PicMonkey - ஆன்லைன் போட்டோ எடிட்டிங் தளம் | கற்போம்

PicMonkey - ஆன்லைன் போட்டோ எடிட்டிங் தளம்

Image களை edit செய்யும் வேலை எல்லோருக்கும், எப்போதும் அவசியமான ஒன்று. இந்த வேலையை ஆன்லைனில் செய்ய Picnik தளம் இருந்தது. ஆனால் இன்று முதல் (19-04-2012) அதன் சேவை நிறுத்தப்படுகிறது. அதை டிசைன் செய்தவர்கள் உருவாக்கி உள்ள புதிய தளம் தான்  PicMonkey . மிக எளிதான எடிட்டிங் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்ய நமக்கு இது உதவுகிறது. 


இந்த தளத்தில் நீங்கள் Resgiter செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

PicMonkey என்ற இந்த தளத்துக்கு செல்லுங்கள், உங்கள் படத்தை Upload செய்யுங்கள், என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களே அதை செய்யுங்கள். .


இதில் நீங்கள் ஏழு வகையான எடிட்டிங் group உள்ளது.

  • Basic Edits,
  • Effects,
  • Touch Up,
  • Text,
  • Overlays,
  • Frames,
  • Textures.
Basic Edits:

இதில் Crop, Rotate, Exposure, Colors, Sharpen, Resize போன்ற வசதிகள் இருக்கும்.

Effects :

இது நிறைய Filter-களை கொண்டுள்ளது. அனைத்துமே அருமையாக உள்ளது.உங்கள் படத்திற்கு ஒரு Dramtic look கொடுக்க இது பயன்படுகிறது. .

Touch Up

மிகவும் அசத்தலான வசதி, எளிய முறையில் செய்யும் வசதியை தந்து உள்ளனர். இனி Fair&Lovely பக்கமெல்லாம் போக வேண்டாம் விடுங்க, இரண்டு நிமிடத்தில் நீங்கள் இதுலேயே சிவப்பழகை பெறலாம். :P

Text

உங்கள் Text தகவல்களை நீங்கள் இதில் தரலாம். பெரும்பாலும் ஆங்கிலம், சில Font-கள் தமிழை Support செய்கின்றன.

Overlays:

உங்களுக்கு பிடித்த Symbols, Design கள் போன்றவற்றை படத்தில் சேர்க்க இது உதவுகிறது.

Frames:

படத்திற்கு ஏற்ற Frame இதில் Choose செய்யலாம்.

Textures:

இதுவும் படத்திற்கு Dramtic look கொடுக்க இது பயன்படுகிறது. .


இன்னும் நிறைய இலவச வசதிகள் வரப்போகின்றன என்ற அறிவுப்பும் உள்ளது. ஆன்லைனில், அதுவும் இவ்வளவு வசதிகளை தரும் தளம் இது மட்டுமே என்று நினைக்கிறேன்.

கீழே உள்ளது அதில் எடிட் செய்தது. (பெரிதாக காண இதன் மீது கிளிக் செய்யவும்)


தளத்தின் முகவரி - PicMonkey

- பிரபு கிருஷ்ணா

5 comments

சூப்பரா இருக்கு சகோ.!

Reply

அருமையான தகவல்.., நன்றி பகிர்வுக்கு..,

எடிட்டிங் செய்யப்பட்ட போட்டோ அற்புதம் ..!

Reply

அசத்தலான தளம் நன்றி சகோ

Reply

நன்றி சகோ

Reply

Post a Comment