கற்போம்: தொழில்நுட்பம் | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) என்பது என்ன?

இரும்பை பொன்னாக்கும் இரசவாத வித்தை என நாம் படித்திருப்போம். இந்த தனிமமாற்றம் (transmutation) வித்தையாக ஒரு சிலரால் பார்க்கப்பட்டாலும், பழைய கிரேக்கர், எகிப்தியர்கள், தமிழர்கள் இந்த முறையில் இருந்து மாறி, குறிப்பிட்ட உலோகங்கள் மேல் வேறொரு உலோகத்தைப் பூசுவதன் மூலம், செயற்கை முறையை அறிமுகப்படுத்தினார்கள்.



இந்த முறை அறிவியல் துறை உட்பட பலவற்றுக்கு பயன்படுகின்றன. ராக்கெட்டுக்கள் (thermal protection system (TPS) உட்பட பலவற்றை, உயர் வெப்ப நிலையில் இருந்து பாதுகாக்க, பல பொருட்கள் கலந்த பூச்சு முறை பயன்படுகிறது. விலை உயர்ந்த தங்க நகைகளை (covering) வாங்க முடியாத ஏழைகள் கூட இந்த பூச்சு முறையால் பயன்பெறுகிறார்கள். மேலே சொன்ன தனிமமாற்றம் முன்னர், சோதிடத்துடன் இணைந்து alchemy -இரசவாதம்- pseudoscience - என்று பெயரிலும் சிலர் பார்த்தார்கள். ஏனெனில் அன்று வாழ்ந்த மக்கள், இன்றும் கூட, உலகில் உள்ள மக்கள், கிரகங்களாலும், நட்சத்திரங்களாலும் கட்டுப்படுத்தப் படுகிறார்கள் என நம்பினார்கள், நம்புகிறார்கள்.

ஆனாலும் அறிவியல் முறையில் பார்த்தால், சில உலோகங்கள் இன்னொரு உலோகத்துடன் சேர்ந்து வேறொரு உலோகத்தை உருவாக்கும்.இது உலோகக் கலவை (மாழைக்கலவை- alloy) எனப்படுகிறது. உதாரணமாக பித்தளை (Brass = zinc + copper); வெண்கலம் (Bronze= copper+tin) போன்றவற்றை சொல்லலாம்.

உலகில் உள்ள உணவு,உடை,பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. இந்த அணுக்களை நம் கண்ணால் மட்டுமல்ல, குறைந்த அளவு மைக்ரொஸ்கோப் களால் கூடக் காண முடியாத சிறியவை. இவற்றை அறிவியல், scanning tunneling microscope (STM), atomic force microscope (AFM) போன்ற கருவிகள் மூலம் கண்டறிய முற்பட்டதன் விளைவு நானோ அறிவியல் தொழில்நுட்பம் உருவானது. இந்த தொழில் நுட்பத்தை அறியாமலேயே, நம்மவர்கள் முக்கியமாக, தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கோயில் கோபுரங்கள், தங்க,வெள்ளி நிறக் கலவைகள் மூலம் அழகு சாதனங்கள் என ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் வெள்ளையன் சொல்லாமல் தமிழன் சொன்னால் யார் தலையிலும், நம்மவர் தலைக்குள்ளும் ஏறாதே!.

ஒன்றும் அறியாத படிப்பறிவில்லாதவர்கள் என நம்மவர்களை, நம்மவர்களே ஒதுக்கி வைத்து விட்டாலும் கூட, நம் முன்னோர்கள், வானியல், மருத்துவம், கட்டிடக்கலை போன்றவற்றில் அரிய சாதனைகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டாலும், அவர்களால் அவற்றின் தொழில் நுட்பத்தை விளக்க முடியவில்லை. சமீப கால அறிவியலால் கண்டறியப்பட்ட, தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சியை, நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டனர்.(திருமந்திரம்)

இந்த வகையில் மூலகத்தையும், அணுவையும் (molecule,atom) ஏற்ப கையாள்வதன் மூலம் சில பொருட்களை, சக்தியை உருவாக்க முடியும் எனக் கண்டார்கள். இது Nano Technology என ஆரம்பமானது (நானோ என்றால் கிரேக்க மொழியில் குள்ளன்(dwarf) என்று பொருள்). நானோ அளவை கண்ணால் மட்டுமல்ல, குறைந்த அளவு மைக்ரொஸ்கோப்களால் கூடக் காண முடியாத சிறிய அளவு என்பதால், அளக்கும் முறை nanoscale எனப்படுகிறது. ஒரு அங்குலம் என்பது நானோ அளவில் 25,400,000 nanometers, ஒரு பேப்பர்(paper) 100,000 nanometers தடிப்பானது, ஒரு நானோமீட்டர் என்பது ஒரு மீட்டரின் one-billionth இல் ஒரு பகுதி ஆகும். இது (nanometer- nm ) நம்மால் எண்ணிப் பார்க்க முடியாத சிறிய அளவாகும்.

அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனப்படும் இந்த நானோ முறைக்கு நோபல் பரிசு பெற்ற Physicist "Richard Feynman" 1959 டிசம்பர் 29 இல், கலிபோர்னிய இன்ஸ்டிடுயுட் ஆஃப் டெக்னொலஜியில் (California Institute of Technology (CalTech), "There`s Plenty of Room at the Bottom" என்ற உரையின் மூலம் வித்திட்டார். இருப்பினும் நானோ தொழில் நுட்பத்தை, (nanotechnology) முதலில் 1974 இல் அறிமுகப் படுத்தியவர் டோக்கியோ அறிவியல் பல்கலைக்கழக (Tokyo Science University) பேராசிரியர் நொரியோ தனிகுச்சி (Norio Taniguchi) என்பவராவர். தற்போது இந்த நனோ டெக்னொலொஜி Nano-Sim, Chips,Nanowires, Carbon Nanotubes, Transistors, in medicine, Solar cells, இப்படி பலவற்றில் பாவிக்க முடிகிறது. சமீபத்தில் வந்த iphone5 இல் நானோ சிம் காட் போட முடியும்.

இந்த முறையினால், நிறை குறைவான, அதிக திறன் கொண்ட, ஒளித்தாக்குதல் குறைந்ததும், பெரிய பொருட்களில் உள்ள வேதிப்பொருள் தாக்கத்தை விட, கூடிய தாக்கத்தை( greater chemical reactivity) உடையனவாகவும், மிகக் குறைந்த மின்னிலும் வேலை செய்யக் கூடியதாகவும் உருவாக்க முடிகிறது.

