Monday, September 10, 2012

WordPress என்றால் என்ன? ஒரு அறிமுகம்

பிளாக்கரில் அடிக்கடி Wordpress என்ற வார்த்தையை கேட்டிருபீர்கள். அப்படி என்றால் என்ன என்றும் உங்களுக்குள் கேட்டு இருப்ப்பீர்கள். பிளாக்கர் போன்றே இன்னொரு blogging  Platform ஆன இதைப் பற்றிய ஒரு அறிமுகத்தை இந்தப் பதிவில் காண்போம். 

Wordpress இரண்டு விதமானது ஒன்று wordpress.com என்பது இலவசமாக தரப்படும் blogging வசதி. கிட்டத்தட்ட பிளாக்கர் போல. wordpress.org என்பது ஒரு வலைப்பதிவு மென்பொருள். இது முந்தையதை விட மிக அதிகமான வசதிகள் கொண்டது. அவை Plugin, Template மற்றும் பல. பொதுவாக wordpress.org தான் wordpress என்று அழைக்கப்படுகிறது. 

wordpress.org இலவசம் என்ற போதும், அதைப் பயன்படுத்த உங்களுக்கு ஒரு மேடை வேண்டும். இங்கே மேடை என்பதை Hosting என்று கூறலாம். ஒரு Web hosting கணக்கு இருந்தால் தான் இதை பயன்படுத்த முடியும். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டி வரும். 

wordpress.com க்கும், wordpress.org க்கும் இன்னும் பல வித்தியாசங்கள் உள்ளன. அவற்றில் மிக மிக முக்கியமான இன்னொன்று முதலாவதில் நீங்கள் விளம்பரங்களை பயன்படுத்த முடியாது. Google Adsense போன்று. ஆனால் இரண்டாவது அதை உங்களுக்கு வழங்குகிறது. 

இதன் மற்ற சில வித்தியாசங்கள்: 

Wordpress.com Wordpress.org
இலவசம் இலவசம்
Custom Theme களை பயன்படுத்த முடியாது எந்த Theme வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்.
Ads பயன்படுத்த முடியாது. Ads பயன்படுத்தலாம்.
சில கட்டுப்பாடுகள் இருக்கும். கட்டற்ற ஒன்று.
Plugins பயன்படுத்த முடியாது. Plugins பயன்படுத்தலாம்.
பணம் பற்றிய கவலை இல்லை, எக்காலமும் இயங்கும். ஹோஸ்டிங்க்கு சரியாக பணம் கட்ட வேண்டும். இல்லை என்றால் இயங்காது. 

எதை யார் பயன்படுத்தலாம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மேலே உள்ள வித்தியாசங்களை படித்த பின் உங்களுக்கே தெரிந்து இருக்கும்.

தளம் முழுக்க முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில்,உங்களுடையதாக இருக்க வேண்டும் என்றால் wordpress.org ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். wordpress.com இல் நீங்கள் பணம் செலுத்தி சில வசதிகள் பெற முடியும். Domain, Video Uploading, Space, Custom Design, Site Redirect, Theme என பல. 

ஆனால் இவற்றுக்கு செலுத்தும் பணத்தை விட குறைவான இந்திய பண மதிப்பில் நீங்கள் wordpress.org யில் இயங்கலாம். 

wordpress.com, wordpress.org இரண்டில் இயங்குவதும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.  wordpress.org ல் Plugin, Theme Editor, மற்றும் சில Settings மட்டும் கூடுதலாக இருக்கும். இவை மிகச் சில வித்தியாசங்களை மட்டுமே தரும். 

அடுத்ததாக சொல்ல வேண்டியது. இரண்டுமே தமிழில் நீங்கள் பயன்படுத்த முடியும். ஆம் இரண்டிலும் தமிழ் உள்ளது. இயங்குவது, பதிவிடுவது என பல வேலைகளை நீங்கள் தமிழில் செய்ய முடியும்.

blogger க்கும் WordPress.com க்கும் கூட சில வித்தியாசங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது blogger-இல் நமக்கு Ads, இலவச Domain Mapping போன்றவை கிடைக்கும். என பல. WordPress.com ஐ ஒப்பிடும் போது பிளாக்கர் சிறந்தது. ஆனால் WordPress.org என்ற ஒன்றோடு பிளாக்கரை நாம் ஒப்பிட முடியாது. அந்த அளவுக்கு அதில் வசதிகள் அதிகம்.

wordpress.com இலவசம் என்பதால் அதில் எப்படி ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது என்று பார்ப்போம்.

