கற்போம்: Softwares | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

McAfee Internet Security 2013 ஒரு வருடத்திற்கு இலவசமாக

McAfee Internet Security மென்பொருள் உங்கள் கணினிக்கு Viruses, Trojans, spyware, malware போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை தரும் மிக முக்கியமான ஒரு மென்பொருள். தற்போது அந்த நிறுவனம் இதை தன் பயனர்களுக்கு License உடன் ஒரு வருடம் இலவசமாக தருகிறது.



இது உங்கள் கணினியில் antivirus, anti-spyware, anti-bot மற்றும் two-way firewall protection ஆக இயங்கி உங்கள் கணினியை பாதுகாக்கிறது. இன்னும் பல்வேறு பயன்களை கொண்டுள்ள இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கும் போது பயன்படுத்தும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.

சிறப்பம்சங்கள் :

  • Real-time anti-virus, anti-malware, and anti-spyware protection.
  • Anti-bot protection.
  • Secure firewall.
  • PC tune-up.
  • Parental controls, anti-spam.
  • Automated file backup to a cloud-based safe deposit box.

இந்த Offer தற்போது Expire ஆகி விட்டது. கீழே உள்ள இணைப்பில் Trail Version - ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

டவுன்லோட் செய்ய: McAfee Internet Security 2013 Trail Version

இன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

மென்பொருட்களை நிறுவும் போது நாம் கொடுக்கும் Serial Number களை இன்ஸ்டால் செய்யும் நேரத்தோடு மறந்து விடுவோம். ஆனால் மீண்டும் அவை தேவைப்படும் போது இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ தேடிக் கொண்டிருப்போம். இந்த பிரச்சினையை தவிர்க்க அந்த தகவல்களை ஒரு மென்பொருள் மூலம் தெரிந்து கொண்டால் தேவைப்படும் போது பயன்படும் அல்லவா. அதற்கு பயன்படும் மென்பொருட்களை காண்போம். 




சீரியல் நம்பரை கண்டுபிடிக்க மிகச் சிறந்த மென்பொருள் என்றால் அது Belarc Advisor தான். Free Software என்பதோடு எந்த வித விளம்பரங்களும், டூல் பார்களும் இல்லாமல் வருவது இதன் ஸ்பெஷல். உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும்  எல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்களையும் இது கண்டுபிடித்து தரும். அத்தோடு அந்த மென்பொருட்களின் தற்போதைய Version, Security Update இன்ஸ்டால் செய்ய வேண்டி இருப்பின் அந்த தகவல்கள் என பலவற்றை தரும்.





இந்த மென்பொருளும் உங்கள் மென்பொருட்களின் Serial Number - களை கண்டுபிடித்து தரும். மிக எளிதாக கண்டுபிடித்து Text File ஆக நீங்கள் சேமித்துக் கொள்ளலாம்.

மற்ற சில மென்பொருட்களை கீழே காணலாம்.








10. RockXP

- பிரபு கிருஷ்ணா

Portable Application என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?


நாம் அனைவருமே ஒரு மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவோம். இதே ஒரு மென்பொருள் இல்லை என்றால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும்,அதற்கு நேரம் ஆகலாம். அவ்வாறு இல்லாமல் Pen Drive, Memory Card, External Hard Disk என எதிலிருந்து வேண்டுமானாலும் ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் தானே. 

Portable Application எனப்படும் இவற்றை ஒரு முறை நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து உங்கள் Pen Drive, Memory Card, External Hard Disk  போன்ற ஏதாவது ஒன்றில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை நீங்கள் எந்த கணினியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 

இவற்றின் பெரிய பலன் என்னவென்றால் சில கணினிகளில் உங்களுக்கு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் Access இல்லாமல் இருக்கலாம், அல்லது அந்த மென்பொருள் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு சோதனைக்கு மட்டும் நீங்கள் அந்த மென்பொருளை குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்த வேண்டி இருக்கும், ப்ரௌசிங் சென்டர், கல்லூரி, அலுவலகம் இம்மாதிரியான இடங்களில் உங்களில் இவை கை கொடுக்கும். 

இந்த பதிவில் Firefox Portable Browser - ஐ பயன்படுத்தி உள்ளேன். 

