SweetIM Toolbar ஐ Firefox, Chrome - இல் இருந்து நீக்குவது எப்படி? | கற்போம்

SweetIM Toolbar ஐ Firefox, Chrome - இல் இருந்து நீக்குவது எப்படி?



சில இலவச மென்பொருட்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது நமக்கு வரும் இலவச இணைப்பு தான் SweetIM Toolbar. நமக்கு எது தேவையோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் தரும் இதை பலரும் விரும்ப மாட்டார்கள். இதை எப்படி நீக்குவது என்று இன்று பார்ப்போம். 

Mozilla Firefox:

முதலில் Firefox Add-ons பகுதியில் இருந்து SweetIM Extension - ஐ நீக்கி விடுங்கள். 

வழி 1 :

Firefox ஓபன் செய்து Help >> Restart with Add-ons Disabled மீது கிளிக் செய்து உடனே Restart என்பதை கிளிக் செய்யவும். இப்போது Firefox Safe Mode - இல் ஓபன் ஆகும். இப்போது கீழே உள்ளது போல Reset all user preferences to Firefox defaults என்பதை கிளிக் செய்து விட்டு Make Changes and Restart என்பதை தரவும்.


அவ்வளவு தான் இனி  SweetIM Toolbar பிரச்சினை முடிந்தது. இதனுடன் இன்னும் சில தொல்லைகள் நீங்கள் வைத்து இருந்தால் அவையும் தீர்ந்துவிடும்.


வழி 2 : 

1. Firefox - ஐ ஓபன் செய்து URL Bar- இல் about:config என்பதை தரவும்.

2. அதில் உள்ள Search பகுதியில் sweetIM என்பதை தரவும். இப்போது கீழே உள்ளது போல வரும்.


3. இப்போது ஒவ்வொரு Preference Name மீதும் கிளிக் செய்து "Reset" என்பதை கிளிக் செய்யுங்கள்.


இவற்றை முடித்த பின்பு Firefox - இல் SweetIM பிரச்சினை இருக்காது.

Chrome: 

1. Remove from Startup: 

Chrome - ஐ ஓபன் செய்யும் வந்தால் நீக்கும் வழி இது. Wrench > Settings > On Startup என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதில் SweetIM இருந்தால் நீக்கி விட்டு உங்களுக்கு விருப்பமானதை வைத்து விடுங்கள்.


2. Remove from New Tab search:

புதிய Tab ஓபன் செய்யும் போது வந்தால், Wrench > Settings > Search > Manage search engines என்பதில் இருந்து SweetIM - ஐ நீக்கி விடுங்கள்.

3. Remove from Home page: 

Wrench > Settings > Appearance என்பதில் Show Home button என்பதை செக் செய்து உங்கள் முகப்பு பக்கத்தை மாற்றி விடுங்கள்.

4. Remove from Extensions: 

Wrench > Settings > Extensions என்பதில் SweetIM சம்பந்தப்பட்ட அனைத்தையும் நீக்கி விடவும்.

அவ்வளவு தான் உங்கள் Chrome உலவியில் இருந்து SweetIM நீக்கப்பட்டு விட்டது.

உங்களுக்கு Babylon Toolbar பிரச்சினை இருந்தால்,

Babylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி?

- பிரபு கிருஷ்ணா


10 comments

பயனுள்ள தகவல்... மிக்க நன்றி நண்பரே...

Reply

Thanks for the share Prabhu :)

My blog http://www.comworld91.com/

Reply

பயனுள்ள தகவலை அறிந்துகொண்டோம் நன்றி.

Reply

இத தொல்லை உண்டு . இன்றே முயற்சிக்கிறேன். நன்றி

Reply

என்னிடம் இருக்கும் blackberry storm2 9520 இல் skype, gtalk, google map இவை இரக்குமதி செய்ய என்ன செய்ய வேண்டும், மற்றய ச்மர்ட் போன் போல இல்லாமல் இதன் தள்த்தில் பல மென் பொருள்கள் வேலை செய்ய அனுமதி இல்லை என்கிறது என்ன செய்யலாம் ... உஙகளின் உதவி தேவை

Reply

Blackberry மொபைல்களுக்கு நீங்கள் Blackberry App World (http://appworld.blackberry.com/) மூலமே Applications தரவிறக்கம் செய்ய முடியும். அங்கே என்ன உள்ளதோ அவற்றை மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும்.

Reply

எனக்கு BABYLON பிரச்னை இருந்தது இப்பொழுது சரியாகிவிட்டது நன்றி பிரபு

Reply

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி நண்பா ....

Reply

அன்பின் பிரபு - தகவல பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Post a Comment