நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து இருப்போம். சில நேரங்களில் சில மின்னஞ்சல் முகவரிகளை அடிக்கடி ஓபன் செய்து பார்க்காவிட்டால், கல்யாணத்துக்கு வரச்சொல்லி வந்த மின்னஞ்சலை நாம் வளைகாப்புக்கு பார்க்க வேண்டி வரலாம்(அனுபவம்). இதை தவிர்க்க ஒரே மின்னஞ்சல் முகவரியில் நம்முடைய அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படிக்க முடிந்தால்?
முதலில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத மின்னஞ்சல் முகவரிக்குள் செல்லுங்கள்.
1. Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. இப்போது Forwarding and POP/IMAP என்பதை கிளிக் செய்யவும். பின்னர் அதன் கீழே உள்ள "Add a Forwarding Address" என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது வரும் சின்ன விண்டோவில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.
இதை உறுதிபடுத்த உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு ரகசிய எண் அனுப்பப்படும். அதை நீங்கள் Verify பகுதியில் கொடுத்தால் வேலை முடிந்தது. அத்தோடு அதில் உள்ள ஒரு லிங்க் மீது கிளிக் செய்தும் உறுதி செய்ய வேண்டும்.
இதன் பின்னர் Disable Email Forwarding என்று உள்ளதற்கு கீழ் உள்ள Forward a copy of incoming mail to XXXX@gmail.com என்பதை கிளிக் செய்து விடவும்.
அவ்வளவுதான் வேலை முடிந்தது.
இதை நீங்கள் யாஹூ மின்னஞ்சல் முகவரிக்கும் கூட Forward செய்யலாம். (Gmail To Yahoo)
ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.
- பிரபு கிருஷ்ணா




பயனுள்ள தகவல் நன்றி நண்பா
ReplyDeleteஅனைவ்வருக்கும் பயன்படும் அருமையான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ரொம்ப தேவையான ஒன்றுதான். நன்றிகள்.
ReplyDeletenice brother....
ReplyDeleteமிக்க பயனுள்ள தகவல் ...நன்றி!
ReplyDeletethank you maple!
ReplyDeleteஅனைவ்வருக்கும் பயன்படும் பதிவு
ReplyDeletewww.skumar-computer-tips.blogspot.in
அனைவருக்கும் தேவையான தகவல் ! நன்றி நண்பரே !
ReplyDeletethank u so much
ReplyDeletewe can also do it from "yahoo to google "
ReplyDeleteplz reply
dhanushkumarthedon@gmail.com