Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்வது எப்படி? | கற்போம்

Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்வது எப்படி?


எப்போதும் எதற்குமே ஒரு மாற்று நமக்கு அவசியம் ஆகிறது.கணினியை பொறுத்த வரையில் அதில் முக்கியமானது OS இன்ஸ்டால் செய்வதற்கு மாற்று வழிகள். சில வேளைகளில் நமது DVD Drive இயங்கவில்லை என்றாலோ அல்லது DVD Drive இல்லை என்றாலோ Pen Drive மூலம் மட்டுமே OS இன்ஸ்டால் செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று இன்று பார்ப்போம்.

பென் டிரைவ் ஆனது நமக்கு பல விதங்களில் பயன்படுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். இதற்கு முன்னர் பென் டிரைவை எப்படி RAM ஆக பயன்படுத்துவது என்று பார்த்து இருந்தோம். 

இப்போது OS Install செய்ய எந்த பென் டிரைவை பயன்படுத்துகிறீர்களோ அதை உங்கள் கணினில் சொருகி ஒரு முறை Format செய்து விடவும். தொடர்ந்து கணினியிலேயே அது இருக்கட்டும். 

1. முதலில் இந்த இணைப்பில் சென்று WinSetupFromUSB என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யவும். 

2. RAR File ஆக டவுன்லோட் ஆகும் இதனை  Extract செய்து அதில் உள்ள Setup - ஐ Run செய்யவும். [இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை]

3. இப்போது கீழே உள்ளது போல அந்த மென்பொருள் இருக்கும். அதில் உங்கள் Pen Drive Detect ஆகி இருக்கும். 



4.  இப்போது உங்கள் பென் டிரைவ் பெயருக்கு கீழே Add To USB disk என்று உள்ளத்தில் உங்கள் Windows XP/Vista/7 Setup File ஐ நீங்கள் தெரிவு செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே DVD யில் உள்ளவர்கள் நேரடியாக அதனை தெரிவு செய்யலாம்.[நண்பர்களுக்கு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இது பயன்படும்.

இல்லை என்றால் OS-இன் ISO File-ஐ உங்கள் கணினியில் இருந்து தெரிவு செய்ய வேண்டும். இப்போது கீழே உள்ளது போல தெரிவு ஆகி இருக்கும். 


5.  உங்களுக்கு எதை தெரிவு செய்தீர்களோ அது மட்டும் தெரிவு ஆகி இருக்கும். இப்போது GO என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

6. சில நிமிடங்களில் உங்களுக்கு கீழே உள்ள சிறிய விண்டோ வரும். 


அவ்வளவு தான் இனி உங்கள் பென் டிரைவ் மூலம் OS இன்ஸ்டால் செய்து விடலாம். 

[XP பயனர்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் Comment Box மூலம் அது குறித்து சொல்லவும்]

- பிரபு கிருஷ்ணா

28 comments

பிஸி.. படிக்க முடியலை... ஓட்டு மட்டும் தான் :)

Reply

For windows 7, we don't need these tools and all. Just format the pen drive / memory card and copy all contents from Windows 7 DVD and boot it. It will work. :)

Reply

பயனுள்ள பகிர்வு ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM 4)

Reply

பல நாட்களாக தேடி கொண்டிருந்த பயனுள்ள தகவல் பதிவை பகிர்ந்த உங்களுக்கு நன்றி

Reply

பயனுள்ள பதிவு! வாழ்த்துக்களும் நன்றியும்!

Reply

நச் பதிவு நண்பா.!

Reply

http://i40.servimg.com/u/f40/15/50/69/32/usb10.jpg
இப்படி வருகிறது எப்படி சரி செய்வது

Reply

நீங்கள் DVD மூலம் முயற்சி செய்தீர்களா? ISO File மூலம் ஒரு முறை முயற்சி செய்ய இயலுமா?

Reply

many more thanks to PRABU sir...

Reply

பயனுள்ள பதிவு. Pen Drive மூலம் முன்பு லினக்ஸ் பயன்படுத்தி பார்த்தேன். எளிதாக இருந்தது.

Reply

முயற்சித்து விட்டு சொல்கிறேன் தம்பி.

Reply

நன்றி சார்.

Reply

நன்றி நண்பா.

Reply

நன்றி நண்பா. நீங்கள் என்னை பிரபு என்றே அழைக்கலாம். சார் எல்லாம் வேண்டாமே.

Reply

நன்றி சகோ.

Reply

ISO என்பது DVD யில் இருந்து Image ஆக எடுக்கப்பட்ட File. அதில் முயற்சி செய்யலாம். உங்கள் முறைக்கு விரைவில் தீர்வை தேடித் தருகிறேன்.

Reply

மற்றும் ஒரு சந்தேகம் தமிழ் பிளாக்கர்க்கு google adsence code போட்டால் விளம்பரங்கள் வருவது இல்லை .ஆனால் உங்கள் தலத்தில் வருகிறது அது எப்படி என்று சொல்ல முடியுமா ? சொன்னால் பலருக்கு பயன்படும்

Reply

பயனுள்ள பதிவு. நன்றிகள் பல. தொடரட்டும் தங்களது பணி. வாழ்த்துக்கள்.

அன்புடன்
செய்யது
துபாய்

Reply

இது ஒரு சோதனை அடிப்படையில் முயற்சி செய்து வருகிறேன்.

Reply

அதை கொஞ்சம் சொல்லுங்கள்

Reply

மற்றும் ஒரு சந்தேகம் தமிழ் பிளாக்கர்க்கு google adsence code போட்டால் விளம்பரங்கள் வருவது இல்லை .ஆனால் உங்கள் தலத்தில் வருகிறது அது எப்படி என்று சொல்ல முடியுமா ? சொன்னால் பலருக்கு பயன்படும்....அதை கொஞ்சம் சொல்லுங்கள்

Reply

Oh.. ivaru than unga Brother-ah.. boss..?

Reply

good information .. i need win 98 iso bootable os.. send the link to loveanand143@gmail.com.....
www.busybee4u.blogspot.com

Reply

மதிபிற்குரியவரே,
ஒரு நண்பர் கம்ப்யூட்டர் மெக்கானிக் மூலம் 2012 நவம்பர் மாதம் புதிய கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்த Desktop Computer வாங்கினேன். கம்பெனியின் பெயர் acer அந்த நண்பர் கொடுத்தார். என்னிடம் install windows7 professional CD தரவில்லை. அவர் சொந்த ஊருக்கு நிரந்தரமாக சென்றுவிட்டார். அவர் install செய்தது windows7 professional.
உங்களது கட்டுரைகளை இணையம் மூலம் படித்து பிறகு நாமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் என்னுடைய கம்ப்யூட்டர் எதாவதுபிரச்சினை என்றால், நானே எப்படி windows7 professional install செய்வது என்னிடம் windows7 professional CD கூட இல்லை.
கடையில் windows7 professional CD வாங்குவது என்றால் என்ன version சொல்லி வாங்க வேண்டும். அந்த CD வாங்க வேண்டுமா அல்லது window home premium வாங்க வேண்டுமா. அதை எப்படி install செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு எளிமையாக இணையத்தில் எழுத்து மூலமாக சொல்லித் தர வேண்டும்.
சிறு சிறு தொகுப்பகக்கூட எழுதினால் போதும் என்னுடைய Email ID senthilnathanpts@gmail.com.
என்றாவது ஒரு நாள் கம்ப்யூட்டர் பிரச்சினை ஏற்பட்டு நீங்கள் சொல்லிக் கொடுத்த மாதிரி install செய்து அது success ஆகிவிட்டால் எனது சந்தோஷத்தை எழுத்து மூலமாக முதலில் உங்களிடம் தான் பகிர்ந்துக்கொள்வேன்.
குறிப்பு:
Windows install செய்யும்போது internet on செய்து இருக்கவேண்டுமா அல்லது off செய்து இருக்கவேண்டுமா என்பதை சொல்லவேண்டும். கம்ப்யூட்டரில் அ ஆவன்னா கூட எனக்கு தெரியாது. ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.
நீங்கள் எனக்கு கற்றுத்தருவீர்கள் என்று நம்புகிறேன்.
புகப்பகக்கலைஞர் திரு. ஜி. வெங்கட்ராம் எழுதியது.
தப்பான பாதையில் போயிக்கிட்டிருக்கோம்னு தெரிந்த வினாடியில் திரும்பிடனும். அங்கிருந்தே புதிய வாழ்க்கை ஆரம்பிக்கும். இவ்வளவு தூரம் வந்துட்டோம், இதே பாதையில் போயிடலாம்னு போயிட்டே இருந்தா வாழ்ந்த வாழ்க்கை திருப்தி இருக்காது கிடைச்சதை அமைதியா ஏத்துக்கிட்டு வாழமை பிடிச்ச்சதுக்காக போராடி வாழும் போது கிடைக்கற மனநிறைவுக்கு விலையே இல்லை. அப்படி ஒரு திருப்தியோடு வாழ்ந்தால் இதை உறுருதியா சொல்கிறேன்.

Reply

OS CD விலை கொடுத்து வாங்கினால் குறைந்த பட்சம் சில ஆயிரங்கள் செலவழிக்க வேண்டி வரும், எனவே நண்பர்களிடம் கேட்டு பார்க்கவும்.

Windows install செய்யும்போது internet இணைப்பு தேவை இல்லை.

கூடிய விரைவில் OS இன்ஸ்டால் செய்வது குறித்த பதிவை கற்போம் தளத்தில் பகிர்கிறேன்.

Reply

Post a Comment