இரு விரல்களை அழுத்துவதால் கிடைக்கும் மின்னில் இருந்து, கைத்தொலைபேசி சார்ச், சில நிமிட சூரிய ஒளியில் இருந்து கணினி இயக்கம் (கால்குலேட்டர் போல்), MRI போன்ற மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை இப்படி பல, மிகச் சிறியனவாக இருப்பதுடன், குறைந்த அளவு மின்சாரத்திலும் இயங்கப் போகின்றன.சுற்றுப்புற சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

மேற்சொன்ன Carbon Nanotubesகளை கணினி திரையில் பாவிப்பதால் Color, Contrast, Display சிறப்பாக இயங்குவதுடன், மெல்லிய எடை குறைந்த திரைகளை உருவாக்க முடிகிறது.

மொபைல்,லாப்டாப் பாட்டரிகளுக்குப் பாவிப்பதால், மிக விரைவாக சார்ச் செய்ய முடிவதுடன், நீண்ட நேரம் பாவிக்கவும், உழைக்கவும் கூடும். Titanium dioxide (TiO2) ,Zinc oxide (ZnO) போன்றவற்றை அழகுசாதனப் பொருட்களுக்கு பாவிப்பதால், ஊதா ஒளி, Ultraviolet light இதனால் உடலுக்கு ஏற்படும் கேடுகளில் இருந்து காப்பாற்ற நானொ பொருட்களான TiO2 and ZnO2 களை மாற்றி அமைத்து உருவாக்க உதவுகிறது.

வானொலிப் பெட்டிகளில் பாவிக்கப்பட்ட PNP,NPN Transistorsகளை எண்ணிப் பார்த்து விட்டு, 1971 இல் உருவான intel 4004இல், 2300 ட்ரன்சிஸ்டர்களை உபயோகித்ததை அதிசயத்துடன் பார்த்த தொழில்நுட்பம், இன்று 20 பில்லியன் ட்ரன்சிஸ்டர்களை (Six-core zEC12) CPU வில் பாவிப்பதை கண்டு அதிசயிக்கவில்லை. ஏனெனில் இதைவிட இன்னும் நானொ தொழில்நுட்பம் முன்னேறி வருவதுதான்.

சுருக்கமாக சொன்னால்,ஒரு தனிமத்தின்(element) மூலக்கூற்றையும், அணுவையும் (molecule+atom) முறையாகக் கையாள்வதன் மூலம் நானொ தொழில்நுட்பம் உருவாகிறது என்று சொல்லலாம். ஒரு அறையினுள் அடக்கப்பட்ட கணினி இன்று கையடக்க கணினியாக ஆகி விட்டது. இதே போல மிகப்பெரிய பொருட்களை கையாள்வதை விட, சிறிய அளவில் உள்ளவற்றை கொண்டு செயலாக்குவது சிறந்தது, உயர்ந்தது, பலம் மிக்கது என்பதே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும்.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

GPS என்றால் என்ன?

GPS (Global Positioning System ) என்ற வார்த்தையை நாம் இப்போது அடிக்கடி கேட்கிறோம். புவி இடம் காட்டும் அமைப்பு என்று தமிழில் அழைக்கப்படும் இது உலகத்தில் எந்த இடத்தையும் மிகத் துல்லியமாக வானில் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியும் கருவி ஆகும். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

GPS (Global Positioning System ) என்ற புவி இடம் காட்டும் அமைப்பு, ஒவ்வொரு சுற்றிலும் குறைந்தது இரண்டு தடவைகள் உலகை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் (man made stars-satellites) மூலம் தகவல்களை பயனாளிகளுக்கு தரும் முறையாகும். குறைந்தது மூன்று /நான்கிற்கு மேற்பட்ட கோள்கள் நமக்கு மேலே வந்து கொண்டிருக்கும். இந்த முறையில் 32 சாட்டிலைட்கள் செயலில் ஈடுபடுகின்றன. இவற்றில் 24 தொடர் இயக்கத்திலும்,சில பழுதடையும் போது பாவிக்கவும்,சில செயலில் ஈடுபடுத்த முடியாத நிலையிலும் உள்ளன. GPS முறையில் portable navigation devices, smartphone apps, GPS sports watches, sports shoes, maps , real-time services, HD Traffic, cars, ships, aircraft, OpenStreetMap (OSM) என பல வாங்கிகள் (Navigation Receiver) இயக்கப்படுகின்றன.




அக்டோபர் 4, 1957 இல் அப்போதய சோவியத் யூனியன் உலகின் முதலாவது சாட்டிலையிட்டை (ஸ்பூட்னிக்) வானில் ஏவியது. அமெரிக்கா தனது முதல் சாட்டிலயிட்டை (Explorer 1 ) 1958 ஜனவரி 31 இல் வானில் ஏவியது.

மேற்சொன்ன வாங்கிகளுக்கு (Receiver), அமெரிக்காவின் GPS பொதுவாகப் முறை பயன்பட்டாலும், வேறு இரண்டு நாடுகளாலும் GPS முறையில் வேறு பல பாவனைகளுக்காக தனியாக இயக்கப்படுகின்றன. அவை,

(1) Global Positioning System (GPS) அமெரிக்காவும்,

(2) Global navigation satellite systems (GLONASS) ரஷ்யாவும்,

(3) ஐரோப்பாவின் Galileo, Global Navigation Satellite System (GNSS).

சீனாவின் Compass சரியாக இயங்கவில்லை.

நான் எங்கிருக்கிறேன், எங்கே போகிறேன், நீங்கள் எங்கிருக்கிறீர்கள், இலக்கை அடைய சரியான வழி, எப்போது அங்கே செல்வேன் போன்ற கேள்விகளுக்கும் பதில் தருவதன் மூலம் இடங்கள் குறித்த சரியான தகவல்களை நமக்கு இது காட்டுகிறது. குழந்தைகளை பெற்றோர் கண்டறியவும்,அவர்களை அறியாது கண்காணிக்கவும், அப்படி கண்டறிவதன் மூலம் அவர்களிடம் செல்லவும், பாதுகாப்பாக அழைத்து வரவும், தவறான செயல்களில் ஈடுபடாது தடுக்கவும் GPS ஐப் பயன்படுத்துகிறார்கள். அதே போல் இணையத்தளங்கள், சமூக தளங்கள் இணைய பயனாளிகள் எங்கிருந்து இணையத்திற்கு வருகிறார்கள் என்பதையும் GeoLocation மூலம் கண்டறிகிறார்கள்.

