விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்வது எப்படி? | கற்போம்

விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்வது எப்படி?

Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் , சிடி போன்றவை இல்லாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம். 

இதற்கு மிக முக்கியமாக நீங்கள் இணைய இணைப்பில் இருப்பது அவசியம். அது இல்லாமல் செய்ய முடியாது. 

1. முதலில் Windows installer என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. அடுத்து அதை ஓபன் செய்யுங்கள். Windows 7 or Vista என்றால் கீழே உள்ளது போல வரும் அதில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள். 3. இப்போது வரும் விண்டோவில் நீங்கள் எந்த Drive - இல் OS இன்ஸ்டால் செய்ய போகிறீர்கள் என்பதோடு User Name, Password - ஐ குறிப்பிட வேண்டும். 


4. இப்போது இது 500MB அளவுக்கு டவுன்லோட் ஆகும். இதற்கு சில நிமிடங்கள் முதல் மணி நேரம் வரை ஆகலாம். உங்கள் இணைய வேகத்தை பொறுத்தது.ஆனால் நீங்கள் தொடர்ந்து உங்கள் கணினியில் வேலைகளை செய்யலாம். 5.இன்ஸ்டால் ஆன பிறகு நீங்கள் உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். 6. Restart ஆனவுடன் கீழே உள்ளது போல வரும், இப்போது நீங்கள் Ubuntu - வை தெரிவு செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 


- பிரபு கிருஷ்ணா

10 comments

இதனால் ஏற்கனவே பயன் படுத்தும் விண்டோஸ் 7க்கு பதிப்பு ஏற்படுமா? இது தேவை இல்லை என்றால் எளிதாக நீக்கம் செய்யலாமா? நீக்கிய பின் பழைய முறையில் விண்டோஸ் ஸ்டார்ட் ஆகுமா?
உபுண்டுவில் பழ வெர்சன் வருதே இது லேட்டஸ்டா ! இதில் வேர்டு,பவர்பாய்ட்,பெயிண்ட் எப்போதும் போல் வேலை செய்யுமா? இன்டர்னெட் பார்வையிட புதிதாக குரோம்,இன்டர்னெட் எக்ஸ்பொலர் தரவிரக்க வேண்டுமா?

Reply

தகவலுக்கு மிக்க நன்றிங்க...

சமீபமாக உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளன.. எப்பொழுதுமே நன்றாக தான் இருக்கும்.. இருந்தாலும் சமீபமாக உங்கள் பதிவுகள் இன்னும் தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது.

தொடருங்கள் ..

வாழ்த்துக்கள்...

Reply

இல்லை பாதிப்பு எதுவும் வராது. தேவை இல்லை என்றால் நீங்கள் Windows Recovery வசதி மூலம் இதை Remove செய்யலாம்.கடினமாக இருந்தால் மீண்டும் Windows 7 புதியதாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

12.10 புதுசு. விண்டோஸ் மென்பொருள்களை இதில் பயன்படுத்த முடியாது. நீங்கள் தனியாக தான் எல்லா மென்பொருள்களையும் டவுன்லோட் செய்ய வேண்டும்.

Reply

Power supply will be an issue here.

Reply

இந்த முறையில் win 7 ஐ Intall பண்ணமுடியுமா?

Reply

இல்லை முடியாது

Reply

1. முதலில் Windows installer என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
2. அடுத்து அதை ஓபன் செய்யுங்கள். Windows 7 or Vista என்றால் கீழே உள்ளது போல வரும் அதில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.

மேற்கண்ட இரண்டு வரிகளுக்கு இடையில் ஏதோ விடுபட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். தெளிவுபடுத்தவும். நன்றி.

Reply

சரியாகத்தானே இருக்கிறது.

Reply

Post a Comment