கற்போம்: Browsers | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

அடிக்கடி வரும் Browser பிரச்சினைகளும், தீர்வுகளும்

இணையத்தில் நாம் இயங்க மிக முக்கியமான தேவை ப்ரௌசெர். நம்மையும் இணையத்தையும் இணைக்கும் இந்த மென்பொருள் சில சமயங்களில் நமக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணும், அவ்வாறு அடிக்கடி வரும் பிரச்சினைகளையும் அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் பார்ப்போம். 

1. Browser ஓபன் ஆகவில்லை 

கணினியை ஒரு முறை Restart செய்யுங்கள், Antivirus மென்பொருள் ஒன்றில் கணினியை Scan செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Ccleaner போன்ற மென்பொருள் மூலம் Cookies - ஐ Clear செய்யுங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Uninstall செய்து விட்டு Install செய்யுங்கள். 

2. தேவையில்லாத Toolbar - கள் 

இது நாம் நமக்கு வரவழைத்த பிரச்சினை, ஏதேனும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் போது (குறிப்பாக இலவச மென்பொருள்) இலவச இணைப்பாக இவையும் வந்து விடும். இன்ஸ்டால் செய்யும் போது சில இடங்களில் படித்து பார்த்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

இன்ஸ்டால் செய்யும் போது மறந்தவர்கள், Browser - இல் நீங்களாக நீக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலனவர்கள் எதிர்கொள்வது Babylon மற்றும் SweetIM. இதை எப்படி Remove செய்வது என்று ஏற்கனவே பதிவுகள் கற்போமில் உள்ளன. 
இவை தவிர வேறு ஏதேனும் என்றால், இதே முறையிலேயே அதன் பெயரை தேடி நீக்கலாம், அல்லது கூகுளை நாடலாம். 

3. படங்கள்/பக்கங்கள் சரியாக தெரியவில்லை

  • முதலில் உங்கள் இணைய இணைப்பு வேகமாக உள்ளதா என்று பாருங்கள், மிக குறைவான வேகம் என்றால் இந்த பிரச்சினை வரும். வேகமானது தான் என்றால் வேறு Browser-இல் ஓபன் செய்து பாருங்கள். 
  • தற்போதைய  ப்ரௌசெரில் நீங்கள் Images Load ஆவதை Enable செய்துள்ளீர்களா என்று பாருங்கள், Disable என்று இருந்தால் Enable செய்யுங்கள். பெரும்பாலும் இதன் மூலம் படங்கள் தெரியும். {அப்படியும் படம் வரவில்லை என்றால் குறிப்பிட்ட தளத்தில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. }
  • பக்கங்கள் தெரிவதில் தொடர்ந்து பிரச்சினை என்றால் Virus Scan, Cookies Clear, Computer Restart போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

4. மிக மெதுவாக இயங்குகிறது. 

  • எனது இணைய வேகம் அதிகமானது தான் ஆனால் குறிப்பிட்ட ப்ரௌசெர் மட்டும் அவ்வப்போது மெதுவாக இயங்குகிறது என்பவர்கள், செய்ய வேண்டிய விஷயம் Cookies Clear செய்வது. Browser Cookies-களை Clear செய்வது எப்படி? என்ற பதிவில் எப்படி என்று அறியலாம். 
  • இல்லை என்றால் வேறு ப்ரௌசெர்க்கு மாறுங்கள். 
  • தொடர்ந்து பிரச்சினை என்றால் உங்கள் கணினியில் RAM மெமரி அதிகப்படுத்த வேண்டும். 

5. Not Responding பிரச்சினை

இது பெரும்பாலோனோர் எதிர் கொள்ளும் பிரச்சினை, நீங்கள் பயன்படுத்தும் Add-on , Extension போன்றவற்றினால் இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ நீக்குவதன் மூலம் இதை சரி செய்து விடலாம். 

6. Java Script பிரச்சினை

இது Java Script Enable செய்யாது இருந்தால் வரும் பிரச்சினை. உங்கள் ப்ரௌசெரில் கண்டிப்பாக Java Script Enable ஆகி இருக்க வேண்டும், அப்போது தான் இது சரி ஆகும். 