இந்த 32 கோள்களும்,நிலத்தில் இருந்துஏறக்குறைய 20,200 - 26,600 கிமீ தூரத்தில்,ஆறு நீள்வட்டப் பாதையில், 11500கிமீ வேகத்தில் உலகை சுற்றுகின்றன. நமது வன்பொருளை (Receiver) ஐ இயக்கும் போது,நமக்கு மேலே உள்ள நான்கு கோள்களில் இருந்து தரவு சமிக்ஞைகளை carrier waves மூலம் பெற்றுக் கொள்கிறது.(carrier Frequencies, Digital Codes மற்றும் Navigation Message போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளது)

1960 இல் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் சோதனை முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு, 1970 இல் தரையில் இருந்தும் (The ground-based Omega Navigation System),
பின்னர் 1978 பெப்ரவரி 22 இல் சோதனை செயற்கைகோள் அனுப்பப்பட்டும்,1993 டிசம்பர்(08.12.1993 )முதல் 24 கோள்களுடன் செயல்பட ஆரம்பிக்கப்பட்டு,17.07.1995 முதல் முழு செயல்பாட்டிற்கும் கொண்டுவரப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை (DOD) அறிவித்தது. 2012 இல் 32 கோள்களாக உயர்ந்த இவை, 55 பாகை (degree) சாய்வாக, பூமியை சுற்றிவர எடுக்கும் நேரம், 11 மணி 58 நிமிடங்களாகும்..

இந்த GPS முறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது.

  • Space segment
  • Control segment
  • User segment


இதில் Space segment என்பது வானில் இயங்கும் செயற்கைகோள்கள் இருக்கும் பகுதி.

அடுத்து உள்ள Control segment பூமியில் இருந்து செயற்கை கோள்களின் இயங்கு பாதை, அவற்றின் செயல் போன்றவற்றை கட்டுபடுத்த இயங்கும் பகுதி.

User segment பகுதி தான் நம்மிடம் இருக்கும் கருவிகள். இவற்றின் மூலம் நாம் ஒரு இடத்தை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். கார், மொபைல்போன் உட்பட பல கருவிகளில் Map navigation வசதியாக இது தான் உள்ளது.



Distance = Velocity*Time என்ற அலகை வைத்து இவை கணக்கிடப்படுகிறது. இதில் GPS signal இன் Velocity ஒளியின் வேகமான 300,000 Km/s இலும், GPS transmissions frequencies 1575.42 and 1227.60 Mhz ஆகவும் (L-Band இல்) இருக்கும்.இவை Trilateration என்ற முக்கோண வடிவிலான முறையில் செயல்படுகின்றன.கோள்களில் Atomic Clocks பயன்படுத்தப்படுகின்றன.

இது தவிர தற்போது அமெரிக்காவில் இயங்கும், GPS இன் Wide Area Augmentation System -WAAS- இன் செயல்முறை மிகத் துல்லியமாக கணக்கிடுகிறது. இது விமானங்கள், aircraft, போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

ChromeCast, Crossbar - இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்

ChromeCast மற்றும் Crossbar இரண்டும் சமீபத்தில் அறிமுகமான புதிய தொழில்நுட்ப வசதிகள். இதில் ChromeCast கூகுள் நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதமும், Crossbar கடந்த ஆகஸ்ட் மாதமும் அறிமுகமானது. இரண்டையும் பற்றி இங்கே காண்போம். 

ChromeCast



Google ஜூலை மாதம் அறிமுகப்படுத்திய ChromeCast என்ற சிறிய பென்ட்ரைவ் dongle மூலம் தொலைக்காட்சியில் Netflix, HDTV—movies, TV shows, music, YouTube, Google Play, Chrome மற்றும் ஆடியோ/வீடியோ ஆகியவற்றை சிறிய கணினி, மடிக்கணினி, smartphone திரைகளில் பார்க்காமல் WiFi மூலம் HDMI Port வழியாக இணைத்து பெரிய TV திரையில் காணலாம். The Roku, Apple TV ஐ விட நன்றாகவும், 30/35 டாலரில் கிடைக்கவும் செய்கிறது. அமெரிக்காவில் செயல்படும் ChromeCast விரைவில் மற்றைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள்.

Crossbar Flash Memory - நானோ முறையில் இன்னொரு தொழில்நுட்பம்



Internal Memory எனும் Flash Memory இல் புதிய அறிமுகம் Crossbar Memory ஆகும். வழமைக்கு மாறாக GB இல் இருந்து 1TB வரையான Chip இல் சேமிப்பு, ஆனால் மிகச் சிறியதும், 20 மடங்கு குறைந்த மின்னைப் பயன்படுத்தி, 20 மடங்கு அதி வேகமாகவும், அதே சமயம் 140MB/s வேகமாக எழுதும் சக்தியும்,7 MB/s படிக்கும் சக்தியும் இந்த Crossbar Memory க்கு உள்ளது. இதை Crossbar நிறுவனத்தின் இணை அமைப்பாளரும், மிச்சிக்கன் பல்கலைக்கழக பேராசிரியருமான Wei Lu உருவாக்கி உள்ளார்.

இந்த புதிய200mm2 chip நினைவகம் மூலம் கையடக்க கருவிகளில் 250 மணி நேர HD வீடியோக்களை சேமித்து பார்க்கவும், 250,000 பாடல்களை சேமித்து கேட்கவும் முடியும். NAND based flash ற்கு மாற்றாக ReRAM (resistive random-access memory)- ( RRAM) மூலம் உருவாக்கி தொழில் நுட்பத்தில் புதிதாக கால் பதித்துள்ளது.



DR.Fujio Masuoka வால் உருவாக்கப்பட்ட,NAND Flash Memory (NAND gate (Negated AND or NOT AND) தொழில் நுட்பம், Digital cameras, portable MP3 players, USB (Flash) sticks போன்றவற்றில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. Crossbar தொழில்நுட்பம் இதற்கு மாற்றாக விளங்கக் கூடிய அற்புதமான தொழில்நுட்பம் என்று தொழில்நுட்ப வல்லுனர்களால் நம்பப்படுகிறது.

