உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங் | கற்போம்

உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்

தென்கொரிய நிறுவனமான சாம்சங் குறித்து நாம் அனைவரும் அறிவோம். மின்னணு சாதனங்களுக்கு பெயர் பெற்ற இந்த அலைபேசி நிறுவனம் தற்போது உலகிலேயே முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தை சோதித்து பார்த்துள்ளது. இதன் மூலம் இப்போது நாம் பெறும் இணைய வேகத்தை விட பல மடங்கு அதிக  அளவுக்கு மிக வேகமான இணைய இணைப்பை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.

5G தொழில்நுட்பத்தை 28 GHz அலைகற்றையில் சோதித்து 1GB தகவலை ஒரே நொடியில் பரிமாறி உள்ளது சாம்சங். அதாவது இதன் மூலம் ஒரு முழு திரைப்படத்தை நாம் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இது தற்போது நாம் பயன்படுத்தும் 2G மற்றும் 3G ஐ விட பல ஆயிரம் மடங்கு வேகம் ஆகும். சொல்லப் போனால் Broadband ஐ விடவும் மிக அதிக வேகம்.இதன் மூலம் மிக அதிக தரமுள்ள HD வீடியோக்களை மிகக் குறைந்த நேரத்தில் பரிமாற்ற முடியும், அதே போல 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை பார்க்க முடியும், Ultra HD வீடியோக்களை Real-time streaming மூலம் பார்க்கலாம்.

இது 2020 முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம். இந்தியா, சீனா போன்ற பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இன்னும் 4G தொழில்நுட்பமே வந்திராத நிலையில் 5G என்பது நமக்கு எப்போது கிடைக்கும் யூகிக்க முடிகிறதா?

- பிரபு கிருஷ்ணா

Post a Comment