy செய்து ஒவ்வொரு Post க்குள்ளும் நீங்கள் add செய்ய வேண்டும். முதலில் இதனை Copy செய்து Note Pad File உருவாக்கி அதில் Copy செய்து கொள்ளவும்.

இதில் Label URL என்ற இடத்தில் உங்கள் தொடர்பதிவுக்கு Label கொடுத்து இருந்தால் அதன் URL ஐ Paste செய்யவும். எனது label URL http://baleprabu.blogspot.com/search/label/HTML. இதனை காலியாக விட்டால் Page Not Found என்று வந்துவிடும். Label Name என்பதில் உங்கள் Label பெயரை கொடுக்கவும். நான் HTML என்று கொடுத்து உள்ளேன்.

அடுத்ததாக உள்ள Post 1 URL என்ற இடத்தில் உங்கள் தொடர்பதிவின் முதல்  URL Copy செய்யும் இடம் ஆகும். நான் இங்கு எனது HTML பதிவின் முதல் பதிவின் URL கொடுத்து உள்ளேன். Post-1 Name என்ற இடத்தில் உங்கள் Label பெயர் கொடுத்து பக்கத்தில் 1 எனக் கொடுக்கவும். கவனிக்க நான் HTML 1 எனக் கொடுத்து உள்ளேன்.

அதாவது இவ்வாறு:

<option value="http://baleprabu.blogspot.com/2010/11/html1-html.html">
HTML 1</option>

மேலும் URL சேர்க்க: 

இனி அடுத்து உள்ள 2,3,4,........ N போன்றவற்றுக்கும் இதையே செய்யவும்.
நான் 5 மட்டுமே இங்கு கொடுத்து உள்ளேன். கூடுதலாக ஒன்று Add செய்ய வேண்டுமானால்

<option value="Post  URL">Post- Name</option>
என்பதை </select> என்பதற்கு மேல் Paste செய்யவும்.

இதனை Edit Html என்ற பகுதி நீங்கள் எழுதிக் கொண்டு இருக்கும் இடத்தில் தெரியும். நீங்கள் "எனது முந்தைய பதிவுகள்" (நீங்களும் இதை டைப் செய்ய வேண்டும்) என்ற இடத்துக்கு அடுத்து Paste செய்ய வேண்டும். இதனை கீழே உள்ள படத்தில் காணவும்.(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)


இதுதான் உங்களுக்கு வேண்டியது. உங்கள் Coding Paste செய்த உடன் மீண்டும் Compose பகுதிக்கு வந்து விடவும். இப்போது உங்களுக்கு மேலே உள்ளது போல Drop Down மெனு தோன்ற வேண்டும். இல்லை என்றால் மீண்டும் சரியாக செய்யவும்.

சரியான இடத்தில் Url ஐ paste செய்வதன் மூலம் இதனை தோன்ற செய்யலாம்.

இதனை ஒவ்வொரு பதிவுக்கும் நீங்கள் Add செய்தாக வேண்டும். Add செய்யும்போது புதிய URL சேர்த்தால் புதிய பகுதிகள் Add ஆகி விடும்.

வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்.

◘பலே ட்வீட்◘

இரண்டு ஜோடிகள் சந்திக்கும்போது முதலில் பெண்கள் அடுத்த பெண் உடையையும் ஆண்கள் அடுத்தவர் மனைவியையும் கவனிக்கிறார்கள். #பேராண்மை
_minimeens@twitter.com


சென்னையில் மின் வெட்டு / மின் தடங்கல் / ப்ளக்ஷுவேஷன் என்றால் 155333யில் தொடர்பு கொள்ளலாம்! உடனே சரி செய்கிறார்கள்!‌
_mayavarathaan@twitter.com

♦பலே பத்து♦

Top 10 Countries With Most Reliance on Nuclear Power

17 comments:

  1. சலாம் சகோ.பிரபு
    பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி சகோ. நான் 'மூன்றாம் பாலினம்' பற்றி தொடர் பதிவு எழுதும்போது இந்த நுட்பம் தெரியாமல் போய்விட்டதே..!

    ReplyDelete
  2. தம்பி எல்லாருக்கும் பிரயோஜனமுள்ள உதவிகரமான பதுவு இது, வாழ்த்துகள், நன்றிகள்....

    ReplyDelete
  3. சும்மா புகுந்து விளையாடு மக்கா...

    ReplyDelete
  4. பாஸ், மிக்க நன்றிகள் பாஸ். கலக்கிட்டீங்க. அருமையான ஒரு தொழில் நுட்பத்தினை எனக்காக பதிவிட்டமைக்காக ரொம்ப நன்றிகள் சகோ.

    ReplyDelete
  5. நண்பா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி..

    ReplyDelete
  6. Blog Header yeppudi design panradhu nu oru post podunga nanba.

    Thanks

    Regards
    Hari

    ReplyDelete
  7. அசத்தல் பிரபு எனக்கும் பெரிதாக HTML தெரியாது இது மாதிரி பதிவுகளை அட்டிக்கடி போடுங்கள்

    ReplyDelete
  8. எல்லாருக்குமே பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  9. கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி.

    @ Hari

    முயற்சி செய்கிறேன் நண்பரே.

    ReplyDelete
  10. இன்னுமா நான் யாரேன்று புரியல்ல

    ReplyDelete
  11. இதை என் டாப் டென் பதிவுகளுக்கு பயன்படுத்த விருப்பம். நன்றி.

    ReplyDelete
  12. அசத்தல் பலே பிரபு.உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
  13. சூப்பர் பிரபு....... அருமையான விஷயம், நிறைய பேருக்கு பயன்படக்கூடியது.....!

    ReplyDelete
  14. நல்ல பதிவு பாஸ், எனக்கு catogory list ஏ add பண்ண தெரியாது , ஒரு புது ப்ளாக் துவங்குவது மற்றும் basics பற்றி ஒரு பதிவு போடுங்களேன் .

    ReplyDelete
  15. @ Dr.Dolittle

    இந்த முகவரியில் அத்தனையும் கிடைக்கும் உங்களுக்கு

    http://www.bloggernanban.com/p/how-to-start-blog.html

    ReplyDelete
  16. மிக மிக பயனுள்ள பதிவு. மனம் நிறைந்த பாராட்டுக்கள். தொடருங்கள்

    ReplyDelete