டவுன்லோட் செய்த மென்பொருளை முதலில் Pen Drive க்கு Copy செய்து அதில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்பு அது குறிப்பிட்ட மென்பொருள் பெயருடன் Portable என்று சேர்த்து ஒரு Folder ஆக Pen Drive - இல் இருக்கும். இப்போது நான் இன்ஸ்டால் செய்த Firefox கீழே உள்ளது. 


அடுத்து Firefox Portable மீது கிளிக் செய்தால் Firefox மென்பொருள் ஓபன் ஆகி விடும். ஏற்கனவே நீங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள Firefox ஓபன் ஆகி இருந்தால் அதை Close செய்து விட்டு இதை ஓபன் செய்ய வேண்டும்.



இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் போலவே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா. ஆம் அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

இதில் நீங்கள் இயங்குவது History - இல் Save ஆகும், Bookmark செய்து கொள்ளலாம். எல்லாமே உங்கள் Pen Drive - இல் தான் ஸ்டோர் ஆகும். மீண்டும் வேறு கணினியில் பயன்படுத்தும் போது இதே History, Bookmark போன்றவற்றை நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம். 

என்ன மென்பொருட்களை பயன்படுத்தலாம் ? 

இதில் எல்லா மென்பொருட்களையும் பயன்படுத்த முடியாத வசதி இருப்பினும் Chrome, Firefox, 7-Zip, Google Talk, FileZilla, Free Download Manager, GIMP, OpenOffice, LibreOffice, Inkscape, Skype, Sumatra PDF, TeamViewer, VLC, VirtualDub, WinRAR மற்றும் பல பயனுள்ள மென்பொருட்களை பயன்படுத்தலாம்.

பெரும்பாலான Open Source மென்பொருட்கள் Portable Version களை வழங்குகின்றன.

Portable மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய சிறந்த தளம் - Poratabe Apps

என்னென்ன மேன்பொருட்கள் என்ற லிஸ்ட் - List of portable software

The Web Blocker - குறிப்பிட்ட தளங்களை Block செய்ய உதவும் இலவச மென்பொருள்


இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை Block செய்ய வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். 

முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்து முடித்த Desktop - இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். 

அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும். 


இப்போது "Add Address to Block List" என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர் இடது பக்கம் User List என்பதில் எந்த User - க்கு இது பொருந்தும் என்பதையும் நீங்கள் தெரிவு செய்து "Block Address" என்பதை கிளிக் செய்யுங்கள். பெரும்பாலும் All Users என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்போது Block List என்பதில் நீங்கள் கொடுத்த தளம் சேர்க்கப்பட்டு விடும். 


இப்போது குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்தால் கீழ் உள்ளவாறு வரும். 


இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம். Block செய்த பின் மென்பொருளின் Desktop Shortcut - ஐ நீங்கள் நீக்கி விடுவது நல்லது.

இதை மென்பொருள் இன்றி செயல்படுத்த - வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?
-பிரபு கிருஷ்ணா

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?


கணினியில் நாம் பல மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறோம். சில நேரம் குறிப்பிட்ட மென்பொருளின் Licence Key - ஐ நாம் மறந்து விடுவோம். அதை இன்னொரு கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது முழித்துக் கொண்டிருப்போம். அதை தவிர்க்க எளிதாக Licence Key - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம். 

இதை ஒரு மென்பொருள் பயன்படுத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் Windows  license Key, Software and Games license Key போன்றவற்றை அறியலாம். 

1. முதலில் Weeny Free Key Recovery software என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள். 

2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது Babylon போல ஏதேனும் வந்தால் அதை தவிர்த்து விட்டு இன்ஸ்டால் செய்யவும். 

3. Install செய்து முடிந்தவுடன் அதை ஓபன் செய்தால், கீழே உள்ளது போல வரும். அதில் Windows License Key,  MS Office Key மற்றும் சில முக்கிய மென்பொருட்களின் Key  - ஐ காமிக்கும். 


4. எல்லா மென்பொருட்களின் Key - ஐயும் கான Scan Plus என்பதை கிளிக் செய்யுங்கள். 


5. தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

நன்றி - Tech Hints

- பிரபு கிருஷ்ணா

KM Player - VLC - க்கு மாற்றாய் ஒரு வீடியோ/ஆடியோ Player


என்னதான் VLC அதிகம் பயன்படுத்தப்படும் Multimedia Player ஆக இருந்தாலும் சிலர் அதற்கு மாற்றாய் வேறு ஒரு மென்பொருளை விரும்புவர். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு அருமையான மென்பொருள் என்றால் அது KM Player தான். 

கிட்டதட்ட அனைத்து வீடியோ மற்றும் ஆடியோ பார்மட்களையும் Play செய்யும் திறனுள்ள இது, Play ஆகும் போது கணினியில் குறைந்த அளவு மெமரியை மட்டுமே பயன்படுத்துகிறது. 

சிறப்பம்சங்கள்: 


  • 2D வீடியோக்களை 3D - யில் பார்க்கும் வசதி
  • Video Capture வசதி. இதன் மூலம் வீடியோ Play ஆகும் வீடியோவை Record செய்ய முடியும். AVI, MP4, MPEG2, MKV, FLV என பல Output Format - களில் இதை செய்யலாம். 
  • பெரும்பாலான Subtitle -களை Support செய்கிறது. 
  • Play செய்ய Codec - களை தன் வசமே கொண்டுள்ளது. 
  • Video Rotate, Effect வசதி  
  • Brightness, Contrast Adjust செய்யும் வசதி. 
மற்றபடி ஒரு Multimedia Player என்னென்ன வசதிகளை தருமோ அத்தனையும் இதில் உள்ளது. 

தரவிறக்க - http://www.kmpmedia.net/

Microsoft Office Professional Plus 2013 இலவசமாக டவுன்லோட் செய்ய


Office 2013 இந்த வருடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கும்  மென்பொருள். இதன் Professional Plus Version 2 மாதங்களுக்கு இலவசமாக டவுன்லோட் செய்யும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Word, PowerPoint, Excel, Outlook, OneNote, Access, Publisher, and Lync போன்றவை உள்ளடக்கம். 

இதை பயன்படுத்த Windows 7 அல்லது Windows 8 பயனராக இருக்கவேண்டும். அதே போல குறைந்த பட்சம் 1GB RAM பயன்படுத்த வேண்டும். கட்டாயம் தேவையான மற்ற விஷயங்கள் கீழே.

Requirements :


  • Processor :  1 Ghz or faster x86- or x64-bit processor with SSE2 instruction set
  • Memory (RAM) :  1GB RAM (32 bit); 2GB RAM (64 bit)
  • Hard Disk :  3GB Space
  • Display :  Graphics hardware acceleration requires a DirectX10 graphics card and 1024 x 576 resolution
  • Operating System : Windows 7, Windows 8, Windows Server 2008 R2, or Windows Server 2012
  • Browser : Microsoft Internet Explorer 8, 9, or 10; Mozilla Firefox 10.x or a later version; Apple Safari 5; or Google Chrome 17.x.
  • .NET version : 3.5, 4.0, or 4.5
இதை டவுன்லோட் செய்ய உங்களுக்கு ஒரு Hotmail அக்கௌன்ட் தேவை. Register செய்த பின் Activation Key அனுப்பப்படும். இது 32-bit மற்றும் 64-bit ஆகிய இரண்டிலும் இயங்கும். 


Thanks - Tech Shortly

 - பிரபு கிருஷ்ணா

Paint.net - இலவசமாய் ஒரு போட்டோ எடிட்டர்


Photoshop மென்பொருளுக்கு மாற்றாக இணையத்தில் ஏகப்பட்ட மென்பொருட்கள் கிடைக்கின்றன.  அவற்றில் மிக முக்கியமான ஒன்று Paint.net. இது கிட்டத்தட்ட Photoshop தெரியாதவர்களின் போட்டோஷாப் எனலாம். அவ்வளவு எளிமையான ஒன்று இது. இதைப் பற்றி இன்று பார்ப்போம். 

கீழே உள்ளது போன்ற எளிமையான தோற்றத்தில் தான் அது இருக்கும். 


இதன் Tools bar - இல் உள்ள அனைத்துமே மிக எளிதாக, பார்த்தவுடன் விளங்கும் வண்ணம் இருக்கின்றன.

மிக எளிதான இமேஜ் எடிட்டிங் வேலைகளுக்கு இது மிகவும் பயன்படும். முக்கியமாக Crop, Rotate, Resize images, Adjust colors, and Collages, போன்றவற்றுக்கு. மிகவும் உகந்தது.

