Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [Android Phone இல்லாதவர்களுக்கும்] | கற்போம்

Android App- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [Android Phone இல்லாதவர்களுக்கும்]


முன்பு ஒரு பதிவில் Smartphone Apps- களை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவது எப்படி? என்று சொல்லி இருந்தேன். அந்த தளத்தில் நிறைய Apps இன்னும் வராத காரணத்தால் மற்ற பல App-களை  பயன்படுத்த வழி உள்ளதா என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். அதற்கான தீர்வை இன்று பார்ப்போம். 

இது பெரும்பாலும் விண்டோஸ் 7 பயனர்களுக்கு மட்டுமே இயங்கும். XP-யில் நான் முயற்சி செய்த போது இயங்கவில்லை. அத்தோடு Android Phone இல்லாதவர்களும் இதை பயன்படுத்தலாம். 

1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. இதை உங்கள் Windows 7 கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இது பல நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். 

3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். அப்படி இல்லை என்றால் Desktop Shortcut மூலம் ஓபன் செய்யலாம். 4. இனி இது Google Play & உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களுக்கு எந்த App வேண்டுமோ அதன் பெயரை வலது மேல் மூலையில் உள்ள "Search Icon" மீது கிளிக் செய்து தேடலாம். 

5. இன்ஸ்டால் ஆன App- களை My Apps பகுதியில் காணலாம். இணைய இணைப்பை பயன்படுத்தி App-ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்த முடியும். 

நான் பயன்படுத்தும் Talking Tom, 


உங்களிடம் Android Phone இருந்தால்,

6. உங்கள் Android Phone - ஐ இந்த மென்பொருள் உடன் இணைக்க முடியும். வலது கீழ் மூலையில் உள்ள Settings Icon மீது கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் "Cloud Connect" என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் "Do you have a Android Phone" என்பதற்கு Yes தெரிவு செய்து Next கொடுங்கள். 

7. வரும் பகுதியில் BlueStacks - கில் நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து Register செய்து கொள்ள வேண்டும். இப்போது உங்களுக்கு 9 இலக்க Pin Number ஒன்று வந்திருக்கும். 

8. இப்போது உங்களுக்கு BlueStacks- இல் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கும். அடுத்து உங்கள் Android Phone - இல் நீங்கள் BlueStacks Cloud Connect என்ற Application - ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

9.  Application - ஐ இன்ஸ்டால் செய்து 9 இலக்க Pin Number - ஐ கொடுத்து Log In செய்து கொள்ளலாம். 


10. Log - in ஆன உடன் உங்கள் மொபைலில் உள்ள App - களை உங்கள் கணினியில் பயன்படுத்தும் BlueStacks உடன் Sync செய்து கொள்ளும் வசதி இருக்கும். 


இதில் குறிப்பிட்ட ஒரு App அல்லது அனைத்து App - களையும் உங்கள் கணினிக்கு Sync செய்து கொள்ளலாம். 

11. இனி Android App பயன்படுத்த உங்கள் Android Phone - ஐ பயன்படுத்த தேவையில்லை. 

இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

- பிரபு கிருஷ்ணா

29 comments

Actually i don't like games. I think its there.

Reply

கேம்ஸ் வொர்க் ஆகுமா...அப்புறம் அணைத்து apps டவுன்லோட் செய்து வொர்க் செய்ய முடியும்மா...

Reply

Google Play - யில் உள்ள பெரும்பாலான Applications இதில் உள்ளன.

Reply

அன்பரே விண்டோஸ் 8 இல் இது இயக்க முடியுமா ?

Reply

பயனுள்ள தகவல்..தேங்க்ஸ் பிரதர் .......

Reply

FYI,

SNAP PEA is also an good application. And it is better than this and user friendly too..

Reply

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Reply

Very useful posting Prabhu thank you very much.

Reply

பயனுள்ள தகவல்.

