கற்போம்: இன்டெர்நெட் | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

இந்தியாவின் முதல் 4K வீடியோவை வெளியிட்டது சோனி நிறுவனம்

இதுவரை இந்தியாவில் Full HD எனப்படும் 1080p வகை வீடியோக்களை மட்டுமே ரசித்து வந்த நமக்கு முதல் முறையாக 4K UHD (2160p) வகை வீடியோவை முதல் முறையாக YouTubeஇல் அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம். 

"பாலிவுட் படங்கள் கூட இதுவரை 4K குவாலிட்டியை முயற்சி செய்யாமல் இருக்க முதல் முறையாக நாங்கள் தான் இந்தியாவில் YouTubeமூலம் இதை கொண்டு வந்துள்ளோம்" என்று சோனி நிறுவன மார்கெட்டிங் டைரக்டர் Sanujeet Bhujabal தெரிவித்துள்ளார். அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்பவர்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.



மேலே உள்ளவற்றின் ரெசொல்யூசன்களை கீழே காணுங்கள்.

VCD 352×288 Pixels
DVD 720×576 pixels
HD (720p) 1280×720 pixels
Full HD (1080p) 1920×1080 pixels
4K Ultra UD (2160p) 3840 × 2160 Pixels

தற்போது நாம் பயன்படுத்தும் வீடியோ ரெசொல்யூசன் 2K எனப்படும் 1080p ஆகும். இது அதிகபட்ச குவாலிட்டி. இந்தியாவில் நிறைய பேர் இன்னும் VCD குவாலிட்டியில் தான் பார்க்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 4K வீடியோ ரெசொல்யூசனுக்கும், நாம் பயன்படுத்தும் Full HD வீடியோ ரெசொல்யூசனுக்கும் என்ன வித்தியாசம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெளிவாக புரியும்.



இந்தியாவில் ரஹ்மானின் "ரானாக்" ஆல்பத்தில் இருந்து "Aabhi Jha" என்ற பாடலின் வீடியோ 4K குவாலிட்டியில் தற்போது YouTube இல் உள்ளது. அதை கீழே காணலாம்.


உங்கள் இணைய இணைப்பு வேகம் குறைவாக இருந்தால் குவாலிட்டி குறைவாக ப்ளே ஆகும். 4K வில் பார்க்க கீழே படத்தில் உள்ளபடி செய்யவும்.



யாமி கெளதம் ரசிகர்களை வீடியோவில் உள்ள மற்ற விசயங்களையும் பார்க்குபடி கேட்டுகொள்கிறேன்.

ஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்!

எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணா

ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.



கவர்ச்சி விளம்பரங்கள்!

கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இரண்டு நிமிட நிபந்தனை!

இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம்,  வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம்.  ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.

அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் ஆர்டர் செய்த 10-15 நிமிடத்தில் பொருளை வாங்க வேண்டும் என்று சில டீல்களுக்கு வரும். அது இதில் சேராது. 
மறைமுக கட்டணங்கள்!

இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.

ஷிப்பிங் கட்டண மோசடி!

உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது.  அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை  நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.

நோ ரிட்டர்ன், ப்ளீஸ்!

பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

விதிமுறைகளில் மோசடி!

சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.
கூரியர் மோசடி!
ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.

வாரன்டி இருக்கிறதா?

பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.

உஷாரய்யா உஷாரு!

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.

* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..

*பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.

* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.

* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.  இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.

* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.

* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்."

நவம்பர் 24, 2013 நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை. தொகுத்தது செ.கார்த்திகேயன்.

- பிரபு கிருஷ்ணா

Google Terms of Serviceஇல் மாற்றம் & Mozilla வின் புதிய Flash Player

இணையத்தின் இரண்டு மாபெரும் நிறுவனங்களான Google மற்றும் Mozill சமீபத்தில் இரண்டு புதிய விசயங்களை அறிமுகம் செய்துள்ளன. Google அதன் Terms of Serviceஇல் ஒரு மாற்றத்தையும், Mozilla Adobe Flash Player க்கு மாற்றாக புதிய Flash Player ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம். 


Google Terms of Serviceஇல் மாற்றம்:

Google, Google+ நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், தரப்படுத்தல், logoபடம் (comments, ratings photos) போன்றவற்றை தனக்கு சாதகமாக விளம்பரங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் நவம்பர் 11 இல் இருந்து செயல்பட தொடங்கும். அந்த முறையை விரும்பாதவர்கள் settings இல் சென்று disable செய்து கொள்ளலாம். அப்படி செய்யாவிட்டால்,உங்கள் கருத்துக்கள் உங்கள் பட லோகோ வுடன் படத்தில் உள்ளது போல் வெளியாகும்.

இதை தடுக்க நீங்கள் Shared Endorsements என்ற பக்கத்தில் "Based upon my activity, Google may show my name and profile photo in shared endorsements that appear in ads." என்பதை Uncheck செய்து விடுங்கள்.



Mozilla வின் Shumway-Flash Player:

Mozilla Firefox பலர் விரும்புவதற்குக் காரணம் பல Extensions & Plug-ins கள் கிடைப்பதும், அவற்றை நாம் இணைத்துப் பயன்படுத்த முடியும் என்பதாலும் ஆகும். இந்த Mozilla Firefox 2002 September 23 இல் Phonix 0.1 ஆக Dave Hyatt, Blake Ross என்பவர்களால் தொடங்கப்பட்டு BIOS தயாரிப்பாளர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக Mozilla Firefox ஆக மாற்றம் பெற்று November 9, 2004 இல் Mozilla Browser Firefox-1.0 என வெளியிடப்பட்டது.



தொடர்ந்து வெற்றிப் பாதையில் வந்த Mozilla, தற்போது 2013 செப்.17 இல் Firefox 24 ஐயும், Firefox 24 ESR ஐயும், Firefox Nightly builds (version 27) -Beta வையும் வெளியிட்டுள்ளது. இந்த Firefox Nightly builds (version 27) இல் Flash Player ற்குப் பதில் 64 bit ற்கு ஏற்புடையதும், HTML5 and JavaScript அடிப்படையிலும் Shumway என்ற புதிய flash player ஐயும் அறிமுகப்படுத்தி உள்ளது.

1997 இல் Macromedia வால் உருவாக்கப்பட்ட Macromedia’s Flash Player 2005 இல் Adobe நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த adobe flash player ஆனது SWF files (ShockWave Flash-Small Web Format ) களுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த adobe flash player ற்கு விடை கொடுக்கிறது Shumway Flash Player. பரீட்சிக்க விரும்புவோர் Firefox Nightly builds (version 27) -Beta இல் Shumway ஐ enable செய்து பார்க்கலாம்.

21 ஜனவரி 2014 இல் Firefox 27 உடன் வரவிருக்கும் Shumway கணினி விளையாட்டுக்கள், வீடியோக்களுக்கு நன்றாக இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஆகும்.
- சக்தி
இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.

ChromeCast, Crossbar - இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்

ChromeCast மற்றும் Crossbar இரண்டும் சமீபத்தில் அறிமுகமான புதிய தொழில்நுட்ப வசதிகள். இதில் ChromeCast கூகுள் நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதமும், Crossbar கடந்த ஆகஸ்ட் மாதமும் அறிமுகமானது. இரண்டையும் பற்றி இங்கே காண்போம். 

