Android Application-களை கணினியில் Download செய்வது எப்படி? | கற்போம்

Android Application-களை கணினியில் Download செய்வது எப்படி?

Android Mobile - கள் வைத்துள்ள நிறைய பேர் பெரும்பாலான Application-களை Google Play-வில் இருந்து டவுன்லோட் செய்வார்கள். நீங்கள் கணினியில் இருந்து இன்ஸ்டால் செய்தாலும் உங்கள் மொபைலில் இணைய இணைப்பு கிடைக்கும் போது அவை டவுன்லோட் ஆகும். சிலர் விலை குறைந்த Android Tablet/Mobile களை வாங்கி இருந்தால் Google Play-யில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியாது. இந்த நிலையில் அவற்றை கணினியில் தரவிறக்கம் செய்தால் நாம் எளிதாக அவற்றை இன்ஸ்டால் செய்யலாம். எப்படி அதை கணினியில் Download செய்வது என்று பார்ப்போம். 

1.முதலில் இந்த இணைப்பில் சென்று Real APK Leecher என்ற Application- ஐ உங்கள் கணினியில் டவுன்லோட் செய்யுங்கள். [கணினியில் இயங்கக் கூடியது]

2. இதை Extract செய்து "Real APK Leecher" -ஐ Run செய்யுங்கள். உங்கள் கணினியில் Java Install ஆகி இருந்தால் நேரடியாக Run ஆகும். இல்லை என்றால் அது டவுன்லோட் ஆகும்.  இப்போது கீழ் வரும் விண்டோ வரும். 



உங்களால் Google Play-யில் இருந்து டவுன்லோட் செய்ய முடியாவிட்டால் இதில் உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைய முடியாது. யாரேனும் உங்கள் நண்பரின் கணக்கை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும். Email, Password தெரியும் Device ID என்பதற்கு அடுத்த ஸ்டெப்பில் உள்ளதை செய்யவும்.  

3.இப்போது உங்கள் அலைபேசியில் அல்லது நண்பரின் அலைபேசியில்  *#*#8255#*#* என்ற எண்ணுக்கு Call செய்யவும். இதில் Gtalk Service Monitor என்ற ஒன்று வரும். [வரவில்லை என்றால் இணைய இணைப்பை Enable செய்து Gtalk-இல் Sign-in செய்து விட்டு செய்யவும்]

4. இதில் கீழே உள்ளது போல Device ID என்று ஒன்று வரும். 



5. இதனை உங்கள் மேலே உள்ள Device ID - யில் தர வேண்டும். 

6.அடுத்து எங்கே Save ஆக வேண்டும் என்பதை தெரிவு செய்து விட்டு Save கொடுங்கள். கீழே உள்ளது போன்ற விண்டோ வரும். 




7. இதில் வலது பக்கம் உள்ள சர்ச் வசதி மூலம் Application-களை தேடலாம்.கீழே அவை வரும். அவற்றின் மீது Right Click செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  



8. "Download This App" என்பது Disable ஆகி இருந்தால், குறிப்பிட்ட App மீது Double Click செய்யுங்கள். அந்த App உள்ள வரிசை Blue Background க்கு மாறும். இப்போது Right Click செய்து டவுன்லோட் செய்யலாம். 

இதை எப்படி உங்கள் Android Device - இல் இன்ஸ்டால் செய்வது என்று அறிய Non-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? என்ற பதிவை படிக்கவும். 

கணினியில் இருந்து Android Phone/Tablet க்கு Application-ஐ Copy செய்ய Android:Data Cable இல்லாமல் கணினியில் File Sharing செய்வது எப்படி? என்ற பதிவை படிக்கவும். 

இதில் இலவச மென்பொருட்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். கட்டண App-களை டவுன்லோட் செய்ய முடியாது. 
- பிரபு கிருஷ்ணா

14 comments

பயனுள்ள பகிர்வு நன்றி......

Reply

மிக்க நன்றி நண்பரே... விளக்கத்துடன் நல்லதொரு பகிர்வு...(TM 4)

Reply

பயனுள்ள தகவல் சகோ.!

Reply

உபயோகமான தகவல் நண்பா!

Reply

Thank you for your post

Reply

உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!

Reply

நண்பா ஜாவா எத்தனை MB டவுன்லோட் லிங்க் சொல்ல முடியுமா ?

Reply

அநேகமாக 50MB வரை இருக்கும்.

டவுன்லோட் செய்ய - http://www.java.com/en/download/index.jsp

Reply

பயனுள்ள தகவல் ..நன்றி நண்பா..

Reply

Good one prabhu.. Since I have only 2G connection in my mobile, i have been searching for this before. Thanks for sharing..

Reply

நன்றி நன்றி நன்றி

Reply

Post a Comment

பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.