- சக்தி

இக்கட்டுரை கற்போம் வாசகர் "சக்தி" அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்

தென்கொரிய நிறுவனமான சாம்சங் குறித்து நாம் அனைவரும் அறிவோம். மின்னணு சாதனங்களுக்கு பெயர் பெற்ற இந்த அலைபேசி நிறுவனம் தற்போது உலகிலேயே முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தை சோதித்து பார்த்துள்ளது. இதன் மூலம் இப்போது நாம் பெறும் இணைய வேகத்தை விட பல மடங்கு அதிக  அளவுக்கு மிக வேகமான இணைய இணைப்பை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.

5G தொழில்நுட்பத்தை 28 GHz அலைகற்றையில் சோதித்து 1GB தகவலை ஒரே நொடியில் பரிமாறி உள்ளது சாம்சங். அதாவது இதன் மூலம் ஒரு முழு திரைப்படத்தை நாம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இது தற்போது நாம் பயன்படுத்தும் 2G மற்றும் 3G ஐ விட பல ஆயிரம் மடங்கு வேகம் ஆகும். சொல்லப் போனால் Broadband ஐ விடவும் மிக அதிக வேகம்.



இதன் மூலம் மிக அதிக தரமுள்ள HD வீடியோக்களை மிகக் குறைந்த நேரத்தில் பரிமாற்ற முடியும், அதே போல 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்க்க முடியும், Ultra HD வீடியோக்களை Real-time streaming மூலம் பார்க்கலாம்.

இது 2020 முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்தியா, சீனா போன்ற பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் 4G தொழில்நுட்பமே வந்திராத நிலையில் 5G என்பது நமக்கு எப்போது கிடைக்கும் யூகிக்க முடிகிறதா?

- பிரபு கிருஷ்ணா

ஆனந்த விகடன் வரவேற்பறையில் கற்போம் தளம்


பாராட்டுகளும், அங்கீகாரங்களும் எப்போதும் ஆபத்தானவை. நம்முடைய கடந்த காலத்துக்கு கிடைத்த வெற்றி என்று நாம் நினைத்தாலும், நாம் எதிர்காலத்தில் எப்படி செயல்படுவோம் என்பதை தீர்மானிக்கும் சூழ்நிலையும் உருவாகும். அப்படியான இடத்தில் இருக்கிறேன் நான். 

கற்போம் தளம் குறித்தும், இதழ் குறித்தும் மின்னஞ்சல் மூலமாகவும், அலைபேசி மூலமாவும் நிறைய பேரின் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. அவற்றுக்கெல்லாம் மகுடமாக இன்று தமிழத்தில் மிக அதிகம் பேர் வாசிக்கும் வார இதழான ஆனந்த விகடன் வரவேற்பறை பகுதியில் கற்போம் தளம் குறித்த செய்தி வந்துள்ளது. 

06-02-2013 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் (சமந்தா படம் அட்டையில் உள்ள  இதழ் ;-) ) 37 - ஆம் பக்கத்தில் கீழே உள்ள பகுதி இருக்கும். 

தொழில்நுட்பம் கற்போம். www.karpom.com 
ஒவ்வொரு நாளும் நம் கைகளுக்குப் புதிய கணினியும், புதிய அலைபேசியும் வந்து சேர்கிறது. நவீனத் தொழில்நுட்பங்கள் நிறைந்த அந்தக் கருவிகளின் முழுப் பயனையும் நாம் அனுபவிப்பது இல்லை. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள எளிமையாகக் கற்றுத்தருகிறது இந்த வலைதளம். ஒரு ஆண்ட்ராய்டு அலைபேசியில் அவசியம் இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் எவையெவை, அவற்றை எங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம் என்பது முதல், இணைய உலகில் ஒவ்வொரு நாளும் வந்து இறங்கும் புதிய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருட்கள்பற்றிய அறிமுகமும் உடனுக்குடன் தரப்படுகிறது.  'உங்களிடம் இருந்து ஃபேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது?’ என்ற கட்டுரையில், நமது தனிப்பட்ட தகவல்கள் எப்படி கரன்ஸியாக உருமாறுகின்றன என்பதைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது!

ஒரு பதிவராக மிகப் பெரிய அங்கீகாரத்துக்கு அந்தரத்தில் மிதந்த நான் இனி நிறைய பேர் கவனிப்பார்கள் என்ற பயம் வந்தவுடன் தானாய் பூமிக்கு வந்துவிட்டேன்.  

கற்போமில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் யாரோ ஒருவருக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் தான் பகிரப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வாசிப்பும், பாராட்டும் தான் இன்று விகடன் வரை கற்போமை கை பிடித்து அழைத்து சென்றுள்ளது. 

விகடனுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இது நாள் வரையில் கற்போமை விமர்சித்த, ஆதரித்த, பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பிய சேலம் தேவா அண்ணாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :-)

நன்றி !!!

- பிரபு கிருஷ்ணா

ஒரு Google Plus Community-யில் இருந்து வெளியேறுவது எப்படி?


பேஸ்புக் குரூப் போல, கூகுள் பிளஸ் கம்யூனிட்டிகளில் நம்மை தேவை இல்லாதவற்றில் சேர்த்து விட வாய்ப்பு உள்ளது. அப்படி சேர்ந்து விட்டால் அதன் பின் Notifications  தொல்லையை Off செய்தாலும், அதில் இருக்க விரும்பாதவர்கள் அந்த கம்யூனிட்டியை விட்டு வெளியேறலாம். எப்படி என்று பார்ப்போம். 

1. உங்கள் Google Plus கணக்கில் நுழைந்து Communities என்பதை கிளிக் செய்யவும்.

2. Your communities என்பதற்கு கீழே உள்ளது நீங்கள் சேர்ந்துள்ள Communities. எதிலிருந்து நீங்கள் வெளியே வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதன் மீது கிளிக் செய்யுங்கள்.

3.இப்போது குறிப்பிட்ட Community ஓபன் ஆன பிறகு, அதன் படத்துக்கு கீழே Actions என்று ஒன்று இருக்கும். அதன் மீது கிளிக் செய்து Leave Community என்பதை கிளிக் செய்யுங்கள்.


4. அடுத்து இதை நீங்கள் Confirm செய்ய வேண்டும். அவ்வளவே.


5. மீண்டும் சேர வேண்டும் என்றால் Join Request கொடுத்து Join ஆகலாம்.

குறிப்பிட்ட Community - யில் வரும் ஈமெயில்களை தடுக்க - Google Plus Community Email Notification-களை Turn Off செய்வது எப்படி?

- பிரபு கிருஷ்ணா

Google Plus Community Email Notification-களை Turn Off செய்வது எப்படி?


