Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? | கற்போம்

Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம்.


Charlie bit my finger என்ற வீடியோவை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இரண்டு சிறுவர்கள் இருக்கும் இந்த வீடியோ சேனல் பல கோடிகளை சம்பாதித்து உள்ளது. இதே போல நிறைய பேர் உள்ளார்கள். Digital Inspiration தளத்தின் நிர்வாகி அமித் அகர்வால் சேனல் இது Labnol. இவர் இந்தியாவின் மிகப் பெரிய Tech Blogger. தனது தளம் மட்டும் இன்றி Youtube மூலமும் இவர் வருமானம் பெறுகிறார். 

தனி நபர்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் பலவும் Youtube மூலம் பணம் சம்பாதிக்கின்றன. விஜய் தொலைக்காட்சியின் சேனல். STARVIJAY 

முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். 

நடிக்க/கேமரா முன்பு பேச தெரிய வேண்டும். அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். 

எப்படி சம்பாதிப்பது? 

Step - 1

ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடிங்கள். நாய்குட்டி, பூனை குட்டி, உங்கள் குழந்தை செய்யும் சேட்டை, உங்கள் மனைவி செய்யும் சமையலை எப்படி என்ற குறிப்போடு, மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எது வேண்டும் என்றாலும். 

Step - 2 

இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால்  ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள். 

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், "வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்"

Step - 3 

இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள். 

Step - 4

இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும். எப்படி Tags கொடுப்பது என்று Youtube கொஞ்சம் ரகசியங்கள் என்ற பதிவில் சொல்லி உள்ளேன். 

இப்போது "Public" என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.


Step - 5 

முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். 

Step - 6 

உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல "Invitation to earn revenue from your YouTube videos" என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும். 


அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும். 

அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form

இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும். 

லருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள். 

மேலே உள்ள வசதியை YouTube தற்போது நீக்கி விட்டது. இனி தாமாக தொடங்கும் நபர்கள் Adsense மூலம் மட்டுமே தங்கள் வீடியோக்களை Monetize செய்ய முடியும். அல்லது வேறு Youtube MCN களுடன் இணைந்து பணியாற்றலாம். இதில் குறிப்பிட்ட அளவு பணத்தை அவர்களுக்கு நீங்கள் தர வேண்டும். 

இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நொடிகளில் Monetize செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும். 

வீடியோ Monetize ஆனாலும் நீங்கள் உங்கள் YouTube அக்கவுண்டில் உங்கள் Adsense கணக்கை லிங்க் செய்வது அவசியம்.

சில விள ம்பர வகைகள்: (தற்போது இதைவிட இன்னும் சில வகையிலான விளம்பரங்கள் உள்ளன.)

Overlay in-video ads  - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம்

TrueView in-stream ads - வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ 


எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம் ? 

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை. 

கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம். 

ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். 

வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது.

பின்னணி இசைக்கு Audio Libaryயில் இருக்கும் Free Music & Sound Effect ஆடியோக்களை பயன்படுத்தலாம். அதை Monetize செய்வதில் பிரச்சினை இல்லை. 

உங்கள் முயற்சிகளை பொறுத்து தான் இது ஈமு கோழி போடும் முட்டையா அல்லது, பொன் முட்டை இடும் வாத்தா என்பது தெரிய வரும். 

Youtube குறித்த மற்ற கேள்விகளை கீழே கேளுங்கள். பதில் சொல்கிறேன்.
- பிரபு கிருஷ்ணா 

44 comments

இவ்வளவு இருக்கா...? நன்றி நண்பரே...

Reply

அருமையான தகவல் தந்துஉள்ளீர்கள்...கூகிள் என்ன தான் நினைக்கிறானோ அவனுக்கு நிறைய பேர் பார்க்க வேண்டும் அவ்வளவு தானே எந்த வீடியோவாய் இருந்தால் என்ன...அந்த மாதிரியான வீடியோ தவிர வேற எதாய் இருந்தால் என்ன...இனி மேல் MR.BEAN மாதிரி கையில் ஒரு கேமரா எடுத்து ஆட்டி ஆட்டி வீடியோ எடுத்து போடனும்.......

Reply

இது அட்சென்ஸ் விட ரொம்ப கஷ்டம் போல

Reply

ஆம், இதற்கு நிறைய Views, Videos, Subscribers தேவை.

Reply

தெரிந்துகொண்டேன்!

Reply

இது எனக்கு ஆகாத வேலைன்னு தெரிஞ்சு போச்சு நண்பரே!

