கற்போம்: Windows 7 | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

Windows 7-இல் Startup Sound-ஐ Disable செய்வது எப்படி?

Windows கணினிகளை ON செய்யும் போது Desktop க்கு வரும் வேளையில் Startup Sound என்று ஒரு Default Sound வருவதுண்டு. நிறைய பேருக்கு அதில் விருப்பம் இல்லை. இன்றைய பதிவில் அதை எப்படி Disable செய்வது என்று பார்ப்போம். 

விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி?


கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது. 

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது. 

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

முதலில் இந்த இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும். 


இது உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்யும் போது கீழே உள்ளது போல வரும்.


இதில் Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.


இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

தமிழில் டெஸ்க்டாப்

தமிழில் ஸ்டார்ட் மெனு
இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்):  Control Panel >>   Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

- பிரபு கிருஷ்ணா

Windows 7-இல் Godmode என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

சில நேரங்களில் கணினியில் ஏதேனும் ஒரு செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டும் என்று நினைப்போம். ஆனால் வழி தெரியாது. இல்லை என்றால் நிறைய மாற்றங்கள் செய்ய நிறைய வழிகளை பயன்படுத்தி இருப்போம். எங்கே போய் என்ன செய்தோம் என்று நினைவில் கூட இருக்காது. அப்படி இல்லாமல், நமக்கு தேவையான நிறைய செட்டிங்க்ஸ்களை ஒரே இடத்தில் மாற்ற வழி தரும் ஒரு வசதியான God Mode பற்றி இன்று பார்ப்போம். 

Windows 7க்கு ஏழு டிப்ஸ் & ட்ரிக்ஸ் [வீடியோ பதிவு]

Windows 7, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றி அடைந்த ஒரு Operation System. இதில் முந்தைய OS களை விட நிறைய வசதிகள் உள்ளன. அத்தோடு பயனர் எண்ணிக்கையும் அதிகம். இதோ பயனுள்ள சில தகவல்கள் உங்கள் Windows 7 கணினிக்கு.  இவற்றை எனது முதல் முழு வீடியோ பதிவாக இங்கே இணைத்துள்ளேன்.