கற்போம்: மொபைல் போன் | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

Moto X இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]

அவ்வப்போது ஸ்டைலிஷான ஸ்மார்ட்போன்களை வெளியிடும் மோட்டோரோலா நிறுவனம் கடந்த வருடம் ஜூலை மாதம் அறிவித்த போன் Moto X. கடந்த மாதம் Moto G இந்தியாவில் வெளியான நிலையில், Moto X எப்போது இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் Moto G யை வெளியிட்ட Flipkart நிறுவனம் மூலமே இன்று Moto X இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை ரூபாய் 23999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.4 (KitKat) OS – ஐ கொண்டுள்ளது. இதில் தமிழில் படிக்க மற்றும் எழுத முடியும். 10 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Quick Capture Gesture, Clear Pixel Technology, Get the Shot: Twist Wrist Twice to Shoot போன்ற வசதிகள் உள்ளன.  இதில் Full HD வீடியோ ரெகார்டிங் செய்யலாம். அதே போல முன்னாலும்  ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதிலும் Full HD வீடியோ ரெகார்டிங் செய்ய இயலும்.

இது 4.7 inch AMOLED HD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, eCompass, Gyroscope, Ambient Light ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.7 GHz Krait Dual Core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16 GB.அத்தோடு இது 2200 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

ஸ்க்ரீன் லாக் ஆகி இருப்பினும் நோட்டிபிகேஷன்களை காட்டும் Active Display என்ற புதிய வசதி இதில் உள்ளது.  அதே போல வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் போனை தொடாமலேயே பல செயல்களை செய்யும் வசதியும் இதில் உள்ளது.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Moto X Specifications

Operating System Android, v4.2.2 (Jelly Bean)
Display 4.7 inch (720 x 1280 pixels) AMOLED capacitive touch screen
Processor 1.7 GHz Krait Dual Core Qualcomm MSM8960Pro Snapdragon Processor
RAM 2 GB RAM
Internal Memory 16/32 GB
External Memory No
Camera Rear Camera: 10 MP, autofocus, LED flash, Clear Pixel, Full HD (1080p) Recording
Front Camera: 2 MP, Full HD (1080p) recording
Battery Li-Ion 2200 mAh Battery
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

2 GB RAM,  10 MP கேமரா போன்றவை சிறந்த வசதிகள். இருப்பினும் Dual Core Processor, HD Display போன்றவை ஏமாற்றம் தருகிறது.  மற்ற போன்களுடன் இதை கம்பேர் செய்ய விரும்பினால் இங்கே செல்லவும் Moto X Specifications

Apple iOS 7 - முதல் தமிழ் Review

2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.



இதன் பயன்கள் பல இருப்பதால் - முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.

1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிரது.

2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.

3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.

4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.

5. டூ நாட் டிஸ்டர்ப் - ஒரு செம்மை ஆப்ஸ் - பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.

6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க்கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.

7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும் மற்றூம் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.

8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.

9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிறவங்க கூட பி சி ஸ்ரீ ராம் கனக்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்கலாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.

10.ஃபோட்டோக்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலைஇல்லாமல் மேப்பில் இந்த படங்கள் இங்கே எடுக்கபட்டது என கூறூம். இன்ஸ்டாகிராமும் டோட்டல் சேஞ் ஓவர்

11. ஐ டியூன்ஸ் ரேடியோ - சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட்வித்தில் இயங்குகிறது - அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே - கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.

12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை - நீங்கள் ரெகுலராய் பார்க்கும் இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட்மென்ட் என அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.

13. ஆப்ஸ் ஸ்டோர் - ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.

14. கலர்ஃபுல் வால்பேப்பர்ஸ் - மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால்பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.

15. பேட்டரி லைஃப் - இதில் 11% வரை பேட்டரியை சேமிக்கலாம் என கூறுகின்றனர் ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.

All Picture Snapshots

- ரவி நாக்

நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்

iPhone 5S & iPhone 5C - இரண்டு புதிய ஐபோன்கள் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் நேற்று iPhone 5s & iPhone 5C என்ற இரண்டு புதிய ஐபோன்களை வெளியிட்டது. இரண்டுமே iOS 7 இயங்கு தளத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

iPhone 5s இல் உள்ள Home பட்டன் finger print sensor ஆகவும் இயங்கும். இதன் மூலம் உங்கள் போனை உங்களை தவிர வேறு யாராலும் unlock செய்ய முடியாது. அத்தோடு முதல் முறையாக 64bit Processor உள்ள மொபைல் என்ற சிறப்பம்சத்துடன் வெளியாகி உள்ளது இந்த போன். இதன் செயல்வேகம் முந்தைய ஐபோனை இரண்டு மடங்காக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.



iPhone 5C ஆனது குறைந்த விலை போன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய ஸ்பெஷல் இது பல வண்ணங்களில் கிடைப்பது தான். ஆம் வழக்கம் போல அல்லாமல் வெள்ளை, ஊதா, பச்சை, மஞ்சள், பிங்க் என்ற பல வண்ணங்களில் இந்த போன் உள்ளது.