அதே போல இதில் History, Layer, Colors, Tools என எல்லாவற்றுக்கும் தனித்தனி சிறிய வசதிகள் உள்ளன.



Special Effect - கள் வேண்டுவோருக்கு blurring, sharpening, red-eye removal, distortion, noise, and embossing போன்றவை உள்ளன.



Paint - ஐ விட அதிக வசதிகள் வேண்டுவோரும், Photoshop-இல் சிறு சிறு வேலைகள் செய்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.

சிறப்பம்சங்கள்: 

1. திறந்த மூல மென்பொருள் (Open Source Software)

2. மிக எளிதான Interface.

3. Screenshot Image - களை Edit செய்யும் வசதி.

4. வேகமான Performance.

5. Automatic Update

6. எளிமையான Special Effects

இதை டவுன்லோட் செய்ய - இங்கே கிளிக் செய்யவும்

- பிரபு கிருஷ்ணா

Install செய்த மென்பொருளை Uninstall செய்யாமல் வேறு டிரைவ்க்கு Move செய்வது எப்படி?

கணினியில் நிறைய மென்பொருள்களை பயன்படுத்தும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, C Drive - இல் மிக அதிகமான Software -களை இன்ஸ்டால் செய்துவிட்டு அது Full ஆனவுடன் என்ன செய்வது என்று திகைப்பது. இதனால் கணினி மெதுவாக இயங்க தொடங்கும். குறிப்பிட்ட Software - ஐ uninstall செய்துவிட்டு மீண்டும் வேறு டிரைவில் install செய்வார்கள் பலர். அப்படி இல்லாமல் C Drive இல் இருந்து நேரடியாக வேறு Drive க்கு மாற்ற ஒரு வசதி இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வசதியை பற்றி பார்ப்போம். 

NovaPDF Lite கட்டண மென்பொருள் இலவசமாக - [Free Giveaway]

PDF File-களை உருவாக்க நிறைய மென்பொருட்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான இலவச மென்பொருட்கள PDF File ஒன்றை உருவாக்கும் போது நமக்கு திருப்தி தராது. இதற்கான சிறந்த மென்பொருள் தான் NovaPDF. 50$ மதிப்புள்ள இது இப்போது இலவசமாக கிடைக்கிறது. 



இதன் சிறப்பம்சங்கள் : 

  • எந்த வகையான டாக்குமென்ட்டில் இருந்தும் PDF ஆக Convert செய்ய இயலும். (i.e. DOC, XLS, PPT, PUB, DOCX, XLSX, PPTX, PUBX, HTML, TXT,...),
  • உருவாக்கும் PDF File - க்கு Password கொடுக்கலாம். 
  • ஏற்கனவே உள்ள PDF File-களை Combine செய்யலாம். 
  • டாக்குமென்ட்டில் லிங்க் ஏதேனும் இருப்பின் PDF ஆக மாற்றிய பின் அவை வேலை செய்யும். 
  • பெரும்பாலான Font-களை சப்போர்ட் செய்கிறது. 
  • Microsoft® Office - இல் Add-on ஆக வேலை செய்யும். 
  • இமேஜ்/டெக்ஸ்ட் வாட்டர்மார்க் தரலாம். 
  • File Size ஏற்ற/இறக்கம் செய்யலாம். 
இதை தரவிறக்க, 

இங்கே - Download novaPDF

இலவச novaPDF Lite Registration Key பெற - Get novaPDF Lite v.7.6 for FREE!

இது செப்டெம்பர் 1 - 2012 வரை மட்டுமே. 

Photo Pos Pro Photo Editor - இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர்

Photo Pos Pro Photo Editor இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர்

Photo Pos Pro Photo Editor ஆனது போட்டோஷாப் போல ஒரு இமேஜ் எடிட்டர். நிறைய Picture Format-களை சப்போர்ட் செய்யும் இது போட்டோஷாப் போலவே நிறைய வேலைகளை நம் படங்களில் செய்ய உதவுகிறது. இது இலவசமாக கிடைப்பது நமக்கு பெரிய மகிழ்ச்சி. 