Google Plus புதிதாக Community என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய பின் நிறைய பேர் உங்களை புதிது புதிதாக எதாவது Community உருவாக்கி அவற்றில் சேர்க்க வாய்ப்புள்ளது. 

அவற்றில் நாம் சேர்ந்தவுடன் தொடர்ந்து பல மின்னஞ்சல்கள் வந்து நமக்கு தொல்லை தந்து கொண்டிருக்கும். இந்த பதிவில் எவ்வாறு அந்த Email Notification-களை Off செய்வது என்று பார்ப்போம். 

1. உங்கள் Google Plus கணக்கில் நுழைந்து Communities என்பதை கிளிக் செய்யவும். 

2. Your communities என்பதற்கு கீழே உள்ளது நீங்கள் சேர்ந்துள்ள Communities. எதிலிருந்து Notifications வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதன் மீது கிளிக் செய்யுங்கள். 

3. இப்போது குறிப்பிட்ட Community ஓபன் ஆன பிறகு, அதன் படத்துக்கு கீழே Notifications Icon (Bell Symbol) இருக்கும்.


4. அதில் On என்பதன் மீது கிளிக் செய்தால் Off என்று ஆகி விடும். அதன் பின் குறிப்பிட்ட Community - யில் இருந்து எந்த ஈமெயிலும் வராது. 


குறிப்பிட்ட Community - யில் இருந்து வெளியேற - ஒரு Google Plus Community-யில் இருந்து வெளியேறுவது எப்படி?

- பிரபு கிருஷ்ணா

Google Playல் டவுன்லோட் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி?


3,000 ரூபாய்க்கே ஆண்டிராய்ட் போன் கிடைக்கும் இன்றைய சூழ்நிலையில்  ஆண்டிராய்ட் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

பயனாளிகள் அதிகமாக அதிகமாக சில பொதுவான பிரச்சனைகள் வெளியில் வரத்தெரியும். அது போன்ற ஒன்று தான் Google Play ஆப்ஸ் டவுன்லோட் ஹிஸ்டரி, இன்று கிட்டத்தட்ட லட்சம் ஆண்டிராய்ட் ஆப்ஸ்கள் நமக்கு கிடைக்கிறது. அதில் பெரும்பகுதி ப்ரீ ஆப்ஸ். அதாவது நாம் நிறைய ப்ரீ ஆப்ஸ் இன்ஸ்டால் செய்து கொண்டே இருப்போம் சில நாட்களுக்கு பிறகு அதை நீக்கி விடுவோம். 

சில நாட்களுக்கு பிறகு நாம் நீக்கிய ஏதாவது ஒரு அப்ளிகேசன் தேவைப்படும் அது தேடினாலும் கிடைக்காது. சரி  டவுன்லோட் ஹிஸ்டரியில் தேடலாம் என்றால் நாம் பயன்படுத்திய நூற்றுகணக்கான ஆப்ஸ்கள் ஒவ்வொன்றாக பார்க்க வேண்டும். அதற்கு ஒரு தீர்வாக வந்தது தான் Google Playல் டவுன்லோட் ஹிஸ்டரியை அழிக்கும் புது வசதி. இதன் மூலம் நீங்கள் அவ்வப்பொழுது  தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்கிவிடலாம்.

 உங்களின் ப்ளே ஸ்டோரில் உள்ள My Apps ஆப்சனை தெரிவு செய்யுங்கள் 
அதில் Installed, All என்று இரண்டு பகுதிகள் இருக்கும். Installed ல் நீங்கள் தற்பொழுது பயன்படுத்திகொண்டிருக்கும் ஆப்ஸ்களை காண்பிக்கும், Update வசதியினை கொடுக்கும்.



All என்ற பகுதியில் நீங்கள் இன்ஸ்டால் அன் இன்ஸ்டால் செய்த அனைத்து ஆப்ஸ்களையும் காண்பிக்கும்.

மேலே உள்ள படத்தை கவனியுங்கள் Free க்கு மேலே உள்ள வட்டவடிவ சின்னத்தில் பிரஸ் செய்தால் கீழ்கண்டவாறு கேட்கும் 


கொஞ்ச நேரம் குறிப்பிட அப்ளிகேசனை அழுத்தி பிடித்தால் உங்கள் போன் சிறிது நேரத்தில் வைப்ரேட் ஆகும் அதன் பின்பு நீங்கள் நிறைய ஆப்ஸ் டவுன்லோட் ஹிஸ்டரியை ஒரே நேரத்தில் அழிக்கலாம்.

சூர்ய பிரகாஷ் .K.P

Instagram Photo-க்களை டவுன்லோட் செய்வது எப்படி?

Smartphone வைத்து இருப்பவர்களில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் Application Instagram. புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த தளத்தில் நாம் படங்களை டவுன்லோட் செய்ய முடியாது. கணினி மூலம் அதை செய்ய உதவும் Application பற்றி பார்ப்போம். 

1. முதலில் InstagramDownloader என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. RAR File - ஐ Extract செய்த பின்பு Application - ஐ Run செய்யவும். 

3. இப்போது குறிப்பிட்ட நபரின் User Name கொடுப்பதன் மூலம் அவர்களின் படங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். 


4. அவை ஒரு Notepad File ஆக Save ஆகி இருக்கும். அதை ஓபன் செய்து அதில் உள்ள முகவரிகளை உங்கள் உலவியில் paste செய்து படங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


5. நான் டவுன்லோட் செய்த பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் அவர்களின் போட்டோ. 



- பிரபு கிருஷ்ணா

பதில்.காம் - கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க

கேள்விகள் சுவாரஸ்யமானவை அதன் பதில்களை பொறுத்து. தொழில்நுட்ப பதிவர் என்று வந்த பிறகு நிறைய நண்பர்கள் மின்னஞ்சல், அலைபேசி, வலைப்பூ மூலம் நிறைய கேள்விகள் கேட்க அதன் அடிப்படையில் பதில் அளித்து வருவது தொழில்நுட்ப பதிவர்களின் வழக்கம். ஏன் கேள்வி கேட்க ஒரு பொது மேடை அமைக்க கூடாது என்று தோன்றிய கேள்விக்கு தான் பதில்!.காம். 


இரண்டு நாட்களுக்கு முன்பு "பிளாக்கர் நண்பன்" அப்துல் பாசித் சகோவிடம் பேசும் போது இது குறித்து கேட்டேன். எப்போதும் எங்களது புதிய முயற்சிகளை இருவரும் விவாதிப்பது வழக்கம். அதன் அடிப்படையில் எப்படி உருவாக்கலாம் என்று யோசித்ததில் ஏன் இருவருமே சேர்ந்து இதை உருவாக்க கூடாது என்று நினைத்து, அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் டொமைன் வாங்கி, சைட் தயார் செய்து இரண்டே நாளில் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.



இதனை ஆரம்பிக்க மிக முக்கிய காரணம், நண்பர்கள் சந்தேகங்களை கேட்கும்  போது சில சமயம் அவற்றை ஒரு பதிவாக எழுத முடியாத அளவிற்கு சிறியதாக இருக்கும், இல்லை என்றால் கேட்கும் ஒருவருக்கும் தெரியும் படி மின்னஞ்சல் மூலம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

இனி நீங்கள் கேட்கும் கேள்வி மற்றவருக்கும் தோன்றினால் அவர் பதில்! மூலம் தீர்வை பெறலாம். அதே சமயம் இதில் நானோ, பாசித் மட்டுமோ பதில் அளிக்க போவதில்லை சேரும் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு தெரிந்த பதிலை கூறுவார்கள். இதனால் ஒரே கேள்விக்கு பல வகையான பதில்கள் கிடைக்கும், ஒன்று வேலை செய்யாவிட்டால் மற்றொன்று என்று கேள்வி கேட்டவருக்கும் இதில் பெரிய பலன்.

இப்போது உங்கள் வேலை, தளத்தில் Register செய்துவிட்டு எங்களிடம் கேள்வி கேட்பது மட்டுமல்ல, உங்களுக்கு தெரியாத கேள்விகளை அங்கே கேளுங்கள், தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளித்து மற்றவர்களுக்கும் உதவுங்கள். அதற்காக எல்லோரும் பதில் சொல்ல வேண்டியது என்பது கட்டாயம் அல்ல.

இந்த தளத்தில் உங்கள் பேஸ்புக் கணக்கு வாயிலாகவும் நுழைய முடியும்.

தற்போதைக்கு தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகளை மட்டுமே அனுமதித்துள்ளோம். உங்களை ஒத்துழைப்பு, பங்களிப்பு போன்றவற்றை பொறுத்து மற்ற வகையான கேள்வி - பதில்களும் வரலாம்.

சில நிபந்தனைகள்:
  1. Piracy குறித்த கேள்விகளை தவிர்க்கவும். 
  2. முடிந்த வரை கேள்விகளை தமிழில் கேட்கவும்.[தமிழில் எழுத தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்கலாம். உங்கள் கேள்வியை தமிழில் மாற்றி விடுவோம். ]
  3. தளத்திற்கு சம்பந்தமில்லாத Spam வகையான பகிர்வுகளை பகிர வேண்டாம். 
நேற்று பிளாக்கர் நண்பன் தளத்தில் இது குறித்த எழுதப்பட்ட கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே! பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 

பதில்! தளத்தில் பகிரப்படும் சில கேள்வி-பதிலகள் கற்போம் இதழிலும் பிரசுரம் செய்யப்படும். 

பதில்! பேஸ்புக் பக்கம்: 



ட்விட்டரில் பதில்! - https://twitter.com/bathilgal

உங்கள் ஆதரவுடன், 
பாசித் & பிரபு. 

Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [Android Phone இல்லாதவர்களுக்கும்]


முன்பு ஒரு பதிவில் Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி? என்று சொல்லி இருந்தேன். அந்த தளத்தில் நிறைய Apps இன்னும் வராத காரணத்தால் மற்ற பல App-களை  பயன்படுத்த வழி உள்ளதா என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். அதற்கான தீர்வை இன்று பார்ப்போம். 

இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம். 

1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 

3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம். 



4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள "Search Icon" மீது கிளிக் செய்து தேடலாம். 

5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும். 

நான் பயன்படுத்தும் Talking Tom, 


உங்களிடம் Android Phone இருந்தால்,

6. உங்கள் Android Phone - ஐ இந்த மென்பொருள் உடன் இணைக்க முடியும். வலது கீழ் மூலையில் உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் "Cloud Connect" என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் "Do you have a Android Phone" என்பதற்கு Yes தெரிவு செய்து Next கொடுங்கள். 

7. வரும் பகுதியில் BlueStacks - கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு 9 இலக்க Pin Number ஒன்று வந்திருக்கும். 

8. இப்போது உங்களுக்கு BlueStacks- இல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கும். அடுத்து உங்கள் Android Phone - இல் நீங்கள் BlueStacks Cloud Connect என்ற Application - ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

9.  Application - ஐ இன்ஸ்டால் செய்து 9 இலக்க Pin Number - ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம். 


10. Log - in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App - களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும். 


இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App - களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம். 

11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை. 

இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

- பிரபு கிருஷ்ணா

ஜிமெயில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்

ஜிமெயில் தான் நிறைய பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை ஆகும். வெறும் மின்னஞ்சல் அனுப்புதல் பெறுதல் என்பதோடு மட்டுமின்றி மற்ற பல அரிய வசதிகளையும் இதில் நாம் பயன்படுத்த முடியும். எல்லாமே மின்னஞ்சலுடன் தொடர்புடையது என்ற போதிலும் மற்ற மின்னஞ்சல் சேவை தளங்களில் இவற்றை நாம் பயன்படுத்தும் வசதி இல்லை. அவற்றை பற்றி பார்ப்போம். 

1. ஈமெயில் forward/Redirect செய்வது எப்படி?

நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து இருப்போம்.  சில நேரங்களில் சில மின்னஞ்சல் முகவரிகளை அடிக்கடி ஓபன் செய்து பார்க்காவிட்டால், கல்யாணத்துக்கு வரச்சொல்லி வந்த மின்னஞ்சலை நாம் வளைகாப்புக்கு பார்க்க வேண்டி வரலாம்(அனுபவம்).  இதை தவிர்க்க ஒரே மின்னஞ்சல் முகவரியில் நம்முடைய அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படிக்க முடிந்தால்? அந்த வசதி பற்றிய பதிவு தான் ஈமெயில் forward/Redirect செய்வது எப்படி?

2. From Address மாற்றி மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

மேலே உள்ள பதிவில் ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி  Forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப மீண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் Receive செய்த முகவரியில் இருந்தே From Address மாற்றி அனுப்ப முடிந்தால்? அது எப்படி என்பது தான் From Address மாற்றி மின்னஞ்சல் அனுப்புவது எப்படி?