இதன் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.

Apple iPhone 5S Features

Operating SystemApple iOS 7 OS
Display4 inch (640 x 1136 pixels) Capacitive Touch Screen display
ProcessorA7 chip with 64-bit architecture, M7 motion coprocessor
RAM
Internal Memory16/32/64 GB
External MemoryNo
Primary Camera8 MP, 3264×2448 pixels, autofocus, dual LED flash, 1.5 µm pixel size, Simultaneous HD video and image recording, touch focus, geo-tagging, face detection, panorama, HDR, Full HD (1080p) recording
Front  Camera1.2 MP, HD (720p) recording
BatteryNon removable 1440 Li-Po battery with Up to 250 hrs Standby Time and 10 hrs talk time
Connectivity3G, 4G, WiFi, Bluetooth, GPS and Micro USB

Full Specificaitons - Apple iPhone 5S

Apple iPhone 5C Features

Operating SystemApple iOS 7 OS
Display4 inch (640 x 1136 pixels) Capacitive Touch Screen display
ProcessorDual-core Apple A6 Processor
RAM1 GB RAM
Internal Memory16/32 GB
External MemoryNo
Primary Camera8 MP, 3264×2448 pixels, autofocus, LED flash, TTouch focus, geo-tagging, face detection, panorama, HDR, ƒ/2.4 aperture, Full HD (1080p) recording
Front  Camera1.2 MP, HD (720p) recording
BatteryNon removable battery with Up to 250 hrs Standby Time and 10 hrs talk time
Connectivity3G, 4G, WiFi, Bluetooth, GPS and Micro USB

Full Specificaitons - Apple iPhone 5C

Sony Xperia M முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications & Price]

கொஞ்சம் குறைந்த விலைக்கு பயனர்களை கவரும் வகையில் சில முக்கிய வசதிகளுடன் வரும் போன்களை அனைத்து நிறுவனங்களும் தற்போது வெளியிடுகின்றன. அந்த வகையில் அறிமுகமாகி உள்ள போன் தான் Sony நிறுவனத்தின் Xperia M. இது தற்போது ரூபாய் 12990 க்கு Flipkart தளத்தில் கிடைக்கிறது.



Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகள் உள்ளன.  அதே போல முன்னாலும்  ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1 GHz dual-core கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1750 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, NFC, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Sony Xperia M Specifications

Operating SystemAndroid 4.1 (Jelly Bean) OS
Display4 inch (480 x 800 pixels)  Capacitive Touch Screen display
Dual SimAvailable in Sony Xperia M Dual
Processor1 GHz dual-core Qualcomm Snapdragon MSM8227 processor
RAM1 GB RAM
Internal Memory4 GB (2.4GB user memory)
External MemorymicroSD, up to 32 GB
CameraPrimary Camera: 5 MP, LED Flash, HD (720p) Recording ; Front Camera: 0.3  MP
Battery1750 mAh battery
Connectivity3G HSDPA+ 21Mbps, WiF, Bluetooth, GPS, NFC, Java, Micro USB


- பிரபு கிருஷ்ணா

9 இந்திய மொழிகளுடன் Samsung Galaxy Smartphones & Tablets

Samsung நிறுவனம் இன்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Samsung Galaxy Smartphones மற்றும் Tablets இனி 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வண்ணம் வெளியாகும் என்பதே அந்த அறிவிப்பு. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி, மராத்தி மற்றும் குஜராத்தி ஆகிய 9 மொழிகள் தாம் அவை. இந்த அறிவிப்பின் படி Samsung Galaxy Smartphones & Tablets பயன்படுத்தும் இந்திய பயனர்கள் இந்த வசதியை பெற முடியும்.



Galaxy Grand, Galaxy S4 and the Galaxy Tab 3 ஆகிய மூன்றிலும் இந்த வசதி இன்று முதல் கிடைக்கும், விலை குறைவாக கிடைக்கும் Galaxy Star போனில் இந்த வசதி இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும், அடுத்த மாதத்தில் இருந்து மற்ற மாடல்கள் அனைத்தும் இந்த வசதியை பெற ஆரம்பிக்கும் என்று Samsung India சொல்லி உள்ளது.. இந்த வசதியை Reverie Language Technologies என்ற நிறுவனத்துடன் இணைந்து Samsung அதன் பயனர்களுக்கு தருகிறது.



