Friday, July 6, 2012

Android:Data Cable இல்லாமல் கணினியில் File Sharing செய்வது எப்படி?

Android போன்கள் இப்போது பரவலாக நிறைய பேரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் File Sharing என்று வரும் போது நாம் Data Cable மூலமே எல்லாவற்றையும் செய்து வருகிறோம். அப்படி இல்லாமல் Wi-Fi மூலம் இதை செய்ய முடிந்தால்? 

WebSharingLite File/Media Sync  என்ற இந்த Application-ஐ Google Play வில் சென்று Download செய்து கொள்ளுங்கள். 


நீங்கள் அதை இன்ஸ்டால் செய்த உடன் உங்களுக்கு ஒரு IP அட்ரசும், கடவு சொல்லும் கிடைக்கும். இப்போது உங்கள் போனில் Start என்பதை Press செய்து விடவும். 

இப்போது உங்கள் போன் Wi-Fi இணைப்பில் இருக்க வேண்டும். அந்த IP அட்ரசை உங்களது கணினியின் Browser-ல் கொடுங்கள். [முகவரிக்கு செல்ல வேண்டும், தேடக் கூடாது. ]



பின்பு கீழ்கண்ட திரை உங்கள் முன் தோன்றும் 


உங்கள் அலைபேசியில் காண கிடைத்த கடவு சொல்லை கொடுங்கள், அவ்வளவு தான் இப்போதே கீழே உள்ள பகுதி வரும்.



இதில் எந்த Folder-ல் File களை  Copy செய்ய வேண்டுமோ அதை ஓபன் செய்து அங்கே ரைட் கிளிக் செய்து Upload என்று கொடுத்து விட்டால் போதும். File upload ஆகிவிடும். 

இதில் இன்னொரு வசதி உங்கள் போனின் Battery Remaining, Wi-Fi Signal Strength, Memory Card Usage, Processor Usage என்று பலவற்றையும் காட்டுகிறது. 



பின்குறிப்பு: இதில் நீங்கள் File Sharing செய்வது அனைத்தும் Data Usage ஆகவே கருதப்படும். Data Card, Limited Broadband போன்றவற்றை பயன்படுத்தும் நபர்கள் தங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளவும். 

மேலும் Android குறித்த தமிழ் பதிவுகளுக்கு இங்கே செல்லவும்

சூர்ய பிரகாஷ் . K .P 

10 comments:

  1. நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    ReplyDelete
  3. namakku payanulla pathivu.nandri !

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவை பதிவிட்ட நண்பனுக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. நல்ல பதிவு தான்!

    ReplyDelete
  6. you can use the filezilla program to transfer file. It is much more better than the method that you explain.

    ReplyDelete