7. ஆடியோ, வீடியோ Play ஆவதில் பிரச்சினை 

இது பெரும்பாலும் Plugin பிரச்சினை Adobe Flash மற்றும் சில இதில் தேவைப்படுபவை. வேறு எதையாவது Plugin Install செய்யும்படி சொன்னால், அது பாதுகாப்பானதா என்று பார்த்து விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோ, வீடியோ எதையும் YouTube மூலம் கேட்பதே/பார்ப்பதே பாதுகாப்பானது. சில பெரிய தளங்கள் Own Hosting செய்து இருந்தால் அவற்றை நம்பலாம் (BBC, CNET, etc). 

8. Update பிரச்சினை

சிலருக்கு புதிய Version இன்ஸ்டால் செய்த பின் தான் பிரச்சினை என்று சொல்வார்கள். இதில் நிறைய பேர் கவனிக்க தவறும் ஒரு விஷயம் ப்ரௌசெரின் எந்த Version - ஐ இன்ஸ்டால் செய்கிறோம் என்று தெரியாமல் இன்ஸ்டால் செய்வது. 

Firefox ப்ரௌசெர் Beta, Aurora, Full என மூன்று முறை ஒரு Version - ஐ வெளியிடும். இதில் Beta, Aurora போன்றவற்றை Developer Release என்று சொல்லலாம், அவை சில பிரச்சினைகளோடு உள்ள மாற்றங்களோடு வரும், Full Version - இல் தான் அவை களையப்படும். ஆனால் நாம் இதை இன்ஸ்டால் செய்து இருந்தால் ப்ரௌசெரில் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

இதே போல Chrome ப்ரௌசெர் Beta, Dev, Stable (Full) என்று மூன்று முறை ஒரு வெளியீட்டை வெளியிடும் இதில் Stable தான் எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும். மற்ற இரண்டும் சில பிரச்சினைகளோடு தான் வரும். 

எனவே உங்கள் ப்ரௌசெர் Beta, Aurora அல்லது Beta , Dev ஆக இருந்தால் அவற்றை Uninstall செய்து விட்டு Full Version - ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை சரி செய்யலாம். 

பெரும்பாலும் ப்ரௌசெர்களை Update செய்யுங்கள், Uninstall செய்து இன்ஸ்டால் செய்தால் தான் இந்த குழப்பம் வரும். Update செய்யும் போது Upto Date என்று வந்தால் ஓகே, இல்லை என்றால் தானாக Update ஆகி விடும். 

இவையே பெரும்பாலோனோர் Browser-களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். 

வேறு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவற்றை www.bathil.com - இல் தமிழில் கேட்பதன் மூலம் உடனடியாக தீர்வை பெறலாம். 

- பிரபு கிருஷ்ணா

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts

Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம். 

Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய
Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome  - இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4 தற்போதைய  tab அல்லது pop-up ஐ Close செய்ய.
Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home Home Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J  Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய
F1 Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய
Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R Refresh செய்ய
Esc Loading – ஐ நிறுத்த
Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar பக்கத்தை Scroll down செய்ய
Home பக்கத்தின் Top க்கு செல்ல
End பக்கத்தின் Bottom க்கு செல்ல

- பிரபு கிருஷ்ணா

SweetIM Toolbar ஐ Firefox, Chrome - இல் இருந்து நீக்குவது எப்படி?



சில இலவச மென்பொருட்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது நமக்கு வரும் இலவச இணைப்பு தான் SweetIM Toolbar. நமக்கு எது தேவையோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் தரும் இதை பலரும் விரும்ப மாட்டார்கள். இதை எப்படி நீக்குவது என்று இன்று பார்ப்போம். 

Mozilla Firefox:

முதலில் Firefox Add-ons பகுதியில் இருந்து SweetIM Extension - ஐ நீக்கி விடுங்கள். 

வழி 1 :

Firefox ஓபன் செய்து Help >> Restart with Add-ons Disabled மீது கிளிக் செய்து உடனே Restart என்பதை கிளிக் செய்யவும். இப்போது Firefox Safe Mode - இல் ஓபன் ஆகும். இப்போது கீழே உள்ளது போல Reset all user preferences to Firefox defaults என்பதை கிளிக் செய்து விட்டு Make Changes and Restart என்பதை தரவும்.


அவ்வளவு தான் இனி  SweetIM Toolbar பிரச்சினை முடிந்தது. இதனுடன் இன்னும் சில தொல்லைகள் நீங்கள் வைத்து இருந்தால் அவையும் தீர்ந்துவிடும்.