அதே போல Samsung App Store-லும் சில Applications குறிப்பிட்ட மொழிகளில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. Facebook, Gmail, Mydala, BSE and Bharat Matrimony போன்றவை தற்போது குறிப்பிட்ட மொழிகளில் கிடைகின்றன. இது தவிர இன்னும் சிலவும் உள்ளன விரைவில் நிறைய Applications கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.



- பிரபு கிருஷ்ணா

Micromax Canvas 4 Review - தமிழில் [வீடியோ]

Micromax Canvas 4 கடந்த மாதம் 8 - ஆம் தேதி வெளியாகி தற்போது சந்தையில் கிடைக்கும் Smartphone. 5 inch HD Capacitive Touch Screen, 1 GB RAM, 1.2 GHZ Quad  Core Processor, 16 GB Internal Memory என்று பல வசதிகளுடன் இந்த போனின் Review கீழே உள்ளது.



கடந்த மாதம் Micromax Canvas 4 Specifications பதிவை எழுதிய போது அதன் செயல்பாட்டை review மூலம் சொல்வதாக எழுதி இருந்தேன். அதே போல இன்று அந்த பதிவு. இது முதல் Review என்பதால் சில தவறுகள் இருக்கலாம். அவற்றை சுட்டிக்காட்டுங்கள், எதிர்காலத்தில் அவற்றை தவிர்க்க முயல்கிறோம்.

வீடியோவில் பாட்டரி குறித்த தகவல் மட்டும் இருக்காது. அது மட்டுமே இந்த பதிவில் :-)

Canvas 4 2000mAh பாட்டரி உடன் வருகிறது. இதன் Standby time 22 மணி நேரம், Talk time 10 மணி நேரம். நீங்கள் Game பிரியர் என்றால் ஒரு முறை Charge செய்தால் ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். பாடல்கள், வீடியோ பார்க்க/கேட்க என்றாலும் இல்லை Application-களை அதிகம் பயன்படுத்துவதாக இருந்தாலும் ஒரு நாளைக்கு மேலேயே பயன்படுத்த முடியும்.

வீடியோ: 

Review ஆங்கிலத்தில்

Micromax Canvas 4 vs Samsung Galaxy Grand Duos

Samsung Galaxy Tab 3 இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]

Samsung நிறுவனம் வெற்றிகரமான Galaxy Tab வரிசையில் புதியதாக 3-ஆம் தலைமுறை Tablet களை வெளியிட்டுள்ளது. இவை கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகி தற்போது அனைத்து Online Store களிலும் கிடைக்கவிருக்கின்றன. இவை பற்றி இன்று காண்போம்.

Galaxy Tab 3ல் மொத்தம் 3 வகையான Tablet கள் தற்போது வெளியாகி உள்ளன. ஒரு 7 inch Tablet மற்றும் இரண்டு  8 inch Tablet. 8 inch tablet -இல் ஒன்று GSM Support உடனும் மற்றொன்று Wi-fi Only என்றும் கிடைக்கும்.  இதன் Specification களை கீழே காணலாம். 

Samsung Galaxy S4 mini இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]

அடிக்கடி புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு அசத்தும் Samsung நிறுவனத்தின் புதிய போன் Samsung Galaxy S4 mini. இது கடந்த மாதம் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 27990 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகள் உள்ளன.  அதே போல முன்னாலும்  ஒரு 1.9 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 4.3 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1.5 GB RAM மற்றும் 1.7 GHz Krait dual-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1900 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Samsung Galaxy S4 mini Specifications

Operating SystemAndroid OS, v4.2.2 (Jelly Bean)
Display4.3 inch (540 x 960 pixels) Super AMOLED capacitive touchscreen
Processor1.7 GHz Krait dual-core processor
RAM1.5 GB RAM
Internal Memory8 GB Internal Memory (5 GB user memory)
External MemorymicroSD, up to 64 GB
CameraRear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash
Front Camera: 1.9 MP
BatteryLi-Ion 1900 mAh Battery
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

கொடுக்கும் விலைக்கு 1.5 GB RAM தவிர மற்றவை அனைத்தும் குறைவானவை தான். 1 GB RAM உடன் வரும் Samsung Galaxy S3 இதை விட சிறந்த போன். இரண்டில் எது சிறந்தது என்று இங்கே காணலாம். Samsung Galaxy S4 mini vs Galaxy S3

