ஆனந்த விகடன் வரவேற்பறையில் கற்போம் தளம் | கற்போம்

ஆனந்த விகடன் வரவேற்பறையில் கற்போம் தளம்


பாராட்டுகளும், அங்கீகாரங்களும் எப்போதும் ஆபத்தானவை. நம்முடைய கடந்த காலத்துக்கு கிடைத்த வெற்றி என்று நாம் நினைத்தாலும், நாம் எதிர்காலத்தில் எப்படி செயல்படுவோம் என்பதை தீர்மானிக்கும் சூழ்நிலையும் உருவாகும். அப்படியான இடத்தில் இருக்கிறேன் நான். 

கற்போம் தளம் குறித்தும், இதழ் குறித்தும் மின்னஞ்சல் மூலமாகவும், அலைபேசி மூலமாவும் நிறைய பேரின் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. அவற்றுக்கெல்லாம் மகுடமாக இன்று தமிழத்தில் மிக அதிகம் பேர் வாசிக்கும் வார இதழான ஆனந்த விகடன் வரவேற்பறை பகுதியில் கற்போம் தளம் குறித்த செய்தி வந்துள்ளது. 

06-02-2013 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் (சமந்தா படம் அட்டையில் உள்ள  இதழ் ;-) ) 37 - ஆம் பக்கத்தில் கீழே உள்ள பகுதி இருக்கும். 

தொழில்நுட்பம் கற்போம். www.karpom.com 
ஒவ்வொரு நாளும் நம் கைகளுக்குப் புதிய கணினியும், புதிய அலைபேசியும் வந்து சேர்கிறது. நவீனத் தொழில்நுட்பங்கள் நிறைந்த அந்தக் கருவிகளின் முழுப் பயனையும் நாம் அனுபவிப்பது இல்லை. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள எளிமையாகக் கற்றுத்தருகிறது இந்த வலைதளம். ஒரு ஆண்ட்ராய்டு அலைபேசியில் அவசியம் இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் எவையெவை, அவற்றை எங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம் என்பது முதல், இணைய உலகில் ஒவ்வொரு நாளும் வந்து இறங்கும் புதிய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருட்கள்பற்றிய அறிமுகமும் உடனுக்குடன் தரப்படுகிறது.  'உங்களிடம் இருந்து ஃபேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது?’ என்ற கட்டுரையில், நமது தனிப்பட்ட தகவல்கள் எப்படி கரன்ஸியாக உருமாறுகின்றன என்பதைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது!

ஒரு பதிவராக மிகப் பெரிய அங்கீகாரத்துக்கு அந்தரத்தில் மிதந்த நான் இனி நிறைய பேர் கவனிப்பார்கள் என்ற பயம் வந்தவுடன் தானாய் பூமிக்கு வந்துவிட்டேன்.  

கற்போமில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் யாரோ ஒருவருக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் தான் பகிரப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வாசிப்பும், பாராட்டும் தான் இன்று விகடன் வரை கற்போமை கை பிடித்து அழைத்து சென்றுள்ளது. 

விகடனுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், இது நாள் வரையில் கற்போமை விமர்சித்த, ஆதரித்த, பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பிய சேலம் தேவா அண்ணாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் :-)

நன்றி !!!

- பிரபு கிருஷ்ணா

31 comments

வாழ்த்துக்கள் கற்போம் தளத்தினருக்கு நண்பர்களுக்கு தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துங்கள்.

Reply

வாழ்த்துக்கள் கற்போம் தளத்தினருக்கு நண்பர்களுக்கு தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துங்கள்.

www.gouthaminfotech.com

Reply

சிறந்த அங்கீகாரம் !! இது உங்களை இன்னும் அதிகமாக எழுதவைக்கும்...எல்லோருக்கும் உதவும் வகையிலான பதிவுகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !

என் மனமார்ந்த பாராட்டுகள் !!

வெல்க தமிழ் !

Reply

வாழ்த்துகள் சகோ. கற்போம் சிறந்த தளமாக வாசகர்களுக்கு பயனளிக்கிறது. நன்றி.

