சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி? | கற்போம்

சரியான முறையில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

நண்பர்கள் சிலர் அனுப்பும் மெயில்களை திறந்து பார்த்தால் ஒரு பெரிய நியூஸ்பேப்பர் அளவுக்கு அவர்கள் யாருக்கெல்லாம் அந்த மெயில் அனுப்பி உள்ளனர் என்று இருக்கும்.அதை எல்லாம் தாண்டி வந்து படிப்பதற்குள்  போதும் போதும் என ஆகி விடும். இதை தவிர்த்து நீங்கள் யாருக்கெல்லாம் அனுப்பி உள்ளீர்கள் என்பதை  எப்படி மறைப்பது என இந்த பதிவில் காணலாம்.

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy 

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப  நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.

இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  

உதாரணம்: 



Bcc: Blind Carbon Copy 

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.

இது பாதுகாப்பானதும் கூட.  இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.

Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

உதாரணம்: 


மேலே உள்ள Cc படத்தில்  போல எல்லா மெயில் ID  க்கும் தான் அனுப்பினேன். ஆனால் ஒன்று மட்டும் Bcc யில் உள்ளதை கவனிக்கவும்.

Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

இப்போது தன்னுடைய புதிய பதிவுகளை விளம்பரப்படுத்த நிறைய நண்பர்கள் இந்த வேலையை செய்கிறார்கள். மெயில் அனுப்புவது சரி. இப்படி ஒரேடியாய் எல்லோரையும் To வில் மட்டும் போட்டு அனுப்புவது தவறு. இதன் மூலம் நிறைய Spam மெயில்கள் வருகின்றன.

இது கடந்த ஆண்டு மே மாதம் போட்ட பதிவு, மின்னஞ்சல் தொல்லை அதிகமானதால் மீள்பதிவாக இதை பகிர்ந்து உள்ளேன். 

- பிரபு கிருஷ்ணா

6 comments

சகோ, இந்த Bcc,Cc என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. இது வரைக்கும் ஏன் இருக்கு இது என்று அறியாதவனாக இருந்தேன், இப்போது என் ஐயத்தினை நீக்கி விட்டீர்கள் சகோ.

நன்றிகள் சகோ.

Reply

பயனுள்ள பதிவு !

Reply

பயனுள்ள பதிவு.

இது உள்குத்து பதிவா? #டவுட்டு

:) :) :)

Reply

@ Abdul Basith

அட குத்து எல்லாம் நமக்கு தானே விழுது.

Reply

நன்றாக விளக்கியுள்ளீர்கள்..
நன்றி!

Reply

நல்ல விளக்கம் ! நன்றி நண்பரே !

Reply

Post a Comment