சிறப்பம்சங்கள் : 

  1. நிறைய Format-களை சப்போர்ட் செய்யும் வசதி. 
  2. Scanners, Digital Camera போன்றவற்றில் எடுத்த படங்களை சப்போர்ட் செய்கிறது. 
  3. மேம்பட்ட எடிட்டிங் டூல்ஸ் மற்றும் செயல்பாடுகள் 
  4. மிகத் துல்லியமான அளவுக்கு டிசைன் செய்ய உதவும் டூல்ஸ்
  5. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உருவாக்க உதவும் டூல்ஸ் 
  6. நிறைய வசதிகளுடன் டெக்ஸ்ட் டூல்ஸ் 
  7. ஸ்பெஷல் எபக்ட்ஸ் 
  8. எபக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி. 
மற்றும் பல. 


Prabu Krishna Rating: 4/5

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். 

Browser

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு. 

Antivirus  

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு. 

File Compression Software 

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள். 

Image/Graphics editor, paint program, and picture organizer

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை. 


கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள். 

Office Tools 

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை. 

இது கற்போம் தளத்தின் இருநூறாவது பதிவாகும். பலேபிரபுவாக 82 பதிவுகளும், கற்போம் ஆக 118 பதிவுகளும் எழுதி உள்ளோம். தொடர்ந்து ஆதரித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

-பிரபு கிருஷ்ணா

Collage Maker என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?


பேஸ்புக்கில் பகிர நிறைய படங்கள் இருக்கிறதா?. அவற்றை எல்லாவற்றையும் பகிர்ந்தால் நண்பர்கள் அனைத்தையும் பார்க்க முடியாது என்று நினைக்கிறீர்களா? எல்லா படங்களையும் ஒரே படத்தில் இணைத்து பகிர முடிந்தால் எப்படி இருக்கும்? அதற்கு உதவும் மென்பொருள்/பயன்பாடு பற்றிதான் இன்று பார்க்க போகிறோம். 

Collage Maker என்பது தற்போது பிரபலமாகி வரும் Digital Scrapbook மென்பொருள். இதன் மூலம் உங்கள் பல புகைப்படங்களையும் ஒன்றிணைத்து ஒரே படமாக மாற்ற முடியும். மிக அழகான Frame, Border, Template, Backgrounds, Clip Art மற்றும் பல Effect-களை உங்கள் படத்தில் சேர்க்க முடியும். 

இதை பல தளங்கள் ஆன்லைன் மூலம் செய்யும் வாய்ப்பை வழங்கி உள்ளன என்றாலும் சில மென்பொருட்களும் இதற்கு உள்ளன. நாம் பார்க்க உள்ளது Pic Monkey தளத்தில் எப்படி இதை உருவாக்குவது என்று பாப்போம்.

1. PicMonkey தளத்துக்கு முதலில் செல்லுங்கள். அதில் Create a Collage என்பதை கிளிக் செய்யுங்கள்.

2. இப்போது இடது புறம் கீழே உள்ளது போல 3 வசதிகள் இருக்கும்.


  • முதலாவதில் புகைப்படங்கள் upload செய்ய முடியும். 

  • இரண்டாவதில் புகைப்படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற Layout வசதி. இதில் எத்தனை புகைப்படங்கள் ஒரே படத்தில் நீங்கள் இணைக்க வேண்டும் என்று யோசித்து தெரிவு செய்யவும். 

  • மூன்றாவது படத்தின் பின்னணியை மாற்ற உதவுகிறது. 

முதலாவதில் மூலம் படங்களை Upload செய்யுங்கள், Layout மாற்ற வேண்டும் என்றால் மாற்றி விட்டு படங்களை Drag செய்து வலது புறம் போடுங்கள். 

படத்தை எங்கே வேண்டும் என்றாலும் போடலாம். போட்டு முடித்து விட்டு Save செய்ய. மேல் பகுதியில் உள்ள Save என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

மிக அருமையான Collage Photo ரெடி. நான் என் படங்களை கொண்டு உருவாக்கிய Collage Photo கீழே உள்ளது. PicMonkey தளத்தில் இதன் மூலம் நீங்கள் Facebook Cover Photo கூட உருவாக்க இயலும்.

படங்களை பார்த்து விட்டு யாருக்கேனும் கண் போனால் நிர்வாகம் பொறுப்பல்ல

இதை நீங்கள் மேலே முதல் படத்தில் உள்ளது போல செய்ய விரும்பினால் மற்ற தளங்களை பயன்படுத்தலாம்.

