Tuesday, November 6, 2012

Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்


வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட  Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள் என்ன? பதிவில் அதை பார்ப்போம்.

ஏன் Smartphone ?

உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணினி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphone- இல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.

விலை (Price) :

எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம். 

இயங்கு தளம் (Operating System) :

எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது ஆப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே. 

இதில் ஆப்பிள் விலை பற்றி சொல்லவே வேண்டாம், கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS  வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும். 

அதே போல தான் Blackberry, ஆப்பிளை விட விலை குறைவு என்ற போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன. 

2010 ஆம் ஆண்டு வரை Smartphone உலகின் ராஜாவாக இருந்த Symbian, அதன் பின்னர் Android வளர்ச்சியால் அடிவாங்க ஆரம்பித்து, இன்று அடியோடு நின்றுவிட்டது. இதை வாங்குவதை தவிர்ப்பது நலம்.

அடுத்த நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), இந்தியர்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது. இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மாடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1  OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள். ஆனால் அதற்கு பிறகு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS - யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2.3 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக வேண்டாம். 

அடுத்து Windows OS. நம் கணினியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது போன் மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும். 

வடிவமைப்பு, டிஸ்ப்ளே  (Body, Display): 

ஒரு போன் வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும். 

அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen போன் தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று நீங்கள் பார்க்க வேண்டும். Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல  Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும் போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை. விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம்.  

Display Size என்பது உங்கள் விருப்பம். ஆண் என்றால் 4 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும். ஏன் என்றால் சில நேரங்களில் பெரிதாக வாங்கி விட்டால் பிறகு உங்கள் போனுக்கு தனியாக அளவெடுத்து பாக்கெட் தைக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு பிரச்சினை இல்லை. iPad போல 10 இஞ்ச் என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். 

நினைவகம் (Memory) : 

அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. Smartphone - கள் கணினி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். RAM 512MB குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 150 - 200 MB அவசியம். 

External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கேமரா (Camera): 

பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம்.

Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான்.

வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.

ப்ராசஸர்  (Processor): 

மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப விரும்பவில்லை. குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பாட்டரி (Battery) : 

எல்லாமே சரி. பாட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள்  சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பாட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 1500 mAh தெரிவு செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து).

இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity):

நீங்கள் வாங்கும் மொபைல் 3G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம். அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம்.

ப்ரௌசெர் HTML வசதியுடன் வரும், அதே சமயம் Flash இருந்தால் இன்னும் சிறப்பு.

இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள். வேறு ஏதேனும் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று தோன்றினால் கமெண்ட் மூலம் சொல்லுங்கள். உங்களுக்கு வாங்குவதில் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.

- பிரபு கிருஷ்ணா

26 comments:

  1. ஸ்ஹப்பா இவ்வளோ பார்த்து வாங்க வேண்டி இருக்க

    ReplyDelete
  2. இண்டர்னல் மெமரி 180 எம் பி இருந்தால் போதாது, ஏனென்றால் நான்கைந்து ஆப்ஸ் இன்ஸ்டால் செய்தாலே அது தீர்ந்து விடும் என்கிறார்களே?

    ReplyDelete
    Replies
    1. அது குறைந்த பட்சம் ஆக தெரிவு செய்ய வேண்டும். நீண்ட நாள் பயன்பாட்டுக்கு என்று வாங்கும் போது அதை விட அதிகமாக தெரிவு செய்ய வேண்டும். ஆனால் போன்கள் நாம் அப்படி பயன்படுத்துவதில்லை. அதோடு 150MB என்றால் அதிகபட்சம் 20 Application - கள் இன்ஸ்டால் செய்ய முடியும். நிறைய applications Memory Card க்கு move செய்யும் வசதியுடன் கிடைக்கின்றன. எனவே அது பெரிய பிரச்சினை இல்லை.

