Tuesday, May 1, 2012

Blogger Tips-External Link மட்டும் New Tab இல் ஓபன் ஆக

நமது வலைத்தள நண்பர்கள் நிறைய பேர் வலைப்பூக்களை படிக்கும்போது, பழைய பதிவுகளை படிக்க நினைத்தால் அவர்கள் அதை new Tab இல் ஓபன் ஆகும் படி வைத்திருப்பார்கள். இதனால் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு tab இல் படிக்க வேண்டி இருக்கும். இப்படி இல்லாமல் external links மட்டும் புதிய tab இல் ஓபன் ஆகும்படி செய்தால்?



நான் என்ன சொல்கிறேன் என்றால், நாம் இப்போது <base target="_blank" /> என்பதை பயன்படுத்தி லிங்க்கள் எல்லாவற்றையும் புதிய tab இல் ஓபன் ஆகும்படி செய்து இருப்போம். இதில் என்ன பிரச்சினை என்றால் நமது பழைய பதிவுகளை கூட இது New tab இல் ஓபன் செய்வது தான். இது சிலருக்கு பிடிக்காது. ஏன் என்றால் நிறைய பதிவுகளை படிக்கும் போது நிறைய tab கள் load ஆகவும் அதிக நேரம் ஆகும்.

இதை விடுத்து உங்கள் தளத்தை அதே tabலும் வேறு தள லிங்க்களை புதிய tabலும் ஓபன் செய்தால் உங்கள் வாசகர்கள் உங்கள் பக்கத்தை விட்டு போக மாட்டார்கள் அல்லவா?
இதற்கு இப்போது நான் கூறுவதை செய்யுங்கள்




New Look Blogger -- Dashboard--> Template--> Edit Template
Old Look Blogger -- Dashboard--> Design--> Edit HTML

இப்போது இதில் </body> (Use CTRL+F )என்பதை  கண்டுபிடிக்கவும். கீழே உள்ள coding ஐ </body> க்கு முன்னர்/ மேலே paste செய்து Template ஐ save செய்து விடவும்.  

<!-- bp codings Starts -->
<script type="text/javascript" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js"></script>
<script type="text/javascript">
//<![CDATA[
jQuery('a').each(function() {
    // Let's make external links open in a new window.
    var href = jQuery(this).attr('href');
  
    if (typeof href != 'undefined' && href != "" && (href.indexOf('http://') != -1 || href.indexOf('https://') != -1) && href.indexOf(window.location.hostname) == -1) {
        jQuery(this).attr("target", "_blank");
    }
});
//]]>
</script>
<!-- bp codings Ends --> 



இப்போது உங்கள் தளத்துக்கு வந்து வேறு லிங்க்களை கிளிக் செய்து பாருங்கள் அவை புதிய tab இல் வரும். அதே சமயம் நமது தள லிங்க்கள் அதே tab லும் ஓபன் ஆகும்.   

நான் இதைதான் பயன்படுத்தி உள்ளேன். கீழே கிளிக் செய்து பார்க்கவும்.


உதாரணம்:

Same Page Link: http://www.karpom.com/2011/07/youtube.html
External Link: http://www.baleprabu.com/2012/04/blog-post_23.html



◘பலே ட்வீட் ◘

Female என்பதில் male அடக்கம், Woman என்பதில் man அடக்கம் She என்பதில் he அடக்கம்#அடக்க ஒடுக்கமா இருக்கனும் தெரியுதா..?
_kattathora@twitter.com

வீணாக்கிச் செல்லும் தண்ணீர் வண்டி பின்னால் ‘குடிநீரை வீணாக்காதீர்கள்’
_4urc@twitter.com


♦பலே பத்து ♦

First 10 Countries To Abolish Capital Punishment

18 comments:

  1. நல்ல தகவல் பாஸ் ...

    ReplyDelete
  2. இதைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன் தகவலுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  3. முயற்சி செய்து பார்க்கலாம். நன்றி.

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள பதிவு நண்பா

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல். நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. பயனுள்ள போஸ்ட் தம்பி :)

    ReplyDelete
  7. நல்ல சொள்ளராங்கையா டீடையிழு

    ReplyDelete
  8. உங்கள் ட்வீட்டுக்கு ரி(ட்)வீட்:

    நாம் intelliGENTS என்று கேள்விப்பட்டிருப்போம் எங்காவது intelLADIES என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    ReplyDelete
  9. நல்ல தேவையான செய்தி... வாழ்த்துகள் :)

    ReplyDelete
  10. முதிலிலேயே இந்த பதிவை படித்து விட்டாலும், இன்று மறுபடியும் தேவை பட்டது.....
    நன்றி சகோ....

    ReplyDelete
  11. அருமையான தகவல் தல ...!

    ReplyDelete
  12. இப்படி ஒரு விசயம் இருக்கா?
    தேவைப்படும் போது பயன்படுத்துகிறேன்

    நன்றி!

    ReplyDelete
  13. கற்போம் தளத்தில் கற்றது பல...நன்றி நண்பரே..!!! முக்கியமாக ஆனந்தா விகடனுக்கு நன்றியை தெரிவிக்கிறான் காரணம் உங்களுக்கு தெரியும்.. எனக்கு ஒரு உதவி என்னவென்றால் எனது தளத்தை Firefox browser ல் காணும்போது தெளிவாக இருகிறது. அதுவே Google Chrome ல் காணும்போது இடைவெளி உள்ள இடங்களில் கட்டம் கட்டம்மாக தெரிகிறது இதை சரிசெய்ய முடியும்மா... எனது தளத்தின் முகவரி www.untholan.blogspot.com

    ReplyDelete
  14. @ Ranjithkumar.D

    ஆனந்த விகடனுக்கு நன்றியா? எதற்கு நண்பரே.

    ReplyDelete
  15. @ நிர்வாகி என்ன நண்பரே உங்களுக்கு தெரியாதா...உங்கள் பதிப்பை ஆனந்த விகடனில் வரவேற்பறை பக்கத்தில் வந்தது உங்களுக்கு தெரியாத???

    ReplyDelete
  16. நன்றி பயனுள்ள தகவல். தற்போது இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  17. அண்ணா உங்கள் தளத்தில் இதை செயல் படுத்தியிருப்பதாக சொல்லியுள்ளீர்கள்,ஆனால் External link ம் அதே டேப் ல் தான் ஓபன் ஆகிறது செக் செய்யவும்.

    ReplyDelete