கற்போம் டிசம்பர் மாத இதழ் - Karpom December 2012 [இரண்டாம் வருடத்தில் கற்போம், 300 - ஆவது பதிவு] | கற்போம்

கற்போம் டிசம்பர் மாத இதழ் - Karpom December 2012 [இரண்டாம் வருடத்தில் கற்போம், 300 - ஆவது பதிவு]


ஒரு முயற்சி வெற்றி பெற குறிப்பிட்ட வேலையில் ஈடுபடும் நபரின் ஈடுபாட்டோடு, சுற்றத்தாரின் ஊக்கமும், உற்சாகமும் தேவை. கற்போம் என்ற ஒரு தளத்தை கடந்த ஆண்டு இதே தேதியில் ஆரம்பித்த போது வெறும் கட்டுரை பகிர்வதை மட்டுமே குறிக்கோளாக இருந்தது. 

அதன் பின் ஒரு நிமிடத்தில் மின்னிதழ் தொடக்கம், எதிர்பார்த்திராத  அளவு வரவேற்பு, வாசகர்கள், ஹிட்ஸ், ரேங்க், தரவிறக்கம் என பட்டியல் போடலாம் இந்த ஒரு வருடத்தில் கற்போம் நிகழ்த்திய சாதனைகளை. 

இந்த நேரத்தில் தளத்திற்கு கற்போம் என்று பெயர் வைத்த நண்பர் ஜெயச்சந்திரனை நினைவு கூற விரும்புகிறேன், ஆரம்பத்தில் கட்டுரைகளை எழுதியவர் அதன் பின் வேலை காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை, அதே போல இன்னொரு நண்பர் சூர்ய பிரகாஷ். எழுதியது சில கட்டுரைகள் என்ற போதிலும் அனைத்தும் முத்தானவை . 

இதுவரை வெளிவந்துள்ள 11 கற்போம் இதழ்களும் 14675 முறை கற்போம் தளத்தில் இருந்து மட்டும் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகம். 1500 ஐ தாண்டிய மின்னஞ்சல் வாசகர்கள் என்று மற்றொரு மகிழ்ச்சி. 

எல்லாவற்றிற்கும் சிகரமாக இன்றைய கட்டுரை கற்போம் தளத்தின் 300 ஆவது கட்டுரையாக பகிரப்படுகிறது. பலே பாண்டியா, பலே பிரபு மற்றும் கற்போம் என்ற மூன்று பெயரிலும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை இது. 

இத்தனைக்கும் காரணமான அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொரு மாதமும் நன்றி சொல்லும் அளவுக்கு கற்போம் எனக்கு அவ்வளவு காரணங்களை தருகிறது. 

இனி டிசம்பர் மாத கற்போம் இதழ். 

கட்டுரைகள்: 


  1. SMARTPHONE வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  2. ANDROID APP- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [ANDROID PHONE இல்லாதவர்களும்]
  3. பிட்.. பைட்... மெகாபைட்....!
  4. ANDROID ROOTING என்றால் என்ன ? செய்வது எப்படி?
  5. ஜிமெயிலில் ALTERNATIVE LOG-IN ID அமைப்பது எப்படி ?
  6. GMAIL FILTERS என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி ?
  7. பதில்! - புதிய பகுதி
  8. தேவையில்லாத ஈமெயில்களை தடுக்க ஜிமெயில் வழங்கும் வசதி
  9. YOUTUBE – இல் ஒரு விளையாட்டு

தரவிறக்கம் செய்ய:

டிசம்பர் மாத இதழ்

- பிரபு கிருஷ்ணா

18 comments

வாழ்த்துகள்!

Reply

வாழ்த்துக்கள் நண்பரே.. கலக்குங்க

Reply

Congrats Prabhu..Really it's very helpful to us.Thanks.

Reply

வாழ்த்துக்கள் சகோ.! தொடர்ந்து இதழ் வெளியிடுவது என்பது சிரமமான காரியம். மேலும் பல சிகரங்களைத் தொடவும் என் வாழ்த்துக்கள்!

Reply

வாழ்த்துக்கள் பிரபு !

Reply

வாழ்த்துகள் பிரபு..!!

Reply

Greeting to u and we team

Reply

வாழ்த்துக்கள் நண்பரே.. வளருங்கள்

Reply

உங்கள் முயற்சி விண்ணை போல் தொடர வாழ்த்துக்கள்

Reply

வாழ்த்துக்கள்.... நன்றி...

Reply

THANK YOU PRABHU AND GOD BLESS YOU.

Reply

வாழ்த்துக்கள் அண்ணா...!
தங்களின் அரும் முயற்சிக்கு என் இதயங்கனிந்த பாராட்டுக்கள்

Reply

பிரபு இத்தனை சிறப்புகளும் வந்தடைய நீ தகுதியான ஆள் தான். இன்னும் மேலும் மேலும் வளற வாழ்த்துகள்.ஆசிகள்

Reply

வாழ்த்துக்கள் பிரபு கிருஷ்ணா அண்ணா:

தங்களின் அனுமதியில்லாமல் கற்போம் இதழை 99likes-ல் வெளியிட்டேன் link: http://99likes.blogspot.in/2012/12/99likes-karpom-december-2012.html

நன்றி...

Reply

அன்பின் பிரபு - அருமையான செயல் - மாத இதழாக கற்போம் பல செய்திகளுடன் வெளியிடுவதற்குப் பாராட்டுகள் - பலப் பல தகவல்கள் அறிந்து கொள்ளவும், ஐயம் களையவும் உதவும் இதழ. 300 - 1500 - 15000 - அததனைக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது நண்பா

Reply

Post a Comment