Reply

அன்புடையீர் வணக்கம்.
என்னிடம் ஆன்ட்ராய்டு போன் இல்லாத சமயத்தில் கடந்த நவம்பர் மாதம் எனது லேப்டாபில் BlueStacks ஐ இன்ஸ்டால் செய்து இயக்க ஆசைபட்டேன்.
ஆனால் ஆன்ராய்டைப் பற்றி அப்போது எனக்கு தெரியாத காரணத்தால் இயக்கத் தெரியவில்லை.10.15 நாட்கள் பிறகு அதனை அன்இன்ஸ்டால் செய்து விட்டேன்.
தற்போது சாம்சங் ஆன்ட்ராய்ட்போன் வாங்கி ஓரளவு அதனை தெரிந்து கொண்ட பிறகு மறுபடியும் எனது லேப்டாபில் BlueStacks இன்ஸ்டால் செய்ய தங்களது பதிவு வழியாக முயற்சித்தேன்.
எல்வாம் சரியாக தரவிறக்கம் ஆகிறது.ஆனால் இன்ஸ்டால் ஆகும் போது தங்களது சிஸ்டத்தில் பழைய வெர்சன் இன்ஸ்டால் ஆகி உள்ளது என Exit ஆப்சனுடன் முடித்துக்கொள்கிறது.சிஸ்டத்துக்குள் ஏதோ ஒரு இடத்தில் பழைய வெரசனின் லெப்ட்ஓவர் பைல் ஒன்று உள்ளது என கருதுகிறேன்.
அதனை எப்படிக் கண்டு பிடித்து நீக்குவது?
அதற்கான வழியை எனக்கு தரவும்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்

Reply

அநேகமாக Registry File - கள் இன்னும் இருக்கக்கூடும். அவற்றை நீக்க வேண்டும். முதலில் உங்கள் கணினியில் Hidden File - களை தெரிய வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் My Computer >> Users >> //Current User Folder // >> App Data இதில் Bluestacks இருந்தால் அதை நீக்கி விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.

இது வேலை செய்யா விட்டால் சொல்லுங்கள் வேறு வழி சொல்கிறேன்.

Reply

naan anaithaiyum sariyaga seithuvitten,yennidam sony ericcson android phone ullathu athaiyum bluestacksil register seithu vitten,aanal yennudaiya phoneil ulla contacts yethuvum sync agavillai yenna seivathu

Reply

Application - களை மட்டுமே Sync செய்ய முடியும். Contact sync ஆகாது.

Reply

நான் இன்ஸ்டால் செய்யும் பொழுது உங்களது கிராபிக் கார்டை அப்டேட் செய்யவும் என்று வருகிறது அதை எப்படி அப்டேட் செய்வது தயவு செய்து உதவுங்கள் ....................

Reply

கார்டா இல்லை டிரைவரா என்று சொல்லுங்கள்.

கார்டு என்றால் நீங்கள் புதிய கிராபிக்ஸ் கார்டு வாங்க வேண்டும்.

Graphics டிரைவர் என்றால் இணையம் மூலம் Update செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் எந்த Driver பயன்படுத்துகிறீர்களோ அந்த தளத்துக்கு சென்று Update செய்ய வேண்டும்.

Reply

install pannumpodhu 2GB physical memory venumnu kekkudhu..

Reply

naan install pannumpodhu 2GB physical memory venumnu ketu install aagama ninnuduchu..

Reply

install pannumpodhu 2GB physical memory venumnu kekkudhu..

Reply

உங்கள் கணினியில் குறைந்த பட்சம் 2GB RAM இருக்க வேண்டும். அப்போது தான் இயங்கும்.

Reply

I have Adroid TV (HAier TV) in that No Google Play & No Download option, it can install only thru SD Card, but we are not able to Download the application thru Google Play, can u give suggestion for this.

Reply

I dont know the answer. Please contact Haier Customer care. They will help you.

Reply

I sent the mail long back, they dn't reply yet, any other idea, to download the application thru PC, i dn't get the device id.

Reply

No Idea. Try to contact them by phone call.

Reply

I installed one google application named Excel Tube. It works fine in my android phone. But, it does not work properly and says that "Could not launch withont internet connectivity" even though my laptop is connected with WIFI network. Please find out a solution to operate the application using bluestacks. Thanks.

Reply

Dear mr Prabu,
On going through the article I successfuly installd the Blue Stacks application in my laptop also installed many android application. Recently I installed one application by name "Excel Tube" both in my mobile and laptop. This application works fine in my mobile but does not work properly in my laptop. It says "could not launch without internet connectivtiy" even when I am connected with hi-speed internet connection. Please tell me a solution to rid of this problem.

Reply

கூகுள் ப்ளே தளத்தில் அந்த Application முகவரியை தாருங்கள். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Reply

Post a Comment