MS Office நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு மென்பொருள். Word, Power Point, Excel என்று ஏதேனும் ஒன்றை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் நமது டாகுமென்ட்களுக்கு நாம் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டி வரலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
1. ஒரு புதிய டாகுமென்ட்டை உருவாக்குங்கள் அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
2. Save செய்யும் போது "Save As" என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. அதில் முதலாவதாக உள்ள Word Document - ஐ என்பதையே கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது வரும் பகுதியில் Tools >> General Options என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. இப்போது வரும் பகுதியில் Password கொடுப்பதற்கான வசதிகள் இருக்கும்.
முதலாவதாக உள்ள "Password to open" பகுதியில் Password கொடுத்தால் File Open ஆகும் போது Password கேட்கப்படும்.
"Password To Modify" என்பதில் Password கொடுத்தால் Edit செய்யும் போது Password கேட்கப்படும்.
"Read-only recommended" என்பதை கொடுத்தால் File Read Only என்ற முறையில் இருக்கும். அதை எடிட் செய்ய முடியாது.
உங்களுக்கு தேவைப்படும் முறையில் இவற்றை செய்து OK கொடுத்து விடுங்கள்.
அவ்வளவு தான் இனி இவற்றை தேவையானவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
- பிரபு கிருஷ்ணா
12 comments
பலருக்கும் உதவும்... நன்றி...
Replyநிஜமாகவே இது வேலை செய்கிறது....பகிர்வுக்கு மிக்க நன்றி....
Replyநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தகவல் பயயனுள்ளதாக இருந்தது. நன்றி
Replyநன்றி நண்பரே.உங்களது வலைப்பூ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Replyசாம்சுங் செல் லில் தமிழ் எழுதில் பார்க்க படிக்க என்ன பண்ண வேண்டும். தயவு ஸைடு சொல்ல வேண்டுகிறேன்.
Replyபயனுள்ள தகவலை எளிமையாக சொல்லிக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி பிரபு..!
Replyபயனுள்ள பதிவு சகோ.! பலருக்கு பயன்படும்.
Replyபயனுள்ள பதிவு நண்பா ...
Replyபலருக்கு பயன் படுதோ இல்லையோ
எனக்கு மிகவும் பயன்படும் ....!!
Opera Mini Browser உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய முடிந்தால் எளிதாக படிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்.
Replyhttp://gnutamil.blogspot.in/2012/02/opera-mini-browser.html
நன்றி
Replycan we assign password to video file?
ReplyThank u soooo much
ReplyPost a Comment