3. To, Cc, Bcc - என்ன வித்தியாசம்? 

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc. அவற்றை பற்றிய பதிவு To, Cc, Bcc - என்ன வித்தியாசம்? 

4. Gmail/ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts

இணையத்தில் இன்று பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் ஈமெயில் என்றால் அது ஜிமெயில் தான். இதில் நீங்கள் shortcut கள் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்கள் நேரம் குறையும். சில முக்கிய Shortcut களை Gmail/ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts என்ற பதிவில் காணலாம்.

5. Gmail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?

நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை தேவை இல்லாத நபர்களிடம் இருந்து நமக்கு மின்னஞ்சல்கள் வருவது. சில சமயம் உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்துள்ளது என்று கூட வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 மெயில்கள் இது போன்று வந்தால் எரிச்சலாகதான் இருக்கும். அவற்றை எப்படி Gmail Filters கொண்டு தடுப்பது மற்றும் அதன் மற்ற பலன்கள் என்ன என்பது பற்றிய பதிவு - Gmail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?

6. Attach செய்ய முடியாத File-களை ஜிமெயிலில் Attach செய்வது எப்படி?

நண்பர்களுக்கு ஏதேனும் File-களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முயலும் போது சில Format-களை ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால் வேறு வழிகளை நாம் தேட வேண்டி வரும். அப்படி இல்லாமல் எளிதாக அவற்றை ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று வழி பற்றிய பதிவு - Attach செய்ய முடியாத File-களை ஜிமெயிலில் Attach செய்வது எப்படி?

7. பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?

சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக்கின்  பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால்  அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு. இதுவே  பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை Access செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா? எப்படி என்பதை சொல்லும் பதிவு தான் பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?

8. ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?


இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பலவற்றின் அர்த்தம் தெரியாமல் இருப்போம். அதே ஜிமெயில் முழுவதையும் தமிழில் மாற்ற முடிந்தால்?  இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். எப்படி செய்வது என்பதை ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவில் அறியலாம்.

9. ஜிமெயிலில் Undo Time Limit- ஐ அதிகரிப்பது எப்படி?


ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படுகிறது. அதே போல ஒரு மின்னஞ்சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit - ஐ எப்படி அதிகரிப்பது என்ற பதிவு தான் ஜிமெயிலில் Undo Time Limit- ஐ அதிகரிப்பது எப்படி?

- பிரபு கிருஷ்ணா

கற்போம் நவம்பர் மாத இதழ் (Karpom November 2012)


கற்போம் நவம்பர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள். 

இந்த மாத கட்டுரைகள் : 


  1. SOFTWARE எதுவும் இல்லாமல் CD/DVD BURN செய்வது எப்படி?
  2. கூகுள் மேப்பில் ஒரு இடத்தை அல்லது ஊரை சேர்ப்பது எப்படி ?
  3. கணினியின் மூளை MICROPROCESSOR – பற்றி அறிவோம்
  4. MS OFFICE - இல் ஒரு டாகுமென்ட்க்கு PASSWORD கொடுப்பது எப்படி ?
  5. ஜிமெயிலில் அனுப்பிய மெயிலை திரும்பப் பெற உதவும் UNDO வசதி
  6. இந்திய ஆன்ட்ராய்ட் டெவலப்பர்களுக்கு சந்தோஷ செய்தி
  7. தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்
  8. MS OFFICE - இல் AUTO SAVE வசதியை ENABLE செய்வது எப்படி? [WORD, PPT, EXCEL]
  9. பிட்.. பைட்... மெகாபைட்....!
  10. பேஸ்புக்கில் ஒரு PAGE உருவாக்குவது எப்படி?
  11. PAYTM FOR ANDROID - ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய உதவும் அப்ளிகேஷன்


தரவிறக்கம் செய்ய:

ஒரே நேரத்தில் File ஒன்றை பல File Sharing தளங்களில் Upload செய்வது எப்படி?


இணையத்தில் File களை பகிர நிறைய தளங்கள் உள்ளன. சில நேரங்களில் நாம் நமது File - களை நம் தள வாசகர்களுக்கு அல்லது குறிப்பிட்ட சிலருக்கு அனுப்ப நினைக்கலாம். அவற்றை ஒரே தளத்தில் Upload செய்வதால் சில நேரங்களில் எல்லோராலும் அவற்றை Download செய்ய முடியாத நிலை வரலாம். எனவே பல தளங்களில் அவற்றை பகிர்ந்தால் Download செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.  

இதற்காக ஒவ்வொரு தளமாக அலைந்து கொண்டிருக்காமல் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பல தளங்களில் பகிர முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை செய்ய நமக்கு சில தளங்கள் உதவுகின்றன. அவை என்னென்ன என்பதே இந்த பதிவு. 

1. NKupload


இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 10 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.

2. Flash Mirrors


இதன் மூலம் ஒரே நேரத்தில் 30 File Sharing தளங்களில் Upload செய்ய முடியும்.

3. Mirror Creator



இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 30 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.

4. Gazup



இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 6 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.

5.Qooy



இந்த தளம் மூலம் 15 File Sharing தளங்களில் Upload செய்யலாம். ஆனால் ஒரே நேரத்தில் ஏதேனும் 6 File Sharing தளங்களில் மட்டுமே Upload செய்ய முடியும்.

6. Upload Mirrors



இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 15 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.

Thanks - Tech Hints

இந்திய Android App Developers-க்கு சந்தோஷ செய்தி


ஆன்ட்ராய்ட் பயனர்கள் அனைவருக்கும் Home Page என்றால் அது Google Play தான். கிட்டத்தட்ட 7 லட்சம் Applications இருக்கின்றன. அதில் பல இலவசம் என்ற போதும் சில கட்டண முறையிலும் கிடைகின்றன. அவற்றையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். 

அத்தகைய கட்டண மென்பொருட்களை விற்க இதுவரை குறிப்பிட்ட நாடுகளை மட்டுமே கூகுள் அனுமதித்து வந்தது. அந்த பட்டியலில் கடந்த மாதம் இந்தியாவை இணைத்தது, ஆனால் மறுநாளே இந்தியா நீக்கப்பட்டு விட்டது. இது குறித்து கூகுள் எந்த செய்தியும் வெளியிடவில்லை.

ஆனால் மறுபடியும் இந்தியா Paid Application - களை விற்கும் நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை Google Play Developers வலைப்பூவில் அதன் மேனேஜர் Mr. Brahim Elbouchikhi அறிவித்துள்ளார். 