ChromeCast



Google ஜூலை மாதம் அறிமுகப்படுத்திய ChromeCast என்ற சிறிய பென்ட்ரைவ் dongle மூலம் தொலைக்காட்சியில் Netflix, HDTV—movies, TV shows, music, YouTube, Google Play, Chrome மற்றும் ஆடியோ/வீடியோ ஆகியவற்றை சிறிய கணினி, மடிக்கணினி, smartphone திரைகளில் பார்க்காமல் WiFi மூலம் HDMI Port வழியாக இணைத்து பெரிய TV திரையில் காணலாம். The Roku, Apple TV ஐ விட நன்றாகவும், 30/35 டாலரில் கிடைக்கவும் செய்கிறது. அமெரிக்காவில் செயல்படும் ChromeCast விரைவில் மற்றைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள்.

Crossbar Flash Memory - நானோ முறையில் இன்னொரு தொழில்நுட்பம்



Internal Memory எனும் Flash Memory இல் புதிய அறிமுகம் Crossbar Memory ஆகும். வழமைக்கு மாறாக GB இல் இருந்து 1TB வரையான Chip இல் சேமிப்பு, ஆனால் மிகச் சிறியதும், 20 மடங்கு குறைந்த மின்னைப் பயன்படுத்தி, 20 மடங்கு அதி வேகமாகவும், அதே சமயம் 140MB/s வேகமாக எழுதும் சக்தியும்,7 MB/s படிக்கும் சக்தியும் இந்த Crossbar Memory க்கு உள்ளது. இதை Crossbar நிறுவனத்தின் இணை அமைப்பாளரும், மிச்சிக்கன் பல்கலைக்கழக பேராசிரியருமான Wei Lu உருவாக்கி உள்ளார்.

இந்த புதிய200mm2 chip நினைவகம் மூலம் கையடக்க கருவிகளில் 250 மணி நேர HD வீடியோக்களை சேமித்து பார்க்கவும், 250,000 பாடல்களை சேமித்து கேட்கவும் முடியும். NAND based flash ற்கு மாற்றாக ReRAM (resistive random-access memory)- ( RRAM) மூலம் உருவாக்கி தொழில் நுட்பத்தில் புதிதாக கால் பதித்துள்ளது.



DR.Fujio Masuoka வால் உருவாக்கப்பட்ட,NAND Flash Memory (NAND gate (Negated AND or NOT AND) தொழில் நுட்பம், Digital cameras, portable MP3 players, USB (Flash) sticks போன்றவற்றில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. Crossbar தொழில்நுட்பம் இதற்கு மாற்றாக விளங்கக் கூடிய அற்புதமான தொழில்நுட்பம் என்று தொழில்நுட்ப வல்லுனர்களால் நம்பப்படுகிறது.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் "சக்தி" அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி?

IRCTC-யில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய விரும்புவர்களுக்கு பெரிய தொல்லை அதன் வேகம்.  அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே சர்வர் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்படுவதால் மெதுவாக இருக்கும் புக்கிங் சேவையை வேகமாக்க இன்னொரு வசதியை கொடுத்துள்ளது IRCTC. தற்போது நீங்கள் உங்கள் போனில் இரண்டே இரண்டு SMS மூலம் டிக்கெட் புக் செய்து விடலாம். எப்படி என்று பார்ப்போம்.


தேவையானவை: 
  1. மிக முக்கியமாக வங்கிக்கணக்கு மற்றும் IRCTC Account இருக்க வேண்டும்
  2. நீங்கள் புக் செய்ய பயன்படுத்தும் மொபைல் நம்பர் IRCTC & Bank இரண்டிலும் Register செய்யப்பட்டிருக்க வேண்டும். 
  3. பேங்க்கில் இருந்து MMID, OTP (One Time Password) போன்ற தகவல்களை நீங்கள் பெற வேண்டும்.
  4. OTP என்பது One Time Password என்பதால் ஒரு முறை மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே இதை எப்படி தொடர்ந்து பெறுவது என்பதை உங்கள் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள். சில வங்கிகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன. அதனை அறிய - How to generate OTP

இவையே தேவையானவை. இதில் ஒன்று இல்லை என்றாலும் உங்களால் டிக்கெட் புக் செய்ய இயலாது.



தற்போது எப்படி டிக்கெட் புக் செய்வது என்று பார்ப்போம்.

முதலில் கீழே உள்ளது போன்ற SMS - ஐ 139 அல்லது 5676714 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

 BOOK <TrainNo> <FromCity> <ToCity> <TravelDate(DDMM)> <Class> <Passenger1-Name> <Age> <Gender> <Passenger2-Name> <Age> <Gender> (Upto 6 passengers)

உதாரணம்:
BOOK 16232 SBC TPJ 1307 SL Prabu 24 M  Prabha 24 F

நீங்கள் மேலே உள்ளது போன்று சரியான பட்சத்தில் அனுப்பினால் உங்களுக்கு 139 இல் இருந்து ஒரு SMS வரும்.

Trans Id: 12345678 Ticket Amount: 460 IRCTC SC: 11.24 Total Amount: 461.24 Seat: AVAILABLE-240. For Payment SMS PAY <34004567> IMPS <MMID> <OTP> IRCTCUserID to 139 to book ticket.

இப்போது டிக்கெட்க்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

 PAY <Transaction ID as received> IMPS <MMID as received from bank> <OTP as received from bank for this transaction> <IRCTCUserID>

உதாரணம்:
PAY 12345678 IMPS 98765432 271089 prabu2710

இதையும் சரியாக அனுப்பும் பட்சத்தில் உங்களுக்கு பின் வரும் SMS வரும்.

Your ticket booked successfully. PNR is: 10101010 Ticket No: :1234567890  Booking Status: Prabu CONFIRM S7 1 WS Prabha CONFIRM S7 4 WS Ticket Amt: 460.0 SC: 11.24 Src: Bangalore CY JN Dst: Tiruchchirapali Date of Journey: 13/07/2013 Sch Dep 19:05 hrs

டிக்கெட்டை Cancel செய்வது எப்படி? 


கஷ்டப்பட்டு புக் செய்த டிக்கெட்டை கான்செல் செய்ய மாட்டீர்கள் இருப்பினும் எப்படி என்று சொல்லி விடுகின்றேன் :-)

1. டிக்கெட் முழுமையாக கான்செல் செய்ய

கீழே உள்ளது போன்று SMS ஐ 139 க்கு அனுப்புங்கள்


CAN <10 Digit PNR> <IRCTC UserID>

உதாரணம்
CAN 10101010 prabu2710

இப்போது கீழே உள்ளது போன்ற ஒரு SMS உங்களுக்கு வரும்.

We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request.

இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.

Your ticket for <Passenger 1 Name> with PNR Number: 10101010 is cancelled. Amount: 400 will be refunded in your account.

2. குறிப்பிட்ட நபர்களின் பயணத்தை மட்டும் கான்செல் செய்ய 

சில சமயங்களில் 4/5 நபர்களுக்கு புக் செய்து விட்டு யாரேனும் ஒருவர் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் Ticket - ஐ மட்டும் கூட நீங்கள் கான்செல் செய்யலாம்.

இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி 139 க்கு SMS அனுப்பவும்.

CAN <10 Digit PNR> <IRCTCUserID> <Passenger Number>

உதாரணம்
CAN 10101010 prabu2710 12 (Upto 6 Passengers)

இதற்கு ஒரு SMS உங்களுக்கு வரும்

We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request.

இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.

Your ticket for <Passenger 1 Name> with PNR Number: 10101010 is cancelled. Amount: 400 will be refunded in your account.

அவ்வளவே :-) .  இதை பயன்படுத்திய நபர்கள் கீழே உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் அதையும் குறிப்பிடுங்கள். AIRTEL பயனர்கள் *400# என்று Dial செய்து புக் செய்யலாம் (இது குறித்த பதிவை பின்னர் பார்ப்போம்).

கணினி மூலம் புக் செய்பவர்களுக்கு - IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி

- பிரபு கிருஷ்ணா

எச்சரிக்கை: வைரசுடன் வரும் PDF File -கள்

இணையத்தில் தற்போது பல வழிகளில் வைரஸ் பரவி வருகிறது. குறிப்பிட்ட தளங்களுக்கு செல்வதால், குறிப்பிட்ட File களை ஓபன் செய்வதால் என்று தொடரும் இந்த லிஸ்டில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒன்று மின்னஞ்சலில் வரும் PDF File கள். கடந்த இரண்டு வருடங்களில் இது அதிகமாகி வருகிறது. இதைப் பற்றி பார்ப்போம்.

இணையத்தில் நாம் பல இடங்களில் நம் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து வருகிறோம், அவற்றில் நம்பிக்கையற்ற பல தளங்கள் நம்முடைய மின்னஞ்சல் முகவரிகளை பல தவறான நபர்களிடம் விற்று விடுகின்றன. அவ்வாறாக விற்கப்பட்ட பின் நம் மின்னஞ்சல் முகவரிக்கு தேவையற்ற மின்னஞ்சல்களை குறிப்பிட்ட தளங்கள் அனுப்பும். அவற்றில் பல பண மோசடி செய்யும் தளங்களாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் கேட்கும் விஷயத்தை நாம் செய்யக்கூடாது என்பதோடு அதில் ஏதேனும் File Attach செய்யப்பட்டு இருப்பின் அதனையும் திறக்க கூடாது. தற்போது அவற்றின் மூலம் வைரசும் சேர்ந்து வருகிறது.



அவற்றில் குறிப்பிடதக்க ஒன்று PDF Files. ஆம் PDF File மூலமும் வைரஸ்களை அனுப்பி அவற்றை நாம் மின்னஞ்சலில் இருந்து டவுன்லோட் செய்யும் போதோ அல்லது ஆன்லைன் மூலமே படிக்கும் போதோ malicious javascript கள் நம் கணினியில் தேவையற்ற மென்பொருட்களை நாம் அறியாமலேயே நிறுவும். இவை உங்களில் தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்கள் கணினி Hack செய்யப்படலாம்.

எனவே உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம்/மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் அதை திறந்து பார்த்து என்ன என்பதை படித்து விட்டு டெலீட் செய்து விட வேண்டும். இவ்வாறு மட்டும் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 லட்சம் கணினிகளில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை PDF File-கள், அதுவும் Adobe Reader/Acrobat மூலம் திறக்கப்பட்டவை.

இது குறித்து Microsoft Malware Protection Center குறிப்பிட்ட சில பெயருடைய PDF File - களை நமது கணினிகளில் திறக்க வேண்டாம் கேட்டுக்கொண்டுள்ளது. அவை,
  1. pdf_new[1].pdf
  2. auhtjseubpazbo5[1].pdf
  3. avjudtcobzimxnj2[1].pdf
  4. pricelist[1].pdf
  5. couple_saying_lucky[1].pdf
  6. 5661f[1].pdf 7927
  7. 9fbe0[1].pdf 7065
  8. pdf_old[1].pdf

பெரும்பாலும் இந்த பெயரில் வந்தாலும் சில வேறு பெயரிலும் வர வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்ப்பதே நலம்.

இதை தவிர்க்க மற்ற சில வழிகள்: 


  • உங்கள் Adobe Reader மென்பொருளை புதிய Version க்கு Update செய்து கொள்ளுங்கள்.
  • Chrome, Firefox போன்ற நம்பிக்கையான ப்ரௌசெர்களை மட்டும் பயன்படுத்தவும்.
  • நல்ல Anti-virus மென்பொருளை பயன்படுத்தவும்.

இத்தோடு Adobe Reader பயன்படுத்தும் நபர்கள் அதில் JavaScript ஐ Disable செய்து கொள்வதும் நல்லது.

Adobe Reader இல் எப்படி JavaScript ஐ Disable செய்வது ?

Adobe Reader >> Edit >> Preferences >> JavaScript >> Enable Acrobat JavaScript என்பதை Uncheck செய்து விடவும்.



- பிரபு கிருஷ்ணா

OLX தளத்தில் ஒரு பொருளை விற்பது எப்படி?

OLX தளம் ஆன்லைன் மூலம் நாம் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். முன்பெல்லாம் பழைய பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என்றால், கிடைக்கும் ஏதோ ஒன்றை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது, அதே போல விற்பதற்கும் சரியான விலை கிடைக்காமல் இருந்தது. ஆனால் OLX வந்த பின் இரண்டின் வேலையும் எளிதாகி நமக்கு உகந்த விலையில் பொருளை வாங்கலாம் அல்லது விற்கலாம்.

OLX மூலம் ஒரு பொருளை வாங்குதல் எளிது. குறிப்பிட்ட நபரை தொடர்பு கொண்டு பொருளை பற்றி விசாரித்து வாங்கிக் கொள்ளலாம். இந்த பதிவில் எப்படி ஒரு பொருளை விற்பது என்று பார்ப்போம்.



முதலில் olx.in என்ற தளத்திற்கு சென்று Register மூலம் ஒரு புதிய பயனர் கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள். கணக்கை உறுதி செய்ய உங்கள் மின்னஞ்சலில் வரும் லிங்க் மீது கிளிக் செய்ய வேண்டும். இது முடிந்த பிறகு நீங்கள் OLX தளத்தில் Sign in செய்ய முடியும். Sign in செய்த பிறகு "Post a Free Ad" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் விற்க போகும் பொருள் என்ன Category என்று தெரிவு செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் நீங்கள் உங்கள் விளம்பரம் குறித்த தகவல்களை தர வேண்டும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.



தகவல்களை கொடுத்தவுடன் Post என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்த பக்கத்தில் இந்த விளம்பரம் Pending Ad என்று வரும்.

இப்போது உங்கள் விளம்பரம் OLX Team மூலம் செக் செய்யப்பட்டு 3 முதல் 6 மணி நேரத்துக்குள் அனைவருக்கும் தெரியும்படி வந்து விடும். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் உங்களுக்கு மின்னஞ்சல் வரும் அல்லது OLX தளத்தில் நுழைந்து My OLX என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் Settings பகுதிக்கு கீழே உங்கள் விளம்பரத்தின் நிலை தெரியும்.


விளம்பரம் Approve ஆகிவிட்டால் Active Ads பகுதியில் இருக்கும்.