வழி 2 : 

1. Firefox - ஐ ஓபன் செய்து URL Bar- இல் about:config என்பதை தரவும்.

2. அதில் உள்ள Search பகுதியில் sweetIM என்பதை தரவும். இப்போது கீழே உள்ளது போல வரும்.


3. இப்போது ஒவ்வொரு Preference Name மீதும் கிளிக் செய்து "Reset" என்பதை கிளிக் செய்யுங்கள்.


இவற்றை முடித்த பின்பு Firefox - இல் SweetIM பிரச்சினை இருக்காது.

Chrome: 

1. Remove from Startup: 

Chrome - ஐ ஓபன் செய்யும் வந்தால் நீக்கும் வழி இது. Wrench > Settings > On Startup என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதில் SweetIM இருந்தால் நீக்கி விட்டு உங்களுக்கு விருப்பமானதை வைத்து விடுங்கள்.


2. Remove from New Tab search:

புதிய Tab ஓபன் செய்யும் போது வந்தால், Wrench > Settings > Search > Manage search engines என்பதில் இருந்து SweetIM - ஐ நீக்கி விடுங்கள்.

3. Remove from Home page: 

Wrench > Settings > Appearance என்பதில் Show Home button என்பதை செக் செய்து உங்கள் முகப்பு பக்கத்தை மாற்றி விடுங்கள்.

4. Remove from Extensions: 

Wrench > Settings > Extensions என்பதில் SweetIM சம்பந்தப்பட்ட அனைத்தையும் நீக்கி விடவும்.

அவ்வளவு தான் உங்கள் Chrome உலவியில் இருந்து SweetIM நீக்கப்பட்டு விட்டது.

உங்களுக்கு Babylon Toolbar பிரச்சினை இருந்தால்,

Babylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி?

- பிரபு கிருஷ்ணா


Browser Cookies-களை Clear செய்வது எப்படி?

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் Browser Cookies என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ? என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் அவற்றின் அடிப்படை தகவல்களை சொல்லி இருந்தேன். இன்றைய பதிவில் தேவை இல்லை என்றால் எப்படி அவற்றை Clear செய்வது என்று பார்ப்போம். 

Babylon Toolbar - ஐ Firefox - இல் இருந்து நீக்குவது எப்படி?

சில இலவச மென்பொருட்களை நாம் இன்ஸ்டால் செய்யும் போது நமக்கு வரும் இலவச இணைப்பு தான் Babylon Toolbar. நமக்கு எது தேவையோ அதை தவிர மற்ற எல்லாவற்றையும் தரும் இதை பலரும் விரும்ப மாட்டார்கள். பெரும்பாலும் Firefox - இல் தான் இது add ஆகும். இதை எப்படி நீக்குவது என்று இன்று பார்ப்போம். 

Browser Cookies என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன ?


Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாமல் உள்ள இந்த வார்த்தை நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் முக்கிய இடம் வகிக்கிறது. நம் பெர்சனல் கணினிகளில் Cookies இல்லாமல் நம்மால் வேலையே செய்ய முடியாது என்ற அளவுக்கு அது நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை பற்றிய விரிவான அலசல் தான் இந்தப் பதிவு. 

Cookies என்றால் என்ன? 

பொதுவாக Cookies என்பது குறிப்பிட்ட தளத்தில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர்க்கு ஒரு சிறிய டெக்ஸ்ட் பைலை அனுப்பும். அது தான் Cookie.  

என்ன இருக்கும் அதில்? 




தினமும் இணையத்தில் இயங்கும் நாம் நிறைய தளங்களை பார்ப்போம், படிப்போம். அதில் நம் தகவல்களை தருவோம்.  சில செட்டிங்க்ஸ் மாற்றுவோம், குறிப்பாக மொழி, ஒரு வீடியோ எப்படி தெரிய வேண்டும்? என்பது போன்றவை. ஒரு தளத்தில் நமக்கு விருப்பமான ஒன்றை தேடி இருப்போம், அடுத்த முறை மீண்டும் அந்த தளத்துக்கு செல்லும் போது நம்முடைய முந்தைய வருகையை நினைவில் வைத்து அது தொடர்பான செய்திகளை அடுத்த முறை நமக்கு காட்டும். இதன் மூலம் நம் வேலை எளிதாகும்.

எப்படி செயல்படுகிறது? 