Micromax Canvas 4 - அசத்தலான வசதிகளுடன் 17,999 ரூபாய்க்கு அறிமுகமானது

கடந்த மாதம் முதலே இந்தியாவில் மொபைல் பயனர்களால் மிக அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட போன் Micromax Canvas 4. சிறு சிறு விளம்பரங்களுடன் கடந்த மாதம் 28 ஆம் தேதி இதை Pre-book செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது Micromax நிறுவனம். 11,500 பேர் ஆன்லைன் மூலம் புக் செய்திருந்த நிலையில் நேற்று டெல்லியில் இந்த போன் அறிமுகமானது.பல அசத்தலான வசதிகளுடன் வந்துள்ள இந்த போனின் விலை 17,999 ரூபாய் மட்டுமே.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகளுடன் Continous (Burst) mode, Smile detection, Photosolid, High Dynamic Range Synthesis, 4 direction Panorama, Effects Library போன்ற புதிய வசதிகளும் உள்ளன. அதே போல முன்னாலும் ஒரு 5 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 5 Inch TRU-IPS HD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, G-Sensor ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது. Dual Sim & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz MediaTek 6589 quad-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

கேமராவின் புதிய வசதிகளில் 4 direction Panorama மூலம் Panorama வகையான Shot கேமராவை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். Burst mode மூலம் 15 நொடிகளில் 99 போட்டோக்களை எடுக்க முடியும், Effects Library மூலம் எடுத்த போட்டோக்களை மெருகேற்றலாம்.

அத்தோடு இந்த போனில் ஒரு வீடியோ பார்க்கும் போது கணினியை போல வீடியோ screen ஐ சிறிதாக்கி வேறு SMS, Email அனுப்புவது போன்ற வேலைகளை பார்க்கலாம். இதை Unlock செய்ய போனின் அருகில் சென்று ஒரு முத்தம் கொடுத்தால் போதும் ;-). குறிப்பிட்ட Call ஒன்றை Cut செய்ய போனை எடுத்து கவிழ்த்து வைத்தால் போதும் Ringtone Silent ஆகி விடும். பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்பீக்கரில் மாற்ற போனை கவிழ்த்தால் போதும்.

இன்னும் பல வசதிகள் உள்ளன. போன் வாங்கிய பின் அதை சொல்கிறேன் :-)

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Micromax Canvas 4 A210 Specifications

Operating SystemAndroid 4.2.1 Jelly Bean
Display5.5 inch (1280 x 720 pixels) TRU-IPS HD capacitive touch screen
Dual SimYes, Dual Sim, GSM+GSM and Dual Standby
Processor1.2 GHz MediaTek 6589 Quad Core processor
RAM1 GB RAM
Internal Memory16 GB Internal Memory 
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera: 13 MP, 4128 x 3096 pixels, autofocus, LED flash,  Full HD Recording
Front Camera: 5 MP
Battery2000 mAh battery
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

RAM மற்றும் MediaTek Processor தவிர கொடுக்கும் விலைக்கு அதிகமான வசதிகள் பல உள்ளன இந்த போனில். போன் ஆர்டர் செய்திருப்பதால் மேலும் விவரங்களை பின்னர் பார்ப்போம். 

தகவல் - Specs Of All
-பிரபு கிருஷ்ணா

ரூபாய் 15,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஜூன் 2013]

தினம் தினம் பல புதிய மொபைல் போன்கள் வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும். அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் அதுவும் ரூபாய் 15,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம்.

Samsung Galaxy Mega 6.3 மற்றும் Mega 5.8 தற்போது இந்தியாவில்

அடிக்கடி புதிய போன்களை வெளியிடும் Samsung நிறுவனத்தில் இருந்து சமீபத்திய வரவாக Samsung Galaxy Mega 6.3 மற்றும் Mega 5.8 என்ற இரண்டு புதிய போன்கள் வந்துள்ளன. Phablet பிரிவில் வரும் இவற்றின் ஆரம்ப விலை முறையே ரூபாய் 30990மற்றும் ரூபாய் 24900 என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டிலும் பொதுவான Specifications:

இரண்டு போன்களுமே Android 4.2.2 (Jelly Bean) ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இவற்றில் தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளன .இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 1.9 MP கேமராவை கொண்டுள்ளன. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இரண்டுமே 1.5 GB RAM, இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளன. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் இரண்டிலும் பொதுவாக உள்ளன.

இரண்டு போன்களுமே Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளன.

வித்தியாசங்கள்: 

Mega 6.3 போன் 6.3 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது, Mega 5.8 போன் 5.8 Inch TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இரண்டுமே Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது.  மிக முக்கியமாக இரண்டில் Mega 5.8 மாடல் மட்டும் Dual SIM வசதியுடன் வருகிறது.