இது மட்டும் Google Play தளத்தில் இந்தியர்களின் பங்கு குறித்து சுவாரஸ்யமான விசயங்களையும் அவர் சொல்லி உள்ளார். 

  • கடந்த வருடம் Google Play தளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது. 
  • கடந்த ஆறு மாதத்தில் இந்தியாவை சேர்ந்த Android Users டவுன்லோட் செய்த Applications எண்ணிக்கை அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளை அதிகம். 
  • Applications Download செய்வதில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.  
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே இந்திய Android App Developer களுக்கு தங்கள் Application - களை விற்கும் வசதியை Google Play தந்துள்ளது. 

ஏற்கனவே உங்கள் Apps இலவசமாக கொடுக்கப்பட்டு இருந்தால் இனி அவற்றை Monetize செய்ய முடியும், புதிய Apps களை Paid App ஆக விற்க முடியும். 

அதோடு இந்திய ரூபாயை Google Play தளத்தில் Support ஆகும் படி மாற்றி உள்ளதால் கட்டண App-களை வாங்கும் நபர்களுக்கும் இனி எளிதாக இருக்கும். 

கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை ஆகாது. காரணம் இது அதிகாரப்பூர்வ அறிவுப்பு, அதோடு பல வசதிகள் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றிய பின் தான் இந்த அறிவிப்பே வந்துள்ளது. 

நீங்களும் ஒரு Android App Developer என்றால் உங்களுக்கு வாழ்த்துகள் :-) 

Thanks - Tech Hints

- பிரபு கிருஷ்ணா

ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?


மின்னஞ்சல் கணக்கு என்பது இணையத்தில் உலவும் அனைவருக்கும் மிக மிக அவசியமான ஒன்று.அதற்கு ஜிமெயில் நமக்கு பெரிதும் உதவுகிறது. இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பலவற்றின் அர்த்தம் தெரியாமல் இருப்போம். அதே ஜிமெயில் முழுவதையும் தமிழில் மாற்ற முடிந்தால்? 

இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். 

1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும். 


2.  இப்போது "General" Tab இல் இருப்பீர்கள். இதன் முதல் வசதியாக "Language" என்பது இருக்கும். 



3. இப்போது அதில் "Gmail display language" என்பதில் தமிழ் மொழியை தெரிவு செய்யுங்கள். அடுத்து "Would you also like to make Tamil you language for other google sites " என்பதற்கு Yes or No கொடுத்து விட்டு  Scroll செய்து கீழே வந்து Save Changes என்பதை கொடுத்து விடுங்கள். 

இனி ஜிமெயில் முழுக்க முழுக்க தமிழ் மொழிக்கு மாறிவிடும். ஆங்காங்கே மிகச் சில ஆங்கில சொற்கள் இருந்தால் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்துமே தமிழ் அல்லது ஆங்கில உச்சரிப்பின் தமிழ் வார்த்தையில் இருக்கும். என்னுடைய ஜிமெயில் பக்கம் கீழே படத்தில் உள்ளது.



இனி உங்களுக்கு எளிதாக ஜிமெயிலை நீங்கள் உபயோகிக்க முடியும். 

4. இல்லை நான் ஜிமெயிலை ஆங்கிலத்தில் பயன்படுத்த விரும்புகிறேன், ஆனால் எனக்கு அதில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் அதற்கான வசதி உள்ளது. 

5. மேலே Step - 2 இல் உள்ள படத்தில் "Show All Language Options" என்று உள்ளதல்லவா அதை கிளிக் செய்து, "Enable input tools" என்பதை கிளிக் செய்து செய்யுங்கள். இப்போது ஒரு சிறிய விண்டோ வந்து input tools என்ன இருக்கிறது என்று காட்டும். தமிழுக்கு மூன்று வகையான Tools உள்ளன. 


இதில் Unicode முறை வேண்டும் என்பவர்கள் முதலாவதாக உள்ள "தமிழ்" என்பதை பயன்படுத்தவும். Inscript Keyboard பயன்படுத்த விருப்பம் உள்ளவர்கள் இரண்டாவதையும், போனெடிக் முறைக்கு மூன்றாவதையும் பயன்படுத்தலாம்.  முன்பு Unicode முறை மட்டுமே கொடுத்து இருந்தார்கள். இப்போது மற்ற இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கும் இது உதவும்.

இப்போது OK கொடுத்து பின்னர் Save Changes என்பதை கொடுத்து விடுங்கள். 

இப்போது உங்கள் புதிய மின்னஞ்சலில் தமிழில்  தட்டச்சு செய்ய வலது மேல் புறம் Settings Icon க்கு அருகில் கீழே படத்தில் உள்ளது போல உள்ளத்தில் "த" என்பதை கிளிக் செய்து விட்டு தட்டச்சு செய்யலாம். 


அவ்வளவே. இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

பேஸ்புக்கை தமிழில் பயன்படுத்த இதை பதிவை படிக்கவும் - Facebook- இதெல்லாம் கூட இருக்கா?

- பிரபு கிருஷ்ணா

MS 2010 - இல் Power Point Presentation - ஐ வீடியோ ஆக Convert செய்வது எப்படி?


MS Power Point மூலம் நாம் பல விதமான வேலைகளை செய்து வருகிறோம். சில சமயம் நாம் உருவாக்கும் Presentation - களை வீடியோ ஆக convert செய்யும் தேவை வரலாம். 

MS Office 2003 மற்றும் 2007 பயன்படுத்துபவர்கள் இதை செய்ய வேறு ஏதேனும் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். இதற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. முக்கியமானவை Wondershare PPT to Video Converter, Xilisoft PPT to Video Converter. 

இதே நீங்கள் MS Office 2010 பயன்படுத்தினால் இதை நேரடியாக செய்யலாம். 

1. உங்கள் Presentation வேலைகளை முடித்த பின்னர் File மீது கிளிக் செய்யுங்கள். 


2. இப்போது Save & Send என்பதில் Create a Video என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. அடுத்து உங்கள் வீடியோ Quality தெரிவு செய்து Save செய்து விடவும். 


4. இப்போது ஒரு Slide எவ்வளவு நேரம் என்று நீங்கள் Set செய்து விட்டு "Create Video" என்பதை கொடுத்தால் போது வீடியோவாக Save ஆகி விடும். 

Thanks - Tech Hints

- பிரபு கிருஷ்ணா