இதை செய்ய உதவும் மற்ற சில தளங்கள்:

  1. Photovisi
  2. Photo Collage
  3. Kizoa
  4. Picture2Life
  5. Postermywall
  6. Zefrank
  7. FotoFlexer
  8. fotonea
மென்பொருட்கள்: 

- பிரபு கிருஷ்ணா

Microsoft Security Essentials - சிறந்த இலவச ஆண்டி வைரஸ்


நம்மில் பெரும்பாலும் இலவச மென்பொருள்களையே பயன்படுத்த விரும்புவோம். முக்கியமாக ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் கட்டணமாக கிடைத்தாலும் அதன் இலவச வெர்சனை தான் பயன்படுத்துவோம். கட்டண மென்பொருள் என்பதை தாண்டி அவற்றின் அதிகபட்ச விலையும் இதற்கு ஒரு காரணம். இந்த நிலையில் ஒரு இலவச ஆண்டி வைரஸ் உங்கள் கணினிக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கினால்? 

ஆம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளான "Microsoft Security Essentials" தான் அந்த மென்பொருள். 2009 ஆம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே ஆண்டில் 3 கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டது இந்த மென்பொருள்.



சிறப்பம்சங்கள்:
  1. இலவச மென்பொருள் 
  2. மைக்ரோசாப்ட் நிறுவன தயாரிப்பு 
  3. computer viruses, spyware, Trojan horses and rootkits போன்ற பல வகையான  மால்வேர்களை நீக்குகிறது.
  4. கணினி வேகத்தை குறைப்பதில்லை. 
இது மட்டும் இன்றி மேலும் பல பயன்களை உள்ளடக்கியது இந்த மென்பொருள். 

இதை தரவிறக்கம் செய்ய என்ன வேண்டும்? 

Windows XP - 256 MB RAM & 500MHz Processor. 
Windows Vista & Windows 7 - 1GB RAM, 1GHz Processor. 

இது மேலே உள்ள மூன்று இயங்கு தளங்களிலும் இயங்கும். 

இதை எல்லாம் விட மிக மிக முக்கியமாக நீங்கள் Genuine Windows Operating System பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். 

கடைசி வரி நிறைய பேருக்கு வருத்தம் அளிக்கக் கூடியது, ஏன் என்றால் இது எல்லோராலும் முடியாது. ஒரு Operating System வாங்க மட்டும் குறைந்த பட்சம் 5000 ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும். இதை தான் Genuine Operating System என்று சொல்வார்கள். [இதன் மூலம் எண்ணிலடங்கா பயன் உள்ளது என்பது வேறு விஷயம்]. ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் தெரிந்தவர், நண்பர்கள் இவர்கள் மூலமே Operating System போட்டு இருப்போம். அப்படி செய்தவர்கள் இதை பயன்படுத்த இயலாது. 

ஆனால் தற்போது புதியதாக கணினி மற்றும் மடிக்கணினி வாங்கும் போது உங்களுக்கு இலவசமாக Genuine Operating System ஆனது தரப்படுகிறது. [பெரும்பாலான கணினி நிறுவனங்கள் இதை செய்கின்றன.] எனவே அவர்கள் இதனை தரவிறக்கம் செய்யலாம். 

என்னுடையது Genuine Operating System தானா என்று கண்டுபிடிப்பது எப்படி? 

இதற்கு இரண்டு எளிய வழிகள் உள்ளன XP பயனர்கள் இந்த இணைப்பில் சென்று செக் செய்யலாம். ஒரு அப்ளிகேசன் டவுன்லோட் ஆன பின்பு இதை செய்திடலாம். இதில் உறுதியானால் நேரடியாக Microsoft Security Essentials பக்கத்திற்கு நீங்கள் வந்து விடுவீர்கள். 

Windows 7 பயனர்களும் மேலே உள்ளதை செய்யலாம். அல்லது My Computer மீது ரைட் கிளிக் செய்து Properties பகுதிக்கு சென்று, அதில் கீழே உள்ளது போல வந்தால் உங்களுடையது Genuine OS ஆகும். 