Mega 6.3 மாடல் 1.7 GHz dual-core processor உடன் வருகிறது, ஆனால் Mega 5.8  மாடல் 1.4 GHz dual-core processor உடன் வருகிறது. இதே போலவே இரண்டுமே முறையே Li-Ion 3200 mAh (Mega 6.3) மற்றும் Li-Ion 2600 mAh (Mega 5.8) பேட்டரியுடன் வருகின்றன.

இவற்றை தவிர இரண்டின் எடை மற்றும் டைமென்சன் ஆகியவையும் வேறுபடுகின்றன.

இரண்டின் Specification தகவல்களும் கீழே உள்ள டேபிளில் உள்ளன.

ModelSamsung Galaxy Mega 6.3Samsung Galaxy Mega 5.8
General
Dual SimNoYes
Dimensions167.6 x 88 x 8 mm162.6 x 82.4 x 9 mm
Weight199g182g
Display
Display TypeTFT capacitive touch screen, 16M colorsTFT capacitive touch screen, 16M colors
Display Size1280 x 720 pixels, 6.3 inches960 x 540 pixels, 5.8 inches
Software
Operating SystemAndroid OS, v4.2.2 (Jelly Bean)Android OS, v4.2.2 (Jelly Bean)
Camera
Back Camera8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash
Front Camera1.9 MP1.9 MP
FeaturesGeo-tagging, touch focus, face and smile detectionGeo-tagging, touch focus, face and smile detection
VideoYesYes
Processor
CPUDual-core  1.7 GHzDual-core  1.4 GHz
Memory
RAM1.5 GB RAM1.5 GB RAM
Internal Memory8/16 GB8 GB
External MemorymicroSD, up to 32 GBmicroSD, up to 32 GB
Battery
TypeLi-Ion 3200 mAhLi-Ion 2600 mAh
Connectivity
3GYes, HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 MbpsYes, HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps
4GYes (Market Dependent), LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
BluetoothYes, v4.0 with A2DPYes, v4.0 with A2DP
WifiYes, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Wi-Fi hotspotYes, Wi-Fi 802.11 b/g/n
GPRS, EDGE, GPS and microUSB v2.0GPRS, EDGE, GPS and microUSB v2.0
Others
ColorsWhite, BlackWhite, Black
SensorsAccelerometer, Proximity, CompassAccelerometer, Proximity, Compass


கற்போம் Review:

5 இன்ச்க்கும் அதிகமான Touch Screen உள்ள போன்களை வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு உகந்த போன்கள் இவை. அதற்கேற்றார் போல வசதிகளும் உள்ளன. 

தற்போதையை விலையை வலதுபுறம் உள்ள Flipkart Widget – இல் காணலாம்.

தகவல் - Specs Of All Blog

- பிரபு கிருஷ்ணா

Sony Xperia ZR இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது [Specifications and Price]

ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போனும் தற்போது புது புது வசதிகளுடன் வெளிவருகிறது. அந்த வகையில் Sony நிறுவனத்தின் புதிய போன் Xperia ZR என்ற போன் நீருக்கடியில் போட்டோ எடுக்கும் திறனுடன் வெளியாகி உள்ளது. இந்த போன் மூலம் நீருக்கடியில் 1.5 மீட்டர் ஆழம் வரை போட்டோ மற்றும் வீடியோக்களை நாம் எடுக்க முடியும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 29990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 4.55 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.5 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Po 2300 mAh பேட்டரியுடன் 11 மணி நேர Talktime மற்றும் 470 மணி நேர Standby Time போன்றவற்றுடன் வருகிறது.

நீருக்கடியில் போட்டோ & வீடியோ எடுக்கும் திறனுள்ளதால் இது ஒரு Waterproof என்பது உங்களுக்கு தெரியும். அதே சமயத்தில் இது Dust-proof வசதியுடனும் வருகிறது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Sony Xperia ZR Specifications:

Operating SystemAndroid OS, v4.1 (Jelly Bean)
Display4.55 inch HD(1280×720 Pixels) TFT capacitive touch screen
Processor1.5GHz quad-core Qualcomm APQ 8064 processor with Adreno 320 GPU
RAM2 GB RAM
Internal Memory8 GB Internal Memory
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera: 13 MP, 4128×3096 pixels, autofocus, LED flash
Front Camera: 0.3 MP
Battery2300 mAh Battery with 11 hrs Talk Time and 470 hrs Standby Time
Features3G,4G(Market Dependent), WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

நீருக்கடியில் போட்டோ எடுக்கும் திறன், 13 MP கேமரா, 2 GB RAM போன்ற வசதிகள் அசத்தலானவை. கண்டிப்பாக வாங்கலாம். 

