Friday, September 21, 2012

பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?

ஜிமெயில் ஆனது ஒரு வெறும் மெயில் அனுப்புதல், பெறுதல் என்ற வசதிகளை தாண்டியும் நிறைய வசதிகளை தருகிறது. சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக்கின்  பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால்  அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு. இதுவே  பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை Access செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா? 

இதை ஜிமெயில் மூலம் செய்ய முடியும். இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது. செட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது, சாட் செய்ய இயலாது. மாறாக அந்த கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை படிக்க முடியும், படித்ததை நீக்க முடியும். உங்கள் கணக்கில் இருந்து மின்னஞ்சல் அனுப்ப முடியும். இதை செய்வது எப்படி என்று பார்ப்போம். 

வீடியோ பதிவாக காண: [பதிவு வீடியோவுக்கு கீழே உள்ளது]





1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும். 


2. வரும் பகுதியில் "Accounts and Import" என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் "Grant access to your account" என்பதற்கு வரவும். அதில் "Add another account" என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. இப்போது ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி மின்னஞ்சல் முகவரி கேட்கும். யாருக்கு Access தருகிறீர்களோ அவர் மின்னஞ்சல் முகவரி தந்து விடவும். அடுத்த பக்கத்தில் "Send Email to Grand Access" என்பதை கொடுத்து விடவும்.

இப்போது உங்கள் நண்பரிடம் சொல்லி அவருக்கு வந்துள்ள மின்னஞ்சலை Accept செய்ய சொல்ல வேண்டும். மின்னஞ்சல் கீழே உள்ளது போல இருக்கும்.


இதை கிளிக் செய்த அரை மணி நேரத்தில் Access வசதி கிடைத்து விடும். Access பெற்ற நபர், அவர் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து வலது மேல் மூலையில் அவர் பெயர் மீது கிளிக் செய்தால் அதற்கு கீழே Access பெற்ற மின்னஞ்சல் கணக்குக்கு செல்வதற்கான வழி இருக்கும். 



இதில் இரண்டாவதாக மின்னஞ்சல் முகவரி உடன் Delegated என்று உள்ளது தான் Access கிடைத்துள்ள மின்னஞ்சல் முகவரி. இதை கிளிக் செய்தால் அவர் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழைந்து விடலாம். பாஸ்வேர்ட் தேவை இல்லை.

4. உங்கள் கணக்கில் இருந்து அவர் மின்னஞ்சல் அனுப்பும் போது, அதை பெறுபவருக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி உடன், அவரது மின்னஞ்சல் முவரியும் சேர்ந்து செல்லும்.


மேலே படத்தில் From, Sent By என்று இரு பகுதிகள் இருப்பதை காணலாம். இதன் மூலம் அவர் மின்னஞ்சல் கணக்கை தவறாக கையாள முடியாது.

இதில் ஜிமெயில் கணக்கு உள்ள இன்னொரு நண்பரை மட்டுமே சேர்க்க முடியும். யாஹூ, ஹாட்மெயில் மற்றும் இதர எதையும் பயன்படுத்தும் நண்பர்களையும் சேர்க்க முடியாது.

இப்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கில் "You have granted access to your account to someone@gmail.com. This notice will end in 7 days." என்று இருக்கும். இதைப் பற்றிய கவலை வேண்டாம். 

சந்தேகம் ஏதும் இருப்பின் கீழே கேழுங்கள்.

ஜிமெயில் குறித்த மற்ற சில பதிவுகள்: ஜிமெயில்

-பிரபு கிருஷ்ணா

20 comments:

  1. தேவையான பதிவு...

    /// இதன் மிகப் பெரிய பலன் நீங்கள் Access கொடுக்கும் நபருக்கு உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரியாது...

    செட்டிங்க்ஸ் எதையும் மாற்ற இயலாது...

    சாட் செய்ய இயலாது... ///

    இவைகள் தான் முக்கியம்... நன்றி...

    ReplyDelete
  2. பிரபு நல்ல தகவல். நன்றி.

    ReplyDelete
  3. ட்ரைப் பண்ணி பார்ப்போம்.

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  5. என்ன ஆச்சுனு தெரியல FeedBurner கவுண்டிங் 0 னு வருது

    ReplyDelete
    Replies
    1. அது பீட்பர்னர் தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை. விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Delete
  6. பயனுள்ள தகவல் சகோ!

    ReplyDelete
  7. படிக்க முடியாத அளவுக்கு ஈமெயில் வந்தானே பிரச்சனை.. ஹி ஹி ஹி நமக்குத்தான் ஈமெயில் வர்றதே அபூர்வமாச்சே! :)

    by the way, what happened for feed burner showing 0 for everyone! :(

    ReplyDelete
    Replies
    1. அது பீட்பர்னர் தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை. விரைவில் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Delete
    2. @ பாஸித்

      நன்றி நண்பா!

      Delete
  8. நல்ல விசயமாகத் தோன்றுகிறது..
    தேவைப்பட்டால் பயன்படுத்திப் பார்க்கிறேன்!

    ReplyDelete
  9. அட! இது புதுசா இருக்கே! தகவலுக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
  10. நல்ல தகவல் - பயன் படுத்திப் பார்க்கலாமா - பயமாக இருக்கு பிரபு - தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. அனைவர்க்கும் பயன்படக்கூடிய தகவல். பகிர்தங்கமைக்கு நன்றி

    ReplyDelete
  12. அனைவர்க்கும் பயன்படக்கூடிய தகவல். பகிர்தங்கமைக்கு நன்றி

    ReplyDelete
  13. பயனுள்ள பதிவு. by. www.99likes.co.cc

    ReplyDelete
  14. மிகவும் உபயோகமான தகவல் நண்பரே :-)

    ReplyDelete
  15. நல்ல பயன்னுள்ள தகவல்......உங்கள் பகிர்வுக்கு நன்றி........

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete