HTML5 என்றால் என்ன? ஒரு அறிமுகம் | கற்போம்

HTML5 என்றால் என்ன? ஒரு அறிமுகம்


HTML - கிட்டத்தட்ட இருபது ஆண்டுக்கும் மேலாக இணையத்தில் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கும் இதன் சமீபத்திய வளர்ச்சி தான் HTML 5. எதிர்காலத்தின் இணைய மொழி என்று கூறப்படும் அளவுக்கு விவாதிக்கப்டும் இதை பற்றி இன்று கற்போம்.

வரலாறு 

2004 - ஆம் ஆண்டிலேயே HTML 4 அடுத்த  Version க்கான வேலைகளை WHATWG  (Web Hypertext Application Technology Working Group) ஆரம்பித்து விட்டாலும் அது HTML 5 என்று எல்லாம் அதற்கும் தெரியாது, நமக்கும் தெரியாது, அதே நேரத்தில் W3C  (World Wide Web Consortium) ஆனது XHTML 2.0 வை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டு இருந்தது. 2009 க்கு பிறகு W3C யின் அறிவிப்பின் படி W3C, WHATWG  இரண்டும் இணைந்து உருவாக்க தொடங்கியது தான் HTML 5.

April 2010 தான் HTML 5 உலகிற்கு தெரிந்தது. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் Adobe Flash கொண்டு இனி வீடியோக்களை Play செய்ய வேண்டியது இல்லை, அந்த வேலையை இனி HTML 5 மூலம் செய்யலாம் என்று பத்தவைக்க, பல Web Developer களும் HTML 5 வை எப்படி சிறப்பாக உருவாக்கலாம் என்று விவாதிக்க ஒரு தீப்பொறியாக இது அமைந்தது. அதன் பின் Flash தனது Mobile Development ஐ கைவிட்டது தனி கதை.

2011 ஏப்ரல் 1 முதல் மேலே உள்ள படம், HTML 5 - யின் லோகோ என்றானது. 

HTML5 என்றால் என்ன? அவசியம் என்ன?

இணையத்தையே கட்டி ஆளும் மொழியான HTML-இன் முந்தைய பதிப்பு வெளியாகி பத்து வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த இணையத்தை விட இன்றைய இணையம் என்பது எத்தனையோ வளர்ச்சிகளை கண்டுள்ளது. ஆனால் HTML 4 தொடர்ந்து முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளாமல் நகர, இணையத்தில் HTML-இன் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. 

என்னதான் HTML இல்லாமல் இணையம் இல்லை என்ற போதிலும், இதனை துணைக்கு வைத்துக் கொண்டு பல நிறுவனங்கள் தங்களை வளர்த்துக் கொண்டன. 

மிக எளிய உதாரணம் - இணையத்தில் ஒரு வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்? பெரும்பாலும் Youtube க்கு செல்வோம், அங்கே ஒரு வீடியோ பார்க்க Flash வேண்டும் என்று கேட்கும், இதே போல தளங்களிலும் ஏதேனும் ஒன்றை இன்ஸ்டால் செய்ய சொல்லி கேட்கும். இதனால் நமக்கு நேர விரயம் ஆவதோடு வைரஸ் போன்ற பிரச்சினைகளும் இருந்தது. 

HTML 4 - இல் வீடியோவை உள்ளீட வசதி எதுவும் இல்லை. ஏதேனும் ஒரு Plug-in கொண்டு தான் அதனை செய்ய முடிந்தது, ஆனால் HTML 5 வீடியோவை நேரடியாக உள்ளிடும், பார்க்கும் வசதியை நமக்கு தருகிறது. இதனால் Plug-in எதையும் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் நமக்கில்லை. 


இதே போல, இன்னும் Canvas Element, Audio, Vector Graphics, Animation,Document editing, Drag and Drop வசதி [நேரடியாக எதையும் சேர்க்கும் வசதி], Offline Web Application என மற்றும் பல சிறப்பம்சங்களோடு களமிறங்க உள்ளது HTML 5.


இதன் மற்றொரு மிகப் பெரிய சிறப்பம்சம், எல்லாவற்றிலும் இயங்குவது. ஆம் கணினியில் உள்ளதை மொபைலில் பார்க்கலாம், Firefox-இல் உள்ளதை Chrome-இல் பார்க்கலாம். என எந்த ஒரு Browser, Device க்கு தனியாக எதையும் கொண்டிருக்காமல் எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியாக உள்ளது. எதையும், எங்கும் பார்க்கலாம். 