உங்கள் OS Genuine தான் என்றால் இனி நீங்கள் Microsoft Security Essentials- ஐ தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

அதற்கான இணைப்பு -Microsoft Security Essentials

- பிரபு கிருஷ்ணா

MS Officeக்கு மாற்றாக சில இலவச மென்பொருட்கள்

நாம் அனைவரும் MS Office தான் அதிகமாக உபயோகிக்கிறோம். நாம்  Project செய்யும் பொழுதோ அல்லது presentation செய்யும் பொழுதோ MS Office ஐ தான் பெரிதும் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஆனால் இறுதி கட்டத்தில் MS Office இல் ஏதாவது பிரச்சனை என்றாலோ அல்லது நாம் பயன்படுத்த வேண்டிய கணினியில் MS Office இல்லாவிட்டாலோ பிரச்சினை தான். அதை தவிர்க்க, தரவிறக்கம் செய்யவும் குறைந்த அளவில் இலவசமாக கிடைக்கும் சில மாற்று மென் பொருட்கள் குறித்து பார்ப்போம். 


VLC Player செய்யும் விநோதங்கள் - 2

நேற்றைய பதிவில் VLC Player மூலம் Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி, Watermark கொடுப்பது எப்படி, Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி, Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி என்ற தகவல்களை பார்த்தோம். இன்று "Effects and Filters" பகுதியில் உள்ள வசதிகளை பற்றி காண்போம்.

VLC Player செய்யும் விநோதங்கள் - 1


VLC Player நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எல்லோரும் அதைப் பயன்படுத்தி தான் நமது வீடியோக்களை காண்போம். வெறும் வீடியோ ப்ளே செய்யும் வசதியை மட்டும் தராமல் இன்னும் நிறைய வசதிகளை கொண்டுள்ளது இது. அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள். 

1. Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி? 

சில சமயம் ஒரு வீடியோ நாம் ப்ளே செய்தால், அதில் உள்ளவர் பேசி முடித்த சில நொடிகள் கழித்தே ஆடியோ வரும். அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம். 

VLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.



2. Watermark ஆக நமது பெயர்/படம் கொடுப்பது எப்படி ?

சில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை ப்ளே செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம். 

Tools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம். (வீடியோ ப்ளே ஆகும் போது மட்டும் இவை)



3. Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி? 

நிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும். Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள். 

வரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவும். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து கீழே படத்தில் உள்ளது போல செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது) 

படத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும். 



4. Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி? 

இது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video --> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.


அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் அசத்தலான வசதிகள் பற்றி காண்போம். 

- பிரபு கிருஷ்ணா

முழு தளத்தையும் Screen Shot எடுப்பது எப்படி?

Screen Shot எடுப்பது பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். பல விசயங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் இதை எந்த மென்பொருளும் நிறுவாமலேயே பயன்படுத்த இயலும் என்ற போதிலும், அதை பயன்படுத்தி ஒரு முழு தளத்தையும் [scrolling ஆவதை] நம்மால் ஸ்க்ரீன் சாட் எடுக்க இயலாது. அதற்கு சில மென்பொருள்களை பயன்படுத்தி ஆக வேண்டும் . அதற்கு பயன்படும் மென்பொருள், தளம், Plug-in ஆகியவற்றை பதிவில் காண்போம்.

IOBit Uninstaller - Uninstall செய்ய முடியாத மென்பொருளை Remove செய்ய

சில நேரங்களில்  ஏதேனும் மென்பொருளை Uninstall செய்யும் போது ஏதேனும் பிரச்சினை வந்து அவை Uninstall ஆகமால் தகராறு செய்யும். அப்படி இடைஞ்சல் கொடுப்பவற்றை சாதாரண முறையில் Uninstall செய்ய இயலாது. எப்படி அவற்றை Uninstall செய்வது என்று பாப்போம். 

Delete செய்ய முடியாத Files & Folder-களை Delete செய்வது எப்படி?

சில சமயங்களில் கணினியில் குறிப்பிட்ட Folder/File போன்றவற்றை டெலீட் செய்யும் போது Access Denied என்று வரும். என்ன தான் பிரச்சினை என்று நமக்கு தெரியாது. ஆனால் டெலீட் செய்யவும் இயலாது.அதன் காரணத்தையும்  அவற்றை உடனடியாக டெலீட் செய்ய என்ன வழி என்று பார்ப்போம்.