1. http://wordpress.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

2. Sign Up என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. அடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்படும் தகவல்களை கொடுங்கள். "Blog Address" என்பதில் தான் வலைப்பூ முகவரியை தர வேண்டும்.

4. இதே பக்கத்தில் கடைசியில் மொழி தெரிவு செய்யும் இடத்தில் தமிழ் தெரிவு செய்து கொள்ளலாம்.

5. இப்போது Create Blog என்பதை கிளிக் செய்யுங்கள்.

6. இப்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு ஈமெயில் வந்து இருக்கும். அதில் Activate Blog என்பதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பூ பகுதிக்குள் நுழைந்து விடுவீர்கள்.

7. இப்போது நீங்கள் Open செய்துள்ள பகுதியில் My Blog என்பதை கிளிக் செய்து, கேட்கப்படும் தகவல்களுக்கு Next கொடுத்துக் கொண்டே வாருங்கள். இறுதியில் மீண்டும் ஒரு முறை My Blog மீது கிளிக் செய்தால் கீழே உள்ளது போல வரும்.


இதில் நீங்கள் உங்கள் வலைப்பூ பகுதிக்கு செல்லலாம்.

8. நேரடியாக உங்கள் வலைப்பூவிற்கு செல்ல

name.wordpress.com/wp-admin/

இதில் name என்ற இடத்தில் உங்கள் வலைப்பூ முகவரி கொடுத்து Browser URL - இல் கொடுத்தால் நேரடியாக உள்ளே நுழையலாம். 

9. இப்போது உங்கள் Dashboard பகுதியில் நீங்கள் இருப்பீர்கள். அதில் Post >> New Post என்பதை கிளிக் செய்தால் புதிய பதிவை எழுத ஆரம்பிக்கலாம்.

இது குறித்த பதிவுகள் தொடர வேண்டும் என்றால் சொல்லுங்கள், தொடர்ந்து பார்க்கலாம்.

- பிரபு கிருஷ்ணா 

32 comments:

  1. வோர்ட்ப்ரஸ் பற்றி புதியவர்கள் புரிந்துக் கொள்ளும்படி உள்ளது. நன்றி சகோ.!

    ReplyDelete
  2. ஹி..ஹி...இலவசம்ன்னு அதிலயும் ஒண்ணு முன்னயே ஒபன் பண்ண வச்சிருக்கேன்.இருந்தாலும் புதிய விஷயங்களை உங்க பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    http://salemdeva.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி... நானும் தான்...

      http://bloggernanban.wordpress.com/

      Delete
    2. நமக்குத்தான் எங்கும் கிளைகள் உண்டே! :D

      Delete
    3. அப்போ நான் மட்டும் தான் இப்போ உருவாக்கி இருக்கேனா? :-)

      Delete
    4. இது போலவே TUMBLR என்று ஒரு தளம் கூட இருக்குல

      Delete
    5. ஆம். ஆனால் அது படங்களுக்கானது என்று சொல்லலாம்.

      Delete
    6. @Prabu Krishna

      நீங்க ரொம்ப லேட்... :D

      Delete
    7. @ஹாரி பாட்டர்

      http://basith27.tumblr.com/

      ஹி..ஹி...

      Delete
    8. இங்கே "நமக்குத்தான்" என்று நான் குறிப்பிட்டது சகோ. அப்துல் பாஸித்தை என்பதை உணர்க!

      அதாவது சகோ. அப்துல் பாஸித்திற்கு எங்கும் கிளைகள் உண்டு என்ற பொருளில் தான் அந்த கருத்தை பதிந்தேன்! ஆனால் நீங்கள் அனைவரும் தவறுதலாக புரிந்துகொண்டீர்கள் என்று கருதுகிறேன்!

      இந்தக் கருத்தை நீங்கள் "பிறிது மொழிதல் அணி"-யின் படி நீங்கள் பார்க்க வேண்டும்!

