ஜிமெயிலை கணக்கை Outlook.com - இல் பயன்படுத்துவது எப்படி? | கற்போம்

ஜிமெயிலை கணக்கை Outlook.com - இல் பயன்படுத்துவது எப்படி?கடந்த வாரத்தில் Outlook.com ஏன் சிறந்தது என்றொரு பதிவில் சொல்லி இருந்தேன். அத்தோடு Outlook.com இன் அடிப்படை தகவல்களையும் சொல்லி இருந்தோம். Outlook.com - இன் இன்னொரு சிறப்பு உங்கள் மற்றொரு ஈமெயில் கணக்கை நீங்கள் அதில் பயன்படுத்தலாம். இன்று எப்படி ஒரு ஜிமெயில் கணக்கை பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதற்கு வரவும். 

2. இப்போது POP Download பகுதியில் "Enable POP for all mail" அல்லது  "Enable POP for mail that arrives from now on" என்பதை தெரிவு செய்யவும். 3. இப்போது outlook.com க்கு செல்லுங்கள். உங்கள் கணக்கில் நுழைந்து Settings >> More Mail Settings என்பதற்கு வரவும். 4. அதில் Managing your account பகுதியில் Sending/receiving email from other accounts என்பதை கிளிக் செய்யவும். 

5. இப்போது "You can receive mail from these accounts" என்பதில் Add an email account என்பதை கிளிக் செய்து வரும் அடுத்த பக்கத்தில் கீழ்கண்ட தகவல்களை நீங்கள் தர வேண்டும். 

Email address: உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி
POP3 user name:  உங்கள் பெயர் [உங்கள் விருப்பம்]
Password:  ஜிமெயில் பாஸ்வேர்ட்
Incoming mail server: pop.gmail.com
Port: 995

இப்போது கீழே உள்ளது போல இருக்கும்.


6. இப்போது Next என்பதை தரவும். அடுத்த பக்கத்தில் உங்கள் ஜிமெயில்க்கு வரும் மெயில்கள் எங்கே இருக்க வேண்டும் என்று தெரிவு செய்ய வேண்டும். தனி Folder என்றால் ஒரு பெயர் கொடுக்கலாம், இல்லை என்றால் Inbox என்பதை தெரிவு செய்து விடுங்கள்.  இப்போது Save கொடுத்து விடுங்கள்.


உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள மின்னஞ்சல்களை பொறுத்து அனைத்து மெயில்களும் இங்கே வர தாமதம் ஆகலாம். அதிக பட்சம் ஒரு நாளில் செயல்பட தொடங்கும். 


இப்போது உங்கள் ஜிமெயில்க்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதை ஓபன் செய்து, அதில் உள்ள லிங்க் மீது கிளிக் செய்தால் கீழ்கண்ட மெசேஜ் வரும்.இப்போது New Mail Compose செய்யும் போது ஜிமெயில் அக்கௌன்ட்டை தெரிவு செய்து மின்னஞ்சல் அனுப்பவும் முடியும். ஜிமெயில் அக்கௌன்ட்டில் இருந்து எப்போதும் மின்னஞ்சல் அனுப்ப விரும்பினால் அதை Default ஆக மாற்றி விடலாம். இதற்கு நீங்கள் Mail Settings >> Managing your account >> Sending/receiving email from other accounts என்பதில் You can send mail from these accounts பகுதியில் உங்கள் ஜிமெயில் கணக்குக்கு நேர உள்ள "Use as default" என்பதை கிளிக் செய்து விட்டால் போதும். 

இதே போல Outlook.com கணக்கை ஜிமெயிலில் பயன்படுத்த - பிரபு கிருஷ்ணா

2 comments

பயனுள்ள பதிவு சகோ!

Reply

நல்ல தகவல் சகோ.! Outlook தளத்தில் கணக்கு தொடங்கிய உடன் வந்த முதல் மின்னஞ்சலிலேயே "உங்களுக்கு ஜிமெயில் போன்று வேறு மெயில்கள் உள்ளதா? இங்கே படிக்கலாம்" என்று சொன்னது. அவர்களின் முதல் போட்டி ஜிமெயில் தான்.

:D :D :D

Reply

Post a Comment