Reply

விளக்கம் அருமை பிரபு...

எனது யூட்யுப் http://www.youtube.com/user/prakashintube?feature=mhee. இதில் சினிமா கிளிப்பிங்ஸ், மற்றும் மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு கிளிப்பிங்ஸ் இணைத்துள்ளேன். இதில் நீங்கள் சொன்ன ரூல்ஸ் எதுவுமே பின்பற்றவில்லை. அதாவது சொந்த கிளிப்பிங்ஸ் இல்லை.. ஹி..ஹி..

Reply

வாழ்த்துக்கள் பிரபு.

Reply

மிகவும் பயனுள்ள தகவல்கள்!எளிமையாக புரிய வைத்தமைக்கு நன்றி!

இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in

Reply

உபயோகமான தகவல், பகிர்வுக்கு நன்றி நண்பா!

Reply

நல்ல தகவல் முயற்சிக்கிறேன் நண்பா...நன்றி

Reply

அறிந்து கொண்டேன்.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

Reply

பயனுள்ள தகவல் சகோ.!

இந்த முறை சில நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டும் தான். நான் இருக்கும் அமீரகத்தில் இன்னும் வரவில்லை. விரைவில் வரும் என்று சொல்லியுள்ளார்கள்.

http://support.google.com/youtube/bin/answer.py?hl=en&answer=82839

வெற்றிகரமாக என் சேனலுக்கு 2,582 Page views-ஐயும,ஒரு ஃபால்லோவரையும் பெற்றுள்ளேன்.

:) :) :)

//உங்கள் முயற்சிகளை பொறுத்து தான் இது ஈமு கோழி போடும் முட்டையா அல்லது, பொன் முட்டை இடும் வாத்தா என்பது தெரிய வரும்.
//

ஹா..ஹா..ஹா..

Reply

புதிய தகவல் சகோ. இந்தியாவில் நிறைய Partner-கள் உள்ளார்கள்.

Reply

இந்தியாவிற்கு உண்டு சகோ. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் தான்.

Reply

ஹாய் பிரபு

​நல்ல பதிவு. முயற்சி செய்து பார்த்து விட வேண்டியது தான்.

​நாகு
www.tngovernmentjobs.in

Reply

NANBARA VIDEO EDITING SOFTWARE PATRI SOLLUNGAL

Reply

Good News Nanbare Naanum Try Panren....

Reply

நல்லா இருந்த பதிவர் ஒருவரை கெட்டடிச்சிட்டீங்களே? பாருங்க, அவர் வரிசையா வீடியோ போஸ்டா போடுறார்...

:D :D :D

Reply

என்னிடம் நிறைய இளையராஜா மற்றும் சினிமா நடிகர்கள் பாடல்கள் இருக்கிறது. சினிமாவில் வரும் வீடியோ போன்றவற்றை upload பண்ணலாமா சார் .... என்னக்கு ஆங்கிலம் தெரியாது... ஏதேனும் மாற்று வலி உண்டா ?

Reply

என்னிடம் நிறைய இளையராஜா மற்றும் சினிமா நடிகர்கள் பாடல்கள் இருக்கிறது. சினிமாவில் வரும் வீடியோ போன்றவற்றை upload பண்ணலாமா சார் .... என்னக்கு ஆங்கிலம் தெரியாது... ஏதேனும் மாற்று வலி உண்டா ?

Reply

இல்லை செய்யக்கூடாது. அதற்கு யாரேனும் Copyright வைத்து இருப்பார்கள்.

Reply

ஹஹஹஹஹா நெறைய சொல்லாம் ஆஹா வேணாம் நான் சொன்ன

நீ அழுதுடுவா ,p

Reply

வணக்கம்

ஒரு கூகுல் அட்சென்சுகு விண்ணப்பிக்கப்பட்டு அவ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் நீராகரிப்புக்கான காரணங்களை சீர் செய்து விட்டு எத்தனை நாளின் பிறகு விண்ணப்பிக்கலாம்

Reply

eppadi naan en bloggeril adsensai payanpaduthuvadhu ,enadhu blog tamil blog aagum.tamil blogsukku adsense payanpadutha mudiyaadhu ena silar solgindranar pin eppadi naan en bloggil irundhu sambaarippadhu ,adsense pondru veru edhaavadhu irukiradhaa? konjam udhavungalen prabhu ..my id is netanandha@gmail.com .my blog is http://tamizhmobile.blogspot.com

Reply

adsense ai thavira veru edhaavadhu moolam nam blogai payanpaduthi panam sambaarikka mudiyuma ? udhavungal nanbare....netanandha@gmail.com
my blog is http://tamizhmobile.blogspot.com

Reply

நாட்கள் எல்லாம் கணக்கில் கொள்ள தேவை இல்லை. நீங்கள் உடனடியாக மீண்டும் முயற்சி செய்யலாம். ஆனால் எதற்காக நிராகரிக்கப்பட்டதோ அதை சரி செய்த உடன் என்பதை மறந்து விடாதீர்கள்.