      பிறிது மொழிதல் அணி என்பது தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றால் ஏற்றிக் கூறுதல். அதாவது கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது போல பிறிதொரு பொருள் மேல் ஏற்றிக் கூறுவது பிறிது மொழிதல் அணி ஆகும்!

      #கருத்தில் உதவி - பங்காளி விக்கி!

      Delete
    9. நல்ல விளக்கம்...

      Delete
    10. @வரலாற்று சுவடுகள்

      விரைவில் "தமிழ் சுவடுகள்" என்ற புதிய ப்ளாக் தொடங்க வாழ்த்துக்கள்!

      :) :) :)

      Delete
    11. @வரலாற்று சுவடுகள்

      ஏற்கனவே சொன்னதே புரிஞ்சது, இப்போ குழப்பிட்டீங்க :-)))

      Delete
    12. //@வரலாற்று சுவடுகள்

      ஏற்கனவே சொன்னதே புரிஞ்சது, இப்போ குழப்பிட்டீங்க :-))) //

      அண்மைக்காலமாக அவர் அதிகம் கமல் படங்கள் பார்க்கிறார் நண்பா அதான் போல

      Delete
    13. //http://basith27.tumblr.com/

      ஹி..ஹி...//

      அட

      Delete
  3. Amm Prabhu Neenga Romba Late.........

    ReplyDelete
  4. கண்டிப்பாக தொடருங்கள் நண்பரே :-)

    ReplyDelete
  5. அறியாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன்! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  6. தெரிந்து கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  7. வேறு பாடுகள் தெரிந்து கொன்டேன்.புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி

    ReplyDelete
  8. தொடருங்கள்,, பயன்படும்,,

    ------------- ---------------------------------- ---------------
    உங்கள் பதிவுகளை தமிழ்பதிவர்கள் திரட்டியிலும் இணையுங்கள் சகோ...
    -------------------------------------------------- ---------- --

    ReplyDelete
  9. நல்ல தகவல்கள்..
    பிளாகர், வேர்ட் பிரஸ் இரண்டையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடுங்க!

    ReplyDelete
  10. பிரபு இந்த விஷயத்தையும் இப்படியும் பதிவாக எழுதலாம்ன்னு இப்போ தெரிஞ்சுகிட்டேன்...

    Blogger-க்கு முன்னோடியே இந்த வேர்ட்பிரஸ்ங்கிற கூடுதல் தகவலைச் சேர்த்து சொல்லியிருக்கலாம்...

    நான் கூட ரெண்டு மூணு வேர்ட்ப்ரஸ் பிளாக் கிரியேட் பண்ணி வச்சிருந்தேன்...

    இப்போதைக்கு நினைவில் இருப்பது இதுமட்டும்தான்..

    www.arivalan.wordpress.com

    உண்மையிலேயே வெப்சைட் உருவாக்கி, அதை வெற்றிகரமாக நடத்துன்னும்னா.. அதுக்கு ஒரு சிறந்த வழி வேர்ட்ப்ரஸ்தான்...அதிலென்ன சந்தேகம்..!

    தொடர்ந்து வேர்ட்ப்ரஸ் பத்தி எழுதுங்கள்..! நம்ம சகாக்கள் எல்லோரும் தெரிஞ்சுக்கட்டுமே...! என்ன நான் சொல்றது?

    ReplyDelete
  11. என்னோட வேர்ட்ப்ரஸ் தளம் www.arivalan.wordpress.com

    ReplyDelete
  12. தொடருங்கள்..நண்பரே..

    ReplyDelete
  13. பிரபு, என்னோட தளம் இப்ப வோர்ட்ப்ரெஸ் சிஎமஎஸ் கொண்டுதான் இயங்குது. சொந்தத் தளம் போகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது எளிதாக இருந்தாலும் ஜூம்லாதான் சிறந்தது

    ReplyDelete
  14. கூடிய விரைவில் ஜூம்லா

    ReplyDelete
    Replies
    1. ஜூம்லா பற்றி எனக்கு தெரியவில்லை அண்ணா. ப்ளாக் வைத்து இருப்பவர்களுக்கு Wordpress தானே சிறந்தது. அத்தோடு Plugin, templates பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நானும் பயன்படுத்த ஆர்வமாய் இருக்கிறேன்.

      Delete
  15. தொடருங்கள் சகோ.

    ReplyDelete