Tuesday, July 10, 2012

Facebook-ல் நிறைய பேரை ஒரே பக்கத்தில் Unfriend செய்வது எப்படி?

நிறைய பேர் பேஸ்புக்கில் ஆரம்பத்தில் நிறைய நண்பர்களை சேர்த்து விடுவார்கள். அதில் பலர் யார் என்றே நமக்கு தெரியாது. இதனால் முக்கியமான நண்பரை நமது நண்பராய் இணைக்க முடியாதது, முக்கியமானவர்களின் Status களை பார்க்க இயலாத நிலை வரலாம். அதற்கு நமக்கு தெரியாத நண்பர்களை நாம் நீக்குவது அவசியமாகிறது. அதை எப்படி எளிதாக செய்வது என்று பார்ப்போம். 


முதலில் உங்கள் Profile பக்கத்துக்கு(Timeline பக்கம்) வந்து அதில் Friends என்று உள்ளதை கிளிக் செய்யவும். 


இப்போது வரும் பக்கத்தில் உங்கள் நண்பர்கள் அனைவரும் இருப்பார்கள். அதில் குறிப்பிட்ட ஒரு நண்பரின் பெயர் மீது Cursor-ஐ கொண்டு செல்லவும். இப்போது அதில் Friends என்பது டிக் செய்யப்பட்டு இருக்கும். Friends க்கு உங்கள் Cursor-ஐ நகர்த்தவும். அதன் கீழே ஒரு மெனு தோன்றும். அதில் Unfriend என்பதை க்ளிக் செய்து விடலாம். 



இவ்வாறு இல்லாமல் அவர் நண்பர் பட்டியலில் இருக்க வேண்டும், ஆனால் அவர் போடும் செய்திகள் எனக்கு வேண்டாம் என்று நினைத்தால் மேலே படத்தில் உள்ள "Show in News Feed" என்பதை Unclick செய்து விடவும். 

இரண்டில் எதை செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்து விடுங்கள். 

- பிரபு கிருஷ்ணா

15 comments:

  1. பேஸ்புக் பயனாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்.

    கடைசி படம் "தக தக"வென்று மின்னுதே?

    :D :D :D

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி. படத்துல தங்கமானவர் இருக்காரே ;-)

      Delete
    2. மின்னுவதெல்லாம் பொன்னல்ல சும்மா ஒரு நக்கலு

      Delete
    3. தங்கத்தை விட மேலன்னு சொல்றாரோ?

      Delete
    4. ஒரு வேலை சிவப்பு முத்துன்னு சொல்றாரோ ஹி ஹி ஹி!

      Delete
    5. இருக்கும் இருக்கும்.

      Delete
  2. பேஸ்புக்ல பெண்ணுகலோட..மொக்கைபோட்டுக்கிட்டு திரியிற கேங்... உங்களை வலை வீசி தேடுதாம்.. சட்டு புட்டுன்னு எங்கயாவது போய் தலைமறைவாகிருங்க ஹி ஹி ஹி!

    ReplyDelete
    Replies
    1. ஆயாளு மரிச்சு போயி :-)

      Delete
  3. தகவல் பகிர்வினிற்கு நன்றி பிரபு கிருஷ்ணா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete