Saturday, July 28, 2012

புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?


மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம். 

1. முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள். 

2. ஏற்கனவே அக்கௌன்ட் இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய அக்கௌன்ட் தொடங்கவும். 

3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும்.


4. இப்போது கீழே உள்ளது போல ஒரு பக்கம் வரும்.அதில் Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும். 


5. இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும். 

6. இப்போது உங்கள் Mobile க்கு ஒரு SMS வரும். அதில் Confirmation Code இருக்கும். இல்லை என்றால் Way2sms-இல் Mail Alert பகுதியில் Inbox 123456@way2sms.com என்பதை கிளிக் செய்தால் வரும். எதுவும் வரவில்லை என்றால் ஜிமெயிலில் Resend email என்பதை கிளிக் செய்யவும். 

7. இப்போது நீங்கள் பெற்ற Code-ஐ ஜிமெயிலில் Forwarding and POP/IMAP பகுதியில்  தர வேண்டும். தந்த உடன் கீழே உள்ளது போல மாற்றிக் கொள்ளுங்கள். 



8. அவ்வளவு தான் இனி புதிய ஈமெயில்கள் உங்களுக்கு மொபைலில் Alert ஆக வந்து விடும். யாரிடம் இருந்து ஈமெயில் மற்றும் Subject போன்றவை அதில் வரும். நீங்கள் மீண்டும் இணைய இணைப்பை பயன்படுத்தி உடனடியாக ஈமெயில்க்கு பதில் அளித்து விடலாம்.

இதை வீடியோ ஆக காணலாம் 


Yahoo-வில் இதை நீங்கள் இலவசமாக செய்ய முடியாது. Hotmail-இல் Options பகுதியில் இதை செய்யலாம். மற்றவற்றுக்கு Settings பகுதியில் Forwarding வசதி இருப்பின் செய்ய முடியும். 

- பிரபு கிருஷ்ணா

19 comments:

  1. பயனுள்ள வசதி சகோ.! ஆனால் இது இந்தியாவில் மட்டும் தானாம்.

    :( :( :(

    ReplyDelete
    Replies
    1. இதற்காகவே நீங்கள் இந்தியாவுக்கு வரலாம் ;-)

      Delete
    2. வந்துருவோம்!

      Delete
    3. டிக்கெட் எடுத்துக் கொடுங்க, வந்துடுறேன்! :D

      Delete
    4. ப்ளைட் வீலுக்கு அடில படுத்தா அவிங்களே டிக்கெட் கொடுத்துடுவாங்க ;-)

      Delete
  2. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. VERY USEFUL WAY TO GET KNOW OUR INCOMING MAIL. THANK YOU VERY MUCH

    ReplyDelete
  4. I got an alert like this... "You are forwarding your email to 241316@way2sms.com. This notice will end in 7 days." What is this alert ?

    ReplyDelete
    Replies
    1. That is just an alert. it will help you, if someone used your mail id and forward mails to some other email address.

      Delete
  5. மிக்க நன்றி உடனடியாக செய்துவிட்டேன்

    ReplyDelete
  6. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே !.... (த.ம. 2)

    ReplyDelete
  7. புதிய தகவல்! பயனுள்ள தகவல்! நன்றி!

    இன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணி கட்டுரை! அறிஞர்களின் பொன்மொழிகள்! http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  8. அடடே... அருமையான வசதியாக இருக்கும் போல இருக்கே!!
    தேவை எனில் பயன்படுத்திக் கொள்கிறேன்!!

    ReplyDelete
  9. மிகவும் முயன்று, அறிந்து, தெளிந்து, அனைவருக்கும் பயன்படட்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொடர்ந்து பதிவு போடுகிறீர்கள்.
    உங்களுக்குத் தொடர்ந்து நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
    ஒரு போதும் சலிக்காது.
    நன்றி பிரபு.

    ReplyDelete
  10. i am very happy usefull info.thanu
    brabu

    ReplyDelete
  11. i am most usefull info.thanku
    brabu

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல் நன்றி .........!

    "Yahoo-வில் இதை நீங்கள் இலவசமாக செய்ய முடியாது"

    நண்பரே இந்த கருத்து தவறானது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் யாஹூ மெயில் லும் இலவசமாக மெயில் அலெர்ட் செய்யலாம்

    ReplyDelete