Monday, May 16, 2011

Twitter இல் எத்தனை நாளாய் உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு தளம்

ட்விட்டர் என்பது இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒன்று. இதில் நாம் எத்தனை நாட்களாய் உள்ளோம் என்பதை ஒரு தளம் நமக்கு தெரிவிக்கிறது. எப்படி எனப் பார்ப்போம் வாருங்கள்.



இதுதான் அந்த தளத்தின் பெயர். இங்கு twitter name எனும் இடத்தில் உங்கள் twitter user name ஐ கொடுக்கவும்.(அதாவது baleprbu ). இப்போது GO எனக் கொடுக்கவும். இப்போது சிறிது நேரத்தில் நீங்கள் எத்தனைஆண்டுகளாய், மாதங்களாய், நாட்களாய், மணி, நிமிடம், நொடி என நீள்கிறது பட்டியல். அத்துடன் நீங்கள் ட்விட்டரில் இணைந்த தேதியையும் சேர்த்து இது தரும்.



இதை நீங்கள் கண்டவுடன் பின்னர் கீழே உங்கள் நண்பர் பெயருடன் உங்களை நீங்கள் compare செய்து கொள்ளலாம். இதுவும் மேலே உள்ளது போல உங்கள் நண்பர் குறித்த தகவல்கள் தரும். நீங்கள் உங்கள் நண்பரை விட அதிக நாட்கள் ட்விட்டரில் இருந்தால் You win எனவும், குறைவாக இருந்தால் You Lose எனவும் தெரிவிக்கும்.

கொசுறு: எனது ட்விட்டர் ஐ‌டி: baleprabu

◘பலே ட்வீட் ◘
அம்மா எனக்கு மந்திரி பதவியே வேண்டாம்மா.. வேற தண்டனை கொடுங்க... # நத்தம்.. சத்தமாக கதறல்...
_bassiva@twitter.com
சே.குவேராவின் உருவம் பதித்த T-Shirt போடுவது பேஷன் என்று நினைக்கும் அறிவிலிகளை கண்டால் கோபமாக வருகிறது!!!
_g_for_guru@twitter.com

1 comment:

  1. நல்ல உபயோகமான தளம். தொடருங்கள்..

    வாழ்த்துகள்..

    ReplyDelete