சந்தேகம் ஏதும் இருப்பின் கமெண்ட் பகுதி மூலம் கேளுங்கள்.

- பிரபு  கிருஷ்ணா

உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்

தென்கொரிய நிறுவனமான சாம்சங் குறித்து நாம் அனைவரும் அறிவோம். மின்னணு சாதனங்களுக்கு பெயர் பெற்ற இந்த அலைபேசி நிறுவனம் தற்போது உலகிலேயே முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தை சோதித்து பார்த்துள்ளது. இதன் மூலம் இப்போது நாம் பெறும் இணைய வேகத்தை விட பல மடங்கு அதிக  அளவுக்கு மிக வேகமான இணைய இணைப்பை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.

5G தொழில்நுட்பத்தை 28 GHz அலைகற்றையில் சோதித்து 1GB தகவலை ஒரே நொடியில் பரிமாறி உள்ளது சாம்சங். அதாவது இதன் மூலம் ஒரு முழு திரைப்படத்தை நாம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இது தற்போது நாம் பயன்படுத்தும் 2G மற்றும் 3G ஐ விட பல ஆயிரம் மடங்கு வேகம் ஆகும். சொல்லப் போனால் Broadband ஐ விடவும் மிக அதிக வேகம்.



இதன் மூலம் மிக அதிக தரமுள்ள HD வீடியோக்களை மிகக் குறைந்த நேரத்தில் பரிமாற்ற முடியும், அதே போல 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்க்க முடியும், Ultra HD வீடியோக்களை Real-time streaming மூலம் பார்க்கலாம்.

இது 2020 முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்தியா, சீனா போன்ற பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் 4G தொழில்நுட்பமே வந்திராத நிலையில் 5G என்பது நமக்கு எப்போது கிடைக்கும் யூகிக்க முடிகிறதா?

- பிரபு கிருஷ்ணா

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?


தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். 

இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய  முடியும். 


மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது.

இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த Sizeக்கு கிடைக்கும். உத்தேசமாக கீழே உள்ளபடி படத்தின் அளவு குறைக்கப்படும்.


JPEG Photo Resolution

Typical JPEGmini file size reduction

8 MP and higher

70 - 80%

3 - 7 MP

50 - 70%

1 - 2 MP

40 - 60%

Lower than 1 MP

30 - 50%

JPEGmini என்ற தளத்திற்கு சென்று Try It Now என்பதை கிளிக் செய்து படங்களை Upload செய்யலாம். ஒவ்வொரு படமாக செய்ய விரும்புபவர்கள் தளத்தில் Signup செய்ய தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை Size குறைக்க விரும்பினால் அந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்து மொத்தமாக நிறைய படங்களை Upload செய்து அளவை குறைக்கலாம். ஒரே சமயத்தில் 1000 படங்கள் வரை Upload செய்யலாம். Image Size 200MB க்குள் இருக்க வேண்டும்.

படம் Size குறைக்கப்பட்ட பின் Download Photo என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

முகவரி -  JPEGmini

- பிரபு கிருஷ்ணா

இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer


ஆன்லைனில் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் தெரிந்த தளம் Flipkart. இது கடந்த ஆண்டு Flyte என்ற பெயரில் ஆன்லைன் மியூசிக் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்தது. இதில் பணம் செலுத்தி புதிய பட, ஆல்பம் பாடல்களை நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது இதன் முதல் பிறந்த நாளையொட்டி தினமும் பல பட,ஆல்பம் பாடல்களை இலவசமாக தரப்படுகின்றது.

இதில் உங்களுக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடா, மராத்தி, பெங்காலி மற்றும் பல மொழி பாடல்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த Offer 28-02-2013 வரை உள்ளது. அதுவரை தினமும் 100 க்கும் மேற்ப்பட்ட ஆல்பங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். 

இதற்கு நீங்கள் Flipkart தள பயனராக இருக்க வேண்டும் . அதில் நுழைந்து நீங்கள் டவுன்லோட் செய்யலாம். உங்கள் பேஸ்புக் கணக்கின் மூலம் Log-in செய்தும் டவுன்லோட் செய்யலாம்.

அதற்கான முகவரி - Flyte Birthday


Flyte Application மூலமும் பாடல்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். இதன் Application இணைப்புகள் கீழே உள்ளன. 

நான் என்னுடைய போனில் இருந்து எடுத்த Screenshot 





- பிரபு கிருஷ்ணா

உங்கள் ட்விட்டர் ட்வீட்டுகள் அனைத்தையும் டவுன்லோட் செய்ய புதிய வசதி


சமூக வலைத்தளங்கள் நித்தமும் ஏதேனும் செய்து தங்கள் பயனர்களை கவர நினைக்கிறார்கள். அதன்படி பேஸ்புக், கூகுள் பிளஸ் க்கு அடுத்தபடியாக உள்ள ட்விட்டர் தளம் சில வாரங்களுக்கு முன்பு நமது ட்விட்டர் கணக்கில் நாம் ட்வீட்டிய அனைத்து ட்வீட்களையும் டவுன்லோட் செய்யும் புதிய வசதியை வழங்கியது. இது இப்போது அனைவருக்கும் கிடைக்கத் தொடங்கி உள்ளது. 

இதை செய்ய உங்கள் ட்விட்டர் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு வரவும். 


இப்போது வரும் பக்கத்தை Scroll செய்து கீழே வந்தால் Request Your Archive என்று ஒரு வசதி உங்களுக்கு இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது உங்கள் ட்விட்டர் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும். நீங்கள் ட்விட்டர் தளத்தில் Register செய்த மின்னஞ்சலில் அது கிடைக்கும். அது கீழே உள்ளது போல இருக்கும். 


அதில் உள்ள Go Now என்பதை கிளிக் செய்தால் ஒரு Zip File டவுன்லோட் ஆகும். 

அதை Extract செய்தால் உங்களுக்கு கிடைக்கும் Excel மற்றும் ஒரு HTML File மூலம் உங்கள் ட்வீட்களை நீங்கள் காணலாம். உங்கள் ட்வீட்கள் பெரும்பாலும் தமிழ் என்றால் HTML File -ஐ ஒரு Browser -இல் ஓபன் செய்யுங்கள். அது கீழே உள்ளது போல இருக்கும். 


நீங்கள் ட்விட்டர் தளத்தில் இதுவரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ட்வீட்கள் ட்வீட்டி உள்ளீர்கள் என்ற தகவலுடன் உங்களின் எல்லா ட்வீட்களையும்யும் நீங்கள் பார்க்கலாம். அதில் View in Twitter என்பதை கிளிக் செய்து அவற்றை ட்விட்டர் தளத்தில் காணலாம், இதன் மூலம் அதற்கு வந்துள்ள Retweet, Reply, Favourite போன்றவற்றையும் காணலாம். 

- பிரபு கிருஷ்ணா

Hangouts வசதி தற்போது இந்திய ஜிமெயில் பயனர்களுக்கும்


கூகுள் நிறுவனத்தின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று Hangouts. இதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் 9 பேருடன் Video Chat செய்ய முடியும். ஆரம்பத்தில் கூகுள் பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதி இப்போது சமீபத்தில் ஜிமெயில் பயனர்களுக்கும் அறிமுகமானது. இந்திய ஜிமெயில் பயனர்களுக்கு இது கடந்த 05/02/2013 இல் அறிமுகமானது. 