தகவல் - Specs Of All Blog

இந்தியாவில் அறிமுகமானது Google Nexus 4 போன் - [Specifications and Price]

கூகுள் நிறுவனம் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து வெளியிடும் மொபைல்கள் Nexus என்ற பெயரில் வெளிவருவதுண்டு. iPhone போல இந்த போன்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு உண்டு. இதுவரை Nexus போன்கள் இந்தியாவில் வெளியாகவில்லை. ஆனால் LG நிறுவனம் Nexus 4 ஐ வெளியிடும் போது இது இந்தியாவிலும் வரும் என்று அறிவித்தது. சொன்னபடியே இந்தியாவில் முதல் Nexus போனை ரூபாய் 25990 க்கு வெளியிட்டு உள்ளார்கள் தற்போது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது, புது Android Version வரும் போதெல்லாம் Update செய்யும் வசதி கிடைக்கும். தமிழ் படிக்கும் வசதி உள்ளது. 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 4.7 Inch HD TFT LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.5 GHz Quad-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Po 2100mAh பேட்டரியுடன் வருகிறது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

LG Google Nexus 4 Specifications:

Operating SystemAndroid 4.2 Jelly Bean
Display4.7 inch (1280 x 768 pixels) True HD IPS Plus capacitive touch screen
Processor1.5 GHz quad-Core Qualcomm APQ8064 Snapdragon processor
RAM2 GB RAM
Internal Memory16 GB Internal Memory
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash
Front Camera: 1.3 MP
BatteryLi-Po 2100mAh
Features3G,WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector


கற்போம் Review:

கொடுக்கும் விலைக்கு உகந்த போன். எல்லா  Android Update களும் வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக வாங்கலாம்.

 தகவல் - Specs Of All Blog

-பிரபு கிருஷ்ணா

Karbonn S2 Titanium - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

Micromax போலவே சாதாரண போன்களை வெளியிட்டு பிரபலமாகி பின் ஸ்மார்ட்போன் பக்கம் வந்த நிறுவனம் Karbonn. பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள இந்நிறுவனம் S2 Titanium என்ற புதிய போன் ஒன்றை ரூபாய் 10790 க்கு அறிமுகம் செய்துள்ளது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது. Dual Sim  & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz quad-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Karbonn S2 Titanium Specifications:

Operating SystemAndroid 4.1 Jelly Bean
Display5 inch (800 x 480 Pixels) capacitive touch screen
Dual SimYes, Dual Sim, GSM+GSM and Dual Standby
Processor1.2 GHz Quad Core processor
RAM1 GB RAM
Internal Memory4 GB Internal Memory (1.79 GB user memory)
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera:8 MP, 3264×2448 pixels, autofocus, LED flash
Front Camera: 2 MP
Battery2100 mAh battery
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

8 MP கேமரா, 2 MP Front கேமரா போன்றவை குறிப்பிடதக்க சிறப்பம்சங்கள். தரும் விலைக்கு உகந்த வண்ணம் வசதிகள் உள்ளன. கேமரா மூலம் HD (720p) ரெகார்டிங் செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக வாங்கலாம்.

தகவல் - Specs Of All
- பிரபு கிருஷ்ணா

Xolo Q700 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

Xolo  ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தற்போது அதிகளவு விற்பனையாகி வருகின்றன. குறைந்த விலைக்கு அதிக வசதிகளை தரும் இந்த நிறுவனத்தின் புதிய மாடல் Xolo Q700 தற்போது ரூபாய் 9999 க்கு அறிமுகமாகியுள்ளது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 4.5 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது. Dual Sim  & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz quad-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2400 mAh பேட்டரியுடன் 17 மணி நேர Talk Time மற்றும் 380 மணி நேர standby time கொண்டுள்ளது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

அத்தோடு இந்த போன் XOLO Switch, XOLO Secure, XOLO Power போன்ற Application களுடன் வருகிறது. இவற்றின் மூலம் போன் பாதுகாப்பு,  Remote Tracking, Battery Optimization, User Profile உருவாக்குதல் போன்ற வசதிகளை பெற முடியும்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Xolo Q700 Specifications:

Operating SystemAndroid 4.2 Jelly Bean
Display4.5 inch (540 x 960 Pixels) IPS capacitive touch screen
Dual SimYes, Dual Sim, GSM+GSM and Dual Standby
Processor1.2 GHz Quad Core processor
RAM1 GB RAM
Internal Memory4 GB Internal Memory
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera: 5 MP, 2592х1944 pixels, autofocus, LED flash
Front Camera: 0.3 MP
BatteryLi-Ion 2400 mAh battery with upto 380 hrs standby time and 17 hrs talk time
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

பத்தாயிரம் ரூபாய்க்கு உகந்த வசதிகளோடு வருவதால் இந்த போன் சந்தையில் நன்றாக விற்கும். இது Micromax A115 Canvas 3D க்கு போட்டியாகவும் இருக்கும். குறைந்த விலை போன் ஒன்றை வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம்.