Reply

தமிழ்க்கு நீங்கள் மிகவும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். வாய்ப்பளிக்கும் அனைத்தும் வீண் என்பது என் எண்ணம். எனவே Adsense க்கு முயற்சி செய்யவும். வருங்காலத்தில் தமிழ்க்கு பயன்படுத்தும் வாய்ப்பு வந்தால் உதவியாக இருக்கும்.

Reply

வணக்கம் பிரபு சார்
அலெக்சாவிற்கு விண்ணப்பிப்பதற்கு மொபைல் பற்றி எழுதும் ஒரு ஆங்கிலத் தளத்திற்குத் தான் பெற முயன்றேன்.

அது இன்று தான் 19000 ஆயிரம் என்ற அலெக்சாவைப் பெற்றுள்ளது. நிராகரிப்பிற்கான வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
அாலக்சா 20 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமானதா?

Reply

Alexa, adsense இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

Reply

//adsense ai thavira veru edhaavadhu moolam nam bloggai payanpaduthi panam sambaarikka mudiyuma ? udhavungal nanbare....netanandha@gmail.com
my blog is http://tamizhmobile.blogspot.com//

idharku thelivaana badhil aliyungal pls............

Reply

மேலேயே அந்த நண்பருக்கு பதில் கூறி உள்ளேன்.

//தமிழ்க்கு நீங்கள் மிகவும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். வாய்ப்பளிக்கும் அனைத்தும் வீண் என்பது என் எண்ணம். எனவே Adsense க்கு முயற்சி செய்யவும். வருங்காலத்தில் தமிழ்க்கு பயன்படுத்தும் வாய்ப்பு வந்தால் உதவியாக இருக்கும்.//

Reply

Eppadi ethan moolam avargal namaku panathai anupuvargal

Reply

தமிழில் எளிமையாக சம்பாதிக்கவும் முடியும். அதற்கு நம் கூட்டு முயற்சியே தேவை. ஆம் ஒருவரே கஷ்டப்பட்டு 100 கிலோவைக் தூக்க முயல்வதைக் காட்டிலும், 4 பேர் சேர்ந்தால் எளிமையாக தூக்கிவிடலாம்.

நீங்கள் தமிழில் சம்பாதிக்க வேண்டும் என்றால்> படுகை.காம் வரவும்.

tamil online job site > www.padugai.com

உறுதியான வருமான வாய்ப்பு.. அது மட்டும் அல்லாமல், தமிழ் மட்டும் அறிந்தாலும் நிங்கள் கணிணி பயன்படுத்துவதால், அட்சன்ஸ் வேலை செய்ய முடியும். அதற்கு ஆங்கிலத்தில் சிம்பிளாக கீப்ரேஸ் மட்டும் பயன்படுத்த தெரிந்தால் போதும்.


tamil online job site > www.padugai.com

Reply

சிறந்த தகவல் தந்தமைக்கு நன்றி

Reply

sir,
please help to my blog and give idea to develope my blog please visit my blog my blog id is http://www.cooven.blogspot.in.

Thanking you sir
by your fan
M.Kishore Kumar

Reply

Partner with YouTube இந்த படிவத்தை எப்படி நிரப்பவேண்டும் சார்.. உதவுங்கள்..

Reply

அதில் உங்கள் வீடியோ பற்றிய விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.

உங்களிடம் கேட்கப்பட்டுள்ள தகவல்களுக்கு சரியான பதிலை நிரப்புங்கள்.

Reply

adsense கணக்கு எப்படி உருவாக்குவது நண்பரே.. கொஞ்சம் சொல்லமுடியுமா அல்லது அது பற்றிய பதிவு இருந்தால் பகிரவும்...

Reply

Adsense.com என்றே தளத்திற்கு சென்று New To Adsense என்பதை கிளிக் செய்து Apply செய்ய வேண்டும்.

Reply

இதுவரை நான் சில வீடியோக்களை அப்-லோட் செய்துள்ளேன். இந்த விபரம் தெரியாது .தகவலுக்கு மிக்க நன்றி....

Reply

Post a Comment