அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டு விட்டதா என்று Track செய்வது எப்படி? | கற்போம்

அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டு விட்டதா என்று Track செய்வது எப்படி?


தற்போது நம் வேலைகளுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது ஒரு சிலர் அதை ஓபன் செய்து பார்த்துவிட்டு பதில் அனுப்பாமல் இருக்கலாம்,அல்லது பதில் அனுப்ப தாமதம்  செய்யலாம். நாம் கேட்டால் மின்னஞ்சலை ஓபன் செய்யவே இல்லையே என்று சொல்லலாம். இவ்வாறு பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்க நாம் அனுப்பிய ஈமெயில்களை அவர்களை ஓபன் செய்தார்களா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் வழி ஒன்றை இன்று பார்ப்போம்.

இதை செய்ய Right Inbox என்ற Application நமக்கு உதவி செய்கிறது. Google Chrome, Firefox, Safari பயனர்கள் இதை பயன்படுத்தலாம். இந்த வசதி தற்போது  ஜிமெயில் பயனர்களுக்கு மட்டுமே.

1. முதலில் Right Inbox தளத்திற்கு சென்று "Install Now" என்பதை கிளிக் செய்யுங்கள்.

2. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ப்ரௌசெர்க்கு ஏற்றார் போல நீங்கள் அதை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள்.

3.இப்போது உங்கள் Browser - இல் Extension ஆக இது Add ஆகி விடும். ஒரு முறை உங்கள் Browser-ஐ close செய்து ஓபன் செய்யுங்கள். அல்லது ஜிமெயிலை Refresh செய்யுங்கள்.

4. இப்போது உங்கள் ஜிமெயிலில் "Right Inbox is Ready" என்று வருவதை Continue கொடுங்கள்.

5. அடுத்த பக்கத்தின் Grand Access என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.


இங்கே Grand Access கொடுப்பதால் உங்கள் Password போன்ற தனிப்பட்ட தகவல்களை அவர்களால் Access செய்ய முடியாது.

5. இப்போது மீண்டும் ஜிமெயில்க்கு வருவீர்கள்.அதில் நீங்கள் உங்கள் பிளானை தெரிவு செய்ய வேண்டும். இலவசமாக ஒரு மாதத்துக்கு பத்து மின்னஞ்சல்களை மட்டுமே நீங்கள் Track செய்ய முடியும். Upgrade செய்து கொள்ள விரும்பினாலும் செய்து கொள்ளலாம். தற்காலிகமாக இலவசத்தையே தெரிவு செய்யுங்கள்.

6. இப்போது ஒரு மெயில் Compose செய்யுங்கள். அதில் சில புதிய வசதிகள் இருப்பதை காணலாம்.அதில் Track தான் நாம் பயன்படுத்தப் போகும் வசதி.


7.  ஈமெயில் Compose செய்யும் போது இதை கிளிக் செய்து விடுங்கள். தகவல்களை நிரப்பி மெயில் அனுப்பி விடுங்கள்.


8. குறிப்பிட்ட ஈமெயில் ஓபன் செய்யப்பட்ட உடன் கீழே உள்ளது போல ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வரும்.


இதில் உள்ள மற்ற வசதிகளை இன்னொரு பதிவில் காணலாம். 

- பிரபு கிருஷ்ணா

14 comments

REALLY USEFUL INFORMATION.

THANKS

Reply

தகவலுக்கு நன்றி சகோ!

Reply

எனக்கு மிகவும் பயன்படும் நீட்சி பகிர்ந்த நண்பனுக்கு நன்றி

Reply

I am unable to find out ''right inbox''. i am using windows 7.where to click to get Right inbox? please explain.

Reply

3 vathu step varai mattume ennaal mudinthathu.4 step varavillai yen?

Reply

வாவ்... ஈசியா இருக்கே... தகவலுக்கு நன்றி...

செய்து பாக்குறேன்

Reply

அன்பின் பிரபு - தரவிரக்கம் செய்து விட்டேன் - ஆனாலும் கிராண்ட் ஆக்செஸ் - பயமாக இருக்கிறது - இந்நிலையில் நிறுத்தி விட்டேன். பிறகு பார்க்கலாம். தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

அன்பின் பிரபு - இன்னும் ஒரு தகவல் தேவை - இப்பொழுது நான் ஆக்ஸெஸ் கிரண்ட் பண்ணி விட்டேனா ( தவறுதலாக ) என சரி பார்ப்பதற்கு ஏதாவது வசதி உள்ளதா ? நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Reply


sundirect+ இல் ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோக்களை dvd பிளேயர் இல் avi format இல் மாற்றி காண்பது எப்படி ?

பதில் தளத்திலும் கேட்டு இருந்தேன் .கூகுளிலும் எனக்கு தெரிந்த வகையில் அலசி விட்டேன் .பதில் கிடைக்க வில்லை .

ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோக்கள் உள்ள folderபின்வருமாறு இருக்கிறது

PVR>>1234566>>>DATA>>DATA இறுதியில் குறிப்பிட்ட DATA எனப்படும் FOLDER இல் மட்டும் DATA என பல FILE கள் இருக்கிறது .அதில் DATA என குறிப்பிட்ட முதல் FILE மட்டும் அதிக SIZE உள்ளது.அந்த FILE TYPE என்னவென்று பார்த்தல் FILE என்றே இருக்கிறது ? என்ன செய்வது .தெரிந்தால் சொல்லுங்கள் அன்பரே

மத்த FILE கள் அனைத்தும் 2KB,5KB என்றே உள்ளது .முதல் FILE மட்டும் 50MB க்குள் உள்ளது

bathil தளத்தில் குறிப்பீட்ட வீடியோ converterகளால் இந்த வீடியோக்களை avi format க்கு மாற்ற முடிய வில்லை .உங்களுக்கு தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள் அன்பரே

தொடர்புக்கு :premshopra@yahoo.com

Reply

பயனுள்ள தகவல் நன்றி

Reply

பதில் தளத்தில் உங்கள் கேள்வியை பார்த்திருந்தேன். எப்படி என்று தெரியவில்லை. அதனால் தான் விடையளிக்கவில்லை.

Reply

goto this URL - http://www.rightinbox.com/

Reply

சூப்பர் சூப்பர் :D

Reply

ippo mail track en mailil aad aaki vittathu .nanri.

Reply

Post a Comment