ஒரு இலவச மென்பொருளில் 47 பலன்கள் | கற்போம்

ஒரு இலவச மென்பொருளில் 47 பலன்கள்


ஒரு சில சமயங்களில் ஒரே வேலைக்கு நாம் பல மென்பொருட்களை நிறுவி இருப்போம். ஆனால் அதில் கூட நமக்கு திருப்தி இருக்குமா என்று தெரியாது. ஆனால் ஒரே மென்பொருள் நமக்கு 47 வகையான மென்பொருள் தரும் வசதிகளை தந்தால்? அது தான் DVD Video Soft. இதை இன்ஸ்டால் செய்ய உங்கள் கணினியில் .Net Framework 2 SP2 இருக்க வேண்டும். இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், கீழே உள்ள படம் வரும்.
இதன் சில முக்கியமான சிறப்பம்சங்கள்: 

1. வீடியோ மற்றும் ஆடியோகளை வெவ்வேறு வகையான Format களில் Convert செய்ய உதவுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் போன் நிறுவனத்துக்கே தருகிறார்கள், அத்தோடு உங்கள் போன் மாடல் தெரிவு செய்யும் வசதியும் உள்ளது. (Mobile என்ற வசதியில்)

2. DVD களை Burn & Rip செய்யும் வசதி. (CD,DVD,BD வசதியில்)

3. Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. (Youtube என்ற வசதியில்-Free Youtube Download) ஒரே கிளிக் மூலம் நிறைய வீடியோக்களை தரவிறக்கும் வசதி தரும் இதன் பலன்களை விரிவாக அறிய இந்தப் பதிவை படிக்கவும் Youtube - சிறந்த வீடியோ downloader

4. சின்ன சின்ன வீடியோ எடிட்டிங் செய்யும் வசதியை தந்துள்ளது. (DVD& Video வசதியில்)

5. Screen Record செய்யும் வசதி.

6. உங்களிடம் 3D கண்ணாடி உள்ளதா? 3D-யில் Image & Video போன்றவற்றை உருவாக்க 3D என்ற வசதி பயன்படும்.

7. iPod, iPhone என்று தனி வசதி தரப்பட்டு உள்ளது. (Apple Devices வசதி)

அந்த மென்பொருளின் சில சிறப்பம்சங்களை மட்டுமே கூறி உள்ளேன். அசத்தலான இதை தரவிறக்கம் செய்து, மற்றவற்றை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

Install செய்யும் போது, கீழே வரும் Window வரும் போது, "DVDVideo Soft Toolbar" என்பதை Unclick செய்து விடுங்கள்.


5 comments

நான் ஏற்கனவே பயன்படுத்தி கொண்டு உள்ளேன் அருமையானது அனைவர்க்கும் பயன்படும்...

Reply

தகவலுக்கு நன்றி நண்பா ..!

Reply

மிக்க நன்றி தம்பி.....!!!

Reply

payanpatuththi paarththuitu solukiren paaa...

Reply

Post a Comment