Block செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்வது எப்படி? | கற்போம்

Block செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்வது எப்படி?


அலுவலகத்திலோ அல்லது பள்ளி, கல்லூரிகளில் சில தளங்கள் பிளாக் செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்ப்போம். 

வேண்டாத தளங்களை block செய்வது எப்படி? என்று முன்பொரு பதிவில் சொல்லி இருந்தேன். அதே சமயத்தில் பிளாக் செய்யப்பட்ட ஒரு தளத்தை எப்படி ஓபன் செய்வது என்று சில நண்பர்கள் கேட்டார்கள். கற்போம் இதழை தரவிறக்கம் செய்ய முடியவில்லை, Mediafire பிளாக் ஆகி உள்ளது என்று சொன்னார் ஒருவர். பிளாக் செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.

1. Hide XY

அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது. 


விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதை  http://www.ezprxy.com என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும். 


எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது. 


மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது. 


இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும். 

இந்த ஐந்தின் மூலமும் நிறைய தளங்களை திறக்க முடியும். நல்ல விசயத்துக்காக பகிர்கிறேன். ஏடாகூடமாக எந்த தளத்தையாவது பார்க்க திறந்து பக்கத்து சீட்டுக்காரர் உங்களை பார்த்து போட்டு கொடுத்தால் நான் பொறுப்பல்ல.


இந்த தளங்களையே தடை செய்து வைத்திருந்தால் என்ன செய்வது?

-கோவி


ஒன்னும் செய்ய முடியாதுங்க. வீட்டுக்கு வந்து தான் பார்க்கணும் நீங்க.


- பிரபு கிருஷ்ணா

23 comments

பாஸ் இந்த தளங்களையே தடை செய்து வைத்திருந்தால் என்ன செய்வது?

Reply

//எந்த தளத்தையாவது பார்க்க திறந்து பக்கத்து சீட்டுக்காரர் உங்களை பார்த்து போட்டு கொடுத்தால் நான் பொறுப்பல்ல//

அனுபவமோ மச்சி

Reply

நண்பரே, இது போன்ற வலைதளங்களை பாதுகாப்பானதா? மற்றும் இவை இலவச சேவையை அளிக்கிறதா? நன்றி நண்பரே. தொடருங்கள்

Reply

பயனுள்ள தகவல் அன்பரே பகிர்வுக்கு நன்றி

Reply

ஒன்னும் செய்ய முடியாதுங்க. வீட்டுக்கு வந்து தான் பார்க்கணும் நீங்க. :-)

Reply

ஏடாகூடமாக பார்த்தால் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை இலவசம் தான்.

Reply

அறிந்து கொண்டேன் நண்பா... தேவைப்படும் போது பயன்படுத்துகிறேன்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

Reply

ரைட்டு...நன்றி நண்பா...

Reply

அந்த கழுதைய எதுக்கு ஆபீஸ்ல பார்த்துகிட்டு. ஆனா நம்ம ஆளுங்க நம்மல குத்தம் சொல்ல கூடாது இல்லையா. :-)

Reply

expat shield என்ற மென்பொருள் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன் முன்பு. விளம்பரம் வரும். தளங்கள் ஓப்பன் ஆவதில் பிரச்சினையிருந்ததில்லை. இது பாதுகாப்பானதா என்று நீங்கள் தான் கூற வேண்டும்

Reply

ஒன்றும் பிரச்சினை இல்லை நீங்கள் பயன்படுத்தலாம்.

Reply

அண்ணே வேண்டாம்னே... நம்மெல்லாம் நல்லவய்ங்கண்ணு உலகம் நம்புது அதை அப்பிடியே பிக்கப்பண்ணி டெவலப்பண்ணிக்கிட்டு போயிருவோம் ஹி ஹி ஹி ஹி!

Reply

களவும் கற்று மறன்னு! ஏழு அடி உயரமுள்ள பெரியோர்கள் சொல்லியதை பின்பற்றலாமா? நண்பரே!

Reply

//நல்ல விசயத்துக்காக பகிர்கிறேன். ஏடாகூடமாக எந்த தளத்தையாவது பார்க்க திறந்து பக்கத்து சீட்டுக்காரர் உங்களை பார்த்து போட்டு கொடுத்தால் நான் பொறுப்பல்ல.
//

ஹிஹிஹிஹி..

Reply

//இந்த தளங்களையே தடை செய்து வைத்திருந்தால் என்ன செய்வது//
Hotspot Shield Launch அப்டிங்கற application ஐ (முடிந்தால்)நிறுவி அனுபவியுங்கள்

Reply

ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு! உன்ட பினிசிங் சரியில்லயேப்பா!


ஓம்பேச்ச கேட்டா தேன் வடியுது! அதன்படி நடந்தா, யேன் ஒடம்புல ரத்தமல்ல வடியுது!

:>
:)

Reply

GREAT JOB...PRABU SIR...!

Reply

how to see country blocked webs??

Reply

I think you can't get that.

Reply
This comment has been removed by the author.

use "spotflux"... its fast and one of the best proxy software u would find ... very secure too... and its not blocked yet in UAE, SAUDI and most countries.. :))

Reply

பதிலுக்கு மிக்க நன்றி

Reply

Post a Comment