Monday, August 8, 2011

Blogger தரும் புது வசதி - அதிக அகலம்

வலைப்பூ வைத்துள்ள நமக்கு பிளாக்கர் அடிக்கடி இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில வசதிகளை தருவதுண்டு. அந்த வகையில் இப்போது உங்கள் வலைப்பூ அகலத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு கொடுத்துள்ளது.அது என்ன அப்படின்னு கேக்குறீங்களா வாங்க பாப்போம்.



இதுவரை பிளாக்கர் ஆனது அதன் அகலமாக அதிகபட்சம் 1000 Pixel மட்டுமே வைத்து இருந்தது. ஆனால் நாம் டிசைன் செய்த Template களை வேறு தளத்தில் இருந்து பெற்று இருந்தால் இது மாறும். 


ஆனால் பிளாக்கர் கொடுத்துள்ள Template பயன்படுத்துபவர்கள் இனி 1500 Pixel வரை அகலப்படுத்திக் கொள்ளலாம். மிக எளிய இது. 

முதலில்  

பழைய பிளாக்கர் :

DashBoard--> Design-->Edit HTML சென்று உங்கள் தற்போதைய Template ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும். பின்னர். Template Designer செல்லவும். 

புதிய பிளாக்கர் :

 DashBoard-->Template--> Backup/Restore Template-->Download Full Template சென்று உங்கள் தற்போதைய Template ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும். பின்னர். Template Designer செல்லவும். பின்னர் Layout--> Template Designer செல்லவும். 


இதில் சென்று Adjust Width என்பதை தெரிவு செய்யவும். இது உங்கள் தளத்தின் இப்போதைய அகலத்தைக் காட்டும். அதில் உங்களுக்கு ஏற்றபடி அதிகரித்துக் கொள்ளலாம். 



இதன் பலன் என்ன? 



1. பிளாக்கர் தரும் Template பயன்படுத்தினால் மட்டுமே இது பலனுள்ளது 

2. இரண்டு பக்கமும் SideBar வைக்க முடியும். இதனால் போஸ்ட் போடும் இட அளவு குறைக்க தேவை இல்லை. 

3. Content இடத்தை மேலும் அகலமாக்க இயலும். இதனால் படங்கள் SideBar க்கு இடைஞ்சல் தராமல் இருக்கும்.


1200 Pixel க்கு மேல் போக வேண்டாம் என்பது என் கருத்து. அதற்கு மேல் போனால் உங்கள் தளம் மிக அதிக அகலம் உள்ளதாக மாறிவிடும். 

நண்பர்களே இந்த பதிவு பிடித்து இருந்தால் கருத்து சொல்லுங்கள், சந்தேகம் இருந்தால் கேளுங்கள். 

◘பலே ட்வீட் ◘

யோஹன் அத்தியாயம் ஒன்று படபிடிப்பு முழுக்கவே வெளிநாட்டில் தான் - கெளதம் மேனன் #படத்தையும் அங்கேயே ரிலீஸ் பண்ணிடுங்க புண்ணியமா போவும்.
_DKCBE@twitter.com
Engg, Medical, PG படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு கல்வி உதவித் தொகை : 04425392345 9940345704
_karaiyaan@twitter.com

♦பலே பத்து ♦

Top 10 Largest Lakes

 

29 comments:

  1. பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. யோஹன் அத்தியாயம் ஒன்று படபிடிப்பு முழுக்கவே வெளிநாட்டில் தான் - கெளதம் மேனன் #படத்தையும் அங்கேயே ரிலீஸ் பண்ணிடுங்க புண்ணியமா போவும்.// ஹஹஹா செம கடி

    ReplyDelete
  3. பலே பிரபு!பயனுள்ள தகவல்!நன்றி.

    ReplyDelete
  4. அருமையான பதிவு நண்பரே....

    இப்படி வசதிகள் இருப்பது தெரியாமலே இருக்கும் பல பதிவர்கள் இருப்பார்கள்... அவர்களுக்கெல்லாம் இதுபோன்ற பதிவுகள் என்றைக்குமே பயனுள்ளவைகள்தான்

    ReplyDelete
  5. இப்பொழுதே டெம்ப்ளேட்டின் அளவை அதிக படுத்திப்பார்க்கிறேன்... பயனுள்ள பகிர்வு பாராட்டுக்களுடன் நன்றி நண்பரே

    ReplyDelete
  6. இரண்டு நாட்களாகவே இப்படி வீதி அகலமாக்குவது போல ப்ளாக் ஐயும் அகலமாக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்ததால், இந்த பதிவிற்கு முதலில் நன்றி...அது சரி..பிற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட template ஐ பாவிப்பவர்கள் அதை அகலப்படுத்த வழி இல்லையா?

    ReplyDelete
  7. நிறைய நல்ல, நல்ல தகவல்களாக சொல்லிண்டு இருக்கே. எனக்குத்தான் எதையுமே சரியா புரிஞ்சுண்டு பயன்படுத்ததெரியவே இல்லே.

    ReplyDelete
  8. முன்பனிக்காலம்

    இல்லை நண்பரே வேறு தளத்தில் இருந்து template பெற்றால் இதன் மூலம் அகலப்படுத்த இயலாது. ஆனால் நீங்கள் வேறு வகையில் எடிட் செய்தாலும் உங்கள் தள அமைப்பு மாறிவிடும். ஏன் என்றால் அதை உருவாக்கியவர்கள் ஒரு குறிப்பிட்ட அகலம் வைத்தே எல்லா பகுதிகளும்(Including Images) உருவாக்கி இருப்பார்கள்.

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள பகிர்வு.. நான் வேறு தளத்திலுள்ள டெம்பிளேட் பயன்படுத்துவதால் என்னால் மாற்ற இயலவில்லை. எனினும் பதிவாக்கியமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. நல்ல தகவல்!
    பாராட்டுகள்.
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல் நன்றி சகா. . .

    ReplyDelete
  12. அருமையான பதிவு நண்பரே....
    மற்ற பதிவுகளை இந்த விடுமுறையில் வாசிக்கிறேன்...

    ReplyDelete
  13. உபயோகமான பதிவு, வாழ்த்துக்கள்.
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
    நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வந்து போகலாமே!!!!!

    ReplyDelete
  14. மச்சி, நானும் இப்படி அகலப்படுத்தியிருந்தேன், ஆனால்.....மானிட்டரினை மூடி வலைப்பூ தெரிகிறது என்று வாசகர்கள் சொன்ன காரணத்தினால் நீக்கி விட்டேன்.

    நல்ல தகவல் பாஸ்.

    ReplyDelete
  15. @ எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்

    உங்கள் Template பிரச்சினை அது. வேறு ஒன்று முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  16. புதிய பதிவர்களுக்குத் தேவையான நுட்பத்தை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்


    அருமை பிரபு.

    தொடர்க.

    ReplyDelete
  17. I actually enjoyed reading through this posting.Many thanks.

    ReplyDelete
  18. அருமையான பதிவு நண்பரே..

    ReplyDelete
  19. சூப்பர் தல, இதைத்தான் நான் தேடிகிட்டே இருந்தேன், கிடைச்சிடுச்சு, நான் போடும் படங்கள் எல்லாம் கொஞ்சம் சைஸ் பெரிசு பண்ணினாலும் வலது புறம் போய் இடிச்சிகிட்டே இருக்கும் அதுக்கு ஒரு விடிவு கிடைச்சிடுச்சி, தங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்றே தெரியவில்லை!! தொடர்ந்து இதே போல கலக்குங்கள்!!

    ReplyDelete