விண்டோஸ் உள்ள கணினியில் Ubuntuவை Pen Drive மூலம் இன்ஸ்டால் செய்வது எப்படி? | கற்போம்

விண்டோஸ் உள்ள கணினியில் Ubuntuவை Pen Drive மூலம் இன்ஸ்டால் செய்வது எப்படி?

Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் மூலம் இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம். 

முதலில் உங்கள் கணினியில் Ubuntu OS-இன் ISO File இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அல்லது இங்கே டவுன்லோட் செய்து கொள்ளவும்.  Ubuntu 12.04 LTS 32 bit


அடுத்து உங்கள் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகி விடுங்கள். இப்போது Pen Drive Linux's USB Installer என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 

இதை Run செய்யும் போது Step-1 இல் எந்த OS என்று கேட்கும், உங்கள் கணினியில் ஏற்கனவே நீங்கள் டவுன்லோட் செய்துள்ள Ubuntu Version-ஐ இதில் நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். 


அடுத்து நீங்கள் தெரிவு செய்த OS உங்கள் கணினியில் எங்கு உள்ளது என்று Step-2 மூலம் தெரிவு செய்ய வேண்டும். 

Step-3 யில் உங்கள் பென் டிரைவை தெரிவு செய்ய வேண்டும். [Pen Drive க்கு என்ன லெட்டர் என்று பார்த்து தெரிவு செய்யவும்]

Step- 4 தேவை இல்லை. 


இப்போது Create என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவே சிறிது நேரத்தில் நீங்கள் Process முடிந்த பின், நீங்கள் டவுன்லோட் செய்த Ubuntu-வை உங்கள் Pen Drive மூலம் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம். 

USB மூலம் Boot ஆகவில்லை என்றால், கணினி ஆன் ஆகும் போது [Press F2 For BIOS எனும்போது ] F12 என்பதை அழுத்தவும். இப்போது Boot Menu வரும் அதில் "USB Boot" என்பதை தெரிவு செய்ய வேண்டும். 

இப்போது பென் டிரைவ் உங்கள் கணினியில் செருகி இருக்க வேண்டும். இனி இன்ஸ்டால் ஆகி விடும். 

- பிரபு கிருஷ்ணா

8 comments

நல்ல தகவல் நண்பா., பகிர்வுக்கு நன்றி.!

Reply

நான் பயன்படுத்தியதில்லை... ஆனாலும் என் நண்பருக்கு உதவும் பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...(த.ம. 3)

Reply

தகவலுக்கு நன்றி பிரபு - இருப்பினும் எனக்குத் தற்போது தேவை இல்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

நல்ல தகவல் பகிர்வு. நன்றி பிரபு.

Reply

பகிர்வுக்கு நன்றி பிரபு, பயன்படுத்த ஆசை ஆனால் பயம் இப்பொதைக்கு, முயற்சிக்கிறேன்.

Reply

pen drive இல் windows XP எப்படி நிறுவுவது என்று சொல்லித்தர முடியுமா?

Reply

Nandri.thakavalukku

Reply

முயற்சியுங்கள்...

ஒரு முறை உபுண்டு பயன்படுத்தத் துவங்கி விட்டால், விண்டோஸ் பக்கம் மாறவே மனம் வராது..
வாழ்த்துகள்!!

Reply

Post a Comment