மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு | கற்போம்

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு


இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம். 

1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும். 

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும். 

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும். இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும். 

5. Windows 7/Vista பயனாளிகள்
  • Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும். 
  • Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும். 
  • Language Bar க்கு வரவும். 
  •  Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும். 
  • இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும். 
6.Windows XP பயனாளிகள்
  • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும். 
  • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.           

  • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.  
  • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும். 
  • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும். 

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும். 


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்: 

Amma - அம்மா, 
karpom - கற்போம் 


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும். 

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும். 

33 comments

புதிதாக வருபவர்களுக்கு நிச்சயம் பயன்படும்

நட்புடன்
கவிதை காதலன்

Reply

நன்றி வாழ்த்துக்கள்....!!!

Reply

வணக்கம் நண்பரே

மிகவும் சிறப்பான பதிவு ஆனால் புதிதாக தமிழ் தட்டச்ச வருபவர்கள் தமிழிலேயே தட்டச்ச முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

நம் தாய் மொழியை தட்டச்ச மற்றொரு மொழியை தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பது நன்றாக இல்லை.

முடிந்தால் தமிழ் 99 விசை பலகையை முயன்றுபாருங்கள்

Reply

நல்லதொரு தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Reply

புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி
ஆங்கிலத்துக்கு மாற F12 ம் பயன்படுத்தலாம்.

Reply

இன்று வரை ஒலிபெயர்ப்பு முறையில் தான் தட்டச்சுகிறேன்.

விரைவில் தமிழ்99 கற்க முயல்கிறேன்..

நன்றி!

Reply

நல்ல விஷயம். பகிர்வுக்கு நன்றி பிரபு.

Reply

தேவையான பதிவு நண்பா.

Reply
@paramesh2006 mod

அருமையான பதிவு.உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன்.மிக்க நன்றி நண்பா.

Reply

புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி

Reply

pirayosanamaana pakirvu

Nanry NANBAA

Reply
சதீஷ் குமார் mod

நன்றி. தமிழில் டைப் செய்ய கற்றுக்கொண்டேன்.

Reply

நன்றி, மிகவும் அருமையாக உள்ளது

Reply

IPOLUTHU THINAMUM KATPOAM PADIKINRANE. NUNRIGAL. MMAHENDRAN.CANADA

Reply

மிக்க நன்றி

Reply

மிக்க நன்றி

Reply

ஆண்ட்ராய்ட் போனில் சாம்சங்ace யில் தமிழ் படிக்க முடிகிறது ஆனால் தமிழில் டைப் செய்வது எப்படி என தெரியவில்லை கொஞ்சம் சொல்லுங்களேன்...

Reply

ஆண்ட்ராய்ட் போனில் சாம்சங்ace யில் தமிழ் படிக்க முடிகிறது ஆனால் தமிழில் டைப் செய்வது எப்படி என தெரியவில்லை கொஞ்சம் சொல்லுங்களேன்...

Reply

இந்த பதிவை படியுங்கள்.

http://www.karpom.com/2012/09/Tamil-Unicode-Keyboard-for-android.html

Reply

நான் புதிய ஆண்ட்ராய்ட் டேப்லெட் வாங்கினேன் அதில் தமிழ் fonts தெளிவாக இல்லை எப்படி படிப்பது?

Reply

உங்கள் பிரச்சினையை அலைபேசி மூலம் சொல்லி உள்ளீர்கள். நானும் தீர்வை சொல்லி உள்ளேன் :-)

Reply

இப்போதுதான் தரவிறக்கம் செய்தேன். மிக்க நன்றி. என் நீண்ட நாள் கனவு மெய்பட்டது.பாபு கிருஷ்ணன் .

Reply

மிக்க நன்றி
எனக்கு மிக எளிமையாக இருக்கிறது இந்த தமிழ் தட்டச்சு

Reply

மிக்க நன்றி. ஆனால் ஒரு கேள்வி. எனது ப்ரவுசரில் தலைப்பும் வோர்ட் files பெயர்களும் சிறிய சதுரங்களாக வருகிறது. அது என் தமிழில் வரவில்லை . என்ன செய்வது?

Reply

வேறு ஏதேனும் Browser பயன்படுத்துங்கள்.

Reply

போட்டோசாப் தமிழில் பயன்படுத்த முடியவில்லை உதவவும்.??????வருகிறது

Reply

http://gsr-gentle.blogspot.in/2011/12/tamil-uniode-font-use-to-photshop.html

மேலே உள்ள இணைப்பில் பார்க்கவும்.

Reply

Post a Comment