ட்விட்டர் உங்கள் கேள்விகளும் அதற்கு தீர்வுகளும் | கற்போம்

ட்விட்டர் உங்கள் கேள்விகளும் அதற்கு தீர்வுகளும்


ட்விட்டர் தளம் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். வெறும் 140 எழுத்துக்களுக்குள் நம் எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் தளமான இதில் நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். பேஸ்புக் போலவே இதிலும் தமிழ் பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்தும் போது உங்களுக்கு நிறைய சந்தேகம் வரலாம். அதன் தீர்வுகளே இந்தப் பதிவு.


முதலில் ட்விட்டர்க்கு நீங்கள் புதியவர் என்றால் http://twitamils.com தளம் வெளியிட்டுள்ள ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் என்பதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

இதில் ட்விட்டர் வரலாற்றில் ஆரம்பித்து, அதில் எப்படி அக்கௌன்ட் தொடங்குவது, Follow செய்வது? எப்படி ட்விட் செய்வது என பல தகவல்களை தந்துள்ளனர். 

சரி எப்படி தமிழில் ட்விட் செய்வது என்று கவலையா? வேண்டாம் கவலை முதலில் இந்தப் பதிவை படியுங்கள் மிக எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? - புதியவர்களுக்கு

இது உங்களுக்கு சரிப்படாது என்று தோன்றினால் தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : என்ற பதிவில் இன்னும் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. இதிலேயே உங்களுக்கு அலைபேசியில் எப்படி தமிழில் எழுதுவது என்ற வழியும் சொல்லப்பட்டுள்ளது. 

ட்விட்டர் கணக்கு தொடங்கி விட்டேன், யாரை பின் தொடர என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் நீங்கள் யாரை பின் தொடர போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். இப்போது ட்விட்டர்களை தேடும் வழிகள் என்ற பதிவில் உள்ள வழிகளை பயன்படுத்தி யாரை தேடுவது என்று முடிவெடுங்கள். 

சரி இப்போது நான் ட்விட்டரில் பெரிய ஆள் ஆகிவிட்டேன், எனக்கு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட அக்கௌன்ட்கள் உள்ளன, நான் எப்படி அவற்றை நிர்வகிப்பது என்று நீங்கள் கேட்டால் இந்தப் பதிவை படியுங்கள் - பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க

சில காரணங்களினால் உங்கள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதென்றால், எதனால் மற்றும் எப்படி மீட்பது  என்பதை இந்தப் பக்கத்தில் சொல்லி உள்ளார்கள் - ட்விட்டர் கணக்கு முடக்கப்பட காரணங்கள், மீண்டும் கணக்கை உயிர்பித்தல்

ட்விட்டர் கணக்கை சில நாட்கள் முடக்கி வைத்திருக்க வேண்டும் அல்லது நிரந்தரமாக அதை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை படிக்கவும் - ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க

ட்விட்டர் தளத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய பிரச்சினை அடிக்கடி ஸ்பாம் மெயில்கள் வருவது, அவற்றில் உள்ள லிங்க் மீது கிளிக் செய்தால் நமக்கு வைரஸ் அல்லது நம் கணக்கு முடக்கப்படுதல் போன்ற ஆபத்து நிகழலாம். இதை தவிர்த்து பாதுகாப்பாய் இயங்க ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள் என்பதை படிக்கவும். 

யாரை பின்தொடருகிறீர்கள், யார் உங்களை பின் தொடருகிறார்கள் போன்றவற்றை அறிய சில தளங்கள் உதவுகின்றன அவை இங்கே Followers,Friends நிர்வகிக்க செயலிகள்

அலைபேசியில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்த பல வழிகள் உள்ளன. ஸ்மார்ட்போன்கள் என்றால் குறிப்பிட போனின் மார்க்கெட்டில் App கிடைக்கும். வெறும் இணைய இணைப்பு உள்ள மொபைல் மட்டும் பயன்படுத்தும் நண்பர்கள் அலைபேசிக்கான ட்விட்டர் செயலி @dabr என்ற வழியை பின்பற்றலாம். 

சரி வேறு சந்தேகம் என்ன செய்ய என்று கேட்கிறீர்களா?@TwiTamils , என்பதை mention செய்து உங்கள் கேள்வியை கேளுங்கள். அல்லது நண்பர் @Karaiyaan [ TwiTamil  நிர்வாகி]அவர்களையும் தொடர்பு கொள்ளலாம். 

இது மட்டும் வழியல்ல உங்களுக்கு ட்விட்டர் குறித்த சந்தேகம் அல்லது வேறு ஏதேனும் சந்தேகம் என்றால் உங்கள் சந்தேகம் அல்லது கேள்வியை டைப் செய்து முடித்த உடன் #Help அல்லது #உதவி போன்றவற்றை சேர்த்தால் உங்களை பின் தொடரும் நண்பர்கள் உடனடியாக உதவி செய்வார்கள், அல்லது உதவி செய்யும் நபரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள். 

எனக்கு தொழில்நுட்ப ரீதியாக அல்லது தனிப்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இதே முறையை செய்துள்ளேன், நிறைய நண்பர்கள் உதவியும் செய்துள்ளார்கள்.  


- பிரபு கிருஷ்ணா

13 comments

உண்மையாக (Twitter) பக்கமே சென்றதில்லை...
உங்கள் பதிவின் மூலமாக தெரிந்து கொண்டேன்...
நேரம் கிடைத்தால் டுவீ-ட்டணும்... நன்றி..(த.ம. 3)

Reply

பயனுள்ள இணைப்புகள் பகிர்ந்ததற்கு நன்றிகள்

Reply

நான் ட்விட்டர் பக்கம் போறதே என்னை பின்தொடர்பவர்களை நான் பின்தொடர்வதர்க்கு தான்.. பதிவு எல்லாமே auto publish தான்!

Reply

டிவிட்டரில் இணைந்தும் புரியாமல் தவித்த எனக்கு உங்கள் பதிவு உபயோகமாய் இருந்தது! பகிர்வுக்கு நன்றி!

Reply

நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நண்பா...
நன்றிகள்..

Reply

like tis i need guide to g+.....its super.........

Reply

டிவிட்டர் பற்றிய அருமையான தொகுப்பு..
நன்றி!!

Reply

ட்விட்டர் பற்றிய அருமையான தொகுப்பு.
நன்றி!!

Reply

Thank you all about tweeter faq.

Reply

மிகவும் பயனுள்ள பதிவு ! டிவிட்டரில் இந்த ஸ்பாமர்கள் தொல்லை தாங்க முடியவில்லை !

Reply

Post a Comment