தகவல் - Specs Of All
- பிரபு கிருஷ்ணா

Micromax A115 Canvas 3D - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications andPrice]

Micromax நிறுவனத்தின் அதிரடியான வெளியீடுகளில் ஒன்று A115 Canvas 3D. இது தற்போது ரூபாய். 9,999 - க்கு கிடைக்கிறது. குறைந்த விலைக்கு 3D வசதி உள்ள போன் தற்போதைக்கு இது தான். 3D வசதி மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை 3D Effect மூலம் பார்க்கலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.Dual Sim  & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.

இது 1 GB RAM, 1 GHz dual-core processor மற்றும் MediaTek MT6577 Chipset கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2000 mAh பேட்டரியுடன் 4.30 மணி நேர Talk Time கொண்டுள்ளது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Micromax A115 Canvas 3D Specifications:

Operating SystemAndroid 4.1.2 Jelly Bean
Display5 inch (480 x 800 pixels) TFT capacitive touch screen
Processor1 GHz dual-core processor
RAM1 GB RAM
Internal Memory4 GB Internal Memory
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera: 5 MP, 2592х1944 pixels, autofocus, LED flash
Front Camera: 0.3 MP
BatteryLi-Ion 2000 mAh
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

பத்தாயிரம் ரூபாய்க்கு 3D போன் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் 3D தவிர்த்த மற்ற விசயங்களும் கொடுக்கும் விலைக்கு உகந்தது போலவே உள்ளது. குறைந்த விலை போன் ஒன்றை வாங்க விரும்பும் நபர்கள் கட்டாயம் வாங்கலாம்.
- பிரபு கிருஷ்ணா

Sony Xperia L முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


Sony நிறுவனம் Xperia L என்ற மாடலை கடந்த மார்ச் மாதம் Xperia SP போனுடன் அறிவித்தது, Xperia SP கடந்த மாதம் இந்தியாவில் வெளியானது. தற்போது Xperia L போன் வெளியாகி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 18990* ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Nokia Lumia 720 -தற்போது இந்தியாவில் - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


நோக்கியா Lumia 520 உடன் அறிவித்த போன் Lumia 720. 520 ஐ விட கொஞ்சம் அதிகமான வசதிகளுடன், மிக அதிகமான விலையுடன் சந்தைக்கு வந்துள்ளது இந்த மாடல். இதன் ஆரம்ப விலை ரூபாய் 18,999 என்று அறிவித்துள்ளது நோக்கியா. 

இது windows phone 8  - ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 6.7 MP கேமராவை கொண்டுள்ளதுடன்  1.3 MP Front கேமராவையும் கொண்டுள்ளது.  இரண்டின் மூலமும் HD Video Recording செய்ய முடியும். Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  

இது 4.3 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512 MB RAM மற்றும் 1 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2000 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் Talk Time 23.20 மணி நேரம் மற்றும் Standby Time 520 மணி நேரம்.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

Flipkart தளத்தில் இதை நீங்கள் வாங்கலாம். நோக்கியாவின் ஆன்லைன் ஷாப்பிலும் இது கிடைக்கிறது.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Nokia Lumia 720 Specifications

Operating System Microsoft Windows Phone 8
Display 4.3 inch (800 x 480 pixels) IPS LCD capacitive touchscreen display
Processor 1 GHz dual-core processor
RAM 512MB RAM
Internal Memory 8GB
External Memory microSD, up to 64 GB
Camera 6.7 MP rear camera with LED flash and 1.3 MP front camera
Battery Li-Ion 2000 mAh Battery with Up to 23 hrs 20 mins talk time and 520 hrs standby time.
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS,  Micro USB 2.0 connector

கற்போம் Review: 

8GB Internal Memory, HD Recording போன்ற சிறப்பம்சங்கள்  இருப்பினும்  கொடுக்கும் விலைக்கு ஏற்ற அளவு வசதிகள் இல்லை. விலை 15,000 என்றால் ஓகே. 