இதற்கு உதாரணம் Youtube. தொடர்ந்து நீங்கள் குறிப்பிட்ட வகையான வீடியோவை பார்த்தால் அது தொடர்பான வீடியோக்களை தான் அடுத்த முறை நீங்கள் செல்லும் போதும் காட்டும். 

ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் போதும் இதே நினைவூட்டல்களை நீங்கள் பார்த்திருக்கலாம். 

எந்த வெப்சைட்க்கு நீங்கள் சென்றாலும் அதில் வைரஸ் போன்ற உங்கள் கணினிக்கு பாதிப்பு தரும் எந்த ஒரு விசயத்தையும் இது சேமிக்காது, நினைவூட்டாது. இது தான் இதன் மிகப்பெரிய நன்மை.

அத்தோடு இணையத்தில் காட்டப்படும் விளம்பரங்கள் கூட இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. முக்கியமாக Google Adsense. நீங்கள் இணையத்தில் எதை தேடுகிறீர்கள் என்பதை பொறுத்தே இந்த விளம்பரங்கள் அமையும். இது ஒரு வகையில் உங்களுக்கு நன்மைதான். 

இப்போது இதன் அவசியம் தெரிந்து இருக்கும் உங்களுக்கு. இதை Allow செய்யாமல் விட்டால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிய கணினியில் இணையத்தை பயன்படுத்துவது போல இருக்கும். இதனால் முக்கியமாக உங்கள் நேரம் விரயம் ஆகும். 

பல வகையான Cookies கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று Third-party cookie. இதை மிக எளிதாக சொல்லி விடுகிறேன். நீங்கள் இப்போது கற்போம் தளத்தை படிக்கிறீர்கள் பதிவின் மேலே ஒரு விளம்பரம் தெரிகிறது அது ad.123ad.com என்று சேமிக்கப்படும். அடுத்து பிளாக்கர் நண்பன் தளத்துக்கு செல்லும் போது ஒரு விளம்பரம் வரலாம். இப்போது அதுவும்  ad.123ad.com என்று சேமிக்கப்படும். இது தொடர் சங்கிலி போல தொடரும். இதை தான் நாம் Third-party cookie என்று நாம் சொல்கிறோம். 

மற்ற சில Cookies 

  • Session cookie - குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும். 
  • Persistent cookie - பல நாட்களுக்கு. கிட்டத்தட்ட எப்போதும். 
  • Secure cookie - பாதுகாப்பானது என்று சொல்லலாம்.[https என்று உள்ள URL களில் இது Save ஆகும்]  
  • HttpOnly cookie - இப்போதைய ப்ரௌசெர்களில் இருப்பது.
  • Supercookie -  Suffix டொமைன்கள் உடைய Cookie உதாரணம் - .co.uk, co.in
  • Zombie cookie - விடாக்கண்டன். Delete செய்தாலும் அழியாது. ஆனால் இதனால் தீமை எதுவும் இல்லை. 
இதன் நன்மைகள் மேலே சொன்னதிலேயே உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதனால் சில தீமைகளும் உள்ளன. 

  • குறிப்பிட்ட தளங்களுக்குள் நுழைய நீங்கள் ஜிமெயில், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் போது செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம். 
  • சொந்தக் கணினி அல்லாத இடங்களில் பயன்படுத்தும் போது Cookies save ஆனால், உங்கள் தரவுகள் சேமிக்கப்படுகிறது என்று அர்த்தம். இதிலும்  செக்யூரிட்டி ரிஸ்க் அதிகம். 
  • நீங்கள் அல்லாது வேறு யாரேனும் உங்கள் கணினியை பயன்படுத்தினால் உங்கள் தரவுகளை அவரும் அறிவார். 
  • அவசியமற்ற தளங்களில் Cookies Save ஆனால் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். 
இது போன்ற தீமைகளை நீங்கள் தவிர்க்கும் வாய்ப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது. Cookies என்பது உங்கள் ப்ரௌசெரில் நீங்கள் தரும் தகவல்கள் தான். நீங்கள் கொடுக்காமல் குறிப்பிட்ட தளத்தால் எதையும் செய்ய இயலாது. எனவே இவற்றில் பாதுகாப்பாக இருப்பது நம் கைகளில் தான் உள்ளது. 

Cookies களை கையாளுவது எப்படி? 