என்ன புதுசு? 

மேலே சொன்னது போல 

  • வீடியோ 
  • ஆடியோ
  • அனிமேஷன்
  • Drag and Drop 
  • Browser history management
  • Canvas Element
  • Document editing
  • Web Storage
  • Cross-document messaging
  • Geolocation
  • File API
  • மற்றும் பல 
HTML 4 & HTML 5 : என்ன வித்தியாசம்? 

மேலே சொல்லி உள்ளது போல நிறைய வசதிகள் வர இருந்தாலும் எப்படி அவை செயல்படும்?  சில புதிய கோடிங்களை நான் இங்கே சொல்கிறேன். 

புதிய Elements 

ஒரு வார்த்தைக்கு Underline கொடுக்க HTML-இல் <u> </u> என்பது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு HTML Element. இதேபோல HTML 5 க்கு புதிய Element கள் உள்ளன. 

article, aside, audio, bdi, canvas, command, data, datalist, details, embed, figcaption, figure, footer, header, hgroup, keygen, mark, meter, nav, output, progress, rp, rt, ruby, section, source, summary, time, track, video, wbr

இவற்றில் பலவற்றின் பயன்பாடுகள் எனக்கும் தெரியவில்லை. audio, video போன்றவை எல்லாருக்கும் தெரிந்து இருக்கும். மற்றவற்றை இன்னொரு பதிவில் விரிவாக காண்போம். 

புதிய Attributes 

HTML-இல் ஒரு Element சேர்க்கும் போது அவற்றின் தோற்றத்தை மாற்ற உதவுபவை  Attributes ஆகும். உதாரணம் ஒரு <div style="text-align: justify;"> இதில் சிவப்பு நிறத்தில் உள்ளது Attribute ஆகும். HTML 5 இல் இவையும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கலாம். இவற்றில் சில எல்லா Element -லும் பயன்படுத்தும் படி இருக்கும். 

charset (on meta), async (on script), id, tabindex, hidden, data-* 

புதிய Form Controls 

HTML - இல் நாம் பயன்படுத்தும் <form> </form> என்ற வசதியில் நாம் text area, check box, radio button, object போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இதில் இன்னும் பல வசதிகளை சேர்த்து தரப்போகிறது HTML 5. அவை 

dates and times, email, url, search, number, range, tel, color

இவ்வாறாக பல அற்புத வசதிகளோடு வரப்போகும் HTML 5 க்கு கடந்த ஆண்டில் இருந்து காத்திருக்கும் என்னை போல நீங்கள் காத்திருக்க ஆரம்பியுங்கள், ஏன் என்றால் இன்றைய நிலவரப்படி அது இன்னும் மேம்படுத்தலில்தான் உள்ளது. 

இதை இணையத்தில் எங்கே படிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம் - 

Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த தளங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன்.

- பிரபு கிருஷ்ணா

13 comments

நல்லாவே சொல்லி இருக்கீங்க இப்ப ஆன்ட்ராய்ட் ஜெல்லி பின் கூட இதை தான் பயன்படுத்துகிறதா...

Reply

விளக்கம் அருமை... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...(TM 3)

Reply

விரிவான தகவல் சகோ.

Reply

அருமையான தகவல்..நன்றி...

Reply

தமிழ்மண நட்சத்திர பதிவராக இறுதி பதிவு "இது" என்று கருதுகிறேன்! இந்த ஒரு வாரம் முழுவதும் தொடர்ந்து இடைவிடாமல் நல்ல பதிவுகளை தந்து எங்களுக்கு பயனுள்ள வகையிலும் அதே நேரம் நட்சத்திர பதிவிலும் தனித்துவம் காட்டி சிறப்பாய் இந்த வாரத்தை நிறைவு செய்தீர்கள்!

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ!

Reply

சிறப்பான தகவல்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
இதோ ஒரு நிமிஷம்!
மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
http://thalirssb.blospot.in

Reply

அவசியமான தகவல் பகிர்வு. அதைச் சொல்லியுள்ள விதம் அருமை.

Reply

நன்று....

Reply

நல்ல விரிவான தகவல்...நன்றி நண்பா...

தமிழ்மணம் நட்சத்திர பதிவராக இருந்து இந்த வாரத்தை சிறப்பாக நிறைவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பா...

Reply

அன்பின் பிரபு - பல தகவல்கள் - எளீய முறையில் கூறியமை நன்று - பலருக்கும் பயன்படும் தகவல்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Post a Comment