தகவல் - Specs Of All

- பிரபு கிருஷ்ணா

Sony Xperia SP முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]



Sony நிறுவனத்தின் புதிய போன் ஒன்றை வாங்க நினைப்பவர்களுக்கு சற்றே அதிகமான விலையில் ஒரு மாடலை அறிமுகம் செய்துள்ளது அது. Xperia SP என்ற புதிய மாடல் ரூபாய் 27490 க்கு தற்போது இந்தியாவில் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.6 Inch HD TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1.7 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2370 mAh பேட்டரியுடன் வருகிறது. இது 635 மணி நேர Stand By Time மற்றும் 10.25 மணி நேர Talk Time கொண்டுள்ளது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

Sony நிறுவனம் இந்த போனுடன் இலவசமாக ரூபாய் 1,990 மதிப்புள்ள Mobile Case ஒன்றை தருகிறது. 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Sony Xperia SP Specifications:

Operating System Android 4.1 Jelly Bean
Display 4.6 inch (1280×720 pixels) HD TFT capacitive touch screen display
Processor 1.7 GHz Dual-Core Qualcomm Snapdragon S4 MSM8960Pro processor
RAM 1 GB RAM
Internal Memory 8 GB Internal Memory (5.8 GB user memory)
External Memory microSD, up to 32 GB
Camera Rear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash
Front Camera: 0.3 MP
Battery Li-Ion 2370 mAh
Features 3G, 4G,WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review: 

விலை சற்றே அதிகம் தான். கேமரா 13 MP ஆக இருந்திருந்தால் இந்த விலைக்கு ஓகே. இன்னும் கொஞ்சம் விலை குறைந்த பின் வாங்கலாம். 

* - விலை Update செய்த தேதி 15-04-2013.

தகவல் - Specs Of All Blog
-பிரபு கிருஷ்ணா

ரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]

தினம் தினம் பல புதிய மொபைல் போன்கள் வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும். அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் அதுவும் ரூபாய் 10,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம். 

பட்டியலில் உள்ள போன்கள் ஐந்தும் குறைந்த பட்சம் 5MP கேமரா உள்ளவைகளாக தெரிவு செய்துள்ளேன்.

விலை Flipkart தளத்தில் இருந்து Update செய்யப்பட்டுள்ளது. தேதி 10-04-2013. மற்ற தளங்களில் விலை மாறுபடலாம்.




Intel Processor மூலம் தனது மார்கெட்டை தொடங்கிய XOLO நிறுவனத்தின் சமீபத்திய வரவு A800. 4.5 Inch IPS Display, 1 GHz Dual Core Processor, 8 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim என அசத்தலான வசதிகளுடன் உள்ளது. கொடுக்கும் விலைக்கு மேலேயே வசதிகள் கிடைக்கின்றன. குறைந்த விலைக்கு மிக அதிகமான வசதிகளை எதிர்நோக்கும் நபர்களுக்கு உகந்த மாடல். 

Micromax A101 - ரூபாய் 9999


குறைந்த விலை போன்களின் ஆதர்ச நிறுவனமான Micromax இன் இந்த மாடல் 5 Inch TFT Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. 5 Inch Display என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 

Samsung Galaxy Ace S5830i - ரூபாய் 9230 Full Specifications


சாம்சங் நிறுவனம் 2011 ஆண்டு வெளியிட்ட இந்த போன் இன்னும் பல வாசகர்களுக்கு பிடித்துள்ளது. இது 3.5 Inch TFT Capacitive Touchscreen, 832 MHz Processor, Android v2.3 (Gingerbread) OS மற்றும் 5 MP Camera போன்றவற்றுடன் வருகிறது. OS பழைய Version மற்றும் கேமராவில் Flash இல்லை போன்றவை குறைபாடுகள். இவை பற்றிய கவலை இல்லாதவர்கள் வாங்கலாம்.

Lava Iris 501 - விலை 9199 Full Specifications


ஸ்மார்ட்போன் மார்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வரும் Lava நிறுவனத்தின் Iris 501 மாடல் 5 Inch Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. மேலே சொன்ன Micromax A101 போலவே 5 Inch Screen என்பது சிறந்த அம்சம்.





மறுபடியும் அதே Xolo தான். இந்த B700 போனும்  4.3 Inch IPS Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் உள்ளது. மிகக் குறிப்பிடத்தக்க விஷயம் 3450 mAh பாட்டரி. இது 23 மணி நேரம் Talk Time மற்றும் 380 மணி நேரம் Standby Time போன்றவற்றுடன் வருகிறது. 

இந்த ஐந்து போன்களை தவிர மற்ற சிறந்த போன்கள் கீழே உள்ளன. 
  1. XOLO B700 - Rs. 8999
  2. XOLO X500 - Rs. 8499
  3. XOLO A700 - Rs. 7999
  4. Karbonn Smart A12 - Rs. 7990
  5. Huawei Ascend Y300 - Rs. 7980
இது எனது பரிந்துரை மட்டுமே. உங்கள் பார்வையில் இந்த விலைப் பட்டியலில் வேறு போன்கள் இருந்தால் அவற்றை கீழே சொல்லுங்கள். 

இந்த பகுதியை இனி தொடரலாம் என்று நினைக்கிறேன், அதற்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். 

- பிரபு கிருஷ்ணா