30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம் | கற்போம்

30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்

jQuery என்பது ஜாவா ஸ்கிரிப்டில் உள்ள ஒரு நிரல் நூலகம். திறந்த மூல  அனுமதியுடன் இது கிடைக்கிறது. இது தற்போது நிறைய தளங்களில் பயன்படுத்தப்படும் ஒன்று.  பெரும்பாலும் அந்த தளங்களின் செயல்பாட்டில் இருக்கும். ஏற்கனவே HTML, CSS , JScript போன்றவை தெரிந்தவர்கள் இதை படிக்கலாம். நிறைய தளங்கள் இதை இலவசமாக படிக்கும் வசதியை தருகின்றன. அதில் முக்கியமான ஒரு தளம் Tuts+ Premium. அருமையான வீடியோ டுடோரியல் உடன் இவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட பணம் செலுத்துவதன் மூலம் நிறைய கோர்ஸ் படிக்கும் வாய்ப்பை தருவார்கள். ஆனால் இவர்கள் jQuery-ஐ மட்டும் இலவசமாக கற்கும் வசதியை தந்துள்ளனர்.

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து, செய்தால் அந்த பக்கத்திற்கு செல்லலாம். இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தரவும்.


இப்போது கீழே படத்தில் உள்ளது போல Confirmation Mail ஒன்று வரும். அவ்வளவே இதன் மூலம் நீங்கள் உங்கள் கோர்ஸ் படிக்க ஆரம்பிக்கலாம்.உங்களுக்கு வரும் வீடியோக்கள், Fileகள் போன்றவற்றை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஆன்லைனில் தேர்வும் வைப்பார்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் கற்க நினைத்தாலும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

jQuery- ஐ ஆரம்பம் முதல் படிக்க வேண்டும் என்பவர்கள் கீழே உள்ள மற்ற தளங்களையும் பயன்படுத்தலாம்.

- பிரபு கிருஷ்ணா

8 comments

பயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே !

Reply

good information.........

Reply

நன்றியுடன் சேவியர் ரவி

Reply

jQuery கற்க நினைப்பவர்களுக்கு பயனுள்ள தகவல்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி.

Reply

அருமையான தகவல். நன்றி

Reply

Post a Comment