கற்போம் | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

பேஸ்புக்கில் வரும் வைரஸை நீக்குவது எப்படி? | ஆபாச வீடீயோ/லிங்க்சில நேரங்களில் பேஸ்புக்கில் நீங்கள் அனுப்பியதாக உங்கள் நண்பர்களுக்கு ஆபாச வீடியோ/பக்கத்தின் இணைப்பு சென்று விடும். நீங்கள் தவறுதலாக க்ளிக் செய்த ஏதோ ஒன்றினால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கும். அது போல நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


இல்லத்தில் இருந்தபடியே இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி? - 1

ஆன்லைன் மூலம் பணம் சாம்பாதிப்பது என்றாலே நிறைய பேருக்கு ஏமாற்று வழியாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றும். ஏனென்றால் பெரும்பாலானவர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வீட்டில் இருந்தே பல்லாயிரம் சம்பாதிக்கலாம், விளம்பரங்களை கிளிக் செய்தல், சர்வேக்களில் பங்கெடுத்தல் போன்ற சில வழிகளை மட்டுமே அறிந்திருப்பீர்கள். அத்தோடு இதை செய்த சிலர் எதிர்பார்த்த பணம் வந்திருக்காது அல்லது ஃபிராடு பேர்வழிகளிடம் ஏமாந்திருக்க கூடும். ஆனால் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது இவை மட்டுமல்ல இவற்றை தாண்டி பல்வேறு முறைகள் உள்ளன. இந்த தொடரில் நான் எழுதப்போகும் அனைத்துமே நம்பகமானவை, நிறைய பேர் பணம் சம்பாதிக்கும் முறைகளும் கூட.

இந்த முறைகளின் மூலம் பணம் சம்பாதிக்க வெறுமனே கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் மட்டும் போதுமா என்றால் நிச்சயம் கிடையாது. நிறைய திறமையும் அவசியம். இங்கே கூறப்படுபவற்றில் எது உங்களுக்கு சரியாக வரும் என்று தோன்றுகிறதோ அதை மட்டும் செய்யுங்கள்.

ஏற்கனவே இணையம் பரிச்சயம் ஆனவர்களுக்கு நிச்சயம் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப் போன்றவற்றை பற்றி தெரிந்திருக்கும். இணையம் மூலம் சாம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவைதான் பெரிய உதவி செய்யும். இதற்கு மேல் கட்டுரையை வழவழவென்று இழுக்காமல் முக்கியமான பகுதிக்குள் செல்லலாம்.Download as pdf


கொளத்தூர் மெயில் பத்திரிக்கைக்காக பிப்ரவரி 2016இல் எழுதிய கட்டுரை.

ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!

இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.ஸ்கிரீன் லாக்!

எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.

இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.

என்க்ரிப்ட் வசதி!

மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.

ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!

செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/devicemanager என்ற முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.

அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!

பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில் வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முக்கியமான தகவல்கள் பத்திரம்!

உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில் பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!
குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை, பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.

குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.

அப்ளிகேஷன் லாக்!

முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.

இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.

ரூட் (Root) செய்ய வேண்டாம்!

போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வேறு வசதிகள் கிடைக்கும்.

ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.

பிரவுஸர்கள் எச்சரிக்கை!

போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.
அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.

அப்டேட் அவசியம்!

போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.

ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.

போன் தொலைந்துவிட்டால்..?

இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன் தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.
அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’ மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.

ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!

(23 நவம்பர், 2014 நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை)

நன்றி - செ.கார்த்திகேயன்.
- பிரபு கிருஷ்ணா

6,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள் [செப்டம்பர் 2014]

விலை குறைவாகவும், அதே சமயம் கொடுக்கும் விலைக்கு தகுந்த வசதிகள் உடைய பட்ஜெட் போன்களை விரும்பும் நபர்களுக்கு தான் இந்த கட்டுரை. 6,000 ரூபாய்க்கு குறைவாக இன்றைக்கு கிடைக்கும் சிறந்த 10 ஸ்மார்ட்போன்களை இந்த பதிவில் காண்போம்.Rank Mobile Name Price Features
10 Micromax Canvas Fire A093 Rs. 5,547 http://bit.ly/1rOqEXk
9 Xolo Q600 Rs. 5,750 http://bit.ly/1qnHC3A
8 Micromax A94 Canvas Mad Rs. 5,430 http://bit.ly/1tCDvOA
7 Spice Stellar Mettle Icon Mi-506 Rs. 5,513 http://bit.ly/1stIoeM
6 Spice Smart Flo Mettle 5X Mi-504 Rs. 5,107 http://bit.ly/1qNHjMU
5 iBall Andi4.5P Glitter Rs. 5,499 http://bit.ly/1wjuRJB
4 Micromax Canvas Unite A092 Rs. 5,349 http://bit.ly/1oxQ6zf
3 Lava Iris 406Q Rs. 5,449 http://bit.ly/1qnI3uF
2 Asus Zenfone 4 A400CG Rs. 5,999 http://bit.ly/1lYlDz8
1 Xiaomi Redmi 1S Rs. 5,999 http://bit.ly/X1HAkQ

கற்போம் ஏப்ரல் மாத இதழ் – Karpom April 2014

கற்போம் ஏப்ரல்மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:


 1. WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி ?
 2. ஜிமெயிலில் விளம்பர மெயில்களை படங்களாகப் பார்க்க Preview வசதி
 3. பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை
 4. Windows XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா? புதிய பதிப்பிற்கு மாறுவது கட்டாயம்
 5. தொலைபேசியை கையாளும் நல்ல முறைகள்
 6. இந்தியாவின் முதல் 4K வீடியோவை வெளியிட்டது சோனி நிறுவனம்
 7. ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்
 8. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி
 9. மங்கலான புகைப்படங்களை சரி செய்யும் இணையதளம்
 10. Moto X இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]
 11. ஆன்லைனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இணைய காமிரா !
தரவிறக்கம் செய்ய:


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
- பிரபு கிருஷ்ணா

Moto X இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]

அவ்வப்போது ஸ்டைலிஷான ஸ்மார்ட்போன்களை வெளியிடும் மோட்டோரோலா நிறுவனம் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிவித்த போன் Moto X. கடந்த மாதம் Moto G இந்தியாவில் வெளியான நிலையில், Moto X எப்போது இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் Moto G யை வெளியிட்ட Flipkart நிறுவனம் மூலமே இன்று Moto X இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை ரூபாய் 23999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.4 (KitKat) OS – ஐ கொண்டுள்ளது. இதில் தமிழில் படிக்க மற்றும் எழுத முடியும். 10 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Quick Capture Gesture, Clear Pixel Technology, Get the Shot: Twist Wrist Twice to Shoot போன்ற வசதிகள் உள்ளன.  இதில் Full HD வீடியோ ரெகார்டிங் செய்யலாம். அதே போல முன்னாலும்  ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதிலும் Full HD வீடியோ ரெகார்டிங் செய்ய இயலும்.

இது 4.7 inch AMOLED HD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, eCompass, Gyroscope, Ambient Light ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.7 GHz Krait Dual Core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16 GB.அத்தோடு இது 2200 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

ஸ்க்ரீன் லாக் ஆகி இருப்பினும் நோட்டிபிகேஷன்களை காட்டும் Active Display என்ற புதிய வசதி இதில் உள்ளது.  அதே போல வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் போனை தொடாமலேயே பல செயல்களை செய்யும் வசதியும் இதில் உள்ளது.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Moto X Specifications

Operating System Android, v4.2.2 (Jelly Bean)
Display 4.7 inch (720 x 1280 pixels) AMOLED capacitive touch screen
Processor 1.7 GHz Krait Dual Core Qualcomm MSM8960Pro Snapdragon Processor
RAM 2 GB RAM
Internal Memory 16/32 GB
External Memory No
Camera Rear Camera: 10 MP, autofocus, LED flash, Clear Pixel, Full HD (1080p) Recording
Front Camera: 2 MP, Full HD (1080p) recording
Battery Li-Ion 2200 mAh Battery
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

2 GB RAM,  10 MP கேமரா போன்றவை சிறந்த வசதிகள். இருப்பினும் Dual Core Processor, HD Display போன்றவை ஏமாற்றம் தருகிறது.  மற்ற போன்களுடன் இதை கம்பேர் செய்ய விரும்பினால் இங்கே செல்லவும் Moto X Specifications

இந்தியாவின் முதல் 4K வீடியோவை வெளியிட்டது சோனி நிறுவனம்

இதுவரை இந்தியாவில் Full HD எனப்படும் 1080p வகை வீடியோக்களை மட்டுமே ரசித்து வந்த நமக்கு முதல் முறையாக 4K UHD (2160p) வகை வீடியோவை முதல் முறையாக YouTubeஇல் அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம். 

"பாலிவுட் படங்கள் கூட இதுவரை 4K குவாலிட்டியை முயற்சி செய்யாமல் இருக்க முதல் முறையாக நாங்கள் தான் இந்தியாவில் YouTubeமூலம் இதை கொண்டு வந்துள்ளோம்" என்று சோனி நிறுவன மார்கெட்டிங் டைரக்டர் Sanujeet Bhujabal தெரிவித்துள்ளார். அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்று கேட்பவர்கள் கீழே உள்ள படத்தை பாருங்கள்.மேலே உள்ளவற்றின் ரெசொல்யூசன்களை கீழே காணுங்கள்.

VCD 352×288 Pixels
DVD 720×576 pixels
HD (720p) 1280×720 pixels
Full HD (1080p) 1920×1080 pixels
4K Ultra UD (2160p) 3840 × 2160 Pixels

தற்போது நாம் பயன்படுத்தும் வீடியோ ரெசொல்யூசன் 2K எனப்படும் 1080p ஆகும். இது அதிகபட்ச குவாலிட்டி. இந்தியாவில் நிறைய பேர் இன்னும் VCD குவாலிட்டியில் தான் பார்க்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 4K வீடியோ ரெசொல்யூசனுக்கும், நாம் பயன்படுத்தும் Full HD வீடியோ ரெசொல்யூசனுக்கும் என்ன வித்தியாசம் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெளிவாக புரியும்.இந்தியாவில் ரஹ்மானின் "ரானாக்" ஆல்பத்தில் இருந்து "Aabhi Jha" என்ற பாடலின் வீடியோ 4K குவாலிட்டியில் தற்போது YouTube இல் உள்ளது. அதை கீழே காணலாம்.


உங்கள் இணைய இணைப்பு வேகம் குறைவாக இருந்தால் குவாலிட்டி குறைவாக ப்ளே ஆகும். 4K வில் பார்க்க கீழே படத்தில் உள்ளபடி செய்யவும்.யாமி கெளதம் ரசிகர்களை வீடியோவில் உள்ள மற்ற விசயங்களையும் பார்க்குபடி கேட்டுகொள்கிறேன்.