Reply

மகிழ்ச்சியான செய்தி! மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.! தனி கட்டுரையாகவும் இடம்பெற வாழ்த்துக்கள்!

Reply

உங்கள் தொழில்நுட்ப கற்பித்தலுக்கு சரியான அங்கீகாரம்தான் பிரபு.
எனது மனமார்ந்த வாழ்த்துகளும்,மகிழ்ச்சியும்.... :)

Reply

வாழ்த்துகள்!

Reply

congrage ...to karpom site

Reply

வாழ்த்துக்கள் நண்பா...

Reply

வாழ்த்துக்கள்...பிரபு

Reply

வாழ்த்துக்கள். தொடர்க உமது அரும் பணி.

Reply

வாழ்த்துக்கள் நண்பரே ..

இது எதிர்பார்த்த ஒன்றுதானே ..


என் போன்ற இணையத்திற்கு புதியவர்களுக்கு உங்கள் பதிவுகள் நல்ல உபயோகமாக இருக்கிறது ..

மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

Reply

VAZTHUKAL NANBARE.. UNGAL SEVAI THODARA EN ANBANE VAZTHUKKAL

Reply

வாழ்த்துக்கள் பிரபு.

இந்த அங்கீகாரம் உங்கள் உழைப்பிற்காக, முயற்சிக்காக கிடைத்தது. இன்றைய காலகட்டத்தில் ஆங்கில தளங்களுக்கு சற்றும் குறையாமல் தமிழில் தொழில்நுட்பப செய்திகளை உடனுக்குடன் பதிவிடும் உங்களை பார்த்து நான் வியந்தது உண்டு. தொடர்ந்து எழுதுங்கள்.

Reply

உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும்தான். ஆன்ட்ராய்ட்தொழில்நுட்பத்தை விளக்கமாக எளிய தமிழில் தந்தது நீங்கள்தான். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அமர்க்களம் கருத்துக்களம்
உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் களம்

http://www.amarkkalam.net

Reply

வாழ்த்துக்கள் கற்போம் தளத்திற்கும் அதன் நிர்வாகிக்கும்.

Reply

வாழ்த்துக்கள்.. :-)

Reply

வாழ்த்துகள் நன்பா

Reply

வாழ்த்துக்கள் பிரபு....

உங்கள் குழுவின் உழைப்புக்கு கிடைத்த மைல் கல்...

Reply

வாழ்த்துக்கள் "கற்போம் "பிரபு

Reply

ஆனந்த விகடன் மூலமாகத்தான் நான் கற்போம் தளத்தை அறிந்து கொண்டேன்.

சேவைக்கு வாழ்த்துக்கள்..

தொடர்ந்து உரையாடுவோம்..

Reply
நிமல் mod

ஆவி மூலமாக தான் இந்த தளம் அறிமுகம் சேவைகள் அருமை நன்றி !!!

Reply

வாழ்த்துகள் பிரபு. இது முதல் படிதான், உங்களுக்கான வரவேற்பும் பாராட்டுகளும் நிறைய காத்திருக்கின்றன. இன்னும் அதிக பேரை கொள்ளை கொள்ள போகிறீர்கள்.

Reply

வாழ்த்துகள் பிரபு. இது முதல் படிதான், உங்களுக்கான வரவேற்பும் பாராட்டுகளும் நிறைய காத்திருக்கின்றன. இன்னும் அதிக பேரை கொள்ளை கொள்ள போகிறீர்கள்.

Reply

வாழ்த்துகள் பிரபு...!!! சரியான அங்கீகாரம்.. சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. இது உங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி..!

Reply

உங்கள் வலைத்தளம் விகடன் வரவேற்பறையில் இடம் பெற்றிருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நண்பா. விகடன் என்பது மிக சிறந்த அங்கீகாரம். இன்னும் பல சிறப்பான நிலையை அடைய வாழ்த்துக்கள் நண்பா....

Reply

Congrats Prabhu....
Through Ananda vikatan only i came to know...
Good work
Keep it up....

And dont fear....we are here

Reply

வாழ்த்துக்கள்

Reply

Congratulations! Well deserved!

Admin
GnanaBoomi.com

Reply

Post a Comment