நாம் பயன்படுத்தும் ப்ரௌசெர்களில் தான் Cookies உள்ளது என்றேன். அதை கட்டுப்படுத்தும், கையாளும் செயல்கள் நமக்கு எட்டும்படி தான் உள்ளன.  கையாளுவது என்றால் குறிப்பிட்ட தளத்தின் Cookies Save ஆவதை தடுக்கலாம், Third Party Cookies களை தடுக்கலாம். இதை செய்ய Opt-out என்ற ஒரு முறையும் உள்ளது. 

Chrome - Settings >> Show advanced settings... >> Content Settings >> Cookies 

Firefox - Tools >> Options >> Privacy >> Remove Individual Cookies 

Internet Explorer - Tools >> Internet Option >> Privacy 

Opera - Settings > Preferences > Advanced > Cookies

இவைகளில் சென்று Cookies-களை நீக்குவது, சேர்ப்பது, மாற்றம் செய்வது போன்றவற்றை செய்யலாம். இது குறித்து இன்னொரு பதிவில் விரிவாக காண்போம்.

Cookies நம் வேலையை எப்படி எளிதாக்குகிறது என வீடியோ ஆக காண :




- பிரபு கிருஷ்ணா



Cookies or Browser cookies are playing major role in internet browsing. The website in which you are browsing will send a simple text file to the browsers, that is called as cookies. It will remember your search's in internet. Such as email id, password,Language Settings, Online ads and more.Cookies will never send any viruses. They are always safe. If you want to stop  cookies of some specific site you can do using the above  steps. 

இரண்டு Chrome Browser-களை Sync செய்வது எப்படி?

இரண்டு இடங்களில் இணையத்தை பயன்படுத்தும் போது நமக்கு ஒரு பிரச்சினை வருவது உண்டு. ஒன்றில் பயன்படுத்திய Bookmarks, History போன்றவற்றைஇன்னொன்றிலும் பயன்படுத்த முடியாது.  அலுவலகத்திலும், வீட்டிலும் Chrome ப்ரௌசரை பயன்படுத்தினால்  எப்படி இரண்டையும் Sync செய்வது என்று பார்ப்போம்.

Browser Bookmark-களை Import and Export செய்வது எப்படி ?


இணையம் பயன்படுத்துவோர் அனைவரும்  சந்திக்கும் பொதுவான பிரச்சனை Browser crash  ஆவது.மீண்டும் நிறுவி கொள்ளலாம் என்றாலும் நாம் சேமித்து வைத்திருக்கும் Bookmarks ஐ இழந்து விடுகிறோம். அதிகமான bookmarks சேமித்து வைத்திருப்பவர்கள் Browser crash  ஆகிவிட்டால்  அதிகமாக பாதிக்க படுவார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி?

முழு தளத்தையும் Screen Shot எடுப்பது எப்படி?

Screen Shot எடுப்பது பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். பல விசயங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் இதை எந்த மென்பொருளும் நிறுவாமலேயே பயன்படுத்த இயலும் என்ற போதிலும், அதை பயன்படுத்தி ஒரு முழு தளத்தையும் [scrolling ஆவதை] நம்மால் ஸ்க்ரீன் சாட் எடுக்க இயலாது. அதற்கு சில மென்பொருள்களை பயன்படுத்தி ஆக வேண்டும் . அதற்கு பயன்படும் மென்பொருள், தளம், Plug-in ஆகியவற்றை பதிவில் காண்போம்.

Firefox-யில் பயன்படும் 10 Keyboard Shortcuts

நெருப்பு நரி எனப்படும் Firefox தான் நம்மில் நிறைய பேர் பயன்படுத்தும் இணைய உலவி. சாதாரணமாக கணினிகளில் பயன்படும் Keyboard Shortcuts போல Firefox-க்கும் நிறைய Keyboard Shortcut நிறைய உள்ளன. 

சிறந்த 10 Internet Browser-கள்

இணைய உலவி என்று தமிழில் சொல்லப்படும் Browsersகள் தான் நாம் இணையத்தை பயன்படுத்தும் நேரங்களில் வேகத்தை தீர்மானிக்கின்றன. சில சமயங்களில் மிகப் பிரபலமான Browsers கூட நமக்கு Crash ஆகி பிரச்சினையை தரும். அந்த நேரங்களில் நமக்கு ஒரு மாற்று அவசியம். இந்தப் பதிவின் மூலம் பத்து சிறந்த Browser-களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இதில் சில ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயம் ஆனவை தான்.