      Delete
  3. வாவ்... விரிவான தகவல்கள் சகோ.!

    ஆப்பிளுக்கு மாறலாமா என்று யோசித்து வருகிறேன். விலை தான்.... :D

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி, அதுவும் யாரோ ஏற்கனவே கடிச்ச ஆப்பிள் ;-)

      Delete
    2. டெஸ்டிங்காக கடிச்சி பாத்திருப்பாரு ஜாப்ஸ்

      Delete
    3. அப்துல் பாசித் பாய் சும்மாவே காமெடி பண்ணுவாரு.. இதுல நீங்க வேறயா சகோ. பிரபு கிருஷ்ணா

      Delete
  4. A superb informational post for all the users.
    Nice Effort.Thank you for the post.

    ReplyDelete
  5. தமிழ் எழுத்துருக்களை சப்போர்ட் பண்ணுமாங்கிறத எப்படி தெரிஞ்சுகிடறது ??? கிழே கேட்ட கேள்விய கொஞ்சம் மாத்தி கேட்கனும்

    இந்திய ரூபாயில் 15 ,௦௦௦ பட்ஜெட்டில் தமிழில் டைப்ப கூடிய ஒரு நல்ல ஸ்மார்ட் போன் சொல்லுங்களேன் ......

    ReplyDelete
    Replies
    1. Android 4.0 உள்ள எந்த போன் வேண்டும் என்றாலும் வாங்கலாம். தமிழ் சப்போர்ட் ஆகும்.

      Delete
  6. VERY GOOD POST

    இன்று எனது தளத்தில்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் என் ஐயனே என் ஐயனே – ஒரு விறுவிறுப்பான ஆய்வு
    http://jaba2008.blogspot.com/2012/11/6112012.html

    ReplyDelete
  7. பிரபு தம்ப்ரீ நல்ல தகவல்கள் நன்றீ...:-)

    ReplyDelete
  8. ஸ்மார்ட் போன் ரசிகர்களுக்கு உதவியா இந்த பதிவு இடம் பெறும்.பதிவுக்கு நன்றி நன்பரே.

    ReplyDelete
  9. @ நண்பரே TFT , AMOLED திரைகளில் எது சிறந்தது?
    @ multi touch பற்றி மேலும் ஏதாவது தகவல் உண்டா ?
    @ பெரும்பாலான android phone களில் காமெரா சௌண்டை off செய்யும் வசதி இல்லையே.. இதனை off செய்ய மென்பொருட்கள் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. AMOLED தான் சிறந்தது.

      Multi Touch பெரும்பாலும் கேம்க்கு பயன்படும். கிட்டத்தட்ட அனைத்து Capacitive Touch Phone - களிலும் இந்த வசதி உள்ளது.
      Camera SoundMute வசதி இல்லை.வேறு கேமரா app எதையாவது நீங்கள் முயற்சி செய்யலாம்.

      Delete
  10. @ நண்பரே TFT , AMOLED திரைகளில் எது சிறந்தது?
    @ multi touch பற்றி மேலும் ஏதாவது தகவல் உண்டா ?
    @ பெரும்பாலான android phone களில் காமெரா சௌண்டை off செய்யும் வசதி இல்லையே.. இதனை off செய்ய மென்பொருட்கள் உண்டா?

    ReplyDelete
  11. Thank you very much for sharing a lot of valuable info abt smart phones, just would like to check with you, if you know pls share with me about how best the sony ericsson acro model - is it good?

    ReplyDelete
  12. Smartphone information is very useful

    ReplyDelete
  13. உபயோகமான தகவல். நன்றி !

    ReplyDelete
  14. டேபலட்பிசி பற்றி எழதூங்க அண்னநா

    ReplyDelete
  15. Android 4.0 கொண்ட மொபைல்களில் தமிழ் எப்படி பயன்படுத்துவது என ஒரு பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி

    ReplyDelete
  16. any 1 can tel the review about galaxy grand 19082

    ReplyDelete