கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு] | கற்போம்

கணினி மூலம் Android போனில் App-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? [புதியவர்களுக்கு]

நாம் எல்லா சமயங்களிலும் போன்களை நம் கையில் வைத்திருப்பது இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் இணைய இணைப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் Android பயனராக இருப்பின் ஒரு Application இன்ஸ்டால் செய்ய உங்களிடம் போனில் இணைய இணைப்பு அல்லது போனே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினியில் இருந்தே உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யலாம். எப்படி என்று பார்ப்போம்.

உங்களின் Android போன் உங்களிடம் இல்லாத சமயத்தில் அல்லது போனில் இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் நீங்கள் ஒரு Application ஒன்றை ஏதேனும் ஒரு தளத்திலோ அல்லது நண்பர்கள் மூலமோ அறிய வந்திருப்பீர்கள். உங்களிடம் போன் இல்லாத காரணத்தால் அதை பிறகு இன்ஸ்டால் செய்யலாம் என்று பல சமயங்களில் மறந்து போயிருப்பீர்கள். அம்மாதிரி ஆகாமல் தவிர்க்கவே இந்த பதிவு. Android Tablet களை பயன்படுத்துபவர்களும் இந்த வழியை பின்பற்றலாம்.


குறிப்பிட்ட Application ஒன்றை கணினியில் இருந்து பார்க்கும் போது முதலில் அதன் Google Play பக்கத்திற்கு செல்லுங்கள். உதாரணமாக திங்களன்று நான் எழுதிய Line Application இன் Google Play  பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் இடது புறம் Application பெயர், படத்திற்கு கீழே Install என்று ஒன்று இருப்பதை கவனியுங்கள். [ஏற்கனவே இன்ஸ்டால் செய்திருப்பின் இன்ஸ்டால் செய்யாத ஏதேனும் ஒரு App பக்கத்திற்கு செல்லுங்கள்]

அதை (Install) கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்களை Google Play தளத்தில் Sign in செய்யச் சொல்லி கேட்கும். நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தும் ஜிமெயில் முகவரியை கொடுத்து Sign in செய்யுங்கள். Sign in செய்த உடன் உங்கள் போன் மாடல் வந்து விடும், அத்தோடு Sign in என்ற இடத்திலும் Install என்று வந்து விடும். [ஏற்கனவே Sign in செய்திருந்தால் நேரடியாக Install என்பது வரும்]இப்போது Install என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது "This app will be downloaded in your device shortly" என்று வந்துவிடும். இனி உங்கள் போனில் இணைப்பு கிடைக்கும் போது Application தானாக டவுன்லோட் ஆகி விடும்.உடனடியாக டவுன்லோட்தொடங்காவிட்டாலும் சில நிமிடங்களில் தொடங்கி உங்கள் இணைய வேகத்தை பொறுத்து டவுன்லோட் ஆகி விடும்.

பின் குறிப்பு: இந்த பதிவு முழுக்க முழுக்க புதிய Android பயனர்களுக்கானது. 

- பிரபு கிருஷ்ணா

Post a Comment