VLC Player செய்யும் விநோதங்கள் - 2 | கற்போம்

VLC Player செய்யும் விநோதங்கள் - 2

நேற்றைய பதிவில் VLC Player மூலம் Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி, Watermark கொடுப்பது எப்படி, Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி, Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி என்ற தகவல்களை பார்த்தோம். இன்று "Effects and Filters" பகுதியில் உள்ள வசதிகளை பற்றி காண்போம்.


முதலில் Tools --> Effects and Filters என்பதை ஓபன் செய்யவும். இப்போது பின்வருமாறு விண்டோ வரும். இதன் வசதிகளை ஒவ்வொன்றாய் காண்போம். 

Audio Effects:

(MP3 கேட்கும் போதும் இதை பயன்படுத்தலாம்)

Graphic Equalizer: 

சில வீடியோக்களை பார்க்கும் போது இதன் ஆடியோ வேறு மாதிரி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதை செய்ய VLC Player-இல் உள்ள வசதி தான் இது. இதை "Enable" என்று கொடுத்து விட்டு, வலது பக்கம் உள்ள Preset என்பதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். 

Compressor: 

ஆடியோ கண்ட்ரோல்க்கு பயன்படும் வசதி. 

Spatializer: 

நீங்கள் இருக்கும் இடத்திற்கு எந்த விதமான ஆடியோ எபக்ட் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை இதில் செட் செய்யலாம். உதாரணம் பெரிய ஹால்கள், அறைகள், வகுப்பறை, தியேட்டர் என பல. நீங்களே எப்படி வேண்டும் என்று தெரிவு செய்து கொள்ளலாம். 

Video Effects: 

இதில் பல வசதிகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பாப்போம்.  1. Essential : 

உங்கள் வீடியோக்கு Brightness, Contrast, Hue, Saturation மற்றும் பல Effects மாற்ற பயன்படுகிறது. டிவியில் இதை நாம் கலர் கரெக்சன் செய்ய இது போல செய்து  இருப்போம். இதை உங்கள் கணினியிலும் செய்யும் வாய்ப்பை VLC Player வழங்குகிறது. 

2. Crop :

முந்தைய பதிவில் எப்படி Crop செய்வது என்று ஒரு வழி சொல்லி இருந்தேன், அது குறிப்பிட்ட கலவையில் மட்டும் தரும். இந்த Crop-ஐ அகலம், உயரம் போன்றவற்றை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்ற பயன்படுத்தலாம். 

3. Colors :

இதில் உங்கள் வீடியோக்கு நீங்கள் கலர் மாற்றங்கள் செய்யலாம். கலர் படத்தை கறுப்பு வெள்ளையில் பார்க்கலாம். இன்னும் பல Negative Color, Posterize, 
Gradient, Sepia என பல Effect-களை நீங்கள் உருவாக்க முடியும். 

4. Geometry :

இதில் "Transform" & "Rotate" மூலம் உங்கள் வீடியோவை நீங்கள் rotate செய்து பார்க்கலாம், "Intractive Zoom" வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்கலாம், Wall மூலம் உங்கள் வீடியோவை குறிப்பிட்ட பகுதிகளாக பிரித்து, ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் பார்க்க விரும்பினால் பார்க்கலாம், "Puzzle Game" என்பது பெயரில் உள்ளது போல Puzzle விளையாட்டு போல உங்கள் வீடியோவை மாற்றி விடும். அதில் Black Shot தெரிவு செய்து சரியான படி Puzzle களை அடுக்க முயற்சிக்கலாம். 

5. Overlay:

இதை முந்தைய பதிவில் "Watermark ஆக நமது பெயர்/படத்தை கொடுப்பது எப்படி ?" என்று சொல்லி உள்ளேன்.

6. Atmolight :

இதற்கு Atmolight Hardware வேண்டும். இது குறித்து பின்னர் தனி பதிவாக காண்போம். 

7. Advanced :

இதில் Anti-Filckering என்பது CRT Monitor-களில் வரும் Flickering Effcet-களை நீக்க பயன்படுகிறது. இதோடு Motion Blur, Saptial Blur என்ற Blur வசதிகள் உள்ளன. இதில் Motion Blur வீடியோ frame நகரும் போது அதை காணும் வசதியை தருகிறது. (Photoshop பயன்படுத்தும் நண்பர்கள் இதை அறிவார்கள்). Clone வசதி மூலம் உங்கள் வீடியோவை இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட ஸ்க்ரீன்களில் காண இயலும். Water Effect, Mirror, Psychedelic, Waves, Motion Detect போன்றவை பெயருக்கேற்ற வேலைகளை செய்கின்றன. 

Synchronization

இதை நேற்றைய பதிவில்  "Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி? " என்ற பகுதியில் சொல்லி உள்ளேன். 


அடுத்த பகுதியில் மறுபடியும் சில அற்புதமான வசதிகளை பற்றி காண்போம்.

- பிரபு கிருஷ்ணா

14 comments

விரிவான பதிவிற்கு நன்றி நண்பரே !

Reply

பயனுள்ள பதிவு.நன்றி

Reply

VLC - ரொம்ப நாலாகவே பயன்படுத்துகிறேன், ஆனால் இந்த வசதியையெல்லாம் உபயோகித்ததே இல்லை, விரிவாக பதிவாக்கி தந்துகொண்டிருப்பதர்க்கு நன்றி.!

Reply

நல்லவிசயம் .
உங்கள் பதிவில் இன்னும் மெருகேறுகிறது

Reply

பலருக்கும் பயன்படும் பதிவு எனக்கும் பயன்படும் பகிர்ந்த சகோவுக்கு நன்றி

Reply

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே

Reply

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே

Reply

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே

Reply

எளிமையான விரிவான பதிவு..இனி VLC பிளேயரை முழுவதுமாக பயன்படுத்த தெரிந்துகொள்ள உதவும் பதிவு. பகிர்வுக்கு நன்றி பிரபு.

Reply

while i try to install new version of VLC it says unable to elevate error 1814.

what to do prabhu?

Reply

Setup File மீது ரைட் கிளிக் செய்து "Run as administrator" என்று கொடுத்து இன்ஸ்டால் செய்யுங்கள். இன்ஸ்டால் ஆகி விடும்.

Reply

Done.
thanks prabhu.

Reply

Post a Comment