ஜிமெயில் பயனர்களுக்கு என்று சொன்னாலும் Contact தேடும் போது கூகுள் பிளஸ் Circle - இல் தான் தேடுகிறது. நீங்கள் மற்றும் Hangout செய்யப் போகும் உங்கள் நண்பர்கள் கூகுள் பிளஸ் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த Hangouts வசதியை பயன்படுத்த முடியும். கூகுள் பிளஸ் கணக்கு இல்லை என்றால் ஒருவருடன் மட்டுமே நீங்கள் Video Chat செய்ய முடியும். 

மற்ற Video Chat வசதிகளை விட இதில் உள்ள சிறப்பம்சம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இதில் Youtube Video பார்க்கலாம், Google Docs - களை பகிர்ந்து கொள்ளலாம், கேம்ஸ் விளையாடலாம், வீடியோவில் சில Effect கொடுக்கலாம் என பல உள்ளது. 

வீடியோ: 



Hangout - ஐ Schedule செய்ய வேண்டும் என்றால் Google Calender-ஐ நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- பிரபு கிருஷ்ணா

ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்


எந்த துறை வளர்கிறதோ அந்த துறையில் அதற்கேற்றார் போல் மோசடி நபர்களும் நுழைவார்கள். இதற்கு இப்போதையை இணையமும் விதிவிலக்கல்ல. தற்போதைய சூழ்நிலையில் மிக அதிகம் பேர் ஏமாறும் துறையும் இது தான். இதில் நடக்கும் சில மோசடிகளையும், அதில் தப்பிக்கும் வழிகளையும் பார்ப்போம். 

1. நேரடியாக பணம் தருவதாக சொல்லும் செய்திகள்

இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து உங்களுக்கு சில கோடிகள் கிடைத்துள்ளது என்றும் அதை உங்களுக்கு அனுப்ப உங்கள் தகவல்கள் வேண்டும் என்றும் கேட்கப்படும். உதாரணம்: லாட்டரி மூலம் பணம் பணம் கிடைத்துள்ளதாக வரும் செய்தி, சாரிட்டிக்கு பணம் தேவை, பேஸ்புக்/மைக்ரோசாப்ட்  கோடிக்கணக்கில் பணம் தருகிறது.

இம்மாதிரியான மின்னஞ்சல்கள் வந்தாலே நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் Delete பட்டனை அழுத்தி விட்டு உங்கள் வேலையை பார்க்க செல்வது. 

இதே தகவல்கள் SMS வழியாக கூட வரக்கூடும் அவற்றையும் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது. 

குறிப்பிட்ட சாரிட்டிக்கு உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றினால், குறிப்பிட்ட சாரிட்டியின் தளத்துக்கே சென்று உதவலாம் அல்லது அதில் இருக்கும் தெரிந்த நபர்களை தொடர்பு கொள்ளலாம். 

நம்பிக்கை இல்லாத பட்சத்தில் எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நபர் ஒருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பாதீர்கள், சாரிட்டி பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் அதற்கு மட்டும் அனுப்புங்கள். 

Paypal, eBay போன்றவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்களை போன்று சில மின்னஞ்சல்கள் அனுப்பி உங்களை ஏமாற்றும் முயற்சியும் கூட நடக்கும். எனவே இதில் கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம். இம்மாதிரியான மின்னஞ்சல் வந்தால் இந்த தளங்களில் உள்ள உங்கள் கணக்கில் நுழைந்து பாருங்கள்,அங்கே உங்களுக்கு தகவல் இருந்தால் மட்டுமே அது உண்மை. இல்லை என்றால் மோசடி தான். 

ஜிமெயில் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த இரண்டு தளங்களில் இருந்து மின்னஞ்சல் வந்தால் ஒரு சாவி symbol இருக்கும். 

2. Online Stores/Websites செய்யும் மோசடிகள் 

இந்த மோசடிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பெரும்பாலான தளங்கள் உங்களுக்கு Original பொருட்களைத் தான் கொடுக்கின்றன. எனவே அந்த விசயத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. குறிப்பிட்ட தளத்தின் மீது சந்தேகம் இருப்பின் Twitter, Facebook, Google Plus போன்றவற்றில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் ஆலோசனை கேட்டுவிட்டு வாங்கலாம். 

உண்மையான மோசடி என்பது 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 500 ரூபாய்க்கு தருவதாக செய்யப்படும் விளம்பரங்கள். நிறைய தளங்கள் இதில் செய்யும் வித்தை, நிறைய பேரை இதற்கு Book செய்ய வைத்து விட்டு யாரேனும் ஒருவர்க்கு மட்டும் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்று சொல்வது,மற்றவர்கள்  கட்டிய பணத்திற்கு எங்கள் தளத்தில் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்பது. 

யாரோ ஒருவருக்கு பொருள் கிடைப்பதாக இருந்தாலும், கிடைக்காதவர்கள் எந்த பொருளை வாங்குகிறாரோ அது கண்டிப்பாக மற்ற தளங்களை விட விலை அதிகமாகவே இருக்கும். எனவே இது போன்ற தளங்களை பற்றிய மின்னஞ்சல் வரும் போது அவற்றை தவிர்ப்பது தான் நலம். 

இன்னும் சில தளங்கள் Free Trail, Half Price போன்று பல Offer - களை உங்களுக்கு வழங்குவார்கள். இதிலும் பெரும்பாலும் மோசடியே. உண்மையில் இவர்கள் Hidden Charges என்ற பெயரில் மிக அதிகமான பணத்தை தான் உருவுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை கேட்க மாட்டார்கள். 

இதே போல திடீர் என இலவச போன் , கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், SMS வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது. 

ஆன்லைன் ஷாப்பிங் குறித்து ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ற பதிவில் விரிவாக காணலாம்.

3. சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் 

நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்றவற்றிலும் நம்மை ஏமாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. கூகுள் பிளசை விட மற்ற இரண்டும் இதில் கொஞ்சம் அதிகம் தாக்கப்படுகின்றன. 

பேஸ்புக்கை பொருத்தவரை பெரும்பாலானவை Chat மூலமே நடை பெறும். இது வைரஸ் அல்லது நேரடியான மனிதர் மூலம் நிகழும். முதலாவது உங்கள் நண்பர் ஒருவர் திடீர் என ஏதேனும் ஒரு File ஒன்றை உங்களுக்கு அனுப்புவது போல இருக்கும்,அதை கிளிக் செய்தால் டவுன்லோட் ஆகும் அந்த File உங்கள் கணினியில் நீங்கள் சேமிக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடி விடும். எனவே இது போன்று வரும் போது குறிப்பிட்ட நபரிடம் அது என்ன? பயன்படுத்தி உள்ளாரா, என்பது போன்றவற்றை கேட்டுக் கொள்ளவும், அதை விட முக்கியம் அவர் உங்களுக்கு தெரிந்தவராக இருத்தல் அவசியம். 

இரண்டாவது உங்கள் நண்பர் போல உங்களுடன் பழகும் முகம் தெரியாத நபர் கடவுச் சொல் மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை கேட்பது.மிகக் குறிப்பாக பணம், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு தகவல்கள் கேட்கும் நபர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தேகப்பட வேண்டும். நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் தகவல்கள் மூலம் ஒருவர் உங்கள் வரலாற்றையே அறிய முடியும்.  இது போன்று நடப்பின் அந்த நபரை நீங்கள் பிளாக் செய்வது தான் உங்களுக்கு நன்மை. 

பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நபர்களை கண்டிப்பாக தங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும். இந்த விசயத்தில் கடந்த கால மோசடிகள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். 

ட்விட்டர் தளத்தை பொறுத்தவரை பெரும்பாலான மோசடிகள் Message மூலமாகவே வரும். எனவே நம்பிக்கை இல்லாத மெசேஜ்களை நீக்கி விடுங்கள். அவற்றில் உள்ள லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள்.

அடுத்து இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் வீடியோ, அல்லது போட்டோ போன்றவற்றை பார்க்க குறிப்பிட்ட மென்பொருளை நிறுவ வேண்டும் என்று சொன்னால் அது உண்மையா என்று கவனிக்க வேண்டும். இவற்றில் பெரும்பான்மை மோசடி தான்.Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் உங்கள் உலவியில் இருந்தே அதை Update செய்து கொள்ளலாம், அப்படி செய்தும் கேட்டால் அதை தவிர்த்து விடுங்கள். [இது பேஸ்புக், ட்விட்டர் மட்டுமல்ல மற்ற எல்லா தளங்களுக்கும், Youtube என்றால் அது Flash Player இல்லை என்றால் மட்டும் கேட்கும்]

இதே போல ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றுக்கு பாஸ்வேர்ட் மாற்றச் சொல்லும் தகவல்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வந்தால் அவற்றின் From Address எது என்று பாருங்கள். அது பொய்யான முகவரி என்றால் அல்லது சந்தேகம் இருப்பின் அந்த மின்னஞ்சலை டெலீட் செய்து விட்டு நேரடியாக பேஸ்புக், ட்விட்டர்க்கு சென்று பாஸ்வேர்டை மாற்றுங்கள். அது தான் பாதுகாப்பு. 

4. ஆன்லைன் ஜாப்ஸ்/ ஜாப் தளங்கள்

உலகிலேயே இணைய தளம் மூலம் அதிகம் பேர் ஏமாந்தது இதுவாகத் தான் இருக்கும். வீட்டில் இருந்தே ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கலாம் என்று வரும் மின்னஞ்சல்களை கண்ணை மூடிக் கொண்டு டெலீட் செய்து விடுங்கள். 

இவை பெரும்பாலும் ஆரம்பத்தில் உங்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்வார்கள்,அதன் பின் அவர்கள் அனுப்பும் பொருளை வைத்து நீங்கள் ஒன்றும் சம்பாதிக்க முடியாது அல்லது குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட வேலை மூலம் உங்களுக்கு வருமானம் வராது.

ஆன்லைன் ஜாப்க்கு நம்பிக்கையான தளம் என்றால் elance.

அடுத்ததாக பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதாக சொல்லும் மின்னஞ்சல்கள், தளங்கள் போன்றவற்றை நீங்கள் எப்போதும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்க்க வேண்டும். இம்மாதிரியான தளங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்லி கேட்டால் அவற்றை புறக்கணித்து விடுவதே நலம். 

இதே போல நம்பிக்கை இல்லாத கன்ஸல்டிங் கம்பெனிகளுக்கும் பணம் செலுத்துவதை தவிர்க்கவும்.

SMS, EMail பெறுவதன் மூலம் சம்பாதிக்கலாம் போன்றவை உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர்களை மற்றவர்களுக்கு விற்க வாய்ப்புள்ளது. எனவே அது போன்ற தளங்களையும் தவிர்க்கலாம்.

5. Credit Card மோசடிகள் 

இது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ நடக்கும். உங்கள் Credit தகவல்களில் கொஞ்சம் Update, Change என்று சொல்லு உங்கள் Card Number, CVV, Name போன்றவற்றை கேட்டு உங்களை ஏமாற்றுவார்கள். இது போன்றவற்றை நீங்கள் உடனடியாக புறக்கணிக்க வேண்டும். 

பொதுவாக இந்த தகவல்களை வங்கி ஊழியரே கேட்டால் கூட நீங்கள் தரக்கூடாது. Card தொலைந்து போனால் தவிர. 

இந்த தகவல்களை மாற்ற முடியாது, சிலவற்றை மாற்ற வேண்டும் என்றால் வங்கியின் தளத்துக்கே சென்று மாற்றுங்கள். மின்னஞ்சல் மூலம் அதை செய்யாதீர்கள். 

-----------------------------------------------------------------------------

இவையே பொதுவாக நடக்கும் மோசடிகள். எல்லாவற்றையும் கவனித்தால் உங்களுக்கு ஒரு விசயம் புலப்படும் எல்லாமே பண மோசடிதான். எனவே நம்பிக்கை இல்லாத தளமோ, நபரோ, மின்னஞ்சலோ பணப் பரிமாற்றம் குறித்த செய்திகளை அனுப்பினால் அதனை நம்ப வேண்டாம். சொல்லப் போனால் பெரும்பாலான மோசடிகளுக்கு இது தான் தற்காப்பு வழி.

இது எவ்வாறெல்லாம் ஏமாற்றுகள் நடக்கிறது என்பதை சொல்லும் பொதுவான பதிவு மட்டுமே. இதில் குறிப்பாக சிலவற்றை விளக்கி எழுத வேண்டி உள்ளது. இப்போதைக்கு பதிவின் நீளம் கருதி முடித்துக் கொள்கிறேன். 

குறிப்பிட்ட ஏமாற்று செய்திகளை வரும் பதிவுகளில் காண்போம். 

- பிரபு கிருஷ்ணா

Google Image தேடுதலில் வந்துள்ள புதிய மாற்றங்களும் வசதிகளும்


கூகுள் தேடுதல் எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளது, அதே அளவுக்கு பயனுள்ளது Google Images, நமக்கு வேண்டிய படங்கள் முழுவதையும் இணையத்தில் இருந்து தேடித் தரும் இது தற்போது சில சிறிய மாற்றங்களை செய்துள்ளது, அதன் மூலம் நமக்கு புதிய வசதிகளும் கிடைத்துள்ளது. அதைப் பற்றி இன்று பார்ப்போம். 

மாற்றம் 1:

சில மாதங்களுக்கு முன்பு Goolge Images தளத்தில் படங்களை தேடும் போது Search Tools என்னும் வசதி பக்கத்தின் இடது புறம் இருக்கும். இதில் படத்தின் Size, Color, Type போன்ற வசதிகளை நமக்கு தேவையானபடி தெரிவு செய்து கொள்ளலாம். 

இப்போது இந்த வசதி Search க்கு கீழேயே வந்து விட்டது. (காண்க கீழே படம்) 


Search Tools குறித்து அறியாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். 

இதன் மூலம் உங்களுக்கு தேவையான படத்தை சரியான நிறத்தில், அளவில், வகையில், தேட முடியும். இதனால் உங்கள் தேவைக்கேற்ற படத்தை நீங்கள் பெற முடியும். 

மாற்றம் 2: 

இந்த வசதி மிக அருமையானது என்று சொல்லலாம். முன்பெல்லாம் தேவையான படத்தின் மீது கிளிக் செய்தால் அது ஓபன் ஆகும் போது அதன் பின்னணியில் அது எந்த தளத்தின் உள்ளதோ அந்த தளம் வரும். 

இப்போது அப்படி இல்லாமல் கீழே உள்ளது போல வரும். [பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்]



இது Google Images பக்கத்திலேயே ஓபன் ஆகி உள்ளது. இதில் View Page என்பதை கிளிக் செய்தால் படம் பகிரப்பட்டுள்ள பக்கத்திற்கு சென்றுவிடும். View Original Image என்பதை கிளிக் செய்தால் படத்தின் முழு அளவும் Open ஆகும். Image Details என்பதை கிளிக் செய்தால் Image குறித்த தகவல்கள் மற்றும் Visually similar images சில புதிய பக்கத்தில் வரும்.

இந்த மூன்றும் மேலே உள்ளதில் படம் எந்த தளத்தில் உள்ளது, என்ன அளவு என்பது சொல்லப்பட்டு உள்ளதை காணலாம். 

இரண்டுக்கும் அடுத்து உள்ள More Sizes என்பது தான் இதில் அருமையான வசதி. அதை கிளிக் செய்தால் இப்போது காட்டப்படும் படத்தையே வெவ்வேறு அளவுகளில் இணையத்தில் இருந்து தேடி உங்களுக்கு காட்டும். இதனால் உங்களுக்கு தேவையான படம் கிடைத்த பின், அது உங்களுக்கு வேறு அளவில் வேண்டுமானால் இதை கிளிக் செய்து கிடைக்கிறதா என்று தேடலாம். 

அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல வரும். 


படங்கள் இரண்டும் வெவ்வேறு அளவிலானவை என்பது படத்தின் மேலேயே இருப்பதை காணலாம்.

புதிய வசதிகளை பயன்படுத்தி பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.

-பிரபு கிருஷ்ணா

The Web Blocker - குறிப்பிட்ட தளங்களை Block செய்ய உதவும் இலவச மென்பொருள்


இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை Block செய்ய வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். 

முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்து முடித்த Desktop - இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். 

அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும். 


இப்போது "Add Address to Block List" என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர் இடது பக்கம் User List என்பதில் எந்த User - க்கு இது பொருந்தும் என்பதையும் நீங்கள் தெரிவு செய்து "Block Address" என்பதை கிளிக் செய்யுங்கள். பெரும்பாலும் All Users என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்போது Block List என்பதில் நீங்கள் கொடுத்த தளம் சேர்க்கப்பட்டு விடும். 


இப்போது குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்தால் கீழ் உள்ளவாறு வரும். 


இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம். Block செய்த பின் மென்பொருளின் Desktop Shortcut - ஐ நீங்கள் நீக்கி விடுவது நல்லது.

இதை மென்பொருள் இன்றி செயல்படுத்த - வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?
-பிரபு கிருஷ்ணா

அடிக்கடி வரும் Browser பிரச்சினைகளும், தீர்வுகளும்

இணையத்தில் நாம் இயங்க மிக முக்கியமான தேவை ப்ரௌசெர். நம்மையும் இணையத்தையும் இணைக்கும் இந்த மென்பொருள் சில சமயங்களில் நமக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணும், அவ்வாறு அடிக்கடி வரும் பிரச்சினைகளையும் அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் பார்ப்போம். 

1. Browser ஓபன் ஆகவில்லை 

கணினியை ஒரு முறை Restart செய்யுங்கள், Antivirus மென்பொருள் ஒன்றில் கணினியை Scan செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Ccleaner போன்ற மென்பொருள் மூலம் Cookies - ஐ Clear செய்யுங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Uninstall செய்து விட்டு Install செய்யுங்கள். 

2. தேவையில்லாத Toolbar - கள் 

இது நாம் நமக்கு வரவழைத்த பிரச்சினை, ஏதேனும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் போது (குறிப்பாக இலவச மென்பொருள்) இலவச இணைப்பாக இவையும் வந்து விடும். இன்ஸ்டால் செய்யும் போது சில இடங்களில் படித்து பார்த்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

இன்ஸ்டால் செய்யும் போது மறந்தவர்கள், Browser - இல் நீங்களாக நீக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலனவர்கள் எதிர்கொள்வது Babylon மற்றும் SweetIM. இதை எப்படி Remove செய்வது என்று ஏற்கனவே பதிவுகள் கற்போமில் உள்ளன. 
இவை தவிர வேறு ஏதேனும் என்றால், இதே முறையிலேயே அதன் பெயரை தேடி நீக்கலாம், அல்லது கூகுளை நாடலாம். 

3. படங்கள்/பக்கங்கள் சரியாக தெரியவில்லை

  • முதலில் உங்கள் இணைய இணைப்பு வேகமாக உள்ளதா என்று பாருங்கள், மிக குறைவான வேகம் என்றால் இந்த பிரச்சினை வரும். வேகமானது தான் என்றால் வேறு Browser-இல் ஓபன் செய்து பாருங்கள். 
  • தற்போதைய  ப்ரௌசெரில் நீங்கள் Images Load ஆவதை Enable செய்துள்ளீர்களா என்று பாருங்கள், Disable என்று இருந்தால் Enable செய்யுங்கள். பெரும்பாலும் இதன் மூலம் படங்கள் தெரியும். {அப்படியும் படம் வரவில்லை என்றால் குறிப்பிட்ட தளத்தில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. }
  • பக்கங்கள் தெரிவதில் தொடர்ந்து பிரச்சினை என்றால் Virus Scan, Cookies Clear, Computer Restart போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

4. மிக மெதுவாக இயங்குகிறது. 

  • எனது இணைய வேகம் அதிகமானது தான் ஆனால் குறிப்பிட்ட ப்ரௌசெர் மட்டும் அவ்வப்போது மெதுவாக இயங்குகிறது என்பவர்கள், செய்ய வேண்டிய விஷயம் Cookies Clear செய்வது. Browser Cookies-களை Clear செய்வது எப்படி? என்ற பதிவில் எப்படி என்று அறியலாம். 
  • இல்லை என்றால் வேறு ப்ரௌசெர்க்கு மாறுங்கள். 
  • தொடர்ந்து பிரச்சினை என்றால் உங்கள் கணினியில் RAM மெமரி அதிகப்படுத்த வேண்டும். 

5. Not Responding பிரச்சினை

இது பெரும்பாலோனோர் எதிர் கொள்ளும் பிரச்சினை, நீங்கள் பயன்படுத்தும் Add-on , Extension போன்றவற்றினால் இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ நீக்குவதன் மூலம் இதை சரி செய்து விடலாம். 

6. Java Script பிரச்சினை

இது Java Script Enable செய்யாது இருந்தால் வரும் பிரச்சினை. உங்கள் ப்ரௌசெரில் கண்டிப்பாக Java Script Enable ஆகி இருக்க வேண்டும், அப்போது தான் இது சரி ஆகும். 

7. ஆடியோ, வீடியோ Play ஆவதில் பிரச்சினை 

இது பெரும்பாலும் Plugin பிரச்சினை Adobe Flash மற்றும் சில இதில் தேவைப்படுபவை. வேறு எதையாவது Plugin Install செய்யும்படி சொன்னால், அது பாதுகாப்பானதா என்று பார்த்து விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோ, வீடியோ எதையும் YouTube மூலம் கேட்பதே/பார்ப்பதே பாதுகாப்பானது. சில பெரிய தளங்கள் Own Hosting செய்து இருந்தால் அவற்றை நம்பலாம் (BBC, CNET, etc). 

8. Update பிரச்சினை

சிலருக்கு புதிய Version இன்ஸ்டால் செய்த பின் தான் பிரச்சினை என்று சொல்வார்கள். இதில் நிறைய பேர் கவனிக்க தவறும் ஒரு விஷயம் ப்ரௌசெரின் எந்த Version - ஐ இன்ஸ்டால் செய்கிறோம் என்று தெரியாமல் இன்ஸ்டால் செய்வது. 

Firefox ப்ரௌசெர் Beta, Aurora, Full என மூன்று முறை ஒரு Version - ஐ வெளியிடும். இதில் Beta, Aurora போன்றவற்றை Developer Release என்று சொல்லலாம், அவை சில பிரச்சினைகளோடு உள்ள மாற்றங்களோடு வரும், Full Version - இல் தான் அவை களையப்படும். ஆனால் நாம் இதை இன்ஸ்டால் செய்து இருந்தால் ப்ரௌசெரில் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

இதே போல Chrome ப்ரௌசெர் Beta, Dev, Stable (Full) என்று மூன்று முறை ஒரு வெளியீட்டை வெளியிடும் இதில் Stable தான் எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும். மற்ற இரண்டும் சில பிரச்சினைகளோடு தான் வரும். 

எனவே உங்கள் ப்ரௌசெர் Beta, Aurora அல்லது Beta , Dev ஆக இருந்தால் அவற்றை Uninstall செய்து விட்டு Full Version - ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை சரி செய்யலாம். 

பெரும்பாலும் ப்ரௌசெர்களை Update செய்யுங்கள், Uninstall செய்து இன்ஸ்டால் செய்தால் தான் இந்த குழப்பம் வரும். Update செய்யும் போது Upto Date என்று வந்தால் ஓகே, இல்லை என்றால் தானாக Update ஆகி விடும். 

இவையே பெரும்பாலோனோர் Browser-களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். 

வேறு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவற்றை www.bathil.com - இல் தமிழில் கேட்பதன் மூலம் உடனடியாக தீர்வை பெறலாம். 

- பிரபு கிருஷ்ணா

Google Books - ஐ டவுன்லோட் செய்வது எப்படி?


Google வழங்கும் பயனுள்ள வசதிகளில் ஒன்று Books. இது இணையத்தில் பல புத்தகங்களை நமக்கு படிக்கும் வாய்ப்பை தருகிறது. இதில் இலவசமாக மற்றும் விலைக்கு என பல புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் இவற்றை நாம் ஏதேனும் ஒரு ப்ரௌசெரை பயன்படுத்தி மட்டுமே படிக்க முடியும். அவற்றை எப்படி pdf ஆக தரவிறக்கம் செய்வது என்று இன்று பார்ப்போம். 

கவனிக்க இதன் மூலம் கட்டணம் செலுத்தி வாங்கக்கூடிய புத்தகங்களை உங்களால் இலவசமாக டவுன்லோட் செய்ய முடியாது. இலவச புத்தகங்களை மற்றும் நீங்கள் வாங்கி உள்ள புத்தகங்களை டவுன்லோட் செய்யவே இது பயன்படும். 

1. முதலில் Google Books Downloader என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 

இன்ஸ்டால் செய்யும் போது இறுதியில் கீழே உள்ளது போல ஒரு பகுதி வரும். அப்போது Decline என்பதை கொடுத்து விடுங்கள், இதற்கு அடுத்தும் இதே போலத்தான். இரண்டு முறை Decline கொடுத்த பின் Installation முடிந்து விடும். 


3. இப்போது Google Books இல் நீங்கள் வாங்கிய புத்தகம் அல்லது இலவச புத்தகத்த்தின் முகவரியை இதில் கொடுக்க வேண்டும். உதாரணம் A Dictionary of Tamil Proverbs



இதில் என்ன Format மற்றும் Resolution போன்றவற்றை தெரிவு செய்து விட்டு, start என்பதை கிளிக் செய்யுங்கள். 


மேலே உள்ளது போல டவுன்லோட் ஆக ஆரம்பிக்கும். 

 - பிரபு கிருஷ்ணா

Youtube மூலம் Adsense கணக்கு உருவாக்குவது எப்படி?


சில மாதங்களுக்கு முன்பு Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்றொரு பதிவை எழுதி இருந்தேன். இதில் பலருக்கு இருக்கும் சந்தேகம் எப்படி Adsense கணக்கை உருவாக்குவது என்று. இன்று Youtube மூலம் எப்படி Adsense கணக்கை உருவாக்குவது என்று பார்ப்போம். 

Adsense கணக்கை உருவாக்கும் முன் நீங்கள் உங்கள் வீடியோக்களை Monetize செய்ய வேண்டும். 

1. முதலில் உங்கள் Video Manager பகுதியில் இருந்து Settings என்பதை கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் CHANNEL SETTINGS என்பதில் உள்ள Monetization என்பதை கிளிக் செய்யுங்கள். 

2. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Youtube பக்கம் இருக்கும். அதில் உள்ள Monetize Videos என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் Pop-up விண்டோவில் Overlay in-video ads, TrueView in-stream ads என்பதை மட்டும் தெரிவு செய்து Monetize கொடுங்கள். 


3. இப்போது உங்கள் Video Manager பகுதியில் வீடியோக்களில் பச்சை நிற $ Symbol ஒன்று தோன்றி  Monetize ஆகி இருக்கும், அல்லது Under Review என்று இருக்கும்.


4. குறைந்த பட்சம் ஒரு வீடியோ Monetize என்று வரும் வரை காத்திருங்கள். அதன் பின் மீண்டும் Settings >> Monetization செல்லுங்கள். அதில் "How will i be paid" என்பதை கிளிக் செய்யுங்கள், பின் "associate an AdSense account" என்ற லிங்க் மீது கிளிக் செய்யுங்கள். 

5. அடுத்த பக்கத்தில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Adsense Sign up பக்கத்துக்கு வந்து விடுவீர்கள். இதில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் Adsense கணக்கை உருவாக்கலாம். 


6. இனி நீங்கள் Adsense கணக்கை உருவாக்கி விடலாம். 

7. இந்த Adsense கணக்கு Hosted Adsense Account என்று இருக்கும். Youtube - இல் உள்ள உங்கள் வீடியோக்கள் மூலம் மட்டுமே நீங்கள் இந்த கணக்கில் சம்பாதிக்க முடியும். தளங்களில் பயன்படுத்த Adsense Settings பகுதியில் உங்கள் தள முகவரியை கொடுத்து Apply செய்து, Ad Codes-ஐ உங்கள் தளத்தில் Paste செய்ய வேண்டும். உங்கள் தளம் தகுதியானது என்றால் உங்கள் Adsense கணக்கை உங்கள் தளத்தில் பயன்படுத்த அனுமதி கிடைக்கும். 

சந்தேகம் இருப்பின் பின்னூட்டம் மூலம் கேளுங்கள். 